இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய நிலத்தில் இஸ்லாமியர்களும் மற்ற சமய சமூகத்தை சேர்ந்தவர்களும் மிகச்சரியான புரிதல்களுடன் வாழ்ந்து வந்தது பெருவரலாறு. ஆனால் காந்தியைக் கொன்றழித்த இந்திய தேசத்தின் புதல்வர்கள் ஆளவந்தார்களாக மாறிய வரையிலும் அந்தப் பெருவரலாற்றின் அமைதி தொடர்ந்து தான் வந்தது. பொதுச்சூழலில் என்றைக்கு குண்டுவெடிப்புகளும் உலகளாவிய நிகழ்வுகளில் பல செயல்களும் செய்திகளும் முஸ்லிம்களை சம்மந்தப்படுத்தி வரத் தொடங்கினவோ அன்றைக்கு பிடித்தது சனி.

நான் முஸ்லிம்களில் குற்றவாளிகள் இல்லவே இல்லை என கூறவரவில்லை. முஸ்லிம்கள் என்றாலே குற்றவாளிகள், குண்டுவைப்பவர்கள் என்று கற்பிதம் செய்ய முனையும் ஆதிக்கசக்திகளை துதி பாடி எடுக்கப்படும் திரைப்படங்களைச் சாடுவதே என் நோக்கமாகிறது. எந்த இனத்தில் அல்லது எந்த மதத்தில் குற்றவாளிகள் இல்லாமல் இருக்கிறார்கள்..? எந்த இனத்தை சேர்ந்த அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் முழுக்க நல்லவர்கள் என மார் தட்டிக்கொள்ள முடியுமா..? அங்கனமே முஸ்லிம்களையும் அவர்களில் அங்குமிங்கும் இருக்கும் குற்றவாளிகளை குற்றச்செயல் புரிந்தவர்களை நாம் பார்க்க வேண்டும் என்பது தானே நியாயமாக இருக்க முடியும்..?

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியோ இல்லையோ, உலகுக்கே இளைத்தவாயர்கள் முசல்மான்கள்.

அவர்கள் செய்யக்கூடிய கொடுஞ்செயல்கள் என்னென்ன..?

1.அரபி/உருது பேசுகிறார்கள்.
2.தரையில் வீழ்ந்து தொழுகை புரிகிறார்கள்.
3.கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
4.புத்தகங்கள் அச்சிடுகிறார்கள்.. படிக்கிறார்கள் பேசுகிறார்கள்.
5.இன்னமும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நம்பிக்கொண்டு இங்கேயே இருக்கிறார்கள்.

குழந்தைத் தனமாய் இருக்கிறது. இரண்டு தரப்பாரை எப்பொழுதும் பதற்றத்திலேயே வைத்திருப்பதில் பதவிக்குளிர் காய்கிற அரசியல்வாதிகளும், மதவாதிகளும், இந்த இரண்டு தரப்பாரைச் சார்ந்து பிழைப்பு நடத்தும் அடிவருடிகளும் தவிர பொது மக்கள் இன்னமும் எந்த மதமாயினும் சரி, இணக்கமாக, அந்நியோன்னியமாகத் தான் வாழ்கின்றார்கள்..

இனி சினிமாவுக்கு வருவோம். அடிதடிப் படமாயினும் அரசியல் படமாயினும் சரி... ஊறுகாய் முஸ்லிம்கள் தான்.   முஸ்லிம்கள் குண்டு வைப்பவர்களாகவும், உருது பேசுகிறவர்களாகவும், தொழுகை புரிபவர்களாகவும், வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகவும், குண்டடிபட்டு அல்லது குத்துப் பட்டு சாகிறவர்களாகவும் தொடர்ந்து பிம்பமாக்கப்படுகிறார்கள். எந்த வித உலகளாவியப் பார்வையோ அல்லது புரிதலோ அன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்கப்படுகின்ற படங்களில் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் கொடுமைக்குட்படுத்தப்படுகின்றனர்.

சமீபத்திய வானம்... இதில் ப்ரகாஷ்ராஜ் நல்ல முஸ்லிம். அவர் தம்பி தீவிரவாதி. குண்டு வைப்பவன்.

ரஜினிகாந்தின் சிவாஜியில் ஹவாலா செய்பவர் ஒரு பாய். (சூப்பரு). உன்னைப் போல் ஒருவனில் கமல் செய்தது பெரும் துரோகம். அவரது குருதிப்புனல் படத்தில் அர்ஜூன் முஸ்லிம். கமல் இந்து. ஏன் இந்த நாயகர்கள் முஸ்லிம் வேஷமே ஏற்கக்கூடாதா..? பெரும்பான்மை மதத்தைத்தான் சார்ந்தவனாய் இருக்க வேண்டும் நாயகன் என்று எழுதப்படாத விதியே இருக்கிற கோடம்பாக்கத்தில் அதை மீற கமலால் கூட முடியாது. சேரனின் பொக்கிஷம் வித்தியாசமாய்த் தொடங்கியதே எனப் பார்த்தால்... அய்யய்யோ பத்மப்ரியாவின் அப்பா(முஸ்லிம்கள்)தான் படத்தின் வில்லன். வாக்கு கொடுத்து அதை மீறுகிறவர். ஏன் இந்த வெறிப்பார்வை..? சேரன் அதே படத்தை கதையை மாற்றி யோசிப்பாரா..? அல்லது எடுப்பாரா..? பத்மப்ரியா ஒரு ஹிந்து சேரன் ஒரு முஸ்லிம் என எடுத்தால்... எடுத்தால் என்று தான் சொல்ல முடியும்.. எடுக்க மாட்டார்கள்.

சரி போகட்டும் என்றால் நம்பள்கி நிம்பள்கி என்று கசாப்பு கடைக்காரர்களாகவும் கறி வெட்டுகிறவர்களாகவும் தானே அதற்கு முன்பு வரை சித்தரிக்கப்பட்டார்கள்..? சில விதிவிலக்குகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை மனக்காயங்கள் மொத்தத்தையும் மறுதலிப்பதற்கோ மறுப்பதற்கோ மறப்பதற்கோ போதாது என்பதே உண்மை.

இஸ்லாமியர்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கின்றன..? ஒரு முழுமையான சினிமா, முழுக்க இஸ்லாமிய குடும்பமொன்றின், இஸ்லாமிய கிராமமொன்றின், இஸ்லாமிய வாழ்க்கைமுறை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறதா இது வரை தமிழ் சினிமாவில்..? அப்படி ஒரு படம் எடுத்தால் ஓடாதா..? அல்லது இஸ்லாமியர்கள் வரலாற்றில் கதைகளே இல்லையா? இந்த மண்ணில் காலம் காலமாய் இஸ்லாமியர்கள் என்றாலே கறிவெட்டுபவன், தமிழை தப்பாக பேசுபவன் அல்லது குண்டு வைப்பவன் தானா..?

கட்டிடக்கலையில் இருந்து சாஃப்ட்வேர் துறை வரை தையல் கலையில் இருந்து மருத்துவர் வரை விஞ்ஞானிகளில் இருந்து மாலுமிகள் வரை இஸ்லாமியர்கள் சாதிக்கவில்லையா..? அல்லது சாதிப்பதை வெளிச்சொல்ல தமிழ்சினிமா தயாராக இல்லையா..? இது தான் இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.

எந்த ஒரு படத்திலும், ஆகா.. ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி இஸ்லாமியர் என கதை சொல்கிறார்களே, பரவாயில்லையே என நினைத்தால் (உதாரணம்:போக்கிரி) உடனே வந்து இறங்குவார் அலிபாய். சர்வதேச குண்டுவைக்கும் டெக்னாலஜிஸ்ட். என்ன கொடுமை இது..?

இவர்கள் எல்லோருமே கதை எழுத மன்னிக்கவும் கதை பண்ண உட்காரும் பொழுதே ஒரு எதிர்மறைப்பாத்திரம் முஸ்லிமாக வந்தாக வேண்டும் என்ற முன் முடிவில் அதை பேலன்ஸ் செய்வதற்காகவே இன்னொரு கதாபாத்திரம் முஸ்லிம்.. அது எதற்கு..? மத ஒற்றுமை பேச, தியாகம் செய்ய.. ஏன் தனியாக ஒரு நல்ல முஸ்லிம் கதாபாத்திரத்தை சிந்திக்கவே முடியாத ஊனமுற்றவர்களாகவே இயங்குகிறீர்கள் இயக்குநர்களே...?

சரி. பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற, இந்தியத்திருநாட்டில் எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும் சொத்துக்களையும் வாங்கி இருக்கிற, வாங்குகிற, வாங்கப் போகிற மேல்நிலை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே.. அதே நேரம் இன்னமும் கடைநிலையில் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுகிற, வாழ்வாதாரத் தேவைக்கு கூட கை ஏந்தும் நிலையில் கல்வி அறிவும் பெறாமல், கூலிகளாகவும் ஏழைகளாகவும் இந்த நாட்டில் பரிதவிக்கிற ஏழை முஸ்லிம்களின் கதையை படமாக்க அல்லது எண்ணிப் பார்க்க கூட நேரமில்லையா தோழர்களே.. அல்லது அப்படி ஏழைகளாக எந்த ஒரு முஸ்லிமும் இல்லை என உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா....?

நமது வீதிகளில் நமது வீடுகளுக்கு இடப்புறமும் வலப்புறமும் வசித்துக் கொண்டு, நம் பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் தம் பிள்ளைகளைப் படைக்க வைத்து, நாம் பணம் சேமிக்கும் வங்கிகளில் தம் பணத்தையும் சேமித்துக் கொண்டு, நம்மிடம் தம் பொருளை விற்று, நம் பொருளை தமக்கென வாங்கி, குருதி கொடுத்து குருதி பெற்று எல்லா விதங்களிலும் சிறுபான்மையினராய் எல்லா நேரங்களிலும் அடுத்து என்ன நிகழுமோ என்ற பதற்றத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியர் இந்த 'மதச்சார்பற்ற' காந்தி தேசத்தில் செய்யும் பிழைதான் என்ன..? இந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவதைத் தவிரவும்.

சினிமா கட்டாயம் தலையாய கலை என நம்புகிறேன். பத்து படங்கள் போதும் தேசம் அமைதியுற என நிச்சயமாக அடித்துச் சொல்ல விழைகிறேன். அதனால் உங்கள் முன்வைக்கிறேன். என்ன செய்யக் கூடாது என்பதுவும் என்ன செய்ய வேண்டும் என்பதுவும்....

உங்களுக்குத் தெரியாதா இயக்குநர்களே..?

Comments

19 comments

19
வ.சாதிக் பாட்ஷா
சகோதரருக்கு பல்லாயிரம் நன்றிகள்!
பாலை வனத்தில் பெய்த மழையாக இருக்கிறது கட்டுரை
பல்லாண்டுகளாக ஒரு முஸ்லிம் என்பதால் இந்த வேதனையை மனதில் சுமந்து வந்தோம். எங்களுக்காக சிந்திப்பதற்கு ஒரு இதயமாவது இருக்கிறதே என்று அறியும்போது மிகவும் ஆறுதலடைந்தேன். அனைத்து முஸ்லிம்களும் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்று எந்த முஸ்லிமும் நினைப்பதுமில்லை சொல்வதுமில்லை ஆனால் எல்லா முஸ்லிம்களும் மோசமானவர்கள் என்று மிகப்பெரிய ஊடகமான சினிமாவில் சொல்லிச் சொல்லி என் மூன்று வயது குழந்தையைக்கூட தீவிரவாதி என்று சிலர் கிண்டல் அடித்துப் பேசியது கேட்டு மவுனமாக கண்ணிர் சிந்தியுள்ளேன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் கண்ணீர் ஒரு சுண்டு விரலால் துடைக்கப் பட்டதை உனர்கிறேன். பல்லாயிரம் கோடி நன்றிகள்
அமீர் அப்பாஸ்
அன்புச் சகோதரர் ஆத்மார்த்தி அவர்களுக்கு, உங்களை போன்றவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் துயரத்தை பதிவு செய்வது ஆறுதலாக இருக்கிறது. நாங்கள் எங்களுக்காக பேசினால் கூட மதவாதமாக பார்க்கிறார்கள். நீங்கள் பேசுவதன் மூலம் மதச்சார்பின்மை மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் தேசத்தின் கருத்தியலுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவது போல உள்ளது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...!
shagul
tholarukku migavum nandri.... enenil engal ulltthil ulla kukuralai appadiye thangal pirathipalithulleergal..... thanks a lot
shifaya
naan sathik batsha solvathi than nanum solla virumbinen.engalin vali yai purintha ungaluku nanri. nangal payanikum pothum engalai ponroridam mugam kuduthu pesa marukiragal thivira vathi ena ninaithu.engal peyar solli thadi vaithum ,partha aninthum thavaru seium vetru mathatharkalalum avarkalin arasial athayangalukkavum naangal paliyakkapadukirom. engalin valii oruvaravathu purinthukolvatho aruthal alikirathu. endru marumo intha samuthaya parvai?
Riyaz
anaithu thuraikalilum muslikalin pangu ullathu enpathai yaarum marukka mudiyathu. appadi irukka inthe director kal mattum yen iappdi padam edukkindranar enpathu priyatha puthir. Muslimkalin nar panbukalai avarkaludan palakinal mattume purinthu kolla mudiyum. en nanbarkalil athihamanor hindus & christians avarkal anivarum engal mathathinai mathikkindranar. engalin valikalai ungal karuthukkalaha padathatharku kodi nandrikal.
sudha senthil
ஏதோ ஒன்றிரண்டு தமிழ் சினிமாக்களை உதாரணமாக சொல்லும் நண்பரே , மீதி சினிமாக்களில் இந்துக்கள் தானே ரௌடி ஆக பொரிகியாக காட்ட படுகின்றனர். தமிழ் சினிமா பார்பதுண்டுதானே? அப்போதெல்லாம் ரசித்து பார்த்திர்களா?
ஆளூர் ஷாநவாஸ்
மிக அருமையான பதிவு. கட்டுரையாளருக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

