தொடர்புடைய படைப்புகள்

 

‘இந்து' என்ற வார்த்தைக்கு இசுலாமியர் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சாராதவர் என்று பொருள். பார்ப்பனர்கள், சாதி இந்துக்கள் (சைவ பிள்ளை, சைவ முதலியார், காசுக்கடை செட்டியார்), இடைநிலை சமூகங்கள் (வன்னியர், கவுண்டர், முக்குலத்தோர் உட்பட பிற்படுத்தப்பட்டோர் சூத்திரசாதிகள்) மற்றும் இந்துத்துவ பண்பாட்டோடு எதிர் அரசியல் கண்ட தாழ்த்தப்பட்டோர்கள் இவர்கள் அனைவருமே ‘இந்து' என்றுதான் அழைக்கப்படுகிறார்கள். இது மட்டுமில்லாமல் பவுத்தம், சீக்கியம் மற்றும் ஜைன மதங்கள் உட்பட இந்து மதத்தின் பிரிவுகளாகத்தான் இந்திய அரசியலமைப்பு சுட்டுகிறது. ஆகவே, ‘இந்து’ என்கிற வார்த்தைக்கோ அல்லது அந்த மதத்திற்கோ, தனித்த இறைக் கொள்கையோ, சமயநம்பிக்கையோ, பண்பாடோ கிடையாது.

எதிர் அரசியல் சிந்தனை கொண்டவர்களையும், முரண் கருத்தியல் சிந்தனைகளையும் தன்னகத்தே சேர்த்துக் கொண்டதன் மூலம் தன்னுடைய அரசியல் இருத்தலை தக்கவைத்து கொண்டிருக்கிறது. இந்து மதத்தின் இந்த ‘பன்முகத்தன்மை கொண்ட பாசிசத்தை’ தான் செயமோகன் போன்ற எழுத்தாளர்கள் புனிதம் என்று பிதற்றுகிறார்கள்.

இந்து மதத்திற்கான வரையறையை மேலோட்டமாக பார்க்கும்போது, பரந்துபட்ட அளவில் சனநாயகத்தன்மையுடன் இருப்பது போல் தெரியும். ஆனால், அதன் அடிநாதமாகிய ‘சாதி’யை உற்று நோக்கும்போதுதான் இந்து மதத்தின் வக்கிரங்களும், வன்மங்களும் நன்கு புலப்படும். ஏனென்றால், இந்தியாவில் பல மதங்கள் இருக்கின்றன என்கிற வாதமே மிகப்பெரிய மோசடி. பல்லாயிரக்கணக்கான சாதிகள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றன. ஒவ்வொரு சாதியும் மனிதனை சமூகத்திலிருந்தும், பொதுச் சிந்தனையிலிருந்தும் தனித்தே பிரித்து வைக்கும் வேலையை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் கீழ்க்காணும் பிரிவுகளாக மதங்கள் இருக்கின்றன.

1) பார்ப்பனியத்தை (சாதிய அமைப்பை) அப்படியே உள்வாங்கிக் கொண்ட கிறிஸ்த்துவம்

2) பார்ப்பனியத்தால் வீழ்த்தப்பட்ட பவுத்தம்

3) பார்ப்பனியக் கூறுகளுடன் சாதிப் படிநிலை கொண்ட சனாதன (இந்து) மதம்

4) பார்ப்பனியத்திற்கு எதிரான நடவடிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் கொண்ட இசுலாம்.

மேற்கூறிய செய்திகளிலிருந்து இந்தியாவில் ‘இசுலாம்’ என்கிற ஒரு மதம் மட்டுமே இருக்கிறது என்கிற செய்தி நமக்குப் புலனாகிறது. இந்து, கிறிஸ்த்துவம் என்று பெயர்கள் வேறுபட்டாலும், அதன் உள்கட்டமைப்பு சாதியக் கூறுகளாகவே இருக்கிறது. இந்தப் புரிதலோடு நாம் இக்கட்டுரையின் கருப்பொருளுக்கு செல்வோம்.

