ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனிய‌ ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது.

Udayakumar_620

இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பார்ப்பனர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக் கொண்டிருந்திருப்பேன். காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பார்ப்பனர்களின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன். தீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) – தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன்.

 “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா அய்யா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது. பெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது. இன்னும் பழைய பெரியாரை, அவரின் பழைய கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை.

முன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றார்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு. இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.

பெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொள்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை.

யார் தமிழர்?

இப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. ‘யார் தமிழர்’ என்பது ‘சுத்தமான தமிழ் எது’ என்பது போலவே ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள். எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் “என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே” என முகம் சுளிக்கின்றனர். சென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.

தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான், “நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லீமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்” என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.

இன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களைப் பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை. அமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சுத்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

இன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள்? இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம். அப்படியானால் தமிழகத்தை வேற்று இனத்தவர்களுக்குத் திறந்து விட்டுவிட்டு வேடிக்கைப் பார்க்க வேண்டுமா? இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா? அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாச்சார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா? அல்லது இன்றைய யதார்த்தம், நாளைய தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா? இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா?

தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா, மலேசியா, பினாங்கு, மொரீஷியஸ் நாடுகளில் ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர், தமிழில் பேசவோ, எழுதவோ முடியாதிருப்பினும், தங்களைத் தமிழர்களாகவே உணர்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் வீடுகளில்கூட‌ அந்தந்த நாட்டு மொழிதான் பேசுகிறார்கள். அதனால் அவர்களை தமிழரல்லர் என்று ஒதுக்கிவிட முடியாது. இது, தமிழ் பேச, படிக்கத் தெரியாத மூன்றாம் தலைமுறை புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

எது தமிழ்த் தேசியம்?

இன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்குப் பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ்த் தேசியம்.

ஒரு குறிப்பிட்ட தமிழ்த் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ்த் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது. மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்கொடுமை, வன்முறை ஏதுமற்ற சமாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம்தான் தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ்த் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்? அதுதான் மிக முக்கியம்.

பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ்த் தேசியம். முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர், இன்று டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள புலம்பித் திரிகிறார். இதுகாறும் பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா, தமிழ்த் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சி அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ்த் தேசியம்.

இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ்த் தேசியமல்ல. “தமிழ் வாழ்க” என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதி வைப்பதும் தமிழ்த் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ்த் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ்த் தேசியமல்ல. அப்படியானால் எது தான் தமிழ்த் தேசியம்?

தனியொரு தமிழனுக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்த தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான் தமிழ்த் தேசியம். பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச் செய்வதுதான் தமிழ்த் தேசியம்.

“மங்கையராய் பிறப்பதற்கே  மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாச்சார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ்த் தேசியம். திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமிருந்து தமிழ்க் கலாச்சாரத்தை மீட்டெடுத்து, இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ்த் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ நடவடிக்கைகளைக் கைவிட்டு, “எண்ணித் துணிக கருமம்” என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ்த் தேசியம்.

அன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ்த் தேசியம். “பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே” என்று உரக்கப் பாடி, சாதி, மதக் குழுக்களால் யாரும் யாரையும் அடக்க முடியாதபடி, அதட்ட முடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ்த் தேசியம். தலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ்த் தேசியம். ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ்த் தேசியம்.

வரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ்த் தேசியம். விஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம். நதிநீர் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்திய தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ்த் தேசியம். “எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்” என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ்த் தேசியம்.

பச்சைத் தமிழ்த் தேசியம்

இன்றைய பன்னாட்டுச் சூழலில், இந்திய‌ அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ்த் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று ‘தமிழ்’ தேசியம், ‘தமிழர்’ தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து, கூடவே பசுமை உணர்வுகளை, விழுமிய‌ங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது.

இன்றைய தமிழகத்தினுடைய தேவை தமிழ் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம்.

பசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள்.

நாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒரு சில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு, பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுப்பூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ் கடலை - கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது இன்ன பிற.

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – ஒரு
தேள் வந்து கொட்டுது காதினிலே – எங்கள்
மந்திரிமார் என்ற பேச்சினிலே – கடல்
மண்ணும் சிரிக்குது பீச்சினிலே” என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து,

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ்த் தேசியம்.

(கட்டுரையாளர் சுப.உதயகுமார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.)

Comments

25 comments

25
sukumar
மிகவும் ஆழமான கருத்துக்கள். தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்க இத்தகைய பரந்த முற்போக்கான கொள்கைகள்தான் தேவை. தனிப்பட்ட சிலரின் இலாப அரசியலுக்காக இனத்துவேஷத்தை வளர்த்தெடுப்பது தமிழ்த் தேசியத்தை குழிதோண்டி புதைக்கவே செய்யும்.
elango
தமிழ் தேசியம் பற்றித் தெளிவான, பொதுவான , ஆனால் சிறந்த கண்ணோட்டம். இந்த விழுமியஙகளை எப்படி, எப்போது எல்லா தளங்களிலும் உருவாக்குவது என்பதுதான் கேள்வி. வெறும் அரசியல் மட்டுமே உதவாது. மக்களிடையே பரவலான் நல்ல சமூக சிந்தனையும், விழிப்புணர்வும், தற்காப்பு உணர்வும், ஆரோக்யமான அரசியல் எழுச்சியும், இவை எல்லாவற்றிட்கும் மேலாக, ஒற்றுமையும், இதற்கு அடிப்படை என்று தோன்றுகிறது. நன்றி.
சாயிலன்
மிகவும் அற்புதமான பதிவு.... ஆனால், அரசுகள் பற்றிய மார்ச்சிய புரிதலுடன், சமுகம் இயங்குதல் குறித்த இயக்கவியல் புரித்தலுடன் சமுகம் சார்ந்து சிந்திக்கும் தோழர்கள் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள்... சுரண்டல் அற்ற சமுகமே நமது இலக்காக வேண்டும்... தமிழனை தமிழன் சுரண்டினாலும் அது தடுக்கப்பட வேண்டும்,... அதற்க்கு முதலாளித்துவ எதிர்ப்பு பேசப்பட வேண்டும்... பின்பற்றப்பட வேண்டும்... என் தமிழ் உழைக்கும் மக்களை தமிழ் முதலாளிகளே சுரண்டுவார்கலானால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது??? ஒரு சுரண்டலுக்கு மற்றொரு சுரண்டல் அமைப்பு எப்படி தீர்வாகும்??? தோழர்கள் தயை கூர்ந்து இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.... தனிமனிதனை சுரண்டுபவன் யாரானாலும் அது தடுக்கப்பட வேண்டும்... அதற்க்கான விஞ்ஞான பூர்வ மார்க்சிச அணுகுமுறை கை கொள்ளப்பட வேண்டும்... இயக்கவியல் புரிதல் சிறிதும் அற்ற இந்திய கம்யூனிஸ்ட்களை கொண்டு மார்க்சிசம் மீதான பார்வையை பெறுதல் கூடாது... நாம் சமூக மாற்றத்திற்காக ஒரு மாபெரும் சமுக கட்டத்தில் நிற்கிறோம் தவறான சில அணுகுமுறைகளால் ஓய்ந்துவிட கூடாது...
jagankovai
மிக மிக அழகான ஆழமான முற்ப்போக்கான சிந்தனையுள்ள,சிறப்புமிகுந்தகட்டுரை தமிழ் தேசியம் பற்றீ தெளீவு பெறச் செய்தமைக்கு , சுப.உதயக்குமார். அய்ய அவர்களூக்கு நன்றீகள் பல.....
Morthekai
Fantastic article. There are few studies suggests that historically (research results are yet to be published) origin of all people is ancient Tamil.That doesn't mean we should accept and allow anybody to rule our land (because they are all anyway Tamils). I think the author's attempt to define who is Tamil is better even it is not well defined (தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்). In that way, all other parties can be together to form a third party to DMK and AIADMK. As Elango said above, politics might not be enough but the awareness among our people.
Periyasamy
யார் தமிழர்? தமிழர் என்பதற்கு என்ன வரையறை? என்று கேட்பது விசமத்தனமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட சங்க இலக்கியங்கள் தமிழ் என்னும் மொழியையும் தமிழர் என்னும் இனத்தையும் பற்றி பேசுகின்றன. அது மட்டுமல்லாமல் தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை கூட “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகு” என்று வரையறுக்கின்றன. அந்தக்காலத்தில் தென்னிந்தியாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகபட்சம் பத்து லட்சம் பேர் இருந்திருப்பார்கள். காலப்போக்கில் அவர்கள் பெருகியது மற்றும் வந்து சங்கமித்தவர்கள் சேர்ந்து இன்று ஏறத்தாழ எட்டு கோடிப்பேர் இருக்கிறார்கள். சிங்கள இளவரசனாகிய துட்டகைமனு “தெற்கே கடல், வடக்கே தமிழர்; நான் எப்படி கால் நீட்டி உறங்க முடியும்” என்று தன் தாயிடம் கேட்பது சிலர் காதுகளில் இன்னும் ரீங்கரிக்க கூடும். சிங்கள இனவெறி அரசும் அதன் கொலைகார ராணுவமும் தமிழர்கள் யார் என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார்களோ அந்த வரையறைக்குள் வருபவர்கள் தமிழர்கள்!. கேரள அரசியல் கட்சிகளும் அவற்றின் குண்டர்களும் தமிழர்கள் யார் என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார்களோ அந்த வரையறைக்குள் வருபவர்கள் தமிழர்கள்!. காவிரி கலவரம் நடத்திய கன்னட இனவெறியர்கள் தமிழர்கள் யார் என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார்களோ அந்த வரையறைக்குள் வருபவர்கள் தமிழர்கள்!. நாங்களும் தமிழ் தான் என்று சொல்லி பார்ப்பனர்கள் ஓர் ஆயிரம் ஆண்டு காலம் இந்த மண்ணை சுரண்டினார்கள். இப்போது பார்ப்பனரிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதாக சொல்லி இன்னொரு கூட்டம் இந்த மண்ணையும் மக்களையும் காட்டியும் கூட்டியும் கொடுத்து கடந்த அரை நூற்றாண்டு காலமாக வயிறு வளர்த்து வருகிறது. தமிழகத்தின் மண் வளம், நீர் வளம் மற்றும் காற்று ஆகியன கடுமையாக சூறையாடப்படுகின்றன. நம் எதிர்காலத்தலைமுறைக்கு என்ன விட்டுச்செல்லப்போகிறோம்?.
ஷாலி
தமிழ் தேசியம் என்ற பெயரில் அண்டை மாநில மக்களை விரட்டி அடிக்கும் புதிய பாசிசத்தை செந்தமிழர்கள் பரப்பும் நேரத்தில்,
விரிவான செறிவான பரந்த மனதுடைய பச்சை தமிழ் தேசியத்தை ஐயா உதயகுமார் அவர்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள்.
ஆன்று அமிழ்ந்து அடங்கிய சான்றோர்களிடமிருந்து வரும் கருத்துக்களில் சத்தியம் உண்மை,நேர்மை வாய்மை எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என்பதற்கு இக்கட்டுரையே சான்று.