முஸ்லிம்களைப் பற்றி ஊடகங்கள் வரைந்து வரும் சித்திரம் மோசமாகவே இருக்கிறது.
உலகம் முழுவதும் சுரண்டப்படுபவர்களாகவும், சூறையாடப் படுபவர்களாகவும் முஸ்லிம்களே இருக்கிறபோது, ஊடகங்கள் ஏனோ உண்மையை மறைத்து அவர்களை பயங்கரவாதிகளாகக் காட்டுகின்றன.

பாலஸ்தீனத்தில் துரத்தப்படுபவன் முஸ்லிம்; ஆப்கானில் வேட்டையாடப்படுபவன் முஸ்லிம்; இராக்கில் கொல்லப்படுபவன் முஸ்லிம்; காஷ்மீரில் குதறப்படுபவன் முஸ்லிம்; குஜராத்தில் அகதியாயிருப்பவன் முஸ்லிம்; கோவையில் துயரப்படுபவன் முஸ்லிம்...என உலகின் ஒவ்வொரு மூலையிலும் கருவறுக்கப்படும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர். இந்த உண்மைகளைச் சொல்ல எந்த இயக்குனரும் தயாரில்லை.

பணபலமும், படைபலமும் கொண்ட வல்லரசுகளும்; வகுப்புவாத சக்திகளும் முஸ்லிம்களின் வளங்களை சுரண்டி அவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்க முனைகிற போது, தமது பாதுகாப்பை உறுதி செய்யவும், தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் முஸ்லிம்கள் தயாராகின்றனர். கையில் கிடைக்கும் கருவிகளை எடுத்து எதிரிகளை வீழ்த்த முயல்கின்றனர். அதில் ஒரு சிலர் வன்முறைப் பாதையில் செல்கின்றனர். அப்படி சென்றவர்கள்தான் அல் காய்தா ஒசாமாவும்; அல் உம்மா பாஷாவும்.

ஒசாமாவையும், பாஷாவையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதி, அவர்களை மனிதகுல விரோதிகளாக சித்தரிப்பதில் வேகம் காட்டும் ஊடகங்கள், ஒசாமாவை உருவாக்கிய அமெரிக்க பயங்கரவாதத்தையோ; பாஷாவை உருவாக்கிய இந்துத்துவ பயங்கரவாதத்தையோ பற்றி மூச்சே விடுவதில்லை.
viyasan
தனது சொந்த நாட்டுமக்களை, அதாவது முஸ்லீம்களான குர்திஸ் இனக் குழந்தைகளை நச்சுவாயுவினால் கொன்ற சதாம் ஹுசையினுக்காகவும், பலஸ்தீனத்தில் குண்டு விழுந்தாலும், ஈராக்கில் ஒரு குழந்தை இறந்தாலும் அழுது வடித்து, வீதிகளில் போராட்டம் நடத்தியவர்களும் தமிழ் முஸ்லீம்கள். உலகமே பயங்கரவாதியாகக் கருதும் ஒசாமாவுக்காக இன்று நியாயம் கேட்பவர்களும தமிழ்நாட்டு முஸ்லீம்கள், அதிலும் பலர் தாமும் தமிழர்கள் என்றே வாதாடிக் கொண்டே, எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்கள் என்பதை மட்டுமல்ல, எப்படி ஈழத்தில் வாழும் தமிழர்களையே பிளவு படுத்தினார்கள் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள். தமிழ்நாட்டு தமிழ் முஸ்லீம் சகோதரர்களே, உங்களில் எத்தனை பேர் இந்த ஆளின் பொய்ப்பிரச்சாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தீர்கள்?