இந்து மத இழிவிலிருந்து விடுபட நினைத்து கிறித்துவ மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறதா? அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான பிரிவில் இருப்பது சரியா? அல்லது இந்து தலித் மக்களைப் போலவே அவர்களுக்கும் (SC) பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டுமா? என்கிற கேள்விக்கான விடையை நோக்கி நாம் இக்கட்டுரைக்குள் பயணிப்போம்.

இந்தியாவில், பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ‘சிரியோன் கிறிஸ்த்தவர்கள்’ வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பிறகு, போர்த்துகீசிய படையெடுப்பு, பிரிட்டிஷ் படையெடுப்பு என தொடர்ச்சியாக கிறித்துவ மதம் இங்கு பரப்பபட்டது. இயேசுநாதர் இறந்த ஒரு சில ஆண்டுகள் கழித்து, புனித தோமையர் என்னும் மதபோதகர் சென்னைக்கு வந்ததாகவும், அவருடைய கிறித்துவ மதப் பிரச்சாரத்தால், கோபமுற்ற பார்ப்பனர்கள் அவரைக் கொன்றதாகவும் ஒரு வரலாறு கூறப்படுகிறது.

எது எப்படியிருந்தாலும் இன்று கிறிஸ்த்தவத்தின் அடையாளம் சாதியப் படிநிலைகளை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்ட வடிவமாகவே இருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்த்துவ மிஷனரிகளால் உருவாக்கப்பட்ட மருத்துவ சேவையின் மூலம் இம்மதம் அடித்தட்டு மக்களுக்கு அறிமுகமானது. பதினெட்டாம் நூற்றாண்டில் சனாதன மதத்தால் கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்கியதன் மூலம் அம்மக்களால் கவரப்பட்டது. ஆரம்பகாலத்தில், கிறிஸ்த்துவ பாதிரிமார்கள் தங்களது உயிருக்குப் பயந்து உயர்சாதி அடையாளங்களுடன் மதப்பிரச்சாரத்தை செய்து வந்தார்கள். மீட்ஐயர், றில்ங்பேஐயர் போன்று பல பிரெஞ்சு பாதிரியார்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் பார்ப்பன அடையாளத்தை வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். அதன்பின் மெல்ல மெல்ல அடித்தட்டு மக்கள் தங்களின் மீட்பு மதமாக கிறிஸ்த்துவத்தை ஏற்கத் தொடங்கினர்.

திருவாங்கூர் சமஸ்தானஸ்தானத்தில் காணத்தகாத சமூகமாக இருந்த நாடார்களும், தீண்டாதப்படாத மக்களாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களும் அதிக எண்ணிக்கையில் கிறிஸ்த்துவ மதத்தில் சேர்ந்தனர். அக்கால கட்டத்தில், கல்வி பெறுவதற்கு, பெரும் வாய்ப்பினை கிறிஸ்த்துவ மதம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. பின்னாட்களில் வெள்ளாளர், உடையார், வன்னியர், ரெட்டியார் போன்ற இடைநிலை சாதிகளும், சாதி இந்துக்களும் கிறிஸ்த்துவ மதத்தில் இணைந்தனர். அதுவரை, அடித்தட்டு மக்களுக்கான மதமாக இருந்த கிறித்துவம் அதன் பின்னால், சாதிய அமைப்பை உள்வாங்கி கொண்ட இன்னொரு இந்து மதமாகி விட்டது. கிறித்துவம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், அம்மக்களின் பழமையான மதப் பழக்கவழக்கங்களையும், கலாச்சாரங்களையும் உட்கிரகித்துக் கொண்டே மதப்பிரச்சாரம் செய்யும். மதமாற்றத்தை எளிதாக்குவதற்கு கிறித்துவம் தென்றுதொட்டு மேற்கொண்டு வரும் வழிமுறை அது.