திராவிடத்தேரில் பவனி வந்து நாட்டை ஆண்ட அனைவரும் அரிதாரம் பூசியும், ஆரவார வசனம் எழுதியும் மக்களை ஏய்த்து பிழைத்துக்கொன்டிருக்கின்றனர். இந்த திரா”விட” நச்சின் அச்சாணியை கழற்ற வந்தவர்களும் “காசிக்குப் போயும் கருமம் தொலைப்பதற்கு” நொண்டிப்பிச்சைக்காரன் காலில் விழுந்தது போல் திரைகதை வசன நடிகரை தோளில் வைத்து தமிழ் தேசியத்தை தேடுகிறார்கள். இன்றைய சூழழில் ஐயா உதயக்குமார் அவர்களின் அறிவார்ந்த தொலைநோக்கு கருத்திற்கு கைகொடுத்து செயல்படசெய்வது ஒவ்வொரு தமிழ் மகனின் தலையாய கடமை.”பச்சை தமிழ் தேசியம் செழுமையின் தமிழகம்!”. நன்றி!
kural
என்னுடைய உணர்வுகளை காட்டுவதாக இ ந்த கட்டுரை உள்ளது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றெ மறப்பது நன்று
T.Sengadir
This has to be translated and published in an all India English Newspaper so that other Indians know that there are sensible Tamil Nationalists in Tamil Nadu
குன்றத்தூரில் இருந்து நல்லன்
நல்ல செறிவான கட்டுரை. வளர்ச்சி அரசியல் யாருக்கும் பிடிக்காதே.. எதிர்ப்பு அரசியல்தான் பிடிக்குது... :sad:
viyasan
'தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுப்பூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்." என்றும், இனி தமிழகத்தை தமிழந்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதும் தான் தமிழ்த் தேசியம். என்கிறார் திரு. சுப உதயகுமார் அவர்கள். இதைத் தானே சீமானும் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் எல்லோரும் கூறுகிறார்கள். திரு உதயகுமார் அழகான தமிழில், எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் அதே கருத்தைச் சுற்றி வளைத்துச் சொல்கிறார். திரு.செல்வகுமார் தமிழன்/தமிழச்சிக்குத் தரும் விளக்கப்படி பார்த்தாலும், வீட்டில் தமிழல்லாத வேறு மொழி பேசி, தம்மைத் தமிழராக மட்டும் அடையாளப்படுத்தாத தெலுங்கரோ, மலையாளிகளோ அல்லது உருது முஸ்லீம்களோ தமிழர்களாக மாட்டார்கள். அவர்களுக்கென வேறோரு அடையாளமிருக்கும் போது தெலுங்கர்களும், மலையாளிகளும், உருது முஸ்லீம்களும் தன்னை எப்படித் தமிழ்மகனாக/மகளாக உணரமுடியும்.

