சாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் ஆகஸ்டு 18, 2013 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற்ற சாதிமறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இந்திய – தமிழ்ச் சமூகத்தில் பெருந்துயரமாகவும் கொடிய குற்றமாகவும் நெடுங்காலமாக நிலவி வரும் சாதிமுறையை எதிர்த்தும் அதன் ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு இம்மாநாடு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பண்பாட்டுப் புரட்சியில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் உயிர்பறிக்கப்பட்ட மதுரைவீரன் முதல் தருமபுரி இளவரசன் வரை உயிரிழந்த ஈகிகளுக்கு இந்த மாநாடு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. தருமபுரி இளவரசன் கொலை செய்யபட்டிருந்தாலும் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருந்தாலும் இந்த மாநாடு அதை வன்மையாகக் கண்டிக்கிறது, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துக் கடுமையாகத் தண்டிக்கவேண்டுமென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. சாதிப் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் சாதி அடையாளங்களையும் அகற்ற உடனடியாக உத்தரவிடுமாறு தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

5. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் சாதிக் கட்சிகளோடும் சாதிச் சங்கங்களோடும் தேர்தல் கூட்டணி வைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்தகைய கூட்டணிகளைத் தவிர்க்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

6. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் தமது கட்சிகளில் சாதிய ஆதிக்கத்திற்குத் துணை போகும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. குறுகிய சுயநல அரசியல் இலாபத்திற்காகக் காதல்-சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பா.ம.க. உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும் சாதிச் சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. சாதி வெறியர்களின் அச்சுறுத்தல்களிலிருந்தும் “கௌரவக் கொலைகளிலிருந்தும்” சாதிமறுப்பு இணையர்களைப் பாதுகாக்க, குடும்ப வன்முறைச சட்டம் போன்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களுக்கு இணையான சிறப்புச் சட்டம் இயற்றி, அவர்களுக்கு முழுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு சட்ட, சமூக, பொருளியல் பாதுகாப்புக்கு வகை செய்யும் தனி ஆணையம் அமைக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

10. சாதிமறுப்பு இணையர்களை “சாதிமறுப்பாளர்கள்” என்றும், அவர்க்ளுடைய குழந்தைகளை ஏதாவது ஒரு சாதியில் தள்ளி இழிவு படுத்தாமல் “சாதியற்றவர்” என்றும் பதிவு செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

11. சாதியற்ற குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை அரசின் முழுப்பொறுப்பில் தரமான இலவசக் கல்வியை வழங்குமாறு தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
 
12. சாதிமறுப்புத் திருமணம் புரிந்தோர் சமூக அங்கீகாரம் பெறும் வகையில் அவர்களை நாட்டின் “சிறப்புரிமை பெற்ற குடிமக்கள்” என்று அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும் என்றும், இதை ஊடகங்கள் மூலமாக அரசுச் செலவில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

13. சாதிமறுப்புத் திருமண இணையர்க்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கூடுதல் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

14. சாதிமறுப்புத் திருமணம் புரிந்த ஏழைகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக் கருதி இலவயமாக ஒரு வீடும், கிராமப் புறங்களில் இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கவேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

Comments

8 comments

8
சாணக்கியன்
"ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே" --- சாதியை ஒழிக்கிறேன் பேர்வழியென்று, கமுக்கமாக 5 ஸ்டார் ஓட்டலில் மட்டன் பிரியானியும், பாரின் சரக்கும் அடித்துவிட்டு சில கோடிகளை வாங்கிக்கொண்டு ஆப்படிக்கும் தலைவர்களை இளித்தாவாயன்கள் புரிந்து கொள்வார்களா?
சாணக்கியன்
திருமணம் செய்துதான் சாதியை மறுக்கவேண்டுமா?. சாதியை விட்டு வெளியேறுவதெப்படி என்பதை சொன்னால், ஒட்டுமொத்தமாக வெளியேறி விடலாமல்லவா?
சாணக்கியன்
எம்பெருமானார்(ஸல்) அவர்கள் நிறுவிய சமத்துவபுரம்:

கி.பி.630ல் பெருமானார்(ஸல்) அவர்களின் தலைமையில் மக்கா நகரம் கைப்பற்றப்பட்டது. எந்த நேரத்திலும் தங்களது உயிரும் உடைமைகளும் சூறையாடப்படும் என்று மக்காவாசிகள் அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது "பெண்கள் குழந்தைகள் மற்றும் அனைத்து பிரஜைகளின் உயிர், உடைமை, கண்ணியம் காக்கப்படும். கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் விருந்தினர் போல் உபசரிக்கப்படுவர்" என்று எம்பெருமானார்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.

