கடந்த 7ம் தேதி தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்விற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், இசுலாமியத் தலைவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைத்திருந்தார் தோழர் குடந்தை அரசன் அவர்கள். அந்தத் திருமணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலர் தோழர் தமிமுன் அன்சாரி அவர்களும் கலந்துகொண்டார். அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டது பற்றிதான் அவர்மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. திருமணத்தில் கலந்து கொண்டதில் என்ன தவறு என்கிறீர்களா..?

kudanthai_arasan_marriage_640

ஆம் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் நிறைந்த அண்ணனின் அவையில், யார் குற்றம் அதிகமாகக் கண்டுபிடித்தார்கள் என்ற போட்டியில் தற்போது 'குடந்தை அரசன் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்தார், தவில் வாசித்தார்' என தோழர் தமிமுன் அன்சாரி அவர்கள் மீது அண்ணனின் நிலைய வித்துவான் ஒருவர் ஒரு புகைப்படத்தை முகநூலில் போட்டு வழக்கமான அவதூறுகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி தமிமுன் அன்சாரியும் அவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பதில் கூறிக்கொள்ளட்டும். நாம் அதற்குள் போகாமல் மார்க்கம் பேசிக் கொண்டே அவதூறுகளையும், இழிவான வார்த்தைகளையும் பேசும் இவர்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ஒரு மூமின் இன்னொரு மூமின் மீது அவதூறு சொல்லுவதும் அவரை அசிங்கப்படுத்துவதும்தான் மார்க்கமா..? இதுதான் தவ்ஹீத் சிந்தனையா..?

இந்த உலகத்தில் மாற்றுக்கருத்துக்கள் கூற எவருக்கும் உரிமையுண்டு. அந்த கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயகம். இசுலாமிய மார்க்க ஒழுக்க நெறிகளுக்குள் வாழ்வதாக சொல்லப்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்வாதிகளின் மாற்றுக்கருத்துக்களுக்கான எதிர்வினைகளைப் பார்த்தால் குமட்டல்ரகமாக இருப்பது மட்டுமல்லாமல் சமூகத்திற்கு அவப்பெயரைத் தருவதாகவும் அமைகிறது. சமீபத்தில் இலங்கையில் இருந்து தன் குடும்ப வறுமை தீர்க்க தனது 17 வயதில் சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று, கொலைக் குற்றம் சுமத்தி, கொல்லப்பட்ட ரிசானா என்ற சகோதரியின் மரண தண்டனைக்கு எதிராகப் பேசிய மனுசியபுத்திரன் என்ற எழுத்தாளரையும், நக்கீரன் வார இதழையும் மூன்றாம் தரப் பேச்சாளர்கள் பேசுவது போல் பேசியும், தமிழகம் முழுக்க மிருகபுத்திரன் என சுவரொட்டிகள் ஒட்டியும், அவரின் ஊனத்தைக் கேலி செய்தும் தனது பாசிச சிந்தனை அரிப்பை தீர்த்துக் கொண்டார்கள்.

அவரின் மாற்றுக்கருத்திற்கு இசுலாமிய அடிப்படையில் அழகிய முறையில் பதில் கூற வேண்டும். இசுலாமிய அடிப்படையில் எப்படி அவருக்கும் மக்களுக்கும் விளக்க வேண்டுமோ அப்படி விளக்க முனைய வேண்டும். அதுதான் இசுலாமிய அறநெறி.

விஸ்வரூபம் படம் ஒரு சமூகத்தின் மீதான வன்மத்தை விதைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு எதிராகப் போராட வேண்டும்தான். ஆனால் மகளோடு கமலை சேர்த்துப் பேசுவதுதான் எதிர்ப்பியக்கமா..?

இவர்கள் பொது சமூகத்திடம் இப்படி நடந்து கொள்கிறார்கள்; தங்கள் சொந்த சமூக சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் இன்னொரு அமைப்பை மையத் கட்சி என்பதும், மாமா கட்சி என்பதும் இணையதளங்களில் மஞ்சள் பத்திரிக்கையை விட மோசமாக பச்சை, பச்சையாக எழுதுகிறார்கள். இதுதான் மார்க்கமா..?

இதில் கேவலம் என்னவென்றால் இவர்கள் பேசுவதுதான் இஸ்லாம் என்று இஸ்லாமிய சமுகத்தை மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இவர்களின் செயல்பாடுகள் இருப்பதுதான். இது சமூகங்களிடையே பிரிவினையை அதிகப்படுத்தவே உதவும்.

பொதுத்தளங்களில் மாற்றுக் கருத்தாளர்கள்மீது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியினர் வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஆபாச அர்ச்சனைகளும், இன்னும் சொல்லப்போனால் முஸ்லீம் சகோதரர்கள் குறித்தும், மற்ற முஸ்லீம் அமைப்புகள் குறித்தும் அதன் தலைவர்களைப் பற்றியும் எழுதுவதும், பேசுவதும் அதன் தலைமையின் அங்கீகாரத்தோடுதான் நடக்கிறதா..? இல்லை கண்டும் காணாமல் இருக்கிறார்களா..?

பொதுத்தளத்தில் இவர்களின் விவாத முறையைப் பார்க்கும் போது, இவர்கள் அழகிய மார்க்கம் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் சில தவிர்க்கமுடியாத இக்கட்டுகளில் மாட்டிக்கொள்வது உண்டு. அப்படியான சூழ்நிலைகளில் அழகிய முறையில் அதை எடுத்துக் கூறுவதும், அவர் உண்மையில் முரண்பாடான செயலில் இருந்தால், அச்செயலில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ளத்தக்க அளவிற்கு நம்முடைய விமர்சனம் தர்க்க ரீதியாகவும் உண்மையாகவும், ஆதாரப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த நபரின் செயல்களை மாற்றிக்கொள்ள நீங்கள் உதவிபுரிந்ததாக ஆகும். ஆனால் அதை விடுத்து குற்றம், குறை கண்டுபிடித்து அதைக்கொண்டு அசிங்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு உங்கள் செயல்கள் அமைவது மார்க்க அடிப்படையில் கூடுமா..? என்பதுதான் எம்முடைய கேள்வி.. 'அல்லாஹ், ரசூல் வழியை அப்படியே கடைபிடிக்கிறோம் பேர்வழி' என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டு தன் சொந்த சகோதரனை இழிவுபடுத்துவதுதான் அல்லாஹ், ரசூல் வழியா..?

இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவாக இருப்பதற்குக் காரணம், முஸ்லிம் மக்களுக்கு துணையாக செயல்படும் பெரியாரியவாதிகள், தலித்தியவாதிகள் மற்றும் இடதுசாரிகள். இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் இவர்கள்தான் முஸ்லிம் மக்களின் உற்ற நண்பர்கள். இதை உணர்ந்துதான் தமிழகத்தில் செயல்பட்டு வரும் முஸ்லிம் அமைப்புகள் இவர்களோடு கைகோர்த்து பல்வேறு தளங்களில் போராடுகிறார்கள். ஆனால், இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியினர், இந்த சனநாயக சக்திகளை 'காபீர்கள்' என்று தூற்றுவதும், அவதூறு பேசி வம்புக்கு இழுப்பதும் நடைபெற்று வருகிறது. முஸ்லிம்களின் தோழமை சக்திகளை எதிர்ப்பது இராமகோபாலனின் வேலை அல்லவா? தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் சனநாயக சக்திகளோடு முஸ்லிம் அமைப்புகள் ஒன்று சேர்வதைத் தடுக்கும் வகையில் இழிவாகப் பேசுவது யாருக்கு நலன் சேர்க்கும் வேலை?

பொதுத்தளத்தில் இயங்குகிறோம்; நம்மை அனைவரும் உற்று நோக்கி வருகிறார்கள் என்பதை நினைவில் நிறுத்தி, முன் மாதிரிகளாக இருக்கவேண்டும். ஆனால் அண்ணனின் நிலைய வித்துவான்கள் வாய் கூசச் செய்யும் அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் பேசுவதும், ஒருவரை மற்றொருவர் இழிவுபடுத்துவதும் எந்த வகை முன்மாதிரியாகும்?

இவைகள் அனைத்தும் ஒரு இயக்கத்தின் பெயரால்தான் நடக்கிறது என்பது அந்த இயக்கத்திற்குத் தெரிந்தும், அந்த இயக்கத்தின் தலைமை இவ்விடயத்தில் என்றாவது மார்க்க அடிப்படையில் கண்டித்ததுண்டா..?

உண்மையையும், சத்தியத்தையும் கொண்டு இயக்கத்தை வளர்த்தெடுங்கள்! மக்களை சத்தியத்தின்பால் வென்றெடுங்கள்! அதை விடுத்து அவதூறுகளால் இயக்கம் வளர்க்க முயற்சிக்க வேண்டாம்.

பல்சமுக மக்கள் வாழும் நாட்டில் இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வருகிறோம். ஒருவருக்கு ஒருவர் இண‌க்கமான சூழலைத்தான் உருவாக்க வேண்டும். அதுதான் சகோதரத்துவத்தை வளர்க்கும். உங்கள் மார்க்க நெறிகளை அனைத்து மக்களும் நல்ல சூழலில் கேட்க வைப்பது; அதை எடுத்துச்சொல்வது உங்கள் பால் அவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும். அதை விடுத்து இசுலாமிய சமூக இளைஞர்களிடம் மற்ற சமுகத்தின் மேல் வெறுப்பு கொள்ள வைத்து, ராமகோபலன்களின் பணிக்கு உதவியாக இருக்க வேண்டாம் என்பதே எமது வேண்டுகோள்.

அண்டை வீட்டாரிடமும், நாம் வாழும் சமூகச் சூழலிலும் மற்ற சமூக மக்களின் திருமண நிகழ்வுகள், இறப்பு நிகழ்வுகளில் நாம் பங்கு பெறுவது இயல்பான ஒன்று. அதையும் கூட அசிங்கப்படுத்துவதும், மார்க்க நெறிமுறைகளில் தாங்கள்தான் சுத்தமாக இருப்பதைப் போல் காட்டிக்கொண்டு மற்றவர்களைத் தூற்றும் செயலை முதலில் தலைமையில் இருப்பவர்கள் நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் மீது விசுவாசமும், பக்தியும் மட்டுமே வைத்துக்கொண்டு, 'நாங்கள்தான் சொர்க்கவாதிகள்; மற்றவர்கள் அனைவரும் நரகத்திற்குச் செல்வார்கள்' என்று இறைவனிடம் இருந்து நேராக தூதுச் செய்தியை பெற்றது போல் இறுமாப்பு கொண்டிருக்கும் உங்கள் உறுப்பினர்கள் திருந்துவார்கள்.

இதை எழுதுவதால் என்ன வகையான விளைவுகள் ஏற்படும் என்று தெரிந்தே எழுதுகிறேன்.

அண்ணனின் அடிமைகள் என் மீது பாய்வார்கள், அசிங்கமாக எழுதுவார்கள், சவால் விடுவார்கள், இவன் காபீர் என்று 'பத்வா' கொடுப்பார்கள், விடுதலைப் புலி ஆதரவாளன் என்பார்கள், பண மோசடி, தமிழ்த் தீவிரவாதி, அநீதியான வழக்கறிஞன் எனத் திட்டுவார்கள். இருப்பினும் எழுதுகிறேன்.

இந்த நாட்டில் வாழ்ந்தால் மாற்றுமத நண்பர்கள், சகோதரர்களின் வீட்டில் நடக்கும் நல்லது, துக்க காரியங்கள் போன்றவற்றில் கல‌ந்து கொள்ள வேண்டியிருக்கும். மாற்றுமத சகோதரர்களின் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கும். அவர்கள் நிறுவனங்களில் வேலை செய்து, அவர்கள் கொடுக்கும் பணத்தில் நாம் வாழ்கையை ஓட்ட வேண்டியிருக்கும். நிர்பந்தமாக காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்திருக்க வேண்டியிருக்கும். சாலையில் நடந்தால் கண்ட கண்ட கருமாந்திரப் படங்களை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கும். இவற்றைத் தவிர்க்க முடியாது.

இல்லை.. முடியவே முடியாது என்றால், ஓர் ஒப்பந்தத்திற்கு வருவோம். இந்திய முஸ்லீம்கள் அனைவரையும்.. வேண்டாம்... தமிழக முஸ்லீம்களை மட்டுமாவது ஓரிட‌த்தில் கூட்டுவோம். ராமகோபாலன்களுக்கு வேலை வைக்காமல்… முழுமையாக இஸ்லாமியர்கள் வாழும், அனைத்து அறநெறிகளையும் முழுமையாகப் 'பின்பற்றும்' சவூதி அரேபியாவுக்கோ அல்லது இஸ்லாம் 'பூத்துக் குலுங்கும்' பாகிஸ்தானுக்கோ புலம் பெயர்வோம்!

நான் ரெடி, நீங்கள்..?

- உமர்கயான்.சே, இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

Comments

27 comments

27
[email protected]
//ஒரு மூமின் இன்னொரு மூமின் மீது அவதூறு சொல்லுவதும் அவரை அசிங்கப்படுத்துவதும்தான் மார்க்கமா..? இதுதான் தவ்ஹீத் சிந்தனையா..?//

இஸ்லாம் கூறும் கூறும் மரண தண்டனையையே முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று கோரி இறை சட்டத்தினையே நிராகரிக்கும் நீங்கள் இஸ்லாத்தின் ஹதீஸ் பேசுவது சிரிப்பாக இருகின்றது.
k.m.ebrahim
தமிழ் நாடு தௌஹித் ஜாமாத் யாரை அசிஙகமான வார்த்தையால் அர்ச்சனை செய்தது எங்கெ எப்பொது என்ட்ர வெலக்கம் தரவென்டும் சும்மா வாஇல் வந்தடெல்லாம் பெசக் கோடாது இதெர்கு பதில் அவசெய்யம் தரனும்
தமிழ் கரிகாலன்
என் பாட்டியின் பழக்க முறையில் பல ஆண்டுகளாக சில இசுலாமிய குடும்பங்கள் இன்று வரை நெருங்கிய உறவு முறைபோல் பழகி கொண்டிருக்கிறார்கள்.என் பாட்டி உயிரோடு இருந்த வரை அந்த இசுலாமிய குடும்பங்களில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் என் பாட்டி இல்லாமல் நடந்ததில்லை .சில நேரம் அந்த குடும்பங்களில் உறவு முறைக்குள் நடக்கும் சில பிரச்சனைகளை என் பாட்டி தீர்த்து வைத்துள்ளார்.எங்கள் வீட்டில் பொங்கலாகட்டும் வேறு எந்த விசயமாகட்டும் எங்கள் வீட்டில் செய்யப்படும் பலகாரங்கள் முதல் வேலையாக அந்த குடும்பங்களுக்கு செல்லும் அதேப்போல் ரமலான்,பக்ரீத் போன்ற அவர்கள் வீட்டில் நடக்கும் விசேசங்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு எங்க வீட்டுக்கு வரும்.ஒரு நான்கு நாட்கள் என் பாட்டி அவர்களை பார்க்க செல்ல வில்லை என்றால் அவர்கள் ஆட்டோ எடுத்துக்கொண்டு ஏன் ''பைச்சி'' (என் பாட்டியை அவர்கள் பைச்சி என்றுதான் அழைப்பார்கள்.) வீட்டுக்கே வரவில்லை உடம்பு ஏதும் சரி இல்லையா ?என்று பார்க்க வந்திடுவார்கள்.என் பாட்டி இறந்த போது பிறந்த வீட்டு புடவையாக நான்கு புடவைகள் இசுலாமியர் வீட்டிலிருந்து வந்தது.எனக்கு கடவுள் நம்பிக்கையோ மத நம்பிக்கையோ ஏதும் கிடையாது ஆனால் என்னையும் அவர்கள் வீட்டு பிள்ளையாத்தான் பார்க்கிறார்கள் நான் ஏதும் தவறு செய்தால் உரிமையோடு கண்டிப்பார்கள்.சீர்திருத்த முறையில் நடந்த என் திருமணத்துக்கு வந்து வாழ்த்தி சென்றார்கள்.இப்படி நாங்கள் அன்னோநியமாக இருப்பதற்கு மதம் காரணம் இல்லை எங்களுக்குள் உள்ள அன்புதான். எங்களைப்போல் நிறைய குடும்பங்கள் இசுலாமியர்களுடன் நீண்ட காலமாக நட்பு வைத்துள்ளார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்வாதிகளே உங்களின் செயல்களால் அந்த உறவு முறையை கெடுத்து விடாதீர்கள். இது பெரியார் பிறந்த மண்.
நஸீர் இப்னுஆதம்
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி
பீஜேவை விட மிக கேவலமாக
பேசிய பழனி பாபாவை பற்றி உங்கள் நிலைபாடு என்ன
முகம்மது ஹாஜி
அருமையான பதிவு
ஜியா
உமர்கயான்.சே அவர்களே மரண தண்டயை எதிர்க்க கூடியவர்கள் அதாவது குரானையே மறுத்துவிட்டு இஸ்லாம், மார்க்கம், ஹதீஸ், குராஆன் பேசுறது சத்தியமா சரியான காமெடி போங்க.
முகம்மது
இவரு (உமர்கயான்) போர வர கலந்து கொள்ளுர நல்லது கெட்டது பத்தியா விமர்சனம் செய்தார்கள் தமீம் அன்சாரியும் அவர் சார்ந்த கட்சியும் இங்கு (அரபு நாட்டில்) தவ்ஹீத் வேடமும் ஊரில் இவரமாதிரி அறிவுஜீவி? வேடமும் இரட்டை வேசம் போடுபவர்களை தான் விமர்சித்தார்கள் ஒன்னு தவ்ஹீத்வாதியா இரு இல்லை அரசியல்வாதியா இரு இந்த இரட்டை வேசம் ஏன்? இதை கூட விளங்காதவர் தான் இந்த உமர்கயான்.
nasurudeen
மிக சரியான காலகட்டத்ல் மிக சரியான கட்டுரை....இவர்கல் திருந்த மாட்டார்கல் உமர்....
noordeen
////அண்ணனின் அடிமைகள் என் மீது பாய்வார்கள், அசிங்கமாக எழுதுவார்கள், சவால் விடுவார்கள், இவன் காபீர் என்று 'பத்வா' கொடுப்பார்கள், விடுதலைப் புலி ஆதரவாளன் என்பார்கள், பண மோசடி, தமிழ்த் தீவிரவாதி, அநீதியான வழக்கறிஞன் எனத் திட்டுவார்கள். இருப்பினும் எழுதுகிறேன்.//// இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள் ? நீங்கள் அரசியல் செய்தால் மட்டும் போதும் மார்க்கம் பேச வேண்டாம்?
உண்மை வெல்லும்
ஒரு நல்ல காரியம் திருமணத்தையே கேவலப்படுத்தியுள்ளார்..உமர்காயனுக்கு இது நாகரியமா ?? தூக்கு தண்டனை பற்றி பேச உமர்க்கு எந்த தகுதியிமில்லை...?? கீற்று ராமேஷ் வைத்துக்கொண்டு இப்படி கட்டுரை போட்டு பெருமை அடிப்பது ..? விபச்சாரத்துக்கு சமம்...
Iqbal NM
சவூதி அரேபியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ புலம் பெயர்வோம்! Why?

U Muslim ??? Here Can't Follow Islam Why ? First learn Islam than Use Islam Name... .... Islam not for toys... Must U Know Islam and Follow... Thats Muslim.

Allah Give as Right way all Muslims ... ... ...
abdulhakkeem
உ மர்கயான் பாய் , ததஜ-களை இஸ்லாமிய சமுதாயம் நன்றாக விளங்கியுள்ளனர் ஆகவே அவர்களை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வேண்டாம்
தங்கப்பாண்டியன்
மரண தண்டனை இஸ்லாமின் புனித தண்டனை என்று பேசும் அன்பர்களே இஸ்லாத்தின் உண்மையான எதிரிகள். உலகம் முழுக்க அணைத்து மதத்தை சேர்ந்த அரசுகளும் கடைபிடித்து வந்த காட்டுமிராண்டி காலத்து தண்டனை தான் மரண தண்டனை. இப்போது பெரும்பாலான இந்து, கிறிஸ்து, புத்த மத நாடுகளும் மரண தண்டனையை கைவிட்டு வருகின்றன. இஸ்லாம் அன்பை போதிக்கிறது என்றால் அது குற்றவாளியை விட குற்ற சூழல் மீது கோபப்பட வேண்டும்.
குற்றங்களுக்கும் வன்முறைக்கும் காரணமாக இருக்கும் சமூக அரசியல் பொருளாதார காரணங்களை மரண தண்டனை அரசுகள் மறைக்கின்றன.
. அப்படி சொன்னால் அவர்களுக்கு எதிராக தானே மக்கள் திரும்புவார்கள். அந்த துர்பாக்கிய நிலையை தவிர்க்கவே மரணதண்டனை கொடுக்கின்றன அரசுகள். இதை இஸ்லாத்தின் பெயரால் ஆதரிக்கும் மிக தவறான செயலை செய்வதை தவிர்க்க அன்போடு அன்பான மதத்தை கேட்டுக்கொள்கிறேன்
உமர்கயாம் சொல்வதில் உள்ள நியாயத்தை அறிவுக்கண் கொண்டு அலச கோருகிறேன்
haji
nasser ibnu adam balani babavai patri pesugira thaguthi evankum inga ila sariya. apram balani baba kaavigalithan ethirthu poritu madinthar etho TNTJ yariyume avathru pesatha mathiri nadikiringa? sagotharar pakar avargali pesla ya ? yaarai pesala sollu? tmail naatil vidiyal endra iyakathai theevira vathaigal endru kaati kodutha kootam than neenag TNTj. ethao marakam ungaluku matum than theriayum endru ninaithu matra yariyum mathikamal otruma engira iravi vasanthaye kuli thondi puthaikum neengal ena pesuringa . PJ sollrathu than marakam endru thlayatum kootame nalai allah enai irai thootharga anupi irukan nu sonalum etru kolviragala ? islamiya marana thandanai satathai nan ethika vilai ungal siru pilai thana mana seyal galai ethir kiren.
Farook
தங்க பாண்டியன்!

கொலையில் கொடியோரை வேந்து ஒருத்தல்
பைங்கூழ் கலை கட்டதனோடு நேர்.

என்ற திருக்குறளும் காட்டு மிராண்டியுனடையதா?

