அமெரிக்காவில் நான்கு நாட்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஊசி போட்டுக் கொன்றார்களாம். அது ஊடகங்களால் பெரிய அளவில் செய்தியாக்கப்படவில்லை. வலைத் தளங்களிலும் வெளியிடப்படவில்லை. அதனால் நாம் பார்த்துக் கண்ணீர் வடிக்க முடியவில்லை.

அமெரிக்காவிலும் ஒரு மதம் இருக்கிறது. அந்த மதத்தின் படி எந்தத் தவறு செய்தாலும், அந்தத் தவறு செய்த பின் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம். அவர்களைப் பொறுத்தவரை ஆண் மீசை தாடி இல்லாமல் இருப்பதுதான் அழகு. பெண் உடலை எந்தளவிற்கு வெளியே காட்டுகிறார்களோ அந்தளவிற்கு பணவசதி படைத்தவர்; நாகரீகமானவர்; விடுதலை அடைந்தவர். அவர்களுக்கு புனிதமானது பைபிள். பெண் ஆதாமின் விலா எலும்பிலிருந்து வந்தவள்.. என்பது போன்ற இன்ன பிற கலாச்சார பண்பாட்டு பழக்கவழக்கங்களைக் கொண்டவர்கள். அவர்கள் ஊசி போட்டோ மின்சாரம் செலுத்தியோ மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

இந்தியாவிற்கு தமிழ்நாட்டிற்கு பெரும்பான்மையாக ஒரு மதம் இருக்கிறது. அதில் பெண்ணென்றால் பூ, பொட்டு, புடவை, தாய், மகள், மனைவி, இடுப்புத் தெரிய சேலை கட்டுவது, அடக்க ஒடுக்கம், மீசை வச்ச ஆம்பளை, இந்த வாழ்க்கை போன ஜென்மத்தில் செய்த பாவத்தால் கிடைத்தது, இறந்தவர்களை எரிப்பது அல்லது ஆற்றில் விடுவது, அரைகுறையாக எரிந்த பிணத்தை தின்னும் அகோரி என்பது போன்ற இன்ன பிற கலாச்சார பண்பாட்டு பழக்க வழக்கங்களைக் கொண்டது இம்மதம். இங்கும் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் செயல் சட்டப்பூர்வமானது. அஜ்மல் கசாப் அண்மையில் தூக்கிலிடப்பட்டது எல்லோரும் அறிந்த்தே.

இஸ்லாமியர்களின் கலாச்சார அடையாளம், தாடி, குல்லா, குர்ரான், ஐந்து முறை தொழுதல், பெண் பர்தா அணிவது, ஆண் பெண் இருவருமே உடலை மறைத்து உடை அணிவது, இறந்தவர்களை அமைதியாக எடுத்துச் செல்வது என்பது போன்ற இன்ன பிற கலாச்சார பண்பாட்டு பழக்க வழக்கங்கள் உள்ளன. அவர்கள் நாட்டிலும் மரண தண்டனை இருக்கிறது. அதை பொது இடத்தில் வாளால் வெட்டி நிறைவேற்றுகிறார்கள். அதுவும் சட்டப்பூர்வமானது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றவாளியை மன்னித்து விட விரும்பினால் குற்றவாளியை உயிருடன் விடலாம் என்கிற சட்டமும் அங்கு உள்ளது.

இப்படி, அவரவர் பண்பாடு, கலாச்சாரம், பொருளியல் ஆகியவற்றை ஒட்டி ஒரு சட்டம் இருக்கிறது. அதில் மரண தண்டனையும் இருக்கிறது. அவ்வாறு மரண தண்டனை அளிக்கப்படும் போது, கருணை எங்கே இருக்கிறது? எல்லா வகை மரண தண்டனையும் உயிரை எடுப்பதுதான்; கொடூரமானதுதான்; காட்டுமிராண்டித் தனமானதுதான்; நாகரீக வளர்ச்சியற்ற சமூகத்தின் வெளிப்பாடுதான்.

மனித உரிமை என்ற சொல்லை உலகுக்கெல்லாம் அறிவுறுத்தி விட்டு ஊசி போட்டு மரண தண்டனை விதிக்கலாமாம். அஹிம்சை பூமி என்று பெயர் வாங்கிக் கொண்டு கசாபை தூக்குக் கயிற்றில் தொங்க விடலாமாம். யாரும் வாய் திறக்க மாட்டார்களாம். ஆனால் இஸ்லாமிய நாட்டில் அந்த மதச் சட்டப்படி நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை மட்டும் காட்டுமிராண்டித்தனமானதாம். என்ன வகை நியாயம் இது?.