அந்த வழக்கப்படி, இந்து மதத்திலுள்ள சாதிய அமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யாமல் அப்படியே கிறித்துவம் மதமாற்றம் செய்தது. அதன் விளைவாக இடைநிலை சாதி உணர்வு பெற்றவர்களும், சாதி இந்துக்களும் கிறித்துவத்திற்குள் நுழைய ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக தீண்டாமையும் கிறித்துவ மதத்திற்குள் நுழைய ஆரம்பித்தது.

வேளாங்கண்ணி திருவிழா, லூர்து அன்னை தேர் விழா, மாதா கோயில் திருவிழா, குழுந்தை ஏசு கோயில் என கிறித்துவ மதத்தின் அனைத்து விழாக்களும் இந்து மத விழாக்களுடன் ஒத்த தன்மையுடன் இருப்பதைக் காண முடியும். மேலும், கிறித்துவ விழாக்களின் நடைமுறை கடலோர மீனவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையதாக இருப்பதை நாம் உணர முடியும். ஆனால், இன்று, இந்து மதத்திலிருக்கும் தாழ்த்தப்பட்டோர்கள் எந்த அளவிற்கு ஆதிக்க சாதியுணர்வால் அடக்கப்படுகிறார்களோ, அந்த நடைமுறையில் துளி அளவும் குறையாமல் கிறித்துவ மதத்திலும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கிறித்துவ கிராமங்களில் இரட்டைச்சுடுகாடு, வழிபாட்டுத் தலத்தில் தீண்டாமை என சாதியக் கொடுமைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இத்தகைய சூழலில், நமது அரசியலமைப்பு சட்டமும் தலித் கிறித்துவ மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. நமது, அரசியலமைப்பின்படி சாதிய மனநிலை கொண்ட (வெள்ளாளர், உடையார் உட்பட இடைநிலை சமூகங்கள்) கிறிஸ்த்துவ சமூகங்களும், தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களும் பிற்படுத்தப்பட்டோர் (BC) என்கிற ஒரே நேர்கோட்டில் வருகின்றனர். பெயர், வாழ்விடம், வழிபாட்டு முறை என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு இருக்கும் சாதி கிறிஸ்தவர்களும் (Caste Christians) தலித் கிறித்தவர்களும் (Dalit christians) இடஒதுக்கீடு பெறுவதில் சமமாக பாவிக்கப்படுவது மிகப்பெரிய சமூக அநீதி.

1950ம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவரின் அரசியல் சட்ட ஆணை எண்.19 இந்து அல்லாத ஏனைய தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு ஆணை பொருந்தாது என அறிவித்தது. பின்னர், 1956ல் திருத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும், 1990ல் திருத்தி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தபௌத்தர்களுக்கும் இடஒதுக்கீடு உரிமை வழங்கப்பட்டது. அதேபோல் கிறித்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்து மதத்திலுள்ள தலித் மக்களைப் போன்ற இடஒதுக்கீடு உரிமையை அளிக்க நடுவண் அரசு ஆவணம் செய்ய வேண்டும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் தலித் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமோ என்று இந்துத்துவ சக்திகள் அச்சம் கொள்கின்றன.