தமிழ் பேசப்படிக்கத் தெரியாத ஈழத்தமிழர்களின் மூன்றாம் தலைமுறையினரதும் ஒரேயொரு அடையாளம் தமிழர்கள் என்பது தான், அது அவர்களின் தமிழ்ப்பாரம்பரியத்தாலும், இரத்தத்தாலும் வந்த அடையாள்ம். அவர்கள் வெளியில் ஆங்கிலம் பேசுவதால் யாரும் அவர்களை ஆங்கிலேயர் அழைக்க மாட்டார்கள், அழைக்கவும் முடியாது ,அது போல் தமிழை வெளியில் பேசி, வீட்டில் தமிழல்லாத தமது தாய்மொழியைப் பேசித் தம்மைத் தமிழராக மட்டுமே அடையாளப்படுத்தாத யாரும் தமிழரல்ல. இந்த உண்மையைக் கூற தமிழர்கள் எதற்காகத் தயங்க வேண்டும். தமிழர் என்ற அடையாளத்தையும் எதற்காக மற்றவர்களிட்ம் பங்கு போட வேண்டும். அப்படித் தமிழர்கள் பெருந்தன்மை காட்டியதால் தான் தமிழ்நாட்டிலேயே தமிழர்களும், தமிழும் முன்னணியில் இல்லை.இந்த நிலை மற்ற மாநிலங்களில் கிடையாது. உதாரணமாக கர்னாடகத்திலும், கேரளத்திலும் அவர்களது மொழிக்கும் தான் முன்னுரிமை. ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் ஒரு வார்த்தை படிக்கத் தெரியாமலே பட்டதாரியாக முடிகிறது. குழந்தைக்குத் தமிழ்ப்பெயர் வைத்தால் மோதிரம் தருவதாக் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது, எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் தமிங்கிலிஸ் தான்.
இப்படி எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டுமென நினைத்தால், தான் போகவழி தெரியாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் தூக்கிக் கொண்டு போக முயன்ற கதை போல் தான் முடியும். தமிழர்கள் மட்டுமல்லாமல், திராவிடர் என்ற பெயரில் எல்லோரையும் துணைக்கழைத்துக் கொண்டு கிழம்பியதால் தான், தமிழ்நாடு என்றொரு தனிமாநிலமிருந்தும், அதன் ஆட்சி தமிழர்களின் கையில் இல்லை. தமிழரல்லாதவர்களின் கையோங்கியிருப்பதால், மற்ற மாநில மக்களால் ஒதுக்கி விடப்பட்ட, பாக்குநீரிணைக்கு இருபக்கத்திலுமிருக்கும் தமிழர்களனைவருக்கும் அழிவையேற்படுத்தக் கூடிய அணு உலைத் திட்டங்கள் மட்டும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அதை எதிர்ப்பதில் கூட தமிழ்நாட்டில் முழு ஒற்றுமை கிடையாது. நாம் தமிழர்கள் என்று துணிவுடன் கூறுவதற்கு இவ்வளவு தயக்கமும், மழுப்பலும் தேவையா?
thangavayal arivan
கோழைத்தனமான கட்டுரை! வைகோவும், கருணாநிதியும், கோவை இராமகிருஷ்ணனும், வீரமணியும், விடுதலை இராஜேந்திரனும், ராவு என்ற இயற்பெயர் கொண்ட அதியமானும் தெலுங்கர்கள் என்று சொல்லுவதிலும், அழைப்பதிலும், ஏற்றுக் கொள்வதிலும் என்ன பிழை இருக்க இயலும்? தெலுங்கர்கள் என்ன அவ்வளவு மோசமானவர்களா?
“நான் ஒரு கன்னடியன்” என்று சொன்ன பெரியாருக்கு ஒரு துணிச்சல் இருந்தது. தமிழுக்குத் தொண்டு செய்த கால்டுவெல்லும், போப்பும், வீரமாமுனிவரும் தங்களது ஐரோப்பிய அடையாளங்களை மறைத்துக் கொண்டு இங்கு தமிழர் என்ற போர்வை போர்த்தவில்லை. அப்படி இன அடையாளத்தை மறைப்பதற்கு அவர்களுக்கு அரசியல் உள்நோக்கம், பதவி வெறி ஆகியன இருக்கவில்லை. செயலலிதாவோ, கருணாநிதியோ, எம்ஜியாரோ, அண்ணாதுரையோ, வைகோவோ, விஜயகாந்தோ தங்களது இன அடையாளத்தை வெளிப்படையாகச் சொல்லி நேர்மையான அரசியல் செய்யவந்த நேர்மைச் சிகரங்களல்ல அவர்கள்!
ஐரோப்பியரான அன்னை தெரசா என்பவர் இந்த நாட்டுக்கு வந்து இந்தியர்களுக்குத் தொண்டு செய்தார். தன்னை வங்காளி என்று சொல்லிக் கொண்டா செய்தார்? வங்காளிகளும், இந்தியர்களும் அந்த அம்மாவை மதிக்கவில்லையா? உதயக்குமார் ஏன் சப்பைக்கட்டு கட்டுகிறார் என்று விளங்கவில்லை. தனது கூட்டங்களுக்கு வருபவர்கள் இப்படியும் அப்படியுமாக இருப்பதால் எல்லாருக்கும் நல்ல பிள்ளையாகக் காட்ட இப்படி ஒரு அவியல்தனமாக சொதப்பல்தனமாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்.
உதயகுமாரின் கணக்கில் பார்த்தால் நாராயணசாமி தமிழரில்லை! தமிழரில் திருட்டுப் பயல்களே இருக்கமாட்டான்களா? தெலுங்கர்களுக்கு திடீரென தமிழர்கள் என்று உதயகுமார் நாமகரணம் சூட்டுவதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. **** ****** ****** ***** ***
சார் எப்போது இந்திய தேசியம், காந்தீயம் போன்றவற்றைக் கடந்து தமிழ்த் தேசியத்திற்கு வந்தீர்கள்?
சரி, தமிழ்த் தேசியம் பேசத் தொடங்கிவிட்ட நீங்கள், நாகர்கோயிலில் நீங்கள் நடத்தும் ஆங்கிலப் பள்ளியைத் தமிழ்ப் பள்ளியாக மாற்றிவிடுவீர்களா? அல்லது தனி ஒருவனுக்குப் படிப்பு இல்லையெனில் பள்ளிகளையே அழித்துவிடுவோம் என்று சூளுரைத்து தங்கள் பள்ளியில் இனி ஏழை எளிய பாட்டாளி மக்களுக்கே இடம் என்று அறிவித்து விடுவீர்களா? எல்லாம் வணிக மயம்! பெரியார் ஒரு அரசியல் வணிகர்! காந்தியும் ஒரு அரசியல் வணிகர்! கருணாநிதி, செயலலிதா போன்றோர் அதில் கரை கண்டவர்கள். வணிகன் பூசி மெழுகுவான்! புழுத்துப் போன புளிக்கும்கூட கவர் அடித்து கவனமாகக் கடத்திவிடுவான். உதயகுமார் கவர் அடிக்கத் தொடங்கிவிட்டார்! துணிந்துவிட்டார்!
வாழ்க பச்சைத் தமிழ்த் தேசியம்!!
குணசீலன்
உதயகுமார் மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் எழுதியிருக்கிறார். நாம் தமிழர் தம்பிகள் முகநூலில் எல்லோரையும் விமர்சிப்பது போலவே இங்கேயும் மிக மோசமாக எழுதுகிறார்கள். தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து வைப்பவர்களை இப்படி மோசமாக தனிநபர் தாக்குதலில் இறங்குவது அரசியல் நாகரிகமல்ல. இது ஒரு தனிப்பட்ட உதயகுமாரின் கருத்தல்ல.. முற்போக்கான பண்புள்ள மனிதர்கள் எல்லாம் இப்படித்தான் சிந்திப்பார்கள். அதைத்தான் உதயகுமார் எழுதியிருக்கிறார். அவரின் அரசியல் முதிர்ச்சி, கட்டுரையில் வெளிப்பட்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்த் தேசியம் வளமான பாதையில் பயணிக்கும்.. தேர்தல் அரசியல்வாதிகள் தமிழர்களை எப்போதும் கைவிட்டிருக்கிறார்கள். அதைத்தான் நாம் தமிழரும் செய்யப்போகிறது.
Periyasamy
யார் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதை நாம் சிங்களர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள இனம் பல அடுக்குகளை கொண்டது. அந்த இனத்தின் உயர் அடுக்கில் ஆரியத்தன்மை வாய்ந்த சிங்களர்களும் புத்தகுருமார்களும் வீற்றிருக்கிறார்கள். கடந்த சில நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் இருந்து போய் இலங்கையில் குடியேறி சிங்களராக மாறியவர்கள் அடுக்குகளின் அடிமட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் என்பது உயர் அடுக்கில் இருக்கும் ஆரியத்தன்மை வாய்ந்த சிங்களர்களிடமும் புத்தகுருமார்களிடமும் தான் குவிந்திருக்கிறது. அவர்கள் தான் அந்த தீவின் அரசியலையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதை நாம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக (மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு இருந்தே) தெலுங்கு, கன்னடம், சௌராஷ்ட்ர மற்றும் உருது பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் அடையாளத்தை தனிப்பட்ட முறையில் (அதாவது தங்கள் வீடுகளிலும் சமுதாய அமைப்புக்களிலும்) பேண உரிமையுண்டு. (வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கும் இது பொருந்தும்). அதை தமிழர்களாகிய நாம் கேள்வி கேட்க முடியாது. இந்திய அரசியல் அமைப்பின்படி கேள்வி கேட்கவும் இயலாது. ஆனால் அவர்களை அரசியல் தலைமைக்கும் அதிகாரத்துக்கும் விடக்கூடாது. தமிழகத்தில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கணிசமான அதிகாரம் இருப்பதாக கருதப்படும் பதவிகளில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்களே இருக்கும்படி (சதி செய்தாவது) பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாரம் குறைந்த பதவிகளிலும் மற்ற பணிகளிலும் மட்டுமே தமிழர் அல்லாதவர்களை இருக்க விட வேண்டும். தனியார் நிறுவனங்கள் மற்றும் மொழி அல்லது மத சிறுபாண்மையினர் நடத்தும் நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் கணிசமான அளவுக்கு தமிழர்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ள மாநிலங்களில் இது தான் நடக்கிறது. தமிழகத்தில் தான் நிலைமை எதிராக இருக்கிறது. மட்டுமல்லாமல் இந்தியா என்னும் தற்போதைய அமைப்பில் மாநில அரசுகளை விட மத்திய அரசு தான் சர்வ வல்லமை மிகுந்ததாகவும் பல விடயங்களில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டதாகவும் இருக்கிறது. ஆகையால் மத்திய அரசில் முக்கிய கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட பதவிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் கணிசமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மலையாளிகள் இதைத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஐ.நா சபை போன்ற சர்வதேச நிறுவனங்களிலும் வீற்றிருக்கிறார்கள். அதனால் பலனடைகிறார்கள். இப்போது ஆந்திர மாநிலத்தவரும் இதை பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு உகந்ததாக நம் தமிழகத்தில் பள்ளி மற்றும் உயர் கல்வி முறை முற்றிலும் மாற்றப்பட வேண்டும். பார்ப்பனர்களை பாருங்கள். இந்திய மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் மிகச்சிறிய விழுக்காட்டினர். ஆனால் அவர்கள் நினைப்பது தான் நடக்கிறது. அவர்கள் சொல்வது தான் எடுபடுகிறது. காரணம், இந்தியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளில் அவர்கள் வீற்றிருப்பது தான். இவ்வுலகில் தகுதி, திறமை ஆகியவற்றை விட அதிகாரம் தான் எடுபடும். இன்னும் சொல்லப்போனால் எது தகுதி, எது திறமை என்பதை தீர்மானிப்பதே அதிகாரம் தான். மனித குல வரலாறில் அதிகாரம் தான் எல்லாவற்றையும் தீர்மானித்தது. தீர்மானிக்கிறது. இந்த உண்மை யூதர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் நன்கு தெரியும். தமிழர் என்னும் அறிவு கெட்டவர்களுக்கு தெரியாது. அது தான் பிரச்சினை.
viyasan
//செயலலிதாவோ, கருணாநிதியோ, எம்ஜியாரோ, அண்ணாதுரையோ, வைகோவோ, விஜயகாந்தோ தங்களது இன அடையாளத்தை வெளிப்படையாகச் சொல்லி நேர்மையான அரசியல் செய்யவந்த நேர்மைச் சிகரங்களல்ல//