எந்த வகையிலும் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ள மாட்டோம், மரண தண்டனை என்பது மனித குலத்திற்கே இழுக்கை ஏற்படுத்துகிறது; மனிதாபிமானமற்றது என்கிற அடிப்படையில் அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ, உலகில் வேறெங்கிலுமோ நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்டிப்பதும் வேறு.

ரிசானாவிற்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை, இக்கொடூர செய்தி வெளியில் தெரியாமல் புதைந்து விடக்கூடாது என்ற அளவில் ஒரு துக்ககரமான செய்தியாக, உலகம் முழுக்க மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்வது வேறு.

ஆனால் ரிசானாவிற்கு நிறைவேற்றப்பட்டது மட்டுமே கொடூரமான மரண தண்டனை என்பதும், அதற்கு இஸ்லாமியர்களின் காட்டுமிராண்டித்தனமான சட்டம் தான் காரணம் என்று பிரச்சாரம் செய்வதும் மனிதாபிமான அடிப்படையிலானது அல்ல; மனித உரிமை அடிப்படையிலானதுமல்ல. மத துவேசத்தின் அடிப்படையிலானது. சக மதத்தினர் மீதுள்ள சகிப்புத்தன்மையற்ற தன்மையையும் வெறுப்பையும் வெளிப்படுத்துவது. இது மரண தண்டனை குறித்த ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையல்ல.

இன்றைக்கும் இந்தியா சர்வதேச மரண தண்டனை ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. கையெழுத்திட மறுத்த அடுத்த நாள் காலைதான் கசாபைத் தூக்கிலிட்டனர். அதற்கு நாம் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.

இப்பொழுது டெல்லி சம்பவத்திற்குப் பிறகு, பாலியல் வன்முறையில் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்பட சட்டம் வழிவகை செய்துள்ளது.

இப்படி நம் நாட்டில் அமலில் இருக்கும் மரண தண்டனையை ஒழிக்கத் திராணியற்றவர்கள், அதற்கு எதிராகப் போராடக் கூடத் திராணியற்றவர்கள் இஸ்லாமிய சட்டத்தை குறை கூற கொஞ்சங்கூடத் தகுதியில்லாதவர்கள்.

- இந்திரா காந்தி அலங்காரம்

Comments

7 comments

7
shueib
நடுநிலையான பார்வை:-)
slnm
நன்பா நிஙகல் சொல்லுவது உன்மை 200 உயிர்கலை கொன்ர கசாப் ஒரு கடவுல் .ஜிகாத் பன்னும் திவிரவதி எல்லம் விரர்கல் இவர்கலுக்கு வக்காலது வாஙும் நிஙகல் நல்லவர் எப்படி உஙலுக்கு இப்படி பெச முடியுது இரந்தவர்கல் பட்டியலில் உன் குடும்பதர் இருந்தா பெசுவய நன்பா அன்பு வெரு அடிதடி வெரு இரக்கம் வெரு இரத்தம் வெரு இது புரியத உன்கலுக்ககு இந்த தலைபில் எல்லுத உன்னக்கு தகுதி இல்லை தொலா
Nellai Balaji
என்ன சொல்ல வருகிறிர்கள் ? ரிசானாவிற்கு நிறைவேற்றப்பட்டது சரி என்ற? இல்லை இஸ்லாம் எதிர்த்து வரும் கண்டன குரல்களையா ? அமெரிக்காவில் ஒரு தண்டனை என்றல் அது அங்குள்ள மதம் சாராத சட்டத்தினால்...அதற்கும் இந்த விடயத்திற்கும் என்ன சம்பந்தம் ???
ஷாலி
கொலை செய்தவனை தண்டிக்கும் அதிகாரத்தையும்,அல்லது மன்னிக்கும் அதிகாரத்தையும் வேறு எவருக்கும் வழங்காமல் கொலை செய்யப்பட்டவனின் வாரிசுகளிடம் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் வழங்குகிறது.தகப்பன் கொலை செய்யப்பட்டால் தீர்ப்பளிக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்ட மகனிடம் கொடுக்கப்படுகிறது.அவன் விரும்பினால் இறைவனிடம் நற்கூலி பெற அவ்வுயிரை மன்னிக்கலாம். அல்லது பழிக்குப்பழி தண்டிக்கலாம்.பாதிக்கப்பட்டவன் வழங்கும் தீர்ப்பை அமுல் படுத்துவது மட்டுமே அரசின் வேலை.தீர்ப்பை மாற்றி எழுத எந்த மன்னருக்கும் அதிகாரமில்லை.இது காட்டுமிராண்டி சட்டமாக இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவன் வாரிசு துன்பத்தில் இருக்க, எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஜனாதிபதி கருணை மனுமூலம் கொலையாளியை விடுதலை செய்வார். அல்லது தொங்க விடுவார்.இது காருண்ணியமுள்ள சட்டமாம்.

