தொடர்புடைய படைப்புகள்

 

krishnaveni_282பூத்துக் காய்த்து சிலிர்த்து
கோடையில் சாய்ந்து விழும்
சிறு மரம், செடி உவமையாகா
ஆழத்தில் ஊடுறுவி
இறுக்கமாய் பற்றியிருக்கும்
ஆணிவேருனக்கு

தாழையூத்து பஞ்சாயத்துயுனை
தலைவியாய் அடைந்தது வரம்
யாருன்னை அடித்துப் போட்டாலும்
பட்டுப்போக நீயொன்றும் சிறுகொடி கிடையா

அச்சமில்லையுனக்கு
எழுந்துநில் துணிந்துபோராடு
துச்சம் உனக்கெல்லாம்
சிறுபுழுக்களும் விட்டில்களும்
வீழ்த்தாதெம்மை

மேட்டு நீர் தாழ்வாரத்தெம்மடியில்தான்
வீழ்ந்தாகவேணும்,
ஆழ்வதற்கு வசதியாய்
அகழியை அகலப்படுத்த வந்தவள் நீ

வெட்டிய வீச்சறுவாள்
உறைக்குள் கிடந்து கதறும் ஒரு நாள்
இரத்தம் சிந்திய உனை கூப்புமது
தூரமில்லை நிகழும் பார்

தாழ்ந்தோரென எமை
வீழ்ந்து கிடக்கும் விதிசெய்தோரை
வாழ்ந்தே வெல்லும் உன் திறனை
வணங்காதிருப்பது நலமில்லைகாண்

ஆதலால், கிருஷ்வேணியுனை
வணங்குகிறேன் தாயே,
சூரியன் உன் திசையில்
புலரும் நாள் தூரமில்லை
துச்சம் உனக்கெல்லாம் துணிந்து போராடு…

Comments

2 comments

2
saravanan
மிகச்சிறந்த கவிதை. அந்த போராளிக்கு நல்லதொரு வாழ்த்து.

இந்த கவிதயைப்படைத்த தோழருக்கு என் உளமார்ந்த நன்றிகள் .

சரவணன் .செ
rubini
நூறு கவிஞர்கள் எழுதினார்கள்...வேண்டாம் அது உயிர் அற்றது என்று..
நூறு எழுத்தாளர்கள் உரைத்தார்கள்..வேண்டாம் அது கொடிய விஷம் என்று...
எத்தனையோ உயிர்கள் காணாமல் போயிற்று...அந்த கொடிய விஷம் அருந்தி...
அவர்களை மேற்கோள் காட்டி வளர்த்தார்கள் அன்று...
அதை பின்பற்றினால் தூற்றுகிறார்கள் இன்று...
எதிர்த்து வாழவும் வழி இல்லை.. சாகவும் மனமில்லை...
நடை பிணமாய்...கோழையாய்...ஆசை துறந்து..அணிகள் இழந்து...வாழும் பல மனிதருள் நானும் கலந்தேன் ...
பெற்ற மனம் பித்து..பிள்ளை மனம் கல் போன்றது என்பது ஏட்டு சுரக்காய் என்பதை மீண்டும் உணர்ந்தேன்..
ஜாதி என்ற ஒற்றை சொல்லை கொண்டு எத்தனை உயிர்களை பறிப்பார்கள்..உயிரை கொடுத்தவர்களே உணர்வுகளை பறிக்கும் கொலையாளிகள் ...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.