இதைக்கேட்ட மக்காவாசிகளுக்கு அளவிட முடியாத வியப்பு. போரில் தோல்வியுற்ற எதிரிக்கு மரியாதையா?. சரித்திரத்தில் கேள்விப்படாத ஒன்று. யார் இந்த மாமனிதர்?. இவர் காட்டும் வழியென்ன என்று பேராவலுடன் அலைஅலையாக கஃபாவின் முன் குவிந்தனர்.

கஃபாவின் முன்பு பெருமானாரும்(ஸல்) அவரது தோழர்களும் நிற்கின்றனர். பெருமானாருக்கு(ஸல்) அருகில் அவரது உற்ற தோழர் பிலால் எனும் கருப்பு அடிமை நிற்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பெருமானாரின்(ஸல்) பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்பொழுது பெருமானார்(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலாலை நோக்கி "கஃபாவில் சென்று பாங்கு(தொழுகை அழைப்பு) கொடுங்கள்" என்று கட்டளையிடுகிறார். இதைக்கேட்ட ஹஜ்ரத் பிலால் திகைக்கிறார். "கஃபாவில் சென்று பாங்கு கொடுப்பதா?. அதுவும் நானா?. நான் ஒரு அடிமை, சூத்திரன், தீண்டத்தகாதவன், தலித். எனக்கு உள்ளே நுழைய அருகதையுண்டா" என்று மலைக்கிறார்.

"இறைவனின் இல்லம் கஃபா. உள்ளே நுழைய அனுமதியில்லாவிட்டால், மேலே ஏறி பாங்கு கொடுங்கள்" என்று பெருமானார்(ஸல்) கட்டளையிட்டார். ஆம். இஸ்லாத்தின் முதல் தொழுகை அழைப்பாளராக ஹஜ்ரத் பிலால் எனும் தலித்(அடிமை) கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுத்தார்.

அடிமை விலங்கு உடைக்கப்பட்டது. சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் நிலை நாட்டப்பட்டது. உலகின் முதல் சமத்துவபுரம் நிறுவப்பட்டது. சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

தலித் சகோதரனே !. அடிமை விலங்கை உடைத்து தலைமை ஏற்க இன்னமுமா தயக்கம் !!!.

"நீதியைக் காட்டி, நேர்மையை ஊட்டி
நெறிவழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி, சடங்குகள் பேசி
சமூகத்தை கெடுத்தார் இருமுறை தாரார்
என்ன காலமோ என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ"
சாணக்கியன்
எவ்வளவு கெஞ்சி கூத்தடினாலும், உங்களுடைய கோரிக்கைகளை இவர்கள் ஏற்க மாட்டார்கள்.

எங்களுடைய கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் ஏற்காவிட்டால், நாங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி விடுவோமென்று ஒரு போடு போடுங்கள். மின்னல் வேகத்தில் எல்லாம் நடக்கும்.

தெம்பிருக்கா உங்களுக்கு?. இல்லை வரவேண்டிய பங்கு வந்துவிட்டால், உஙகள் தலவர்கள் வாயை மூடிக்கொள்வீர்களா?.
சாணக்கியன்
சாதியை வைத்து பிழைக்கும் கும்பலிடமே போய் "எனக்கு சாதியை விட்டு வெளியேற பாதுகாப்பு கொடு, வெகுமதி கொடு" என்று கெஞ்சினால் கொடுப்பானா?. ----

ஒரு முஸ்லிமிடம் போய், உன் ஜாதியென்னவென்று கேளுங்கள். முழிப்பார். லெப்பை, மரக்காயர், தக்கினியென்று ஒரு சில பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இது ஒரு ஜாதிக்கு மேல் ஒரு ஜாதி எனும் அடுக்குமுறையல்ல. --- ஒரு முஸ்லிம் துப்புரவு தொழிலாளி இமாமாக முன்னின்று தொழுகை நடத்தினால், ஜனாதிபதி அப்துல் கலாமும் அந்த இமாமை பின் தொடர்ந்து தொழுவார். இமாமின் ஜாதியென்னவென்று எந்த முஸ்லிமுக்கும் தெரியாது ---

ஹிந்துமதமென்னும் பாதாளக்குழியில் இருந்து கொண்டு ஜாதியை விட்டு வெளியேறவே முடியாது. இஸ்லாம் எனும் ஏணியை பிடித்து வெளியேறுங்கள்.
suraavali.blogspot.in
தோழர் சாணக்கியன், அடிமை முறைக்கும், சாதிய தீண்டாமை முறைக்கும் வித்யாசம் தெரியாமல் பிதட்ருகிறார். ஒரு அடிமை தன்னுடைய நிலையில் இருந்து மீண்டு வந்து சமூகத்தில் சமமாக வாழமுடியும். ஆனால் சாதியில் அப்படி இல்லை. கீழ் சாதியாக இருக்கும் ஒருவன் வர்க்க அடிப்படையில் முன்னேறினாளும் அவன் சாகும் வரையில் கீழ் சாதிதான். மேலும் இன்றைக்கு இந்தியாவில் முஸ்லீம் மக்களின் நிலை என்ன? கீழ் சாதி மக்களின் நிலை என்னவோ அதுவேதான் முஸ்லீம் மக்களின் நிலை. பெரிய வேறுபாடு இல்லை. எனவே எல்லா விதமான அடிமை தனத்திலிருந்தும் விடுதலை அடைவதே உழைக்கும் மக்களின் நலனுக்கு உகந்தது. அதற்கு புரட்சியே ஒரே தீர்வு!!!!!
சாணக்கியன்
1. ///கீழ் சாதியாக இருக்கும் ஒருவன் வர்க்க அடிப்படையில் முன்னேறினாளும் அவன் சாகும் வரையில் கீழ் சாதிதான்/// --- ஒரு ஹிந்து எப்படி ஜாதியை விட்டு வெளியேறி வாழலாம் என்பதை விளக்க முடியுமா? --------- 2. ///மேலும் இன்றைக்கு இந்தியாவில் முஸ்லீம் மக்களின் நிலை என்ன? கீழ் சாதி மக்களின் நிலை என்னவோ அதுவேதான் முஸ்லீம் மக்களின் நிலை//// ----- அது பொருளாதார அடக்குமுறை. ஜாதி அடக்குமுறை என்றால் என்னவென்று எந்த முஸ்லிமுக்கும் தெரியாது -------- 3. ///எல்லா விதமான அடிமை தனத்திலிருந்தும் விடுதலை அடைவதே உழைக்கும் மக்களின் நலனுக்கு உகந்தது. அதற்கு புரட்சியே ஒரே தீர்வு!!!!! /// ------புரட்சியின் குறிக்கோள் என்ன?. சமநீதி, சமத்துவம், சகோதரதுவம் என்றால் இஸ்லாத்தை விட்டால் வேறு மார்க்கமே கிடையாது.
srithartamilan
சாதி மத மறுப்பு இணையர்களின் குழந்தைகளை ஏதாவது ஒரு சாதியில்/மதத்தில் தள்ளி இழிவு படுத்தாமல் “சாதி,மதமற்றவர்” என்ற பிரிவை உருவாக்கி கல்வி,வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு என அனைத்திலும் தனி சிறப்பு முன்னுரிமை வழங்கிட அரசினை வலியுறுத்துவோம் .அனைத்து இயக்கங்களும் இந்த கோரிக்கையை வலிமையாக முன்னெடுத்து செல்ல குரல் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் ...
அனைத்து முற்போக்கு அமைப்புகள் ,தமிழ்தேசிய அமைப்புகள், பெரியாரிய , அம்பேத்கரிய , மார்க்சிய கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகள் /கட்சிகள் தங்கள் அமைப்பில் இத்தகைய இணையர்கள் எத்துனை நபர்கள் இருக்கின்றார்கள் என்று தமிழகம் தழுவிய அளவில் ஒரு கணக்கெடுப்பு எடுத்து இவர்களை ஒருங்கிணைப்போம் ,ஜாதி ,மத அரக்கனை ,வலிமையிலக்க தற்சமையம் நம்முன் இருக்கும் வழிகளில் இது முக்கியமானதாக நாம் கருதுகின்றோம் ,அனைவரின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றது../மும்பை விழித்தெழு இயக்கம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.