அண்ணாதுரையின் தாயார் தெலுங்கராக இருக்கலாம் அவரது தந்தையார் தமிழன் என்று நம்புகிறேன். தவறிருந்தால் திருத்தவும்.
வண்டாரியான்
பச்சைத்தமிழ் தேசியம்:தமிழ்த்திரு அய்யா உதயகுமார் அவர்களே ,,,, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தமிழ்த்திரு குணா அவர்கள் வெறும் வார்த்தை விளம்பரத்திற்க்கோ! உணர்ச்சிவசப்பட்டோ! ஆதாரமின்றியோ! போகிறபோக்கில் வாசித்துவிட்டு சிலர் ஆமோதிக்கவும்!சிலர் எதிர்வாதம் செய்யவும்!சொல்லவில்லை .தன் இனத்தின் இழிவை எண்ணி திராவிடத்தின் வீழ்ச்சியே!தமிழ் தேசியத்தின் எழுச்சி,மீட்சி,விடிவு என்று தன் வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு இயங்கும் ஒரு கருத்துப்போராளியின் சிந்தனை. "திராவிடத்தால் வாழ்ந்தோம்" என்பதையும் மறுப்பதற்கில்லை என்ற தங்களின் கருத்து எம்மினம் இன்று தன்சொந்த மண்ணிலேயே இரண்டாம் தர மக்களாக மாற்றப்பட்டதிற்க்கம் தன் சுயம் மறந்து வந்தேறிகளை அன்டிப்பிளைப்பதையே மேன்மையாகக்கருதும் இந்த இழிநிலைதான் அவர்கள் எமக்கு போதித்த பகுத்தறிவு என்றால் அதை எம்மிடம் திணித்த பெரியாரையும் தொடர்ந்து திணிக்கின்ற திராவிட வந்தேரிக்கூட்டையும் நீங்களும் தாங்கிப்பிடிப்பதை எம்போன்ற இளந்தமிழர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? தமிழ்த்திரு அறிஞர் குணா அவர்களை கீற்று இணையத்தின் மூலம் இளம்தமிழ்த்தலைமுறை அறியச்செய்ததிற்க்கு நன்றி!
tamilan
அய்யா/அம்மா ஷாலி நாம் எங்கே விரட்டி அடித்தோம் அவர்கள் தான் நம்மை விரட்டினார்கள். காவிரி கலவரத்தில் கன்னடர்கள், முல்லைப் பெரியாரில் மலையாளிகள் நடந்த விதத்தைப் பேசி விட்டு அப்புறம் தமிழர்களின் நடத்தை பற்றி பேசுங்கள் தமிழர்கள் தருவது பதிலடியே தவிர முதலடி அல்ல. தமிழகத்தின் பச்சைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள (பவானி, தேனீ , கம்பம் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள கன்னட ஒக்கலிகர்கள் )கன்னடர்கள் வெளியேறினாலே கருநாடக தமிழர்களுக்கு போதுமான இடம் கிடைத்துவிடும்...
rajanparthipan
1.பெரியசாமி சொல்வது சரியே!
2.சர்வாதிகாரமும் தேவை! அவை எல்லைக்கு உட்பட்டதாக இருந்து தமிழ் தேசியத்தை வலர்க்க வேண்டும்!
kumaravel.m
A very good approach regarding tamizhthesiam. GreenTamizh nationalism is a very good concept.We must protect our natural resources from multi nationals. this is our nation.Saving tamil land means saving its rivers, ocens, air,water,hills etc.,Free from pollution. Now a days this is called an anti imperial struggle. Divide the enemy and unite the people. Udaya kumar's article is giving strength to tamilnationalism. His approch is giving a new dimension to tamilnationalism. Also it is entirely different from so called tamil nationalist's approch. This is very needed and good shift. Kumaravel.m
arima
கூடங்குளம் அணூலை எதிர்ப்புப் போராடத்தின் வாயிலாக அண்ணன் உதயகுமாரை இப்போது ஓராண்டுக்கும் மேலாக அறிவேன். என் தம்பி தமிழர் களத்தின் தென் மண்டலப் பொறுப்பாளர் நன்மாறன் பல ஆண்டுகளாக அவரோடு தோள்கொடுத்து நிற்பவன். உடன் பிறக்கவில்லையே தவிர அண்ணன் என்ற உரிமையோடு அவரோடு களம் நிற்பவன் நான். 1991க்குப் பிறகு என் தமிழின விடுதலைக்காக உயிரைக் கரைக்கத் துணிந்தவன் நான்! நான் ஒரு சாதியில், ஒரு குடும்பத்தில், ஒரு மதத்தில் பிறந்திருந்தபோதும் என் இனம் ஒடுக்கப்படுவதை நசுக்கப்பட்டதை புழு பூச்சிகளைவிட கேவலமாக நடத்தப்பட்டதைக் கண்டு உள்ளம் நொறுங்கியவன் நான்! நான் குடும்பம், சாதி, மதம் கடந்து இனம் என்ற ஒற்றைப் பார்வையில் நிற்பவன்! தமிழின விடியலுக்காக களம் கட்டி நிற்கும் தமிழர் களமே என் குடும்பம், தமிழினமே என் சாதி சனம்! தமிழியமே என் மதம்! என் இனத்திற்கு எதிராக சிந்திப்பவன், செயல்படுவன் அத்தனை பேருமே என் எதிரிகளே! உடன் பிறந்திருந்தாலும்கூட, ஒரே சாதியில் மதத்தில் இருந்தாலும்கூட எதிரிகளை எதிரிகளாகவே பாவிக்க விரும்புகிறவன் நான்!
அண்ணன் உதயகுமார் அண்மையில் எழுதிய பச்சைத் தமிழ்த் தேசியம் என்ற கட்டுரையைப் படித்தபோது உள்ளத்தில் பல நெருடல்கள் எழுந்தன.
கர்நாடக வீதிகளில் கசாப்புக் கடையில் ஆடுமாடுகளை அறுத்தெறிவது போல தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் தமிழச்சிகள் சீரழிக்கப்பட்டபோதும் அந்த வெறியர்கள் தமிழர் தமிழரல்லாதவர் என்று எப்படி அடையாளம் கண்டனர்? கொலைவெறியோ பாலியல் வெறியோ அந்த வெறியர்களுக்கு ஓர் அடிப்படை வெறியாக இருந்திருந்தால் பக்கத்தில் கருப்பு வண்ணத்தில் தாலிச்சரடு போட்டிருந்த கன்னடப் பெண்கள் மீதும் கை வைத்திருப்பார்களே! அந்தக் கன்னட வெறியர்களுக்கு தமிழர்கள் என்று அடையாளப்படுத்த என்ன வரப்பு இருந்தது? பல நூறு ஆண்டுகள் அந்த மண்ணிலேயிருந்து கன்னடம் பேசி அடித்தட்டு மக்களாயிருந்த ஆனால் பிறப்பால் தமிழர்களாகிப் போன பெரும் பாவத்திற்காக அவர்கள் தமிழர்களாகவே அடையாளப்படுத்தப்பட்டு மிதிக்கப்பட்டார்களே அப்போதெல்லாம் இனத்தை அடையாளப்படுத்தும் வரம்புகள் எங்கே போயின?
ஈழத்தில், மும்பாயில், நமது கடற்கரைகளில், இன்றும் கர்நாடகத்தில், இன்றும் கேரளத்தில் தமிழர்கள் என்று எப்படி அடையாளப்படுத்துகிறார்கள்? உதயக்குமார் அவர்கள் சொல்வது போல தமிழ்ப் பற்றும், தமிழ்ப் பேச்சும், தமிழருக்காக உழைப்பதும் ஒருவரைத் தமிழராக்கிவிடுமா? இதே வரம்புகள் பிற மாநிலங்களிலும் நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தியிருக்கிறதா?
ஒரு காலத்தில் கெம்பே கவுடா ஒரு கன்னடர் என்று கருதிய கன்னடர்கள் அவரைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடினார்கள். அன்றைய வெங்காலூரை அதாவது இன்றைய பெங்களூரை வடிவமைத்தவர் அவரே! ஆனால், அவர் ஒரு தமிழர் என்று அறிந்தமாத்திரத்திலேயே கன்னடர்கள் அவரைத் தொலைவில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். இன்றைய விதானசவுதா உட்பட பல கட்டடங்களையும் சாலைகளையும் இருப்புப்பாதைகளையும் குருதியும் வியர்வையும் சிந்தி கட்டியெழுப்பியவர்கள் தமிழர்களே! ஆனால் அவர்களை யாரும் கன்னடர்களாகக் கருதி காப்பாற்றவில்லை. அவர்களுக்கெல்லாம் பொருந்தாத ஒரு ஞாயம் நமக்கு மட்டும் ஏன் கற்பிக்கப்படுகிறது என்று எனக்கு விளங்கவில்லை. வடநாட்டில் பிறந்த காந்திக்கும், நேருக்கும், அம்பேத்கருக்கும் தமிழ்நாட்டில் ஊரெல்லாம் சிலைகள்! வ.உ.சி.க்கு வடநாட்டில் சிறப்பு உண்டா? அயோத்திதாசப் பண்டிதரையும், ரெட்டைமலை சீனிவாசனாரையும் வடநாட்டில் தெரியுமா? இது அடிமைகள் நாடு! ஆண்டைகள் வைத்ததுதானே வரம்பும் சட்டமும்!
கர்நாடக வீதிகளில் தமிழர்கள் கதறக் கதற கத்தித் தொலைத்த அந்தக் காட்சிகளைக் கண்டவனும் ஒரு தமிழ்த் தேசியத்தைக் கனவு காண்கிறான்.
ஈழத்தில் நம் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக சதைக் குவியலாகக், குருதிச் சேற்றில் பிணங்களாகக் கிடந்ததைப் பார்த்த, கேட்ட பலரும் ஒரு தமிழ்த் தேசியத்தைக் கனவு காண்கிறார்கள்.
திராவிட நச்சுக்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் ஒடுக்குமுறை என்ற அடக்குமுறை அரசியலால் தொடர்ந்து தோல்விகளைச் சந்திக்கும் தமிழரும் ஒரு தமிழ்த் தேசியக் கனவு காண்கின்றனர்.
அறிவை மட்டுமே கசக்கிப் பிழிந்து சிலர் ஒரு தமிழ்த் தேசியக் கனவு காண்கிறார்கள். காயப்பட்ட உள்ளங்களோடு மற்ற பலர் ஒரு தமிழ்த் தேசியத்தைத் தேடுகிறார்கள்.
இப்படித் தேடுகிற யாருக்கும் ஒரு சமூகப் பொருளாதார அரசியல் பார்வை இல்லை என்று சொல்லிவிட முடியாது.
பெரியாரையும் திராவிடத்தையும் சமரசமின்றிச் சாடும் தமிழர்களத்திற்கும் ஒரு சமூக, பொருளாதார, அரசியல் பார்வை உண்டு! தமிழருக்கான, தமிழ்த் தேசியத்திற்கான ஒரு கனா உண்டு!