http://www.youtube.com/watch?v=o6VqpcqK8s0
MOHEMED ERSAHTH
BIG SALUTE MR.ஆத்மார்த்தி..U R THE GREAT.ALHAMTHULILLAH
Homo Irreligious
//ஒரு முழுமையான சினிமா, முழுக்க இஸ்லாமிய குடும்பமொன்றின், இஸ்லாமிய கிராமமொன்றின், இஸ்லாமிய வாழ்க்கைமுறை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறதா இது வரை தமிழ் சினிமாவில்..?// This kind of films can only be done by Muslims. Because others are not in a position to depict these aspects of Muslim life because they simply don't know about Muslims. Just for one example: the way a muslim boy pisses is very very different from the way others do. There are hundreds of others things like this. Very few non-muslims have knowledge about these. Just google 'Ex-muslim' and learn some of these things. By the by, i am not against Muslims. I am against all evil religions.
panneer
கிரிகெட் பாக்காத முஸ்லிம் இந்தியாவுக்கு எதிரானவன் என பேசுகிற இந்தியர்கலை என்ன செய்ய ?
இவர்கள்
மேலப்பாளையம் முஸ்லிம்கள்
பே . சாந்தி
யாதுமாகி பதிப்பாக வெளியிடு
வாசிப்பது நல்லது
m.irshana
ullam unarhirathu. manitham valvathay. thanks for you.
Neverevert
Dear Panneer,

I read 'மேலப்பாளையம் முஸ்லிம்கள்' written by பே . சாந்தி (a non-muslim woman) . It is a very small book with 2 sections. First section talks about ONLY about the Tamil customs followed by the muslims in Melapalayam, like dowry, marriage feasts, and 'seer' on child birth. There is very little about their 'Islamic' way of life.

Second section lists out many grievious cases of human right violations against these Muslims by Police. This kind of police force is the sign that We are yet a long way from becoming a just and civilized society.

One important aspect of this book is it tries to project Melapalayam as the case of peaceful propagation of Islam. But as per this book itself, 6 arab (or persians) trading families settled Melapalayam before islamic invasion in the north and they marry among themselves within Melapalayam. Currently they number around a lakh. So it is only the descendants of the original migrants who make up the today's Melapalayam. It is possible that there were few 'peaceful' conversions over the centuries but it could not have contributed much to the total.

As per this book this community also has a good number of 'Ahmadiyya' muslims. I made some search on Melapalayam and Ahmadiyya. Ahmadiyyas are Muslims with one big difference with others. They don't accept Mohammed as the last prophet. (http://en.wikipedia.org/wiki/Ahmadiyya) This sect has originated in 19th century in Qadian, Pakistan, founded by Mirza Ghulam Ahmad. After its place of origin, they are also called as Qadianis. So the Ahmadiyyas of Melapalayam must have immigrated after 19th century. Actually they are being persecuted right from the beginning in the Muslim majority areas. To escape persecution, they have migrated far and wide to the Muslim minority areas. Infact, they form the big chunk of migrants to UK during British rule. Melapalayam was one such safer place. But alas, no more. see http://www.intjonline.org/1636.do. Due to the exposure to wahabi Arabia, Ahmadiyyas are no more accepted as Muslims even at Melapalayam are shunned from marriage relation.
a.b. ahamed
Thanks. wonderful article.
sikander rgm
innum namathu nattill mathacharbinmai aangange olinthu kondu than irukirathu enbathai kattuhirathu intha katturai............