வாலியை மறைந்திருந்து கொன்று நீதியை நிறைவேற்றிய,சம்பூகனை வதைத்து சனாதனா தர்மத்தை காத்த,நந்தனின் ஈன உடலை ஜோதியில் கலக்கவிட்டதுகள்,தாயுமானவரையும் ஜோதியில் குளிப்பாட்டியவர்கள்,அதன் தொடர்ச்சியாக பெஸ்ட் பேக்கரி நெருப்பில் தள்ளி முஸ்லிம்களை ரொட்டி சுட்டவர்கள், இன்று நீதிதேவன்களாக வலம் வருகிறார்கள்.

கட்டுரையாசிரியையின் நுணுக்கமான, யாரும் தொட்டுக்காட்டாத புதிய பார்வையின் மூலம் உண்மைகள் விடுதலை வெளிச்சம் பெறுகின்றன.நன்றி! வாழ்த்துக்கள்!
viyasan
கொலைசெய்த‌வனைத் த‌ண்டிக்கும் அதிகார‌த்தையும் அல்ல‌து ம‌ன்னிக்கும் அதிகார‌த்தையும் கொலைசெய்ய‌ப்ப‌ட்ட‌வ‌னின் வாரிசுக‌ளிட‌ம் அளிப்ப‌தும், கையையும், காலையும் துண்டிப்ப‌தும், நாடோடிக்குடும்ப‌ங்க‌ளில் ஒருவ‌ன் கொல்ல‌ப்ப‌ட்டால் அவ‌னது உழைப்பை ஈடு செய்ய‌ ஒட்ட‌க‌த்தை அல்ல‌து அந்த‌க் கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌னின் குடும்ப‌த்துக்கு உத‌வும் வ‌கையில் பெறும‌தியான பொருளை (ப‌ணம்) கொடுப்ப‌து அப்ப‌டிக் கொடுக்க‌ முடியாது விட்டால் ப‌ழிக்குப் ப‌ழிவாங்குவ‌தும் பாலைவ‌ன‌த்தில் நாடோடிக‌ளாக‌த் திரிந்த‌ காட்ட‌ர‌பிக‌ளால் அவ‌ர்க‌ளுக்காக உருவாக்க‌ப்ப‌ட்ட‌ காட்டுமிராண்டிச் ச‌ட்ட‌ம். அது இப்பொழுதும் அவ‌ர்க‌ள‌து க‌லாச்சார‌த்துக்கும் ப‌ழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளுக்கும் ச‌ரிவ‌ர‌லாமே த‌விர‌ 21ம் நூற்றாண்டில் உல‌கில் ப‌ழ‌மைவாய்ந்த‌ இன‌ங்க‌ளிலொன்றாகிய‌ த‌மிழின‌த்துக்கோ, த‌மிழ்நாட்டிற்கோ அல்ல‌து எந்த ஜ‌ன‌நாய‌க‌ நாட்டுக்கோ பொருந்தாது. அந்த‌ நாடோடிக் காட்ட‌ர‌பிக‌ளின் ச‌ட்ட‌த்தின்ப‌டி, ப‌ண‌முள்ள‌வ‌ன் கொலையைச் செய்து விட்டு, ந‌ட்ட‌ ஈட்டைக் கொடுத்துத் த‌ப்பிக் கொள்ள‌லாம். அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் த‌ன‌து 5 வ‌ய‌து சொந்த‌ மக‌ளைக் க‌ற்ப‌ழித்துச் சித்திர‌வ‌தை செய்து கொன்ற‌வ‌ன் கூட‌ அந்த‌ச் ச‌ட்ட‌த்தின் கீழ் த‌ண்ட‌னை ஏதும் அனுப‌விக்காமல் த‌ப்பித்துக் கொள்ளலாம் என்ப‌து ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ன் தொட‌ர்ந்து அந்த‌ ம‌த‌ போத‌க‌னாக‌வுமிருக்க‌லாம். அந்த‌ச் ச‌ட்ட‌த்தை நியாய‌ப்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் த‌மிழ்நாட்டிலுமிருப்ப‌து த‌மிழ்நாட்ட‌னைவ‌ரும் க‌வ‌லைப்படுவ‌து ம‌ட்டும‌ல்ல‌ அவ‌தான‌மாக‌வுமிருக்க‌ வேண்டிய விட‌ய‌மாகும். சும்மா புராண‌க்க‌தைக‌ளை இழுத்து விடுவ‌து கால‌ட்சேப‌த்துக்கு உத‌வ‌லாமே த‌விர‌ அரேபிய‌க்காட்டு மிராண்டித்த‌ன‌த்தை நியாய‌ப்ப‌டுத்த‌ உத‌வாது என்ப‌தை ஷாலி அவ‌ர்க‌ள் இனிமேலாவ‌து புரிந்து கொள்வாரென‌ ந‌ம்புவோம். :-)

http://www.viyaasan.blogspot.com
viyasan
இனியில்லையென்ற‌ தாய்நாட்டுப் ப‌ற்றுள்ள‌ அமெரிக்க‌ர்க‌ள் கூட‌ ம‌னித‌வுரிமையென‌ வ‌ரும்போது க‌ன‌டாவை உதார‌ண‌மாக‌க் காட்டுவார்க‌ளே த‌விர‌ அமெரிக்காவைய‌ல்ல‌. ஆனாலும் அரேபியாவில் ந‌டைபெறும் பொது இட‌த்தில் கையையும், காலையும், ஏன் க‌ழுத்தையும் வெட்டும் காட்டுமிராண்டித்த‌ன‌த்தை, அமெரிக்காவின் ச‌ட்ட‌ங்க‌ளிலுள்ள‌ வ‌ழிமுறைக‌ள் அனைத்தையும் ப‌ய‌ன்ப‌டுத்தி, குற்ற‌வாளியின் சொந்த‌மொழியில், அவ‌ர‌து வ‌ழ‌க்க‌றிஞ‌ரின் வாத‌ப்பிர‌திவாத‌ங்க‌ளையும், சாட்சிக‌ளின் குறுக்கு விசாரணைக‌ளையும் தீர‌விசாரித்த‌ பின்ன‌ர், அதுவும் கொலை ஒரு திட்ட‌மிட்ட செய‌லாக‌,கொடூர‌ம் நிறைந்த‌தாக‌ இருந்தால், அதிலும் அந்த‌க் குற்ற‌வாளி மீண்டும் ச‌முதாயத்துக்குள் அனும‌திக்க‌ப்ப‌ட்டால், அவ‌ரால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் பாதிப்பு ஏற்ப‌ட‌லாமென‌ நீதிப‌தி தீர்க்க‌மாக‌ உண‌ர்ந்தால், அத்துட‌ன் அந்த‌ தீர்ப்பு ச‌ட்ட‌த்துக்கு அமைவாக‌ இருந்தால் ம‌ட்டுமே அமெரிக்காவில் நிறைவேற்ற‌ப்ப‌டும் ம‌ர‌ண‌த‌ண்ட‌னையுட‌ன் ஒப்பிடுவ‌து வெறும் அப‌த்த‌ம். அதுவும் அந்த‌க் குற்ற‌வாளியின் உயிர் துன்ப‌ப்ப‌டாம‌ல், எந்த‌வித‌க் குரூர‌மான‌ சித்திர‌வ‌தைக்கும் ஆளாகாம‌ல் இல‌குவாக‌ப் பிரிய‌ வேண்டுமென்ப‌த‌ற்காக‌த் தான் விச‌ ஊசி செலுத்த‌ப்ப‌டுத்துகிற‌து. அதனால் அமெரிக்காவின் ச‌ன‌த்தொகையுட‌ன் ஒப்பிடும்போது க‌ண‌க்கில் எடுக்க முடிய‌ள‌வுக்குச் சிறிய‌ள‌வில், த‌விர்க்க‌க்கூடிய‌ எண்ணிக்கையிலான‌ கொலைத்த‌ண்ட‌னைக‌ளை, அரேபியாவில் அடிக்க‌டி ந‌டைபெறும் சாரியா கொலைக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌து மிக மிக‌ அபத்த‌ம். அதை விட‌ அந்த‌க் கொலைத்த‌ண்ட‌னைக‌ளை எதிர்த்து எத்த‌னை மில்லிய‌ன் அமெரிக்க‌ர்க‌ள் எழுதுவார்க‌ள், ஆர்ப்பாட்ட‌ம் செய்வார்கள் என்ப‌தை யாவ‌ரும‌றிவ‌ர். ஏனென்றால் அமெரிக்காவில் பேச்சுச்சுத‌ந்திர‌ம் உண்டு, ஆனால் ச‌வூதி அரேபியாவிலோ அந்த‌க் கொலைக‌ளை எதிர்த்து யாரும் ஆர்ப்பாட்ட‌ம் செய்வ‌துமில்லை, அங்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்ய‌வும் முடியாது. வெள்ளிக்கிழ‌மைஜூம்மா தொழுகை முடிந்த‌தும் எல்லோரும் பொது இட‌த்தில் கூடி நின்று ஆட‌றுப்ப‌தைப் பார்ப்ப‌தைப் போல், றிசானாவின் க‌ழுத்த‌றுக்க‌ப்ப‌டுவ‌தைப் பார்க்கும் ப‌ட‌ங்க‌ளை இந்திரா அல‌ங்கார‌ம் பார்த்திருந்தால் இதை எழுதியிருக்க‌வே மாட்டாரென‌ நினைக்கிறேன்.

இந்தியாவில் க‌சாப்பை, அரேபியாவில் றிசானாவுக்கு அவ‌ர‌து சொந்த‌ மொழியில் குற்ற‌த்தை விள‌க்காம‌ல், அந்த‌க் குழ‌ந்தை எப்படி இற‌ந்த‌து என்ப‌த‌ற்கு பிரேத‌ப‌ரிசோத‌னை ந‌ட‌த்தாம‌ல், குற்றவாளியாக்கி ந‌டுச்ச‌ந்தியில் வைத்துக் க‌ழுத்தறுத்தைப் போல் தூக்கிலிட‌வில்லை. க‌சாப் இன்னொருநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த, ப‌ல‌ அப்பாவி இந்திய‌ர்க‌ளைக் கொன்ற‌ ப‌ய‌ங்கர‌வாதியாக‌ இருந்தும் கூட‌ கோடிக்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் ஏழை இந்திய‌ர்க‌ளின் வ‌ரிப்ப‌ண‌த்தில், ப‌ல‌ ஆண்டுக‌ள் வ‌ழ‌க்காடி விசாரணை செய்ய‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ரே தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. அதனால் இஸ்லாமிய‌ தீவிர‌வாதி க‌சாப்பின் ம‌ர‌ண‌த‌ண்ட‌னையைக் காட்டி அப்பாவி அப‌லைக் குழ‌ந்தை றிசானாவின் க‌ழுத்த‌றுக்க‌ப்ப‌ட்ட‌தையும் நியாய‌ப்ப‌டுத்துவ‌தோ அல்ல‌து ஒப்பிடுவ‌தோ பெரும் அப‌த்த‌ம். க‌சாப்பின் ம‌ர‌ண‌த‌ண்ட‌னையை ம‌ட்டும‌ல்ல‌, அப்ச‌ல் குரு கூட‌ தூக்கிலிட‌ப்ப‌ட‌க் கூடாதென‌க் கீற்றில் வாதாடிய‌ ப‌ல‌ர் சாரியா ச‌ட்டத்தினடிப்ப‌டையில் ந‌டைபெற்ற‌ றிசானாவின் கொலையை நியாயப்ப‌டுத்திய‌தைப் போன்ற வ‌ங்குரோத்துத்த‌ன‌த்துக்கு இணை வேறெதுவுமில்லை.
solomon
இஸ்லாமிய மத தீவிரவத செயலை ஆதரிக்கிறவர்கள்,அது மத விவகாரம் அல்லது அவர்கள் சிருபாண்மைய்னர் என்பதனால் அதை வெளீப்படையகவோ மரைமுகமாகவோ ஆதரிப்பவர்களூக்கு தகுதி இல்லை

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.