நாம் தமிழர் கட்சிக்கும், தமிழ்த் தேசியப் பொதுவுடமைக் கட்சிக்கும், பிற தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் அது போன்ற ஒரு பார்வை உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இத் தமிழ்த் தேசிய அமைப்புகளும், இயக்கங்களும், கட்சிகளும் அவரவர் பட்டறிவு, கற்ற பாடங்கள், சுட்ட நிகழ்வுகள் என்ற அடிப்படையில் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் தமிழர் நலம், தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாப்பது, ஈழம், பிரபாகரன், வந்தேறிகள் குறித்தப் பார்வை, மொழிக் கொள்கை போன்றவற்றில் பெரும்பாலும் ஒத்தக் கருத்துடையவர்களே!
“குணா ஐயா சொல்வதுபோல, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பதுபோலவே திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதும் ஒருவகையில் உண்மையே” என்ற கூற்று பச்சையான சப்பைக்கட்டு! தமிழர் நலம் என்ற பார்வையிலிருந்து ஒருக்காலும் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று சொல்ல முடியாது. தமிழரை ஒடுக்குவதிலும், சுரண்டுவதிலும், தமிழரை அதிகாரத்திலிருந்து வீழ்த்துவதிலும் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடம் என்ற கருத்தியல் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உதயகுமார் அவர்கள் ஈடுபட்டிருக்கிற கூடங்குளம் பிரச்சனையிலும் திராவிடத்தின் நச்சு நிலைப்பாட்டைப் பச்சையாக உணரமுடியும். கருணாநிதி, செயலலிதா, விசயகாந்து போன்ற திராவிட வந்தேறிகள் என்ன செய்தார்கள்? வைகோ சரியாகத்தானே இருக்கிறார் என்று ஒருவர் சொல்லலாம். குறிஞ்சாக்குளம் படுகொலை பற்றி சற்று விரிவாகப் பேசுவோமா? அவருடைய கட்சி நிர்வாகிகளில் தமிழர்கள் எத்தனைப் பேர் என்ற ஒரு புள்ளி விவரம் எடுப்போமா?
காந்தி இந்திய தேசியம் உருவாவதற்கு உழைத்த ஒருவர். அகிம்சை என்ற போர்வைக்குள் காய் நகர்த்திய ஓர் அரசியல்வாதி! காந்தி இர்வின் உடன்படிக்கை பற்றி, பகத்சிங்கின் தூக்கு பற்றி காங்கிரசு கொண்ட கொள்கை என்ன? காந்தி செய்த கயமை என்ன? என்பது பற்றியெல்லாம் பேசினால் புத்தன் இயேசு அம்பேத்கரோடு காந்தியைக் கட்டாயம் சேர்க்க முடியாது. ஆனாலும் அவர் இந்திய தேசிய உருவாக்கத்திற்குப் பாடுபட்டவர். இந்திய தேசியம் என்பது பிராமண வந்தேறிகளுக்கான ஒரு கட்டாயத் தேவை. காந்திக்கு இந்த நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் உண்டு என்ற அறிவு இல்லாதவர் இல்லை. இருப்பினும் ஒரு பிராமண வர்க்கச் சிந்தனையாளராகவே இந்தி தேசியம் உருவாக காந்தி முனைந்தார். இருக்கட்டும்! அதுபோன்றே, பெரியார் திராவிடத் தேசியம் உருவாகப் பாடுபட்டவர்! இல்லை இல்லை, “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கியவர் அவர் என்று சிலர் சில மேற்கோள்களைக் காட்டலாம். திராவிட நாடு திராவிடருக்கே என்ற கொள்கையில் கேரளத்தில் வாழும் மலையாளிகளும் ஆந்திரத்தில் வாழும் தெலுங்கர்களும் கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களும் துளியளவும் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்த பெரியார் சொல்லாடல்களை மாற்றிக் கொண்டார். பெரியாரைத் தூக்கிப் பிடிக்கும் பலர், “அவர் தமிழ்நாடு தமிழருக்கே” என்ற நிலைப்பாட்டிற்குள் வந்துவிட்டார் என்றே வாசிக்கின்றனர்.
நடைமுறையில் “தமிழ்நாடு திராவிடருக்கே” என்ற நிலைப்பாட்டிற்குத்தான் அவர் மாறினார். தமிழ்நாட்டில் வாழ்ந்த கன்னடரும் (பெரியார் போன்றோர்), தெலுங்கரும், மலையாளிகளும்தான் திராவிடர்கள்! நாங்கள் என்றைக்குமே தமிழர்கள்! பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ, ம.கோ.இரா.வோ, செயலலிதாவோ, வை.கோ.வோ, விசயகாந்தோ தமிழர் தலைமை வரவேண்டும் என்றோ, தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆக வேண்டும் என்று கருதியவர்களா? தமிழ்நாட்டில் திராவிடர்களின் ஆட்சியைத் தக்கவைப்பதில்தான் இவர்கள் அத்தனைப் பேரும் முனைந்து வரிந்து கட்டிச் செயல்படுகிறார்கள். இவர்கள் முன் மொழிகிற திராவிடம் என்பது தமிழ்நாட்டிற்கான இவர்களது சிறப்புக் கொள்கை! அந்தச் சிறப்புக் கொள்கை என்பது தமிழ்நாட்டிற்குள் சிறுபான்மையராக இருக்கும் வந்தேறிகளின் ஆட்சி அதிகாரத்ததைத் தக்க வைப்பதேயாகும்.
நடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில் வாழும் மலையாளியைக் குறிக்காது! ஆந்திராவில் வாழும் தெலுங்கர்களைக் குறிக்காது! அல்லது கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களையும் குறிக்காது! அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரை மட்டும் அது எப்படிக் குறிக்கும்? அது தமிழ்நாட்டில் வாழும் பிற இனத்தாரைக் குறிக்கிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னட, மலையாளிகளைக் குறிக்கிறது. திராவிடம் என்பது அவர்களின் வல்லாதிக்கத்திற்கான கொள்கையைக் குறிக்கிறது. அது எப்படி தமிழருக்கு நன்மை பயக்கும்? அந்த திராவிடத்தின் சூத்திரதாரி பெரியார்! அவர் எப்படி இந்த வீழ்ந்து கிடக்கிற தமிழ் இனத்தில் ஓர் விடுதலைக்கான அடையாளமாவார்?
அடுத்து, இன்றைய தமிழ்நாடு என்பது என்ன? 1956ல் வளமையான பல தமிழ்ப் பகுதிகளை இழந்து குறுகி சிறுத்து நிற்பதுதானே இன்றைய தமிழ்நாடு! தேவிகுளம், பீர்மேடு, அட்டப்பாடி, கொச்சின், திருவனந்தபுரம், மூணாறு, இடுக்கி, வெங்காலூர், கோலார், கொள்ளேகாலம், சித்தூர், நெல்லூர், திருப்பதி என்று எண்ணற்ற தமிழ்ப் பகுதிகளை இழந்தோம். இவையெல்லாம் இன்று திராவிட நாட்டிற்கள் அடங்கும்! ஆக, தமிழ்த் தேசியப் போர் என்பது திராவிட நாடு தமிழரதே! என்ற முழக்கத்தோடும் இழந்த அத் தமிழ்ப் பகுதிகளை மீட்பதிலுமே அடங்கும்.
திராவிட நாடு திராவிடருக்கே என்றதும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற புதிய சொல்லாடலை ஓடவிட்டதிலும் திராவிடர்களுக்கு என்று நோக்கமும் செயல்திட்டமும் இருந்தன. இவைகளை உற்று நோக்காது வந்தேறிகளின் வாய்சவடாலை மட்டுமே நம்பி அரசியல் களம் இறங்கும் தமிழர்கள் வருத்தத்திற்குரியவர்களே!
எனவே, “கொசுக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று சொல்வது சீவகாருண்யத்தின் உச்சமாக இருக்கலாம். அதற்காகவே சாக்கடைகளை அள்ளக்கூடாது என்று அடம் பிடிப்பது தேவையில்லை. பிள்ளைகளை நோய் நொடி அண்டுகிறது என்பதற்காக கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்கிறோம்! வாழ்ந்தோம், வாழ்வோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு வம்படி செய்தால், ஆழந்த இரங்கலை மட்டுமே தெரிவிக்க இயலும்.
கூடங்குளம் அணு உலையைப் பற்றிப் பேசும்போது மென்னீர், நன்னீர், அணு உலை அமைப்பு, ருசிய முதலீடு போன்றவற்றைப் பேசுவதில் பொருள் இருப்பது போலவே தேவகவுடா, நாராயணசாமி போன்றதுகளையும் இதுகளின் பின்னணியில் இருக்கும் திராவிட, இந்திய வந்தேறி அரசியலைப் பற்றியும் பேசியே ஆக வேண்டியிருக்கிறது. அது போலவே, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசும்போது பெரியாரையும் இழுத்தே ஆக வேண்டும். வரலாறுகளை, இரண்டகங்களை, வீழ்ந்த பாதையை, தோற்ற தழும்புகளை, பட்ட காயங்களை எட்டிக்கூட பார்க்காமல் ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டிவிடலாம் என்பது, அடித்தளமில்லாமல் ஆகாயத்தில் கோபுரங்களைக் கட்டுவதற்குச் சமம்! கட்டலாம்! மதிய உணவிற்குப் பிறகு வரும் கனவில் கட்டலாம்!
பிரபாகரன் என்பார் இந்த இனத்தின் ஓர் முகமையான அடையாளம். ஈராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்ட இனம் விடுதலையின் வெளிச்சத்தை அந்த மாமனிதனின் ஒப்பில்லா உயர்வாலும் செயலாலும் அடைந்தது என்பதை கற்றவருள் எவரும் மறுப்பாரில்லை. அவரைப் புகழ்வதால் மட்டுமே விடுதலை பெற்றுவிடுவோம் என்று தமிழ்த் தேசியர் யாரும் சொல்வதில்லை. ஆனால், வீழ்ந்து கிடக்கிற ஓர் இனம் தன் அடையாளங்களைப் பெருமையோடு நோக்குவது என்பது இயல்பு மட்டுமல்ல தவிர்க்கவியலாத தேவையுமாகும். இழப்புகளுக்கும், தோல்விகளுக்கும், நொறுங்கிக் கிடக்கிற சூழலிலும் நம்பிக்கைகளை விதைப்பது அந்த அடையாளங்களே! எனவேதான் வான்புகழ் கொண்ட வள்ளுவனைக் கொண்டாடுவோம், மொழிஞாயிறு பாவாணரைக் கொண்டாடுவோம், எங்கள் தலைவன் பிரபாகரனைக் கொண்டாடுவோம், வள்ளலாரை, ஓளைவையாரை, கம்பனை, இளங்கோவை, பாவேந்தரை, பாரதியை, சிதம்பரனாரை, குணாவை, அருளியாரை, பெருஞ்சித்திரனாரைக் கொண்டாடுவோம்! திலீபனை, முத்துக்குமரனை, பால்ராஜ்யை, மாலதியை, சங்கரை, மாவீரர்களைக் கொண்டாடுவோம்!
கூடங்குளம் போராட்டத்தில் பால்குடம் எடுப்பதிலும்கூட ஒரு போராட்ட உணர்வு உந்தித் தள்ளப்படும் என்று நம்புகிற நாம் அல்லது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சின்ன யூத தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பாடுபட்டு உயிர்நீத்த ஓர் உத்தமனை அண்ணன் உதயக்குமார் கடந்த ஓராண்டாக நிலை கொண்டிருக்கும் இடிந்தகரை தேவாலய வளாகம் உட்பட உலகப் பரப்பெங்கும் வணங்கிக் கொண்டாடும்போது, அம் மனிதன் இன்றைக்கும் பலருடைய புரட்சிகர வாழ்வுக்கு ஒரு உந்து ஆற்றலாக இருக்க இயலும் என்றால் எங்கள் தலைவன் பிரபாகரன் இந்தத் தாழ்ந்த தமிழினம் தலைநிமிர ஓர் உந்து சக்தியாக இருக்க மாட்டானா?
அணு உலை எதிர்ப்புப் போராட்ட மேடைகளில் அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அண்ணன் உதயகுமாரை எத்தனையோ பேர் உயர்வாக, உச்சி குளிரப் பாராட்டுகிறார்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சி ஒரு போராட்ட வடிவில் ஞாயமான ஓர் அங்கம் வகிக்கிறது என்றால் பிரபாகரனைப் புகழ்வதும் தகுமே! பிரபாகரனை நாம் புகழாமல் இந்தியனும் சிங்களனுமா புகழ்வான்?
தமிழரே தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பதில் தவறேதும் இல்லை! தமிழர் தமிழரல்லாதவர் என்று அடையாளம் காண்பதில் குழப்பம் இல்லை! அண்ணன் உதயகுமாரின் கட்டுரையே இதற்குச் சான்று! ஒரே ஒரு தமிழர் வருவார் என்று சொல்லும் பகுதியில் இயேசு, புத்தன், காந்தி, அம்பேத்கர், கார்ல் மாக்சு என்று பட்டியலிடுகிறார். அவர்களெல்லாம் தேவையில்லையா என்று கேட்கிறார். அப்படிக் கேட்கும்போது தமிழின விடுதலைக்கு ஒரு தலைவர்தான் வருவாரா? என்று கேட்கிறார்? இயேசு புத்தன், காந்தி, அம்பேத்கர், காரல் மார்க்சு என்ற அப் பட்டியல் தமிழரல்லாத நல்லோர் (ம் ஹூம்..... காந்தி உட்பட) பட்டியல்! ஏதோ நல்லோரெல்லாம் நாடு கடந்தே இருக்கிறார்கள் என்பது போல! தமிழர்களுக்கு ஒரு தலைவர் வரமாட்டார் ஒவ்வொரு துறையிலும் பலர் வருவர். காந்தியைவிட ஈகம் பல செய்து உயிர் நீத்தவர் சிதம்பரனார், பொதுவுடமையைவிட மேலான கூட்டுடமை பற்றிச் சொல்லிய வள்ளுவர், இலக்கியம் செதுக்கிய இளங்கோ, பாட்டால் விடுதலை நெருப்பேற்றிய பாரதி, அம்பேத்கருக்கு முன்பாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்த ரெட்டைமலை சீனிவாசனார், சீவானந்தம், தமிழ்ச் சமூக விடுதலைக்கு அறிவாயுதம் தந்த அயோத்திதாசப் பண்டிதர், இசை அறிவில் கரைகண்ட ஆபிரகாம் பண்டிதர், அதில் ஓர் உச்சத்தைத் தொட்ட இளையராசா, பொதுவுடமைச் சிந்தனைகளை விதைத்த சிங்காரவேலர், நடிப்புலகில் கரைகண்ட சிவாசி கணேசன், சந்திரபாபு, கமலகாசன் அறிவுச் சுரங்கங்களை அகழ்ந்தெடுத்துக் கொடுத்த எங்கள் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பாவேந்தர், குணா, அருளியார், பாவலரேறு, இளங்குமரனார், வள்ளலார், திலீபன், பிரபாகரன், சங்கர், மாவீரர்கள், முத்துக்குமரன் என்ற எண்ணற்ற ஒப்பற்ற வழிகாட்டிகள் தமிழ்கூறு நல்லுலகில் இருக்க நல்லோர் பட்டியல் என்றாலேயே காந்தி, (பகத் சிங் மன்னிக்க) நேரு, (மவுண்ட் பேட்டன் குடும்பம் மன்னிக்க), அம்பேத்கர், காரல் மார்க்சு போன்றோர் மட்டும்தான் அந்தப் பட்டியலில் எப்போதும் வரவேண்டுமா?
தமிழர் பொருளியல், சமூகவியல், அரசியல் தளங்களில் மட்டும் வீழவில்லை. மனதாலும், உளவில் வீழ்ச்சியாலும் தரையில் கிடக்கிறான். இந்த இனத்தின் விடுதலை என்பதை நோக்கும்போது பண்பாட்டுத் தளங்கள், இலக்கியம், மொழி, உள்ளம் உட்பட்ட பொருளியல் சமூகவியல் அரசியல் விடுதலையாகத்தான் நோக்க வேண்டும்!
பரந்துபட்டப் பார்வை என்ற போர்வையில் நான் வீழ்ந்து கிடக்கிற மண்ணையும் கட்டுண்டு கிடக்கிற என் மக்களையும் கடந்து போவதற்கு நான் “கடவுள்” அல்ல! வாழ்ந்த போது இயேசு ஒட்டுமொத்த விடுதலை பற்றியெல்லாம் பேசவில்லை. வாழ்ந்த போது அவரும் தன் இன விடுதலைக்காகத்தான் பாடுபட்டார். இறப்புக்குப்பின்னர்தான் அவரும் கடந்து உள் சென்றார். ஈழத்தில் மரித்த எங்கள் காவல் தெய்வங்களும் அப்படித்தான்! மொழிக் காப்புப் போரில், இனக்காப்புப் போரில் உயிரீகம் செய்த தமிழ்நாட்டு ஈகியரும் அப்படித்தான்!!
எங்கள் ஊரில் நிலங்கள் பறிக்கப்பட்டு வந்தேறிகளின் கைகளில் கிடக்கின்றன. அண்ணன் உதயகுமார் தற்போது வாழ்கிற இடிந்தகரைக்கு அருகில் உள்ள பரமேஸ்வரபுரத்திலும், உதயத்தூரிலும், சீலாத்திகுளத்திலும் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு தெலுங்கர்கள் கைகளில் கிடக்கின்றன!
நீங்கள் வாழ்கிற கடற்கரை மணல்கள் கபளீகரம் செய்யப்பட வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் காரணமாகி ஆண்டுகள் பல ஓடுகின்றன! அப்படி மணல் அள்ளப்பட்டதனால் ஏற்படும் கதீர்வீச்சுகள் பற்றி பச்சைத் தமிழ்த் தேசம் என்ன செய்யும்?
ஒரு சிறு தேசிய இனம்கூட தன் மொழியை, பண்பாட்டை, இன அடையாளங்களை காக்கப் போராடுகின்றன! 72 லட்சம்பேர் இருக்கிற இசுரேலில் ஐரோப்பிய ஆசிய அடையாளங்களைத் திணிக்க இயலாது. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் இன்று பல்முனைகளால் தாக்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று இன்று தமிழ்நாட்டில் புற்றீசல் போலத் தொடங்கப்பட்டிருக்கும் ஆங்கில வழிப் பள்ளிகள்! (ஆங்கிலம் கற்பதற்கும், இந்தியைக் கற்பதற்கும், இன்னும் பல மொழிகளைக் கற்பதற்கும் நாங்கள் ஆதரவானவர்களே!) கணிதத்தையும் அறிவியலையும் வரலாற்றையும் ஆங்கிலத்தில்தான் கற்றுக் கொடுப்பேன் என்று அன்று ஆங்கிலேயன்கூட சொல்லவில்லை. ஆனால், இன்று நாம் செய்கிறோம். நீங்களும்கூட ஓர் ஆங்கில வழிப் பள்ளி நடத்துகிறீர்களே!
சில மாதங்களுக்கு முன்பாகக் கூட நான் சொன்னேன், “கூடங்குளம் அணூலை எதிர்ப்புப் போராட்டத்தோடு உதயகுமாருக்கு போராட்டம் முடிந்துவிடும். எங்களுக்கு அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் ஏராளமான போராட்டங்கள் உண்டு” என்று! ஆனால், நீங்களும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்ற கருவியேந்தி இப்போது களம் குதித்திருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி!
பெரிய கேள்வி என்னவென்றால், கட்டிலுக்கேற்ப காலை வெட்டுவதா? அல்லது காலுக்கேற்ப கட்டிலைச் செய்வதா? என்பதுதான்!
என்றும் உங்கள் தம்பி அரிமா
viyasan
ஆணித்தரமான கருத்துக்கள், நன்றிகள். இதற்கு கீற்றிலுள்ள ஷாலிகளும், திராவிடர்களும் பதிலளிக்கப்பட்டும் பார்ப்போம். ஒவ்வொரு தமிழனும் சகோதரர் அரிமா போல் உண்மைகளை உணர்ந்தால், தமிழன் உலகில் எங்குமே அடிவாங்க மாட்டான். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இப்பொழுதாவது மெல்ல மெல்ல விழித்துக் கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சி அரிமா அவர்களின் எழுத்தில் தெரிகிறது. அதுவொன்றே உலகத்தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தருமென்பது மறுக்க முடியாது.
VETRI CHELVAN
VANDAARIYAAN & ARIMAA ayyaa aagiyorin karuththukkal inath thooimai thedum GUNAA vin karuththukkalukku thunai nirkkinrana ! thooya thamizhanukkup pirandha palar thamizh mozhi, ina, naattu vidudhalaikku yedhiraaga ullanar yenbadhai ivargal DHAYAVU SEIDHU UNARA VENDUGINREN !

thamizh naattil kaangras,comunist,thi.ka, thi.mu.ka, a.thi.mu.ka,. the.thi.mu.ka , sa.ma.ka kaarargalaiththaan kaana mudiyume thavira thamizharaik kaana mudiyaadhu !

aaga katchi bedhangalai marandhu thamizharaaga, thamizh mozhi, inam, naattu nalanil yaar akkaraiyudan seyalpattaalum avargalai inaiththu ORU THAMIZH THESIYA VIDUDHALAI ANIYAI NAAM URUVAAKKI NAM NAATTAI DELHI VALLARASIDAM IRUNDHU MEETTU THARCHAARBU THAMIZH THESIYA ARASAAGA URUVAAKKA VENDUM ! IDHUDHAAN NAM ANAIVARIN MUNNUM ULLA PANI !

GUNAA AVARGALIN KARUTHTHUP PADI MAKKALAI ONRINAIKKA MUDIYAADHU ! ORU KUZHAPPTHTHAI VENDUMAANAAL URUVAAKKALAAM ! VIDUDHALAI VARAADHU ! KAARANAM THAMIZH MAKKALAI SAATHIGALAAGAK KOORUPOTTULLA PAARPPANIYAM, SAADHIYAM NILAVAK KAARANAMAAG ULLA NILA UDAMAI URPPATHTHI MURAI, PANNAATTU VALLARASUGALIN VETTAIK KAADAAGA THAMIZHAGAM MAATRAP PADUM KODUMAIGALUKKU MUDIVU KATTUVADHU KURITHTHO INDHIYATH THARAGU MUDHALAALIGAL INDHIYAAVIN YELLAATH THESIYA INANGALILUM THMIZH NAATTILUM KOLLAI ADIKKUM NILAI KURITHTHO .... ADHAAVADHU NAM ADIMAITHTHANATHTHIRKKUM NAM THAMIZH MOZHI,THAMIZH INAM,THAMIZH NAADU MEELA NAM MAKKALIN YEDHIRIGALAAGA IRUKKUM SAKTHIGAL YEDHU YENA GUNAA NAM MAKKALUKKU SARIYAAGA ADAIYAALAM KAATTUVADHILLAI !