தலித் கிறித்தவ மக்களின் உரிமைக்காக இதுவரை கிறித்துவ வன்னியரோ, நாடாரோ, இடைநிலை சமூகத்தை சேர்ந்த திருச்சபைகளோ, பாதிரியாரோ போராட்டம் நடத்தவில்லை. ஏனென்றால் கிறித்தவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும் என்பதைவிட தங்கள் சாதிய ஆதிக்கம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதே அவர்களது நோக்கம். எனவே, கிறித்தவம் இந்தியாவில் தனி மதமாக இல்லை. சாதிய மனநிலை கொண்ட இன்னொரு இந்து மதம் என்பது நிருபணமாகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி சமீபகாலமாக தாழ்த்தப்பட்ட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சூலை 28, 2011 அன்று இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சிறுபான்மை மற்றும் தலித் அமைப்புகளின் செயல்பாடுகளை மறைத்து வரும் ஊடகங்கள் இந்நிகழ்வையும் வழமைபோல் வெளிக்கொணரவில்லை. ஆகவே, இந்தியாவில் கிறித்துவம் இந்து கருத்தியலுக்கு மாற்று மதமல்ல என்கிற நடைமுறை உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசுநாதரை கும்பிடும் இந்துக்களாக மாற்றப்பட்ட தலித் மக்களுக்கு, அய்யனாரையும், இசக்கியம்மனையும் கும்பிடும் இந்து தலித்துக்களை போலவே, பட்டியல் சாதியினருக்கான (SC) இடஒதுக்கீடு உரிமையினை வழங்க வேண்டும்.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