வினோதினி-யின் இழப்பு உமக்குப் புரியாது அவரது குடும்பத்தார்க்கு புரியும்.
samaran bala
அப்போ அன்பை போதிக்கிற இசுலாம் - மரண தண்டனையை ஆதரிக்கிறது?? அற்புதம். வாழ்த்துக்கள்
அமீர் அப்பாஸ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிக மோசமான மக்கள் விரோத, சமூக விரோத இயக்கம். இதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.மத அடிப்படைகள் பேசி, இளைஞர்களை மூளைச்சலவை செய்து, சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் கும்பல் இது.இவர்கள் திருந்த மாட்டார்கள்.
Mohamed Rafeek
உமர்கயாம் சொல்வதில் உள்ள நியாயத்தை அறிவுக்கண் கொண்டு அலச கோருகிறேன்
ansar
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை குறை கூற என்னத் தகுதி இருக்கு என தெரியவில்லை,குறை சொல்ற எவராக இருந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத் செய்வதை விட அழகான முறையில் அனைத்து விசயங்களும் செய்தாவது காட்ட வேண்டும்,இல்லையெனில் நாங்கள் சுட்டி காட்டுவது நாகரீகம் இல்லை என சொல்லுபவர் நீங்கள் நாகரீகமாக சுட்டி காட்டாமல் மவுனமாக இருப்பது ஏன்?தவ்ஹீத் ஜமாஅத் மீது அவதூறு கூறும் நீங்கள் மற்றவர்கள் செய்யும் குற்றங்களுக்கு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ?இரட்டை நிலை ஏன் ?
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பெரியாரை இவர்கள் ஆதரிக்கும் காரணம் அவர் இந்து மதத்தை திட்டினார் என்பதர்காகத்தான் என்பதையும் இவர்கள் பெரியாரை ஆதிரிக்கும் அளவுக்கும் இன்னும் முற்போக்கு அடையவில்லை என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
மதம், மாறிவரும் சமூகத்தில் ஒரு காலத்தில் மருந்து. இப்பொழுது காலவதியான மருந்து.
Guest
இந்த உலகத்தில் மாற்றுக்கருத்துக்கள் கூற எவருக்கும் உரிமையுண்டு. அந்த கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயகம். இசுலாமிய மார்க்க ஒழுக்க நெறிகளுக்குள் வாழ்வதாக சொல்லப்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்வாதிகளின் மாற்றுக்கருத்துக்களுக்கான எதிர்வினைகளைப் பார்த்தால் குமட்டல்ரகமாக இருப்பது மட்டுமல்லாமல் சமூகத்திற்கு அவப்பெயரைத் தருவதாகவும் அமைகிறது. சமீபத்தில் இலங்கையில் இருந்து தன் குடும்ப வறுமை தீர்க்க தனது 17 வயதில் சவூதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்று, கொலைக் குற்றம் சுமத்தி, கொல்லப்பட்ட ரிசானா என்ற சகோதரியின் மரண தண்டனைக்கு எதிராகப் பேசிய மனுசியபுத்திரன் என்ற எழுத்தாளரையும், நக்கீரன் வார இதழையும் மூன்றாம் தரப் பேச்சாளர்கள் பேசுவது போல் பேசியும், தமிழகம் முழுக்க மிருகபுத்திரன் என சுவரொட்டிகள் ஒட்டியும், அவரின் ஊனத்தைக் கேலி செய்தும் தனது பாசிச சிந்தனை அரிப்பை தீர்த்துக் கொண்டார்கள்.//// உமர் கய்யாம் அவர்களே! ஒரு விசயத்தை சொல்ல வருவத்ருகு முன் அதன் உண்மை விளவர்கங்காலி அறிந்து கொண்டு பேச வேண்டும் அல்லது எழுத வேண்டும். அது தான் நேர்மை. ஆனால் உங்களுடைய கருத்தில் நேர்மை இல்லை. விஷம் தான் இருக்கிறது. இலங்கையை சேர்ந்த பெண் 17 வயதில் சவுதிக்கு சென்றால் என்று கூறுகின்றீர்கள். அவளின் பாஸ்போர்ட்டில் 17 வயது என்று இருந்ததா? அல்லது 21 வயது என்று இருந்ததா? ஒருவேளை 17 வயது கொண்டவர்கள் தவறு செய்தால் தண்டிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள். மேலும் மனுஷ்யபுத்திரன் மற்றும் நக்கீரன் இவர்கள் ரிசானாவிர்க்காக பேசி இருந்தால் அது அவர்களின் உரிமை. ஆனால் இஸ்லாத்தினை கொச்சைபடுத்தி இஸ்லாமிய தண்டனைகள் கொடுமையானவை என்கிற அர்த்தத்தில் விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம் என்பதை நீங்கள் உணர மறந்து விட்டீர்கள் என்று சொல்ல மாட்டேன். வேண்டுமென்றே உங்களின் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக இருட்டடிப்பு செய்து விட்டீர்கல் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அந்த இரண்டு தரப்பினரையும் இந்த விசயத்தில் நேரடி விவாதத்திற்கு அழைத்தோம். ஏன் வரவில்லை. அப்போ இவர்கள் கருத்து சொல்வதற்கு தகுதி இல்லாதவர்கள். மேலும் வேண்டுமென்றே இஸ்லாத்தின் மீது சேற்றை வாய் இறகின்றார்கள் என்பதக்காக தான் அவர்களுக்கு இந்த பட்டம். இப்போது ஔஇந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.
M. Sajidur Rahman
//விஸ்வரூபம் படம் ஒரு சமூகத்தின் மீதான வன்மத்தை விதைக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு எதிராகப் போராட வேண்டும்தான். ஆனால் மகளோடு கமலை சேர்த்துப் பேசுவதுதான் எதிர்ப்பியக்கமா..?//// இதுவும் உமர் கய்யாமின் விஷம்.
விஸ்வரூபம் வன்மத்தை மட்டும் விதிக்கவில்லை. பின்னால் வரக்கூடிய தலைமுறையின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகிறது என்கிற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். மேலும் இங்கும் நீங்கள் அதே தவறை தான் செய்துள்ளீர்கள். அதாவது நாங்கள் கமலை அவை மகளோடு இணைத்து பேசவில்லை. கமல் அவர்களே தன்னுடைய மகளுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்திருந்தார் அது மட்டுமின்றி ஒரு தந்தை வயதுக்கு வந்த மகளுடன் எப்படி இருக்க மாட்டானோ அதைபோலும், ஒரு கணவனும் மனைவியும் எப்படி அனைத்துக் கொண்டு இருப்பார்களோ அதை போல் போஸ் கொடுத்து கொண்டிருந்தார். இது நாம் சொல்லவில்லை. அவர் சொன்னதை மக்களுக்கு சொல்லி காட்டினோம்.
மேலும் நீங்கள் உண்மையிலேயே (நேர்மை இல்லை) நேர்மையாளராக இருந்தால், இதே கமல், இவ்வளவு மோசமான ஒரு படத்தை எடுத்ததும் இல்லாமல், அதை எதிர்ப்பவகளை பார்த்து கலாச்சார தீவிரவாதம் என்று சொன்னாரே! அதை கண்டித்தீர்களா? அப்போ முஸ்லிம்களை இவ்வளவு கேவலமாக பேசியதை விட அவரே ஒத்துக் கொண்ட ஒரு செய்தியை மக்களிடம் சொல்வதில் தவறில்லை. இந்த அளவுக்கு கமலுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு வருகிறீர்களே! பாரதிராஜா அவர்கள் இந்த படத்தை எதிர்ப்பதன் மூலம் தீவிரவாதிகளாகி விடாதீர்கள் என்று விஸ்வரூபத்தை எதிர்ப்பவர்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று சித்தரித்தாரே! அதை கண்டித்தீர்களா? உங்கள் பார்வையை சரி செய்து கொள்ளுங்கள்.
M. Sajidur Rahman
//இவர்கள் பொது சமூகத்திடம் இப்படி நடந்து கொள்கிறார்கள்; தங்கள் சொந்த சமூக சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்த்தால் இன்னொரு அமைப்பை மையத் கட்சி என்பதும், மாமா கட்சி என்பதும் இணையதளங்களில் மஞ்சள் பத்திரிக்கையை விட மோசமாக பச்சை, பச்சையாக எழுதுகிறார்கள். இதுதான் மார்க்கமா..?/////// இதுவும் உமர்கய்யாமின் ககருத்து!

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் பொது சமூகத்திடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரத்தை காட்ட முடியுமா? உங்களால் முடியாது! நாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்பதை உங்களுக்கு விளக்குகின்றேன். காமாலை கண்கள் கொண்ட உங்களுக்கு விளங்குகின்றதோ இல்லையோ உங்களின் செய்திகளை படிக்கும் சகோதரர்கள் தவறனா சிந்தனைக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக தான் இந்த அதில்.
நீங்கள் ஆதரிக்கும், உங்களின் இனவெறி அமைப்பிற்கு ஆதரவாளர்களாக இருக்கும் நக்கீரனில் எத்தனை ஆபசமான புகைப்படங்கள் வருகின்றன! இப்படி தான் குமுதம் இதழில் சினிமா நடிகைகளை பற்றி வந்த செய்தியை தாங்கி கொள்ளாமல் அந்த பத்திரிக்கையின் அலுவலகத்தை பாரதிராஜா ஆட்கள் அடித்து நோருக்கினார்கலே அந்த செயலை போல் நாங்கள் செய்யவில்லை. இங்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதாவது மாமா கட்சி என்கிற மமக மற்றும் 24 அமைப்புக்கள் கூடி அமெரிக்க தூதரகத்தை அடித்து நோருக்கின்னர்கலே! அங்கிருந்த பைகைஎல்லாம் கொளுத்தினார்களே இப்படி பொது சமூகத்திடம் நடந்து கொள்ளவில்லை. இதே கமல் என்கிற கருத்து தீர்விரவாதி உலகில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் தான் என்கிற போர்வையில் முல்சிம்களின் புனித நூலில் இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்டு நேர்வழி பெறவேண்டும் என்கிற பொதுமறையின் வசனங்களை கேவலப்படுத்தி படம் எடுத்திருந்தும் நான் மேலே சுட்டி காட்டியுள்ள உங்களின் ஆட்கள் சித்த வன்முறை வேலையை கையில் எடுக்கவில்லை., கருத்து ரீதியாக தான் பதில் கொடுத்தோம். இந்திய அரசாங்கம் தந்துள்ள உரிமையை கொண்டு அரசாங்கத்தின் மூலம் தடுத்தோம். இது தான் உண்மையான நேர்மையாளர்கள் செய்வது. இப்படி நேர்மையாளர்கள் போடு சமூகத்துடன் நடந்து கொள்வார்கள். அதை தான் நாமும் செய்தோம். இப்படியெல்லாம் அவதூறு பரப்புவதை நிறுத்தவும்
mirugam
உமர்கயான் (இன அழிப்பு போராளி?) அவர்களுக்கு,

ஒரு மூமினாக இருந்துகொண்டு(?) இன்னொரு மூமினை பல ஊர்களில் வஞ்சிப்பதும், வன்முறை வெறியாட்டம் செய்வதும் அவர்களின் தலைமைக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ உங்களை போன்ற நடுநிலை(?)வாதிகளுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்க முடியாது.

மனுசியபுத்திரன் இலங்கை சகோதரி ரிசானா மரணதண்டனை பற்றி மட்டும் விமர்சனம் செய்வதனை நிறுத்திக்கொள்ளாமல் அதனுடன் இஸ்லாம் மார்க்கத்தையும் அதன் சட்டதனையும் விமர்சனம் செய்ததனால் அவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை ஆதாரத்துடன் சரியான அறிக்கையும் மக்களுக்கு எடுத்து சொல்ல தள்ள பட்ட காரணத்தால் பொதுக்கூட்டம் மூலம் எடுதுறைக்கபட்டது. இந்த செயல் என்னமோ தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் கையில் எடுத்து கொண்டு செயல் பட்டது போல் பாரதுரமாக பார்க்கபடுகிறது. (மற்ற இயக்கங்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த நடைமுறை பேணிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதனை நினையூடுகிறேன்).

திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க), அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க), போன்று மனித நேய மக்கள் கட்சியை (மாமா. கட்சி) என்று ஒரு சிலர் எழுதுவது இயள்பு. ஒருவர் எந்த அளவுக்கு வரம்பு மீறுகிறாரோ அந்த அளவில் நாம் வரம்பு மீறுவதில் எந்த தவறும் இல்லை. அதன் அடிப்படையில் தான் பாரதிராஜாவின் பேட்டியை ஒப்பிட்டு பேசப்பட்டது, மற்றும் கமல்ஹாசனையும் அவரது மகளையும் இணைத்து நாங்கள் சொன்னது புதுசாக சொல்லவில்லை (மண்ணடி பொதுக்கூட்டம் வீடியோ பார்க்கவும்) அவரது மகள் சொன்ன செய்தியை மக்களுக்கு எடுத்துவைதோம். (இது தான் சினிமா கூத்தாடிகளின் நிலை என்று).
சொந்த சமூக சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்?

தாங்கள் முதலில் அவர்கள் வசம் சொந்த சமூக சகோதரர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதனை கற்றுகொடுங்கள் (அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வள்ளளே?) அவர்கள் எங்களை சொந்த சகோதர்களாக பார்பதில்லை என்பதனை ஏதோ எங்களுக்கும் எழுத தெரியும் என்று எழுதவில்லை. எங்கள் தவ்ஹீத் சகோதர்களை பல ஊர்களில் அவர்கள் நடத்தும் பிரச்சனைகள், இன்னல்கள், வன்முறை சந்திக்கிறார்கள் என்பதனை உங்களை போன்ற நடுநிலை(?)வாதிகளுக்கு கண்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லைதான் (பாதிப்புக்குள்ளாவது தவ்ஹீத் ஜமாஅத்காரன், நீங்கள் இல்லை).

அடுத்தது ஏதோ நாங்கள் (தவ்ஹீத் ஜமாத்தில் உள்ளவர்கள்) மட்டுமே வரம்பு மீறி பேசுவதாகவும், எழுதுவதாகவும், கூறும் (தங்களை அகிம்சைவாதிகள் போன்று அடையாளபடுத்தி கொள்ளும் கூட்டம் ) உங்களின் எழுத்தில் என்ன தேன் ஓடுகிறதோ? (அரிப்பை? தீர்த்துக் கொண்டார்கள்).

ஓர் இறை கொள்கையுடையவன் ஒரு இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கலப்பு திருமணம் நடைபெறும் இடத்தில நிற்கும்போது இவரை இஸ்லாமிய தலைவர் என்று நினைத்து கொண்டு இருக்கும் முஸ்லிம்கள் இந்த செயலை இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்று அர்த்தம் கொள்வார்கள். ஆகையால் இந்த செயலை கண்டிக்காமல் என்ன காம்ப்ரமைஸ் செய்துகொள்ள இது ஒன்றும் சமுதாய பிரச்சணையில்லை, மார்க்க பிரச்சனை (ஓர் இறை கொள்கைக்கே எதிரானது).

இந்த செயல் மற்றவர்கள் செய்யாமல் இருக்க மட்டும் சொல்லவில்லை , அந்த திருமணத்தில் கலந்து கொண்ட இயக்க தலைவர் (?) வரும் காலங்களில் இதை போன்று நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று ஓர் அறிவுரையாக எடுத்து கொள்ளவேண்டும்.
ஒற்றுமை
அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

மாற்றுமத திருமண நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது மார்கத்திற்கு முரண் என்று ஒரு சகோதர்ர கூரியுள்ளார். இசுலாமிய திருமணங்களில் மட்டும் பங்கு கொள்வது மார்கத்தில் கூடுமா? அப்படி கூடுமானால் அதற்கான சான்றுகளைச் சமர்பிக்கட்டும்.
மாற்று மதத்தினரை விடுங்கள் முஸ்லீம்களில் பெரும்பாலானோர் வரதட்ச்சணை வாங்கித்தான் திருமணம் முடிக்கின்றனர். அது போன்ற திருமணங்களுக்குச் செல்லும் முஸ்லிம் சகோதரர்களை மார்க்கம் எந்த முறையில் கட்டுப்படுத்துகிறது ?
feroz
தவுஹீதுவியாதியா அதென்ன வியாதி சார்
ar.sultan
தமீம் அன்சாரியும் அவர் சார்ந்த கட்சியும் இங்கு (அரபு நாட்டில்) தவ்ஹீத் வேடமும் ஊரில் இவரமாதிரி அறிவுஜீவி? வேடமும் இரட்டை வேசம் போடுபவர்களை தான் விமர்சித்தார்கள் ஒன்னு தவ்ஹீத்வாதியா இரு இல்லை அரசியல்வாதியா இரு இந்த இரட்டை வேசம் ஏன்? இதை கூட விளங்காதவர் தான் இந்த உமர்கயான்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.