INATH THOOIMAI YENAP PESI YEDHIRIGAL KOTTAMADIKKA VAZHI VIDUVADHE GUNAAVIN KOLGAI VAZHI ! THAMIZHAGA ILAINJARGAL YECHARIKKAIYAAGA IRUKKA VENDUM !

NAMAKKUTH THEVAI THATHTHUVATH THELIVU THESIYA INAM, MARABINAM, THESIYA ARASU, THAMIZH THESATHTHIN YEDHIRIGAL KURITHTHA THITTAVATTAMAANA VARAIYARAI ... THELINDHA AMAIPPU MURAI IVAIDHAAN NAM INATHTHAI MEETKUM ... PIRA KARUTHTHUKKAL KAALA VELLATHTHIL ADITHTHUCH CHELLAPPADUM !

( adhe pola UDHAYA KUMAAR AYYAA AVARGAL koorum MEN MURAIYIL in naattil oru kozhi iragaik kooda vaanga mudiyaadhu ! YEDHIRI THUPPAAKKIYODU NIRKKUM POTHU NAAM VERUM KAIYYAAL SELVADHU ARIVUDAMAI AAGUMAA YENA UDHAYAKUMAAR AYYAADHAAN VILAKKA VENDUM ?)
VETRI CHELVAN
MELUM DHRAAVIDAM MEELA VENDUM YENBATHIL NAAN MUZHUMAIYAAGA VANDAARIYAAN matrum ARIMAA AYYAA AAGIYORIN KARUTHTHUDAM UDANPADUGINREN !
Periyasamy
யார் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதை நாம் சிங்களர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள இனம் பல அடுக்குகளை கொண்டது. அந்த இனத்தின் உயர் அடுக்கில் ஆரியத்தன்மை வாய்ந்த சிங்களர்களும் புத்தகுருமார்களும் வீற்றிருக்கிறார்கள். கடந்த சில நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் இருந்து போய் இலங்கையில் குடியேறி சிங்களராக மாறியவர்கள் அடுக்குகளின் அடிமட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் அதிகாரம் என்பது உயர் அடுக்கில் இருக்கும் ஆரியத்தன்மை வாய்ந்த சிங்களர்களிடமும் புத்தகுருமார்களிடமும் தான் குவிந்திருக்கிறது. அவர்கள் தான் அந்த தீவின் அரசியலையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதை நாம் பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக (மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு இருந்தே) தெலுங்கு, கன்னடம், சௌராஷ்ட்ர மற்றும் உருது பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் அடையாளத்தை தனிப்பட்ட முறையில் (அதாவது தங்கள் வீடுகளிலும் சமுதாய அமைப்புக்களிலும்) பேண உரிமையுண்டு. (வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கும் இது பொருந்தும்). அதை தமிழர்களாகிய நாம் கேள்வி கேட்க முடியாது. இந்திய அரசியல் அமைப்பின்படி கேள்வி கேட்கவும் இயலாது. ஆனால் அவர்களை அரசியல் தலைமைக்கும் அதிகாரத்துக்கும் விடக்கூடாது. தமிழகத்தில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கணிசமான அதிகாரம் இருப்பதாக கருதப்படும் பதவிகளில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்களே இருக்கும்படி (சதி செய்தாவது) பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகாரம் குறைந்த பதவிகளிலும் மற்ற பணிகளிலும் மட்டுமே தமிழர் அல்லாதவர்களை இருக்க விட வேண்டும். தனியார் நிறுவனங்கள் மற்றும் மொழி அல்லது மத சிறுபாண்மையினர் நடத்தும் நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் கணிசமான அளவுக்கு தமிழர்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மை சுற்றியுள்ள மாநிலங்களில் இது தான் நடக்கிறது.கர்நாடகத்தில் “சரோஜினி மகிஷி கமிட்டி” மற்றும் “கோகக் கமிட்டி” ஆகியவற்றை நியமித்து அவை அளித்த பரிந்துரைகளின் பேரில் கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் “ஸ்தானிய லோக் அதிகார் சமிதி” என்னும் அமைப்பின் மூலம் மராட்டியர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் கூட வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அகில இந்தியாவிலேயே இன உணர்வும் மாநில உணர்வும் இல்லாத மக்கள் இருப்பது தமிழ் நாட்டில் தான்.
இந்தியா என்னும் தற்போதைய அமைப்பில் மாநில அரசுகளை விட மத்திய அரசு தான் சர்வ வல்லமை மிகுந்ததாகவும் பல விடயங்களில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்டதாகவும் இருக்கிறது. ஆகையால் மத்திய அரசில் முக்கிய கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட பதவிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டோர் கணிசமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மலையாளிகள் இதைத்தான் செய்கிறார்கள். அவர்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஐ.நா சபை போன்ற சர்வதேச நிறுவனங்களிலும் வீற்றிருக்கிறார்கள். அதனால் பலனடைகிறார்கள். இப்போது ஆந்திர மாநிலத்தவரும் இதை பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு உகந்ததாக நம் தமிழகத்தில் பள்ளி மற்றும் உயர் கல்வி முறை முற்றிலும் மாற்றப்பட வேண்டும். பார்ப்பனர்களை பாருங்கள். இந்திய மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் மிகச்சிறிய விழுக்காட்டினர். ஆனால் அவர்கள் நினைப்பது தான் நடக்கிறது. அவர்கள் சொல்வது தான் எடுபடுகிறது. காரணம், இந்தியாவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளில் அவர்கள் வீற்றிருப்பது தான். இவ்வுலகில் தகுதி, திறமை, உழைப்பு ஆகியவற்றை விட அதிகாரம் தான் உயர்வானது. இன்னும் சொல்லப்போனால் எது தகுதி, எது திறமை, எது உழைப்பு என்பதை தீர்மானிப்பதே அதிகாரம் தான். மனித குல வரலாறில் அதிகாரம் தான் எல்லாவற்றையும் கட்டமைக்கிறது. இந்த உண்மை யூதர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் நன்கு தெரியும். தமிழர்களுக்கு தெரியாது . அது தான் பிரச்சினை.
Pradeepan
அரிமா ஐயா, பாரதியாரும், கமலகாசனும் எப்படி தமிழர்கள் ஆனார்கள் என்று கொஞ்சம் விளக்கமுடியுமா.?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.