insha allah.... odukkkapaduhira samuthayam orunal uyarntheluvathu thinnamee.....
sadhiq
நன்றி!!!!!!!! அப்படி சொல்ல நான் ஒன்றும் முட்டாள் அல்ல?நன்பா!!!!!!! நீ மனிதன்!! நீயும் மனிதன்!!!!! நீதான் மனிதன்! உன்னைப்போல் மனிதம் தழைத்தால் உலகம் வாழும் !மனிதனுக்கு நன்றி !! மனிதம் பேசிய என் நன்பனுக்கு நன்றி!!
சபிரம் சபிரா
எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க செய்தி வரவேற்கிறேன்
ஷேக் அப்துல் காதிர்
நியாயமாகப் படைத்திருக்கிறீரகள் உங்களுக்கு நன்றி பகர்கிறேன் வள்ளுவனின் சொல்லுக்கொப்ப “இனிய உளவாக் இன்னாதகூறல் கனியிருப்ப காய்கவர்ந்தற்று” எவ்வளவு பெரியவெண் திரையானாலும் அத்திரையில் ஒரு கரும்புள்ளியைக் கண்டால் அதை யாரும் துடைக்க முனைவதில்லை அதை ஊதிப் பெரிதாக்குவார்கள் அப்புள்ளியைத்தவிர அவ்வளவு விசாலமாக வெண்மையும் உண்மையும் நிறைந்திருக்கும் அதையாரும் கண்டுகொள்வதில்லை, உங்களைப்போல் ஆழ்ந்து சிந்திப்பவர்களைத் தவிர, துடைக்கும் கரங்களும்,தட்டிக் கொடுக்கும் கரங்களும் இருக்குமிடத்தில் தடுக்கிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர் மனிதனின் மனதில் மன் தம் வாழவேண்டும் என்றாலே புனிதம் மலரும், பணமென்ற கணிதத்தைமட்டும் சம்பாதிக்க குணமென்ற நியாயத்தை புதைக்கக்கூடாது, சினிமா உலகின் வைற்றில் கோலாறு அதற்கு இனிமா கொடுத்து அந்தக்கசடுகளையும்,அசடுகளயும் அகற்றவேண்டும் என்ற்றலே நியாயம் ஆரோக்கியமடையும், பொக்கிஷமென்றபெயரில் இலைமறைவில் இதயங்களை கோரைப்படுத்துவதும், காதலும் காமமும் வன்முறையும் சித்தைக்கப்பட்டே பெரும்பாலும் திரைப்படங்கள் படைக்கப்படுகின்றன ஏன் வேறு சமூக, விஞ்ஞான நலவளம்தரும் சமூகமேம்பாட்டு உயர்வுதரும் கதைகளே இல்லையா?பாருக்குள்ளே நல்லநாடு நம்பாரதநாடு என்று சொல்லிக்கொண்டு வைக்கோல்போருக்குள் புகுந்துகொண்டு உடலெல்லாம் ஒவ்வாமை(படை,சொரிச்சல்)என்கிறோம் இது நம் அறியாமைதானே சிந்தித்துப் பாருங்கள் படைப்பாளர்களே அமுதம் ஆறாக ஓடும்பொழுது ஏன் அமிலத்தில் வாய்கொப்பளிக்கிறீர்கள் மாற்றான் வேற்றான் என்ற கருத்திலிருந்து மாறி, உற்றான் உறவினனென்று தயவு கூர்ந்து மாற்றி யோசியுங்கள். நன்றி அன்புடன் ஷேக் அப்துல் காதிர்.
Venkatesh
Dear Aathmarthi,

Leave it aside the Cinema. There are quite a number of films (majority) which shows the Hindus and Christians as villians. It depends on the character i.e. how the director visualises. No one should become emotional. There was a time in films, the Hindu Brahmin family women were portrayed as bad characters and loose characters. Even today also, Brahmin family women are portrayed as villians. Come to the point of Muslims. Now in today's international politics, in Afghanistan, Isreal, in some parts of Russia, South African countreis, there are lot of bloodsheds. The root cause is terrorism. And you know, who are behind these terror activities? the same Muslims. They don't have the concern for humanity. They fight with each other, they kill their own brothers. In Jammu & Kashmir, as you said, the majority Muslims who earn their livilihood by doing meanial jobs don't indulge in terrorist activities. But persons like Geelani, JKLF leader (I forgot the name) and other selfish leaders take money from Pakistan and other Arab Countries incite, induce, lure innocent Muslim youths to engage them in Anti-India and other terrorist activities. But the pity is No Muslim leaders from other parts of India condemn these acts or speak against them (I think out of fear only). Terrorism whether in cinema or in real life should be condemned by all irrespective of who is behind whether or Hindu, Christian or Muslim. Unity is the need of the hour.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.