ஆர்.எஸ்.எஸ். மூலவராக விளங்கிய வீரசவர்க்காரின் தம்பியின்  மருமகளும், காந்தியாரைக் கொன்ற விநாயகக் கோட்சேவின் மகளுமாகிய ‘ஹிமானி சவர்க்கார்‘. இவர் பெண் வழக்குரைஞராக இருந்தும் இந்துத்துவ வெறியைத் தழுவி செயல்படும் தீவிரவாதி ஆவார்.

ஹிமானி சவர்க்கார் தலைமையில்
2003 இல் ‘அபினவ்பாரத் ‘என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இந்த ‘அபினவ்பாரத் ‘-இந்து தீவிரவாத அமைப்பிற்கு இன்னொரு பெண் பொறுப்பாளர் ‘சாத்வி பிரயாக்சிங்க் தாக்கூர்’.

இராணுவத்தில் உயர்ந்த லெப்டினன்ட் பதவியை வகித்துக் கொண்டு வெடி மருந்துகளை இராணுவத்திலிருந்து திருடி இந்துமத தீவிரவாதத்திற்கு பயன்படுத்த  துணையாய்-மூளையாய் இருந்த புனேயைச் சேர்ந்த 'புரோகித் ஸ்ரீகாந்த் பிரசாத்' என்பவனும் இந்த அபினவ்பாரத் அமைப்புக்கு பொறுப்பாளர்.

இவர்களது நோக்கம் “இந்துக் கோயிலை காப்போம், மசூதியை இடிப்போம்" என்பதே!

மலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு, இவர்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஜெயிலுக்கும் பெயிலுக்குமாக இருந்து வருகிறார்கள்! (இவர்களை விசாரித்த குற்றத்திற்காக பம்பாய் வெடிப்பில் கார்க்கரே அனாதையாக செத்தார்!)

இவர்களால்
2006 ஆம் ஆண்டு முஸ்லீம்கள் வழிபாட்டுத்தலத்தின் அருகில் நிகழ்த்தப்பட்ட இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்தனர் ,அதில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள், 125 பேர் படுகாயமடைந்தனர் !

காட்டுக்குள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தியவர்கள் என்று வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை! இவர்களுக்கு மேல் முறையீடும் மறுப்பு!

ஆனால், இராணுவத்தில் இருந்து ஆயுதங்களைத் திருடி குறிப்பிட்ட இனத்தின் மீதும் -அவர்கள் வழிபாட்டு தளத்தின் மீதும் தாக்குதல் நடத்திய சாத்வி பிரக்யாசிங் தாக்கூர், ஹிமானி சவர்க்கார், ஸ்ரீகாந்த் புரோகித் ஆகிய பார்ப்பன தீவிரவாதிகளுக்கு சிறையில் சோறு போட்டு வளர்ப்பதை விட்டுவிட்டு அவர்களையும் தூக்கில் போடுவார்களா? 

ஒரே குற்றத்தை செய்திருந்தாலும், பார்ப்பன இனத்திற்குச் சாதாரண தண்டனையும், பிற இனத்திற்கு மரண தண்டனையுமாக இரட்டை அளவுகோலாய் சட்டம் நெகிழ்வது மனுநீதியின் அடிப்படையிலா?

பார்ப்பனிய சிந்தனையோடு செயல்படுவதை சட்டம் நிறுத்திக் கொள்ள வேண்டும்!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.