12 comments

12
ஆறுமுகம்
ஒரு மதம் விரிவாகும் போது அதில் பல கிளைகள் முரண்பர்டு கருத்து வேறுபாடுகளால் ஏற்படுவது அணைத்து மதங்களுக்கும் பொறுந்தும். இஸ்லாம் மார்க்கத்தி லிருந்து பஹாய் என்ற மதம் தோன்றியது நினைவு கூறத்தக்கது. (இரானில் இம்மதத்தை சேர்ந்தவர்கள் குழுவாக கொல்லப்பட்டனர்) சீக்கிய மதம் இஸ்லாம் மதத்தை எதிர்த்துதான் உருவானது. இந்தியாவிலும் இஸ்லாமில் பல பிரிவுகள் உள்ளன. அவை இம்மதத்தில் சாதிய பிரிவுகள் எந்த பன்புகளை கொண்டுள்ளவோ அதே பன்புகளைத்தான கொண்டுள்ளன. கிருஸ்தவத்தில் தங்கள் மதத்தில் சாதி கிடையாது என்று கூறிதான தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாற்றப்ப்ட்டனர். இந்நிறுவன ( ஏறக்குறை அணைத்து சிறுபான்மை) பணிகளில் 99% கிருஸ்தவர்கள் மட்டுமே பணி அமரத்தப்படுகின்றனர். இது ஒரு ரகசிய இடஒதுக்கீடு. சர்ச்சுகளில் சாதிகளுக்காக தடுப்பு சுவரே தென் மாவட்டங்களில் உள்ளது. சலுகைளுக் காக தாழ்த்தப்பட்டவர்களை காட்டிலும் உயர் சாதியினரே அதிகம் கிருஸ்தவர்கள் ஆயினர். காயல்படடினம் இஸ்லா மியர்களுக்கும் அருகிலுள்ள பிற முஸ்லீம் களுக்கும் திருமண பந்தம் கிடையாது காரணம் அவர்கள் உயர் சாதியி லிருந்து மதம் மாறியவர்கள்.
Stephen Durairaj
முழு கீற்று தளமுமே இஸ்லாமிய பிரச்சார தளமாக ஆகிவருகிறது என்பதற்கு இந்த கட்டுரையும் ஒரு உதாரணம்
//4) பார்ப்பனியத்திற்கு எதிரான நடவடிக்கைகளும், வழிபாட்டு முறைகளும் கொண்ட இசுலாம்.//
மற்ற மதங்கள் எல்லாம் பார்ப்பன கூறுகளுடன் இருக்கின்றன என்றும் இஸ்லாம் மட்டுமே பார்ப்பனியத்துக்கு எதிரான கூறுகளுடன் இந்தியாவில் இருக்கிறது என்று சுட்டும் இவர் செய்தி பத்திரிக்கைகளே படிப்பதில்லை போலிருக்கிறது. அல்லது படித்தாலும் சும்மா அடிச்சி விடும் வேலையை தொடர்ந்து செய்தால் நன்றாக ஏமாறுவார்கள் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. பார்ப்பனிய கூறுகள் என்ன என்ன என்பதையும் அவர் கூறி அவை எப்படி இஸ்லாத்தில் இல்லை என்பதையும் கூறியிருக்கலாம். இஸ்லாமில் ஷியா, சுன்னி, அஹ்மதியா என்று ஆயிரம் மார்க்கங்கள் இருக்கின்றன. அதிலும் சுன்னி முஸ்லீம்களுக்குள்ளேயே ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத்துக்கும் சுன்னத் வல்ஜமாத்துக்கும் இடையேயான விவாதத்தில் இருவருமே தங்களது பிரிவை சேர்ந்தவர்கள் எதிர் பிரிவை சேர்ந்தவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று அறிவித்தார்கள். வீடியோவிலேயே இதனை பார்க்கலாம். இபப்டித்தான் இருக்கிறது. ஷியா பிரிவிலும் ஆயிரத்தெட்டு பிரிவுகள். பதின்மர் பிரிவு, இறுதி இமாம் பிரிவு என்று ஆயிரத்தெட்டு. இந்து தலைவர்களாவது ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்வதை எதிர்ப்பதில்லை. ஆனால், இந்த முஸ்லீம் தலைவர்கள் பகிரங்கமாகவே சியா சுன்னியை திருமணம் செய்யக்கூடாது, சுன்னி ஷியாவை திருமணம் செய்யக்கூடாது, சுன்னத் வல்ஜமாத்தை திருமணம் செய்யக்கூடாது என்று அறிவிப்பதை பார்க்கலாம். அதுவாது கொள்கை பிரிவு என்று சொல்லலாம். அரபியாவிலேயே மேல்ஜாதி கீழ்ஜாதியை திருமணம் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அப்படி திருமணம் செய்தால், கட்டாய விவாகரத்து. அரபு நியூஸில் வந்த செய்தி. அல்திமானி என்று தமிழில் தேடினாலே இந்த செய்தி தெரியும். தமிழ்நாட்டிலும் அதனையே வைத்துகொள்கிறார்கள். மரைக்காயர் கீழ்ஜாதி நாசுவ முஸ்லீமை திருமணம் செய்வதில்லை. மரைக்காயர் கீழ்ஜாதி பட்டாணி மேல்ஜாதி என்று திருமணம் செய்வதில்லை. சையது, மேல் மேல் ஜாதி என்று மற்றவர்களை திருமணம் செய்வதில்லை. இதுவெல்லாம் ஏதோ இந்தியாவுக்குள் வந்தததால் இந்துக்களிடமிருந்து ஒட்டிகொண்டுவிட்டது என்று உட்டாலக்கடி அடிப்பார்கள். அது கிடையாது. சவுதி மன்னரின் ஒரு மகள் கீழ்ஜாதி மனிதன் ஒருவனை திருமணம் செய்ததற்காக இருவரது தலையையும் கொய்தார்கள். நம் ஊர் முஸ்லீம்கள் அதனை பற்றி பேசவே மாட்டார்கள். இதற்கு குரானிடமிருந்து அங்கீகாரம் வேறு வாங்கிகொள்வார்கள். அதிலே நானே மேல்ஜாதிகளையும் நானே கீழ்ஜாதிகளையும் உருவாக்கினேன் என்று அல்லா சொல்கிறாராம். அதே போல குரேஷி குலத்தினரே காலிபா ஆக வேண்டும் என்றும் முகம்மது சொல்கிறாராம். தமிழ்நாட்டில் சாதி எதிர்ப்பு பேசுகிறார்கள் என்பதால் இங்கெஇஸ்லாம் சாதிக்கு எதிரானது என்று கோஷம் போடுவார்கள். ஆனால் வடக்கே எல்லாம் அஹ்மது பட்டேல், முகம்மது தாகூர், ஆஸிப் அலி ஜர்தாரி என்று ஜாதிபெயர்களை பகிரங்கமாக வைத்துகொள்வார்கள். இங்கே கூட முஸ்லீம்கள் ராவுத்தர் மரைக்காயர் என்று சாதிபெயர்களை வைத்துகொள்கிறார்கள். எதாவது ஒரு முஸ்லீம் ராவுத்தர் மரைக்காயர் என்று வைத்துகொள்ளாமல் இருந்தால் கீழ்ஜாதி என்று ராவுத்தர் மரைக்காயர்களே தள்ளி வைப்பார்கள். இதுதான் நடைமுறை. அப்படி இருக்கும்போது கிறிஸ்துவத்தை குறை சொல்ல ரொம்பவே மெனக்கெடுகிறார் இவர். மற்றவர்கள் கண்ணில் இருக்கும் தூசியை பார்க்கும் முன்னால் இவர்கள் கண்ணில் இருக்கும் உத்தரத்தை பார்க்க வேண்டும்,.
குத்புதீன் மரைக்காயர்
ஸ்டீபன் அவர்களே, எங்கள் கண்ணில் உத்திரம் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். எங்கள் கண்ணில் உத்திரம் இல்லை. ஆனால், இஸ்லாமிய தலைவர்கள் அப்படி இஸ்லாமில் ஜாதி இல்லை என்று நடிக்கிறார்கள் என்பதை ஒப்புகொள்கிறேன். இஸ்லாம் ஜாதிக்கு எதிரானது அல்ல. ஆண்களின் ஜாதி எப்போதுமே போகாது. பெண்கள் எந்த ஆணை திருமணம் செய்கிறாரோ அந்த ஜாதிக்கு போவார்கள் என்பது நபிகள் நாயகத்தின் (ஸல்) வழிகாட்டுதல். குரேய்ஷி, அன்சாரி போன்றோர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலிருந்து வருகிறார்கள். குரேய்ஷி அன்சாரி போன்ற குலங்கள் இன்னும் இருக்கின்றன. குரேய்ஷி குலத்தினர் அன்சாரி பெண்ணை மணக்கலாம். அப்போது அந்த பெண் குரேய்ஷி குலத்தினராக ஆவார். இந்த குலங்கள் இப்போதும் இருக்கின்றன. அவை மறைந்துவிடவில்லை. ஆகவே இஸ்லாமில் சாதி இல்லை என்று சொல்வது இஸ்லாமுக்கு மாறானது. கீழ்ஜாதி பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் கீழ்ஜாதி ஆணை மேல் ஜாதி பெண் திருமணம் செய்யலாகாது என்பதே வரைமுறை. இது நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறது. ” உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்;49:13 ” என்று அல்லாஹ் அல்குரானில் தானே ஜாதிகளையும் கிளைகளையும் கோத்திரங்களையும் உருவாக்கியதாக கூறுகிறான். இந்த உலகத்திலேயே அல்லாதான் ஒருவரை மேலாகவும் மற்ற்வர்களை கீழாகவும் ஆக்குகிறான் “17:21. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும்.” மறுமையிலும் மேல் கீழ் என்றுதான் தொடரும். முஸ்லீம்களும் காபிர்களும் சமமாக மாட்டார்கள். அடிமைகளும் எஜமானர்களும் சமமாக மாட்டார்கள் என்றும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். அல்லாஹ் உருவாக்கியிருப்பதை மாற்றவோ அல்லது தவறு என்று கூறவோ ஒரு முஸ்லீமுக்கும் அதிகாரம் கிடையாது. தமிழ்நாட்டு முஸ்லீம் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல தலைவர்கள் இப்படிப்பட்ட மோசமான தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்.
basheer
inakkuluvirkum saathikkum verubaadu theriamal eluthappatta ethirvinaigal. quran vasana vilakkankalaiyum thirithum thavarahavum merkol kaattiyullanar.kula ina vithiyasangal irunthapodhilum avai oru pothum theendamaiyulum thani idukaattilum kondu serkkavillai. ