ஒரு சகாப்தத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள், அந்தச் சகாப்தத்தின் அதிகார வர்க்கக் கருத்துக்கள்தான் என்கிறது மார்க்சியம். உண்மைதான், இந்தியச் சமூகத்தின் கருத்துக்கள், கண்ணோட்டங்கள், விமர்ச்சனங்கள், புரிதல்கள், நம்பிக்கைகள் என அனைத்தும் சாதி-இந்துக்களுடையதாகவே இருக்கின்றன.

சாதி-இந்துக்களால், எங்கள் வீடுகளுகள் தீவைக்கப்படுகின்றன, உடமைகள் கொள்ளையடிக்கப்ப‌டுகின்றன, இளைஞர்கள் தாக்கப்படுகின்றோம், பெண்கள் கற்பழிக்கப்படுகின்றோம், காவல்துறை வழக்குகளை ஏற்க மறுக்கின்றது - தொலைகாட்சி ஊடகங்கள் "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தேவைதானா" என்றே விவாதம் நடத்துகின்றன. "அதைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்களா....?" என்று எங்கள் தலைவர்களின் மென்னியைப் பிடித்துக் கேட்கின்றன.

dharmapuri_attack_641

எங்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள்கூட, சாதி இந்துக்களுக்கான மேடையாகவே மாற்றப்படுகின்றன. வன்முறைக்குக் காரணம் "சாதிவெறிதான்" என்று எவ்வளவு வெளிப்படையாகத் தெரிந்தாலும், ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்று புலன்-விசாரணை செய்து, நடத்தப்பட்ட அக்கிரமத்திற்கு வெட்டி நியாயங்கள் தேடப்படுகின்றன.

சட்டத்திற்குப் புறம்பான, காட்டுமிராண்டித்தனமான, அறம்கெட்ட சாதி இந்துக்களின் விலங்குச் செயல்களை நியாயப்படுத்த, சட்டத்திற்குட்பட்ட, நியாமான, எங்களின் மனித உணர்வோ உரிமையோ கூட போதுமான காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சாதியத்தில் புழுத்துப்போன பொது புத்தியின் கருத்துகளும் எண்ணங்களும், குற்றம் எங்களுடையது என்று தீர்மானிப்பதையே இயல்பாகக் கொண்டிருக்கின்றன.

சாதியச் சிக்கல் என்பது, தாழ்த்தப்பட்டோருக்கான சிக்கலாகவும், தாழ்த்தப்பட்டோரால் விளையும் சிக்கலாகவும் திட்டமிட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது. இதில் சாதி இந்துவோ பொதுச் சமூகமோ மாற்றிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதாகவும் வலிந்து நம்பப்படுகின்றது. இந்தப் பாழாய்ப்போன சமூகத்தில், முற்போக்காளர்களின் பாத்திரம், ஒடுக்கப்படும் எங்கள் வீடுகளில் இழவு விழுந்தால் ஒப்பாரி வைப்பதும், போராட்டங்களை நொட்டை சொல்வதுமாக இருக்கின்றது.

இதைத்தான் அம்பேத்கர் "தீண்டப்படாதவர்கள் பிரச்சனைகள் பற்றி கவலை தெரிவிப்பவர்கள் (கூட), தீண்டப்படாதவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஓலமிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்களே தவிர, சாதி இந்துக்களை மாற்ற ஏதாவது செய்வோம் என்று சொல்வது அரிதாக இருக்கின்றது" என்று குறிப்பிட்டார். ஆனால், உண்மை அதையும் விட உக்கிரமானதாகவே இருக்கின்றது. குற்றமிழைக்கும் சாதி இந்துக்கள் இங்கு செல்லமாகப் பராமரிக்கப்படுகின்றனர். ஒடுக்கப்படும் எங்கள் மக்களின் போராட்டங்கள் கூட அவர்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் எதிர்பார்ப்பில் மண் விழட்டும்! "தலித்துக்கு வீடில்லை; சாக்கடையில் வசிக்கிறான், சோறில்லை; பட்டினி கிடக்கின்றான், ஆடையில்லை; அம்மணமாக இருக்கின்றான்" என்று சாதி இந்துக்களின் கற்பனைக் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் எழுத்துக்கள், இனியும் இந்தச் சமூகத்திற்குப் பார்க்க கிடைக்காது. ஊடகங்கள், முற்போக்காளர்கள் உள்ளிட்ட பொதுச் சமூகத்தால் கொம்பு சீவிவிடப்படும் சாதி-இந்துவின் 'சமூகப் பாத்திரத்தை'க் கூறுபோட்டுப் பார்க்கப் போகின்றோம். ஏனெனில், "தீண்டப்படாதவர்கள் பிரச்சனை சாராம்சத்தில் ஒரு சாதி-இந்துக்கள் பிரச்சனைதான்" –அம்பேத்கர்.

செல்லப் பிள்ளைகளின் சிக்கல்

இந்தச் செல்லப் பிள்ளைகளின் சண்டித்தனம், மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மாறிவரும் சூழலுக்கேற்ப தனது கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் கூட மாற்றிக் கொள்ளாமல், அனைத்துக் காலங்களிலும் பார்ப்பனியத்தை இறுகப் பற்றி வட்டமடித்துக் கொண்டுள்ளது.

சாதி உருவான காலம் தொட்டே சாதி எதிர்ப்புக் கருத்துக்கள் நிலவி வந்தபோதிலும், இன்றளவும் சாதி இந்துச் சமூகத்திற்குள், விடுதலைக் கருத்துக்களால், ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாதது தற்செயலானது அல்ல. சமூகக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக்கொண்ட சாதி இந்துவின் 'ஆயிரமாண்டு கால நிலைப்பாடு’ உளவியல் பண்பாகவும் வெளிப்படுகின்றது. இது அவனுள் இயக்க மந்த நிலையையே உருவாக்கியுள்ளது. ஒரு சாதி-இந்து இயங்கியலைப் பொய்ப்பிக்காமல் இருப்பது, அவன் வயதாகிச் செத்துப் போகிறான் என்பதால் மட்டுமே.

மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காத, சாதி இந்துவின் மனநிலை அல்லது மந்தநிலை, தனக்குத் தொடர்பேயில்லாத வேற்று நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கருத்துக்களைக்கூட, அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. உதராணமாக, கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக, ஒரு சாதி இந்துவிடம் பேசும் போது, போராட்டத்தின் மீதான நொட்டைகளும், சமத்துவமில்லா நிலைக்கான வெட்டி நியாயங்களும் வந்து விழுவதையே பெரும்பாலான நேரங்களில் பார்க்க முடிகின்றது. "வேற்று நாட்டு விடுதலைக் கருத்துக்களை ஆதரிப்பதானது, தன் மண்ணில் தனக்கு எதிரான கருத்தாக மாறும் - என்ற எச்சரிக்கை உணர்வு....." என்றெல்லாம் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. 'அது'தான் அவனது உளவியல் பண்பு அவ்வளவே. கவனமாக, கிளுகிளுப்பு இலக்கியங்களை மட்டுமே மொழிபெயர்த்த, பார்ப்பன அறிவுஜீவிகளுக்கிருந்த எச்சரிக்கை உணர்வை, இந்த உளவியல் பண்போடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அம்பேத்கரை விடுங்கள், பெரியார்.. காரல் மார்க்ஸ்... என்றுகூட ஆரம்பித்துப் பாருங்கள்? உங்களைப் பார்த்து சிரித்துவிடுவான். நீங்கள் பிறப்பால் சாதி இந்துவாக இருந்தால் மட்டுமே, 'அவ்வளவு' தூரம்கூட சாத்தியம். "நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு..." என்பதுதான் அவன் உலகம். அது கீதா உபதேசம் என்று தெரிந்தால் நிச்சயம் மகிழ்வான். தன்னால் ஒடுக்கப்படுபவனின் குரல் அவன் செவிப்பறையைக் கிழித்தாலும், தன் உலகத்திற்கு எதிரான குரல் கேட்பதாக அவன் ஒருபோதும் நம்பமாட்டான். ஆனாலும் அது ஒலிக்காமல் இருப்பதில்லை!

சாதி; சாதியம்; சாதியச் சிக்கல்; (சாதியொழிப்பு கூட அல்ல) போன்ற சொற்கள் பொது இடங்களில் உச்சரிக்கப்படும் பொழுது, ஒரு சாதி இந்து, வந்த வழியை சபித்துக் கொள்கின்றான். அந்தச் சொற்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் நீதிக்காகவே, இப்படிப் பச்சையாக நிர்வாணமாக ஒலிக்கப்படும் என்பதை அவன் எப்போதும் புரிந்து வைத்திருக்கின்றான். அதற்கும் மேலாக அந்தச் சொற்கள் தன்னை நோக்கித்தான் முழங்கப்படுகின்றன என்பதைத்தான் ஒரு சாதி இந்துவால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களால் இப்படி சத்தமாக உச்சரிக்கப்படும் அல்லது காரி உமிழப்படும் "சாதி", தனக்கு சத்தமில்லாமல் சலுகைகளாகவும் அதிகாரமாகவும் இருக்கின்றது என்பதை அவன் ஒப்புக்கொள்ள நேரிடும் என்று அஞ்சுகின்றான். அங்கே அவனது மந்தநிலை அவனைக் காப்பாற்றிவிடுகின்றது. (எல்லா நேரங்களிலும் அல்ல)

dalit_woman_312அச்சு ஊடகங்களிளும் தொலைகாட்சி ஊடகங்களிலும் பெருமளவு புறக்கணிக்கப்பட்டிருந்த எங்கள் மக்களுக்கு, கட்டற்ற பதிவிடும் தளமாக இணையதளம் கைகொடுத்துள்ளது. அதிகாரமில்லாத, ஒடுக்கப்பட்ட, எங்கள் இளைஞர்களின் பச்சையான பதிவுகளை, தன் நடுவீட்டில் அமர்ந்து வாசிக்கும் ஒரு சாதி இந்து, விளக்கெண்ணையைக் குடித்ததுபோல் உணருகின்றான். இப்படி அவன் தொண்டைக்குழியிலேயே வைக்கப்படும் மருந்தானது, அவனைத் தொந்தரவு செய்யத் துவங்குகின்றது. சாதி-இந்து பேசத் துவங்குகின்றான் அல்லது பேச வைக்கப்படுகின்றான்.

மந்தநிலையின் ஸ்திரத் தன்மையும் வீரியமும்

சமூகம் பற்றிய, சாதி-இந்துவின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் 'சுவாரஸ்யமானவை'. சாதி இந்துக்களுக்கும் அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஒருவனின் பைத்தியம் ஆயிரக்கணக்கான பைத்தியங்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் இழந்துவிடுவதாகச் சொல்கிறார் Haward fast.

அவன் தனது முன்னோர்களை நினைத்துப் பெருமூச்சு விட்டபடிதான் பேசவே துவங்குகின்றான். 'எல்லாம் மாறிவிட்டது’ என்று வருத்தம் தெரிவிக்கின்றான். எல்லாத்தையும் மாற்ற வேண்டும் என்றும் சபதம் எடுத்துக் கொள்கின்றான்.

சிக்கல் எளிதானது. பிராமணங்கள் சொல்வது போல், பார்ப்பனனின் பிறப்புறுப்பு அக்கினியிலிருந்து தப்பிக்க, ஒரு மன்னன், பார்ப்பனனை தன் அரண்மனையின் அறைகளுக்குள் கட்டுப்பாடின்றி அனுமதிக்க அவசியமில்லை. ஏனென்றால் இன்று மன்னனுமில்லை அரண்மனையுமில்லை, அரண்மனைகளில் பெண்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் பண்ணைக்குத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏனென்றால் பண்ணையார்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களாகிவிட்டார்கள். சூத்திரனும் தீண்டப்படாதவனும் கல்வி கற்கலாம், யாரும் அவனது காதுகளில் ஈயத்தைக் காச்சி ஊத்தவோ நாக்கை வெட்டவோ மாட்டார்கள். ஏனென்றால் இன்று படித்த அடிமைகள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லாம் மாறிவிட்டது. சாதி இந்துவின் மந்தநிலையைத் தவிர! (ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி இந்துவிடம், சூத்திரர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள் பதில்! சுவாரஸ்யமானதாக இருக்கும்) 

ஒரு சாதி இந்து தனது கேள்விக் கணைகளால், எவ்வளவு விஷயம் தெரிந்தவர்களையும் திக்குமுக்காடச் செய்து விடுகின்றான். அக்’கணைகளை’ அவன், தனது மந்தநிலையின் ஸ்திரத் தன்மையை நிறுவுவதாகவும், 'யாராலும் தனக்கு விளங்க வைக்க முடியாது’ எனும் திமிரோடும் தொடுப்பதே, விஷயம் தெரிந்தவர்களின் பரிதாப நிலைக்குக் காரணமாய் இருக்கின்றது.

முட்டிக்கிட்டுவரும் புரட்சிகர உணர்வை அவனால் கட்டுப்படுத்த முடிவதில்லை. விவாதம் என்ற பெயரில் தொலைகாட்சி ஊடகங்கள் நடத்தும், லாவணிக் கச்சேரிகளில் கலந்து கொள்கின்றான். "ஒரு செருப்புத் தைப்பவனுக்கோ சாக்கடை அள்ளுபவனுக்கோ, 'உங்கள்’ இடஒதுக்கீடு பயன்படுகிறதா..." என்று கொதிக்கின்றான். புரட்சியைத் தள்ளிப்போட முடியாது என்று அடக்க முடியாமல் துடிக்கின்றான். செருப்புத் தைப்பவனும் மலம் அள்ளுபவனும் யார் என்பதும், அவன் எதற்காக அப்படி இருக்கிறான் என்பதும், இதை ஒளிபரப்பும் ஊடகங்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் இந்தக் கேள்விகள்தான் நிகழ்ச்சிக்கான விளம்பரமாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும். படித்த இளைஞர்களை இப்படி மடச் சமூகமாக வைத்திருப்பதில் முதலாளித்துவ+பார்ப்பன ஊடகங்களின் பங்கு அளப்பரிய‌‌தாக உள்ளது. அவன் ஒரு சாதி இந்துவாகவும் இருப்பதால் ’அது’ அவனுடைய இயல்பாகவும் இருந்துவிடுகின்றது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தக் கோரி, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்கள்/அறிஞர்களும் போராடிக் கொண்டிருக்கையில், பிற்படுத்தப்பட்ட சாதி இந்து, படிக்கும் வேலை பார்க்கும் இடங்களில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக எங்கள் இளைஞர்களுடன் விவாதச் சண்டையில் இறங்குகின்றான். இட ஒதுக்கீட்டின் நியாயம் பற்றியோ பார்ப்பனியம் பற்றியோ அவனுக்கு விளக்க முயற்சிப்பவர்கள்தான் பாவம். உடனே "எங்கள் ஊரில் ஒரு அய்யர் இருக்கார்.... " என்று ஆரம்பித்து விடுவான். அவன் கண் முன்னால், கோடானகோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டிருப்பார்கள். சாதிக் கொழுப்பிருந்தாலும் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கூட வறிய நிலையில் வாடிக் கொண்டிருப்பார்கள்.... ஆனால், அந்த ஒத்த அய்யருக்காக அழுதே இவனுக்குக் காய்ச்சல் வந்துவிடும். பாவம் இந்த ஆனைமுத்து அய்யாக்கள்.  

பார்ப்பனர்களின் வாயாக இருந்து, எங்கள் மக்களை வேட்டையாடுவதையே தன் வாழ்நாள்ப் பணியாகச் செய்துவரும் சூத்திர-சாதி-இந்து, புரட்சி நமைச்சலில், "தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் தாழ்த்தவில்லை; 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறி தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்" என்ற தனது ஆராய்ச்சி முடிவை ’பிற்படுத்தப்பட்டவர்கள் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’ பட்டியலில் இருந்துகொண்டு வெளியிடுகின்றான்.

இப்படி, சமூகத்தைப் பற்றி அடிப்படை அறிவே இல்லாத சாதி இந்து, குற்ற உணர்ச்சியில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு 18 நிமிடமும், எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் மூன்று பெண்கள் கற்பழிக்கப்படுகின்றோம், இரண்டு பேர் கொல்லப்படுகின்றோம், இரண்டு வீடுகளைத் தீவைப்புகளில் இழக்கின்றோம். அத்தனையும் சாதி இந்துக்களின் சண்டித்தனத்தால்!

சங்கிலியும் சம்மட்டியும்

இந்தியப் பொதுச் சமூகம் என்பது தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரகவும், இந்தியப் பண்பாடு என்பது தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கலாகவும் இருப்பது, ஒரு சாதி இந்து, தனது மந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவசியமில்லாமல் செய்கின்றது. இதனால், ஒரு சாதி இந்து எங்கள் மீது எத்தகைய வன்முறையை நிகழ்த்தும்போதும் தன்னைக் குற்றவாளியாக உணருவதில்லை. என்னதான் சட்டரீதியாகத் தவறு என்றாலும், அரிதாகச் சில நேரங்களில் தண்டிக்கப்பட்டாலும், எங்கள் மக்களை கொலையோ கொள்ளையோ கற்பழிப்போ செய்த ஒரு சாதி இந்து, சமூக ரீதியாக வரவேற்கப்படுகின்றான். மந்த மனிதர்களுள் மாவீரனாக வளம்வருகின்றான்.

dalit_woman_480

எங்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவதை, தனது சமூக உரிமையெனக் கருதும் சாதி இந்துவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாத வரை, வன்முறையால் ஒடுக்கப்படும் எங்கள் மக்களின் விடுதலை சுமூகமாக இருக்க வாய்ப்பில்லை. அடக்குமுறைகளுக்கு நிகரான போராட்டங்கள் இல்லாமல், ஒரு சாதி இந்து தன் நிலைப்பாட்டை பரிசீலனைகூட செய்யமாட்டான் என்பதே வரலாறு. சாதி இந்து மந்தநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நிச்சயமாக அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகின்றது. ஒரு அர்த்தத்தில், சாதி இந்துக்களின் விடுதலையே கூட தீண்டப்படாதவன் கைகளில்தான் உள்ளது. அது எங்கள் எதிர்க் கலகங்களில்தான் உள்ளது.

ஆனால், "வன்முறையை" உச்சகட்ட சமூக அதிகாரமாகப் புரிந்து வைத்திருக்கும் பொதுச் சமூகம், அது தற்காப்புக்காகக் கூட ஒடுக்கப்பட்ட மக்களால் கையாளப்படுவதை ஒரு போதும் விரும்புவதில்லை. சாதி இந்துக்களால், எங்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களையும் கற்பழிப்புகளையும் கொலைகளையும் கொள்ளைகளையும் தீவைப்புகளையும் "தாழ்த்தப்பட்ட/ பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள்" என்றுகூட அடையாளப்படுத்த விரும்பாத ஊடகங்கள், எங்கள் மக்களின் எதிர்த் தாக்குதல்களை "சாதிக்-கலவரம்" என்று பெயர் சூட்டி, பொதுச் சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அதற்காக அவைகள் சிரமப்படுவதுமில்லை. நாங்கள் தாக்கப்படும் போது மௌனம் காக்கும் –இன்னும் சொல்லப்போனால் அந்த கொடுமைகளை உள்ளூர அதாரிக்கும்- பொதுச் சமூகம் எதிர்க் கலகத்தின் போது, அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, ஓடிவந்து கருத்துச் சொல்லிச் செல்ல எப்போதும் தயாராகவே உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியின் மீதான, பொதுச் சமூகத்தின் விருப்பமின்மையே, வன்முறை தீர்வாகாது. வன்முறையை யார் செய்தாலும்... என்ன இருந்தாலும்... போன்ற நயமான குமுறல்களாக வந்து விழுகின்றன. "என்ன இருந்தாலும்... " என்ற phrase க்குப் பின்னால் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைச் சிந்திப்பதே கொடுமையாக இருக்கின்றது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை வன்முறையால் ஒடுக்கப்படுபவனின் எதிர்க் கலகங்கள் வன்முறையே அல்ல என்பதும்.

திட்டமிட்டு, சகல அதிகாரத்தோடு, பொது சமூகத்தின் ஆசிர்வாதத்தோடு, சாதி இந்துவால் விரும்பிச் செய்யப்படும் கொழுப்பெடுத்த வன்முறையையும், கையறு நிலையில் களமாடும் எங்கள் மக்களின் எதிர்க் கலகங்களையும், ஒரே அளவுகோளில் பார்க்கும் முற்போக்காளர்களின் நடுநிலைமை இந்நேரங்களில் அயோக்கியத்தனமானதாக இருக்கின்றது.

வர்ணத்தார் X பகாய்ஸ் (புறம்பானவர்கள்) என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காட்டுமிராண்டித்தனமாக ஒதுக்கப்பட்டு, வன்முறையால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்க் கலகங்களுக்கு எதிரான முற்போக்காளர்களின் நிலைப்பாடு, அடிமட்ட சாதி வெறியனின் மனநிலையைவிட வஞ்சகமானது.

சாதி இந்துவிற்கு, சாதி வெறி ஊறிப்போய் உள்ளது... அவனைத் திருத்த முடியாது.... அவனிடம் பேச முடியாது..... என்று எங்கள் பக்கம் நின்றுகொண்டு, சாதி இந்துவிற்காகப் பேசும் ’எல்லாம் தெரிந்தவர்களும்’ - சாதியம் பற்றிய ஆராய்ச்சிகள் தெளிவாக இல்லை அல்லது தேவைப்படுகின்றது என்னும் அறிவுஜீவிகளும், எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது.

சகலமும் கிடைத்த சாதி இந்துவை மாற்றுச் சிந்தனைகள் தீண்டாதது வியப்பில்லை என்றால், ஒவ்வொரு கணமும், சொல்லிலும் செயலிலும் இருப்பிலும், நாடி நரம்பெல்லாம் தன் அடையாளத்தின் மீது கவனத்தைக் குவித்து வாழும் ஒரு தீண்டப்படாதவனுக்கு, அம்பேத்கரியத்தில், பெரியாரியத்தில், மார்க்சியத்தில் கிடைக்காத விடுதலை உணர்வு, தன் தெருவில் சண்டித்தனம் செய்யும் ஒரு சாதி இந்துவைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் போது கிடைப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது.

இந்துமத ஒழிப்போ, தேசிய விடுதலையோ, பண்பாட்டுப் புரட்சியோ, உற்பத்தி முறையில் புரட்சிகர மாற்றமோ எது தீர்வானாலும், எங்கள் மீது நிகழ்த்தப்படும் அன்றாட வன்முறைகளைப் பொறுத்துக் கொள்ளச் சொல்ல, எந்தச் சிந்தாந்தத்திற்கும் உரிமையில்லை என்று அறிவிக்கின்றோம்.

கவனம்! காலம் மாறிவிட்டது, தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது, இழப்பதற்கு ஏதுமில்லாத ஒடுக்கப்பட்ட மக்களின், திரளான பட்டுவாடாவிற்குப் பாரதம் தாங்காது!

______________________

(சாதி இந்து என்பதை, தனி மனிதனாகப் புரிந்துகொண்டு, ஆட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களின் உளவியல் பிரச்சனைக்கு நான் பொறுப்பல்ல)

- மதியவன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

38 comments

38
மகிழ்நன்
//ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியின் மீதான, பொதுச் சமூகத்தின் விருப்பமின்மையே, வன்முறை தீர்வாகாது. வன்முறையை யார் செய்தாலும்... என்ன இருந்தாலும்... போன்ற நயமான குமுறல்களாக வந்து விழுகின்றன. "என்ன இருந்தாலும்... " என்ற ப்ஹ்ரசெ க்குப் பின்னால் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைச் சிந்திப்பதே கொடுமையாக இருக்கின்றது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை வன்முறையால் ஒடுக்கப்படுபவனின் எதிர்க் கலகங்கள் வன்முறையே அல்ல என்பதும்.//

வன்முறைக்கு வன்முறை நிரந்தர தீர்வாகாது ஆனால், தற்காலிக இளைப்பாருதலையாவது தரும் என்பது உண்மையிலும் உண்மை
முத்துஅருந்ததியன்
இந்த சமூக விரோதிகள் எங்கே இந்த சக்கிலியன் தன்னுடைய முந்தைய வரலாற்றை கூறி மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுவிடுவனோ என்ற அச்சமும், மறுபுறம் சக்கிலியனை எப்படி ஒதுக்குவது தலை நிமிரவிடாமல் என்று பல்வேறு கோணத்தில் நம்மை அடக்குகின்றனர்.
இன்று சமுதாயத்தில் பறையர்களும், பள்ளர்களும் நல்ல நிலைக்கு வந்துவிட்டனர் தலித் இட ஒதுக்கீடு மூலம், ஆனால் சக்கிலியந்தான் இன்னும் கடை நிலையில் இருக்கிறான்
முத்துஅருந்ததியன்
பறையர்கள்தான் சாதிப்பெயரை சொல்லி சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்துள்ளனர், வன்னியர்களுக்கு இணையாக நாங்களும் சாதி வெறி பிடித்தவர்கள்தான் என்று நிரூபித்து கட்டியுள்ளனர். கண்டமங்கலத்தின் நடந்த கொலை மூலம் அவர்களின் கொலை வெறி தாக்குதலை தெரிந்துகொள்ளலாம் (உண்மை அறியும் குழு நிருபித்து உள்ளது). பறையர்கள் அம்பேத்கர் பெயரை சொல்லித்தான் நம்மிடம் ஓட்டு வேட்டை வங்கி பதவி வந்தவுடன் சுய சதியை காட்டி நம்மை பிந்தள்ளினர். இதில் பள்ளனும் அடங்குவான். ஒருபுறம் நானும் சக்கிகியர்களுக்கு இட ஒதுக்கீடு ஆதரவு தருகிறேன் என்றும், மறுபுறம் தன பறையர் அமைப்புகள் மூலம் வழக்கு தொடர்ந்து அதை நீக்குவதற்கு பண்முனை திட்டமிட்டு சாதி வெறியை காட்டுபவன், மீண்டும் பதவிக்காக நம்மை (சக்கிளியரை) கொலை செய்யவும் தயங்கமாட்டன். சக்கிலிய பெண்ணை கற்பழிக்கப்பட்ட காரணத்தின் மூலம் மூக்கை நுழைத்து பின் அதன் மூலம் ஆதிக்க வர்க்கத்தினரிடமிருந்து பணம் கரந்தான் சக்கிளியருக்கே தெரியாமல், தவறாக பயன்படுத்தி பல்வேறு இடங்களில் நம்மை நாசம் செய்தது செய்தியாக எங்கும் வரவில்லை. ஆனால் சக்கிளியர்த்தன் இன்றுவரை அணைத்து தலித் மக்களும் ஓன்று என்று என்னிவருகின்றனர். பறையனோ பள்ளனோ அதுபோல் எண்ணியது கிடையாது ஒருபொழுதும்? தயவு செய்து சக்கிலிய சிறுவர்களுக்கு கல்வி அளித்து அவர்களை முன்னுக்கு செல்ல வழிசொல்லுங்கள்.
முத்துஅருந்ததியன்
இதுவரை மொத்த இட ஒதுகீடையும் பள்ளர் மற்றும் பறையாரால் அனுபவிக்கப்பட்டு வந்தது, இனிமேலும் ஏன் நீங்கள் (சக்கிலியர்கள்) திருந்த மாட்டீர்களா? என்றும், உங்கள் இட ஒதுக்கீடை அடைந்து நீங்கள் நிலையை மட்ட்ருங்கள் என்று சொல்கிறார். அதுவும் உங்கள் மக்கள் இன்றும் சாக்கடையில் புரண்டு ஒரு வேலை சோற்றுக்கு நாய் படாத பாடு படுகிறேர்களே, ஏன் சிந்திக்க மறுத்து விட்டீர்கள் என்கிறார். உண்மைதான் அன்பரே, எங்கள் இன மக்கள் இன்றும் தங்களுடைய ஒதுக்கீடை பெற முடியாமலும், இளம் வயதிலேயே மலம் அல்லும் தொழிலிலும், குழந்தை தொழிலாளர்களாகவும் உருவக்கப்பட்டுவிட்டனர். மேலும் அவர்கள் கைநாட்டு போட்டுத்தான் பழக்கமே தவிர ஒருவர் கூட இதுவரை எழுத்தறிவு பெற்றதில்லை என்பதையும் ஒப்புகொள்கிறேன். ஏற்கனவே ஆதிக்க சதி வெறியர்களால் புறந்தள்ளப்பட்டு, சாக்கடை புழுக்களாக வாழ்ந்து வரும் எங்களை, தலித் சாதி அமைப்பான பள்ளனும், பறையனும் சேர்ந்து மட்டம் தள்ளுகின்றனர் பிரமின/வர்ணாசிரம ஜாதி அமைப்பு மூலம். நீங்கள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து விட்டு அடிமட்டத்தில் உள்ளவர்களை நிமிரவிடாமல் இட ஒதுக்கீடை தடை செய்தும், சமுதாயத்தில் பல சாதி கொடுமைகளை செய்தும் மேலும் மேலும் வன்கொடுமைகளை ஏற்றுகின்றனர். எப்போது அம்பேத்காரியத்தை கடைபிடிப்பீர்கள்? இதுவரை அம்பேத்கரியத்தின், பெரியாரியத்தின் வழியில் நடக்கிறோம் என்றுதான் சொல்லுகிறீர்களே தவிர, அதுபோல் நடந்தது கிடையாது என்பதுதான் உண்மை.
முத்துஅருந்ததியன்
தங்கள் சுய இன்பத்துக்காக மேல் சாதியின் அடிமைகளான ஆதிக்க தலித் மக்களும் இதில் அடங்குவர்.
முதலில் தன் பறையர் சாதி என்ற திமிரை ஒழித்து வந்து பேசினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் நான். ஆனால் நீயோ சாதி பற்றுடன் பேசுகிறாய் இங்கு... என்ன வேதனை எம்மக்களுக்கு...........
M.Samaran
நீண்டநெடிய நாட்களுக்குப்பிறகு படித்த தலைச்சிறந்த ஓர் உன்னதமான கட்டுரை - தான் இது . எதார்த்தமே இக்கட்டுரையின் மூலதனமாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்புக்கு மகுடமாக விளங்குகிறது. வரிக்கு வரி எம் நிலைமையை விவரிக்கும்போது எம்மவர்களில் எம்மை உலகிற்கு அறிவிக்க ஆளில்லையே என் வருந்திய கடந்தகாலத்தை எண்ணி கூனிக்குறுக்கிப்போனேன். " வர்ணத்தார் ௯ பகாய்ஸ் (புறம்பானவர்கள்) என்று ஆயிரமாயிரம் ஆண்டுகளாக காட்டுமிராண்டித்தனமாக ஒதுக்கப்பட்டு, வன்முறையால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்க் கலகங்களுக்கு எதிரான முற்போக்காளர்களின் நிலைப்பாடு, அடிமட்ட சாதி வெறியனின் மனநிலையைவிட வஞ்சகமானது " எல்முனையலவும் சந்தெகமில்லை .
தமிழரசன் மள்ளர்
/// முத்து அருந்ததியரே /// "சக்கிலியரான" உங்களை எந்த ஒரு வரலாற்று ஆதாரம் இல்லாமல் "அருந்ததியர்" என்ற பெயரைப் பயன்படுத்துவதை கீற்று, வினவு இன்னும் பல முற்போக்கு முகமூடி போட்டுக் கொண்டிருக்கும் இணையதளங்கள், தனி மனிதர்கள் போன்றவர்கள் அங்கீகரித்து, அவர்களும் அதையே பின்பற்றுகிறார்கள்....ஆனால், பல வரலாற்று ஆதாரங்கள் இருப்பினும் "தேவேந்திர குல வேளாளர்களை" அவர்களுக்குப் பிடிக்காத "பள்ளர்" என்று அழைப்பதும் , அவர்களுடைய "தேவேந்திர குல வேளாளர்களை" என்ற பெயரை மறுதலிப்பதில் உள்ளது அரசியல் என்ன? "தேவேந்திர குல வேளாளர்கள் " தமிழர்கள் என்பதாலா? நீங்கள் தெலுங்கர்கள் என்பதாலா ? என்று என்னுள் எழும் உளவியல் சிந்தனையை நிறுத்த ஏதேனும் வழி உள்ளதா?????? மற்றபடி சாதி தீண்டாமையில் ஈடுபடும் அனைவருமே கண்டிக்கப் படவேண்டியவர்கள் என்பதில் எனக்கு முழு உடன்பாடுள்ளது.....
////வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை வன்முறையால் ஒடுக்கப்படுபவனின் எதிர்க் கலகங்கள் வன்முறையே அல்ல என்பதும்.//// உண்மை......
கட்டுரை மிக அருமையாக உள்ளது......
muthu
Genuine article/writing, I agree fully with Mr. Muthuarunthathiyan that difference among Dalits exists but I see a strong hatred in his comment against Pallar and Parayar which is most disturbing...
raghava raj
நல்ல கட்டுரை.ஆனால் யதார்த்தங்களை மட்டும் சொல்லியிருக்கிறார்.அதிலும் கூட அருந்ததியர்களின் யதார்த்தத்தை இன்னொருவர் சொல்லவேண்டியதிருக்கிறது.தீர்வுகள் எதுவும் சொல்லவில்லை.அடிப்போம் என்கிறார்,அது முதல் தேவை,அவசியத் தேவை,அதற்கப்புறம் ? இந்த இடஒதுக்கீட்டு விஷயத்தில் தலித் அமைப்புகள் தேவையானவற்றை செய்தார்களா? தலித் மக்கள் தமிழக மக்கள்தொகையில் 24%இருக்கின்றனர்.ஏன் தலித் அமைப்புகள் எதுவும்,தலித் தலைவர்கள் யாரும் இடஒதுக்கீடு 24% வேண்டும் எனக் கேட்கவில்லை?அதைப்போல அனைத்து சாதியினருக்கும் விகிதாசார இடஒதுக்கீடு கோரிக்கையையும் ஆதரித்திட வேண்டும்.இதிலெல்லாம் வெற்றி பெறுவது சிறிய முன்னேற்றம் தான்.இதற்குப் பிறகு தேவைப்படும் போது அதாவது தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் போது வன்முறையாலேயே பதிலடி கொடுத்து முன்னேற வேண்டும்.மேலும் சில வினாக்களுக்கு விடை காண்பது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இந்தியச் சமூகத்தில் இப்பொழுது வர்க்கங்கள் இருக்கின்றனவா?அல்லது சாதிகள் மட்டும் தான் இருக்கின்றனவா?சாதிகள் ஏதாவது மாற்றங்கள் அடைந்திருக்கின்றனவா அல்லது மாறாமல் அப்படியே இருக்கின்றனவா அல்லது என்னென்ன மாற்றங்கள்,எந்தெந்த அளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? இவற்றையெல்லாம் பரிசீலிப்பது உதவிகரமாக இருக்கும்.பு.த.வின் நிறுவனர்-தலைவர் திரு.கிருஷ்ணசாமி வெள்ளையறிக்கை வெளியிடச் சொன்னார்,தேவேந்திரர்கள் வன்முறையாளர்களுக்கு அவர்களுக்கு "புரிகின்ற மொழியில்" மிகச் சரியான விதத்தில் பதிலடி கொடுத்தனர்,அருந்ததியர்கள் தங்களுக்கான தனிஒதுக்கீட்டை பெற்றுக்கொண்டனர்.இதற்கும் அப்பால் வேறு தலித் தலைவர்கள், அமைப்புகள் என்ன சாதித்தார்கள்,சாதிக்கவில்லையெனில் ஏன்?இவற்றையும் பார்ப்பது தேவையெனக் கருதுகிறேன்.
பெருமாள் தேவன்
//சாதி-இந்துக்களால், எங்கள் வீடுகளுகள் தீவைக்கப்படுகின்றன, உடமைகள் கொள்ளையடிக்கப்ப‌டுகின்றன, இளைஞர்கள் தாக்கப்படுகின்றோம், பெண்கள் கற்பழிக்கப்படுகின்றோம், காவல்துறை வழக்குகளை ஏற்க மறுக்கின்றது - தொலைகாட்சி ஊடகங்கள் "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தேவைதானா" என்றே விவாதம் நடத்துகின்றன. "அதைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்களா....?" என்று எங்கள் தலைவர்களின் மென்னியைப் பிடித்துக் கேட்கின்றன.//

தலித்கள் பல்வேறு மூளைச் சலவைக்கு ஆளாகி நிற்கிறார்கள். முதலில் சாதி ஒழிப்பு என்ற மூளைச் சலவை. இது இருக்கும் வரை இவர்களால் சாதி பிரச்சனைகளிலிருந்து வெளி வர முடியாது. இரண்டாவது சாதிப் பிரச்சனைகளுக்கு சாதிகளில் இருப்பவர்களால்தான் உதவ முடியுமே தவிர, சாதி ஒழிப்பு வீரர்களால் ஒருக்காலும் உதவ முடியாது.

இதுபோன்ற கருத்து அடிப்படையிலான மாற்றம் ஏற்பட்டால் ஒழிய ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாதிக் கொடுமைகளையும் ஒழிக்க முடியாது. சாதியையும் ஒழிக்க முடியாது.

தற்போது தலித்கள் ஒருபடி மேலே போய் வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்று பேசி வருகிறார்கள். இது தலித்களை எங்கேயும் அழைத்துச் செல்லாது, மாறாக மேலும் பல அடக்குமுறைகளுக்கே அழைத்துச் செல்லும்.
பெருமாள் தேவன்
//வன்முறைக்குக் காரணம் "சாதிவெறிதான்" என்று எவ்வளவு வெளிப்படையாகத் தெரிந்தாலும், ஏன் நடந்தது? எதற்காக நடந்தது? என்று புலந்விசாரணை செய்து, நடத்தப்பட்ட அக்கிரமத்திற்கு வெட்டி நியாயங்கள் தேடப்படுகின்றன.//

காரண காரியத்தை அலசி ஆராய்ந்தால் எதிர்கால பிரச்சனைகளை எளிதில் களையலாம். மொட்டையாக சாதிவெறி என்பதால் எந்த பலனும் ஏற்படாது.
பெருமாள் தேவன்
//சாதியத்தில் புழுத்துப்போன பொது புத்தியின் கருத்துகளும் எண்ணங்களும், குற்றம் எங்களுடையது என்று தீர்மானிப்பதையே இயல்பாகக் கொண்டிருக்கின்றன.//

அதே தலித் பொதுப் புத்தி எல்லாத்துக்குமே சாதியில் இருப்பவர்களே காரணம் என்று சொல்வதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

தலித்கள் எல்லாருமே உத்தமர்கள், ஆதிக்க சாதியில் இருப்பவர்கள் எல்லாருமே கொடியவர்கள் என்ற வாதத்தை எப்படி ஏற்க முடியும்?
பெருமாள் தேவன்
//சாதியச் சிக்கல் என்பது, தாழ்த்தப்பட்டோருக்கான சிக்கலாகவும், தாழ்த்தப்பட்டோரால் விளையும் சிக்கலாகவும் திட்டமிட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது. இதில் சாதி இந்துவோ பொதுச் சமூகமோ மாற்றிக்கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதாகவும் வலிந்து நம்பப்படுகின்றது.//

சாதிய சிக்கல் என்பது தாழ்த்தப்பட்டோருக்கான சிக்கலாக மட்டுமே இருந்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தீண்டாமை வழக்கங்களை இந்து சாதியிலிருப்பவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இரு தரப்பிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதை விடுத்து வெறுமனே திட்டிக் கொண்டே இருப்பதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை.
பெருமாள் தேவன்
// ஊடகங்கள், முற்போக்காளர்கள் உள்ளிட்ட பொதுச் சமூகத்தால் கொம்பு சீவிவிடப்படும் சாதி-இந்துவின் 'சமூகப் பாத்திரத்தை'க் கூறுபோட்டுப் பார்க்கப் போகின்றோம். ஏனெனில், "தீண்டப்படாதவர்கள் பிரச்சனை சாராம்சத்தில் ஒரு சாதி-இந்துக்கள் பிரச்சனைதான்" –அம்பேத்கர்.//

இது போன்ற பிரச்சாரங்கள் மற்றும் சாதி அடிப்படையிலேயே சலுகை பெற்றுக் கொடுத்தது போன்றவை தொடர்ந்து தலித்களை பிரித்து வைத்திருக்குமே தவிர ஒருபோதும் சேர்க்காது. இதை கனகச்சிதமாக செய்தவர்கள் தலித் தலைவர்களே அல்லாமல் வேறு யாருமல்ல.
பெருமாள் தேவன்
//சாதி உருவான காலம் தொட்டே சாதி எதிர்ப்புக் கருத்துக்கள் நிலவி வந்தபோதிலும், இன்றளவும் சாதி இந்துச் சமூகத்திற்குள், விடுதலைக் கருத்துக்களால், ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாதது தற்செயலானது அல்ல. //

இந்த கருத்து ஒரு முக்கியமான கருத்து, சாதி உருவான தினத்திலிருந்தே சாதி எதிர்ப்பு உருவாகவில்லை. அந்த கருத்துக்கள் சாதி வேறுபாடு பார்க்காதீர்கள் என்றுதான் வலியுறுத்தின.

அதை விட்டுவிட்டு அம்பேத்கர், பெரியார் போன்றார் இந்து மதத்தையும் சாதியையும் ஒழிக்கப் புறப்பட்டதுதான் தலித்களை மேலும் படுகுழியில் தள்ளியது.

இன்றும் படித்த முற்போக்கு தலித்கள் இதையே பிடித்துத் தொங்குகிறார்கள்.
பெருமாள் தேவன்
//சமூகக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக்கொண்ட சாதி இந்துவின் 'ஆயிரமாண்டு கால நிலைப்பாடு’ உளவியல் பண்பாகவும் வெளிப்படுகின்றது. //

இந்த உளவியலை புரியாமல் உரிமை என்று அவர்களை அழிக்க முற்படுவதுதான் முற்போக்கின் முட்டாள்தனம்.

இதனை உளவியல் ரீதியாக மாற்ற முடியுமே தவிர உரிமை என்ற பெயரில் ஒருக்காலும் மாற்ற முடியாது.
பெருமாள் தேவன்
//மாற்றுக் கருத்துகளை அனுமதிக்காத, சாதி இந்துவின் மனநிலை அல்லது மந்தநிலை, தனக்குத் தொடர்பேயில்லாத வேற்று நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கருத்துக்களைக்கூட, அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. //

இதையேதானே தலித்களும் செய்கிறார்கள். அவர்கள் சொல்வதுதான் சரி என்கிறார்கள். மற்றவர்கள் சொன்னால் அது ஆதிக்க சாதி இந்துக்களின் கருத்தாகி விடுகிறது.

பின்னர் எங்கிருந்து வருகிறது மாற்றுக் கருத்தை ஏற்கும் தன்மை?
பெருமாள் தேவன்
// அதற்கும் மேலாக அந்தச் சொற்கள் தன்னை நோக்கித்தான் முழங்கப்படுகின்றன என்பதைத்தான் ஒரு சாதி இந்துவால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. //

இதற்கு சாதியில் இருப்பவர்களாலேயே உதவ முடியும்.
பெருமாள் தேவன்
//தனக்கு சத்தமில்லாமல் சலுகைகளாகவும் அதிகாரமாகவும் இருக்கின்றது என்பதை அவன் ஒப்புக்கொள்ள நேரிடும் என்று அஞ்சுகின்றான்.//

இது தலித்களுக்கும் அப்படித்தானே உள்ளது?

மற்றபடி சாதி கொடுமைகளுக்கு முன்னாளில் குரல் கொடுத்தவர்கள் எல்லாரும் தலித்கள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெருமாள் தேவன்
//அதிகாரமில்லாத, ஒடுக்கப்பட்ட, எங்கள் இளைஞர்களின் பச்சையான பதிவுகளை, தன் நடுவீட்டில் அமர்ந்து வாசிக்கும் ஒரு சாதி இந்து, விளக்கெண்ணையைக் குடித்ததுபோல் உணருகின்றான்//

ஆனால் இதில் துளியும் சாதிவெறி இல்லை என்பதை மட்டும் ஒப்புக்கொள்ள வேண்டும், அப்படித்தானே?

ஹாஹாஹா
பெருமாள் தேவன்
இதில் படித்த தலித் அமைப்புகளும் கீற்று, வினவு போன்ற இணையங்களும் தலித்களின் சாதிவெறிக்கு வடிகாலாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

பாவம் இவர்களால் வேறு என்னதான் செய்துவிட முடியும்?
பெருமாள் தேவன்
// இன்று மன்னனுமில்லை அரண்மனையுமில்லை, அரண்மனைகளில் பெண்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் பண்ணைக்குத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏனென்றால் பண்ணையார்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களாகிவிட்டார்கள். சூத்திரனும் தீண்டப்படாதவனும் கல்வி கற்கலாம், யாரும் அவனது காதுகளில் ஈயத்தைக் காச்சி ஊத்தவோ நாக்கை வெட்டவோ மாட்டார்கள். ஏனென்றால் இன்று படித்த அடிமைகள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லாம் மாறிவிட்டது. சாதி இந்துவின் மந்தநிலையைத் தவிர!//

இவ்வளவு மாறிய பின்னர் இந்துவின் மனநிலையை எதற்காக மாற்ற ஆசைப்படுகிறீர்கள்? நீங்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்பதற்காக?

தலித்களின் தேவை வானளாவியது. அவர்களுக்கு அத்தனை அதிகாரங்களையும் கொட்டிக் கொடுத்தாலும் போதாது என்பதன் வெளிப்பாடே இது.
பெருமாள் தேவன்
//(ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி இந்துவிடம், சூத்திரர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள் பதில்! சுவாரஸ்யமானதாக இருக்கும்)//

தலித்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டதைப் போல பேசுகிறீர்கள்?

சூத்திரர் என்றால் உழைப்பாளி என்று அர்த்தம். மனு என்ன சொன்னானோ அதை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான்.

இன்று ஒரு இந்துவுக்கு மனு என்றால் யாரென்றே தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவனை உயிர்ப்பித்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் தலித்கள்தான்.

ஏனெனில் அவனை விட்டுவிட்டால் அவர்களுக்கு பிழைப்பு வாதம் கிடைக்காது.
பெருமாள் தேவன்
--//படித்த இளைஞர்களை இப்படி மடச் சமூகமாக வைத்திருப்பதில் முதலாளித்துவ+பார்ப்பன ஊடகங்களின் பங்கு அளப்பரிய‌‌தாக உள்ளது. அவன் ஒரு சாதி இந்துவாகவும் இருப்பதால் ’அது’ அவனுடைய இயல்பாகவும் இருந்துவிடுகின்றது.//

கம்யுனிஸ நாடுகளில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்கிறீர்களா? இந்தியாவிலேயே மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற நிலை இல்லை என்கிறீர்களா?

கம்யூனிஸ ஆட்சியிலும் இது போன்ற நிலை தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?
பெருமாள் தேவன்
//பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தக் கோரி, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்கள்/அறிஞர்களும் போராடிக் கொண்டிருக்கையில், பிற்படுத்தப்பட்ட சாதி இந்து, படிக்கும் வேலை பார்க்கும் இடங்களில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக எங்கள் இளைஞர்களுடன் விவாதச் சண்டையில் இறங்குகின்றான். இட ஒதுக்கீட்டின் நியாயம் பற்றியோ பார்ப்பனியம் பற்றியோ அவனுக்கு விளக்க முயற்சிப்பவர்கள்தான் பாவம்.//

சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கும் வரை சாதி உயிர்வாழும், அதுவரை சாதிய வேறுபாடுகளும் இருக்கவே செய்யும்.

இதையெல்லாம் வைத்துக்கொண்டே சாதிக் கொடுமை, சாதி ஒழிப்பு பற்றி பேசுவதே இரட்டை வேடம்.

உண்மையில் தலித்களால் ஒருபோதும் சாதியை விட்டு வெளியேற முடியாது, வெளியேறவும் மாட்டார்கள் என்பதே உண்மை.
பெருமாள் தேவன்
//பார்ப்பனர்களின் வாயாக இருந்து, எங்கள் மக்களை வேட்டையாடுவதையே தன் வாழ்நாள்ப் பணியாகச் செய்துவரும் சூத்திரஸாதி-இந்து, புரட்சி நமைச்சலில், "தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் தாழ்த்தவில்லை; 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறி தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்" என்ற தனது ஆராய்ச்சி முடிவை ’பிற்படுத்தப்பட்டவர்கள் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’ பட்டியலில் இருந்துகொண்டு வெளியிடுகின்றான்.//

இதுதான் உண்மை என்பதை தங்கள் வாழ்க்கையின் மூலம் நிரூபித்துள்ளவர்கள் நாடார்கள். அவர்களிடமிருந்து நீங்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெருமாள் தேவன்
//இப்படி, சமூகத்தைப் பற்றி அடிப்படை அறிவே இல்லாத சாதி இந்து, குற்ற உணர்ச்சியில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருக்கும்//

சாதியில் இருப்பது குற்றமும் இல்லை. சாதி உணர்வு இருப்பது குற்றமும் இல்லை.

// ஒவ்வொரு 18 நிமிடமும், எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் மூன்று பெண்கள் கற்பழிக்கப்படுகின்றோம், இரண்டு பேர் கொல்லப்படுகின்றோம், இரண்டு வீடுகளைத் தீவைப்புகளில் இழக்கின்றோம். அத்தனையும் சாதி இந்துக்களின் சண்டித்தனத்தால்!//

இந்த குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கம். நீங்கள் சாடே வேண்டியது அரசாங்கத்தையே. அரசாங்கமும் வன்கொடுமைச் சட்டத்தை இயற்றியுள்ளது. அதை சரியாக செயல்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை.

ஆனால் இந்த சட்டத்தை தலித்கள் பழிவாங்க பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் எந்த தலித்தும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில் அதுதான் தலித் நீதி.
பெருமாள் தேவன்
//இந்தியப் பொதுச் சமூகம் என்பது தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரகவும், இந்தியப் பண்பாடு என்பது தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கலாகவும் இருப்பது, ஒரு சாதி இந்து, தனது மந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவசியமில்லாமல் செய்கின்றது.//

இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க இந்துக்களின் மீதான வன்மத்தைக் காட்டுவதாகவே உள்ளது.

கட்டுரையாளர் பௌத்தம் (இலங்கை, பர்மா), இஸ்லாம் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) போன்றவற்றின் கொடுமைகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் இந்து மதத்தை மட்டும் குற்றம் சாட்டும் முகமாகவே எழுதியுள்ளார். தன் வன்மத்தைக் காட்டியுள்ளார்.
பெருமாள் தேவன்
// ஒரு சாதி இந்து எங்கள் மீது எத்தகைய வன்முறையை நிகழ்த்தும்போதும் தன்னைக் குற்றவாளியாக உணருவதில்லை. என்னதான் சட்டரீதியாகத் தவறு என்றாலும், அரிதாகச் சில நேரங்களில் தண்டிக்கப்பட்டாலும், எங்கள் மக்களை கொலையோ கொள்ளையோ கற்பழிப்போ செய்த ஒரு சாதி இந்து, சமூக ரீதியாக வரவேற்கப்படுகின்றான். மந்த மனிதர்களுள் மாவீரனாக வளம்வருகின்றான்.//

இந்துக்கள் அனைவரும், ஏன் 50 சதவீதம்பேர் சாதியக் கொடுமைகளை நிகழ்த்துவதாக இருந்தால் இந்நேரம் தலித் என்று ஒருவரும் இருந்திருக்க முடியாது. அதையெல்லாம் மறந்துவிடுகிறார் கட்டுரையாளர்.

இவ்வளவு கொடுமைகளை செய்கிறார்கள்கள் என்றால் இந்தியாவில் தலித்களே இருக்க முடியாத நிலைதான் ஏற்பட்டிருக்க வேண்டும். எது உண்மை? எது பொய்?

மிகைப்படுத்தலில் மிதமிஞ்சிவிட்டார்.
பெருமாள் தேவன்
இதுபோன்ற கட்டுரைகளை எழுத எழுத இந்து சாதியினர் தலித்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பர்.

இந்த கட்டுரையை எனது கவனத்திற்கு கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றி.
பெருமாள் தேவன்
// வன்முறையால் ஒடுக்கப்படும் எங்கள் மக்களின் விடுதலை சுமூகமாக இருக்க வாய்ப்பில்லை. அடக்குமுறைகளுக்கு நிகரான போராட்டங்கள் இல்லாமல், ஒரு சாதி இந்து தன் நிலைப்பாட்டை பரிசீலனைகூட செய்யமாட்டான் என்பதே வரலாறு. சாதி இந்து மந்தநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நிச்சயமாக அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகின்றது. ஒரு அர்த்தத்தில், சாதி இந்துக்களின் விடுதலையே கூட தீண்டப்படாதவன் கைகளில்தான் உள்ளது. அது எங்கள் எதிர்க் கலகங்களில்தான் உள்ளது.//

ஹாஹாஹா மற்ற சமூக மக்களின் ஆதரவை சிறிதும் பெறாத, பெற விரும்பாத, பெற முடியாது இவர்கள் அவர்களுக்கும் சேர்த்து விடுதலை வாங்கித் தருவார்களாம்.

வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்ற கருத்தும் தலித்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. இது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். விரும்பத்தக்க ஒன்றாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.
பெருமாள் தேவன்
//எங்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களையும் கற்பழிப்புகளையும் கொலைகளையும் கொள்ளைகளையும் தீவைப்புகளையும் "தாழ்த்தப்பட்ட/ பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள்" என்றுகூட அடையாளப்படுத்த விரும்பாத ஊடகங்கள், எங்கள் மக்களின் எதிர்த் தாக்குதல்களை "சாதிக்-கலவரம்" என்று பெயர் சூட்டி, பொதுச் சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அதற்காக அவைகள் சிரமப்படுவதுமில்லை. நாங்கள் தாக்கப்படும் போது மௌனம் காக்கும் –இன்னும் சொல்லப்போனால் அந்த கொடுமைகளை உள்ளூர அதாரிக்கும்- பொதுச் சமூகம் எதிர்க் கலகத்தின் போது, அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, ஓடிவந்து கருத்துச் சொல்லிச் செல்ல எப்போதும் தயாராகவே உள்ளது.//

அப்படியானால் பொதுச் சமுதாயமே உங்களுக்கு எதிராக உள்ளது என்கிறீர்களா? அவர்களை அனைவரையும் வன்முறை மூலமே சரிசெய்வீர்களா?
பெருமாள் தேவன்
//திட்டமிட்டு, சகல அதிகாரத்தோடு, பொது சமூகத்தின் ஆசிர்வாதத்தோடு, சாதி இந்துவால் விரும்பிச் செய்யப்படும் கொழுப்பெடுத்த வன்முறையையும், கையறு நிலையில் களமாடும் எங்கள் மக்களின் எதிர்க் கலகங்களையும், ஒரே அளவுகோளில் பார்க்கும் முற்போக்காளர்களின் நடுநிலைமை இந்நேரங்களில் அயோக்கியத்தனமானதாக இருக்கின்றது.//

அதாவது அவர்கள் வன்முறை செய்தால் கண்டிக்க வேண்டும், தண்டனை அளிக்க வேண்டும். நீங்கள் வன்முறை செய்தால் கண்டுக்கக் கூடாது, தண்டிக்கக் கூடாது. இப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்?

நல்லா இருக்கு உங்க நியாயம்?
பெருமாள் தேவன்
//சாதி இந்துவிற்கு, சாதி வெறி ஊறிப்போய் உள்ளது... அவனைத் திருத்த முடியாது.... அவனிடம் பேச முடியாது..... என்று எங்கள் பக்கம் நின்றுகொண்டு, சாதி இந்துவிற்காகப் பேசும் ’எல்லாம் தெரிந்தவர்களும்’ - சாதியம் பற்றிய ஆராய்ச்சிகள் தெளிவாக இல்லை அல்லது தேவைப்படுகின்றது என்னும் அறிவுஜீவிகளும், எல்லா நேரங்களிலும் தப்பித்துக் கொள்ள முடியாது.//

எதுவாக இருந்தாலும் நீங்களாகவே முடிவு செய்ய வேண்டும். நீங்கள் சொல்வதையே கேட்க வேண்டும் என்கிறீர்கள், அப்படித்தானே?
பெருமாள் தேவன்
//சகலமும் கிடைத்த சாதி இந்துவை மாற்றுச் சிந்தனைகள் தீண்டாதது வியப்பில்லை என்றால், ஒவ்வொரு கணமும், சொல்லிலும் செயலிலும் இருப்பிலும், நாடி நரம்பெல்லாம் தன் அடையாளத்தின் மீது கவனத்தைக் குவித்து வாழும் ஒரு தீண்டப்படாதவனுக்கு, அம்பேத்கரியத்தில், பெரியாரியத்தில், மார்க்சியத்தில் கிடைக்காத விடுதலை உணர்வு, தன் தெருவில் சண்டித்தனம் செய்யும் ஒரு சாதி இந்துவைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் போது கிடைப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது.//

ஹாஹாஹா

எதுவெல்லாம் அவர்கள் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறீர்களோ, அதையே நீங்கள் செய்ய முற்படுவதுதான் வேடிக்கை. நல்லது. நல்லா வருவீங்க.

இது போன்ற வன்முறையைத் தூண்டும் கட்டுரையை வெளியிட்டு கீற்று தன் பங்கிற்கு சாதி வெறியைக் காட்டிக் கொள்கிறது. இதே செயலை வேறொரு சாதி இந்து செய்திருந்தால் அதை கண்டிக்கக் துடிக்கும் இவர்கள் அதையே செய்வது நல்ல சமூக முன்னேற்றத்தை தரும் என்று நம்பலாம்.
பெருமாள் தேவன்
//இந்துமத ஒழிப்போ, தேசிய விடுதலையோ, பண்பாட்டுப் புரட்சியோ, உற்பத்தி முறையில் புரட்சிகர மாற்றமோ எது தீர்வானாலும், எங்கள் மீது நிகழ்த்தப்படும் அன்றாட வன்முறைகளைப் பொறுத்துக் கொள்ளச் சொல்ல, எந்தச் சிந்தாந்தத்திற்கும் உரிமையில்லை என்று அறிவிக்கின்றோம்.//

நல்லது. பிரேம் போட்டு வைத்துக்கொள்வோம்.
பெருமாள் தேவன்
//கவனம்! காலம் மாறிவிட்டது, தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது, இழப்பதற்கு ஏதுமில்லாத ஒடுக்கப்பட்ட மக்களின், திரளான பட்டுவாடாவிற்குப் பாரதம் தாங்காது!//

தயவுசெய்து அதை முதலில் செய்யுங்கள்.

நன்றி.
பெருமாள் தேவன்
இந்து சாதியில் இருப்போருக்கு ஆத்திரமூட்டி, குற்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களை இழிவாகப் பேசி ஒரு சமூகச் சமநிலையை அடைந்து விடலாம் என்ற நிலையே தலித்களிடம் பரவலாக காணப்படுகிறது.

ஆனால் அது ஒரு குறுக்கு வழியேயன்றி சரியான வழி அல்ல. இதையும் நான் இந்து சாதியைச் சேர்ந்தவன் என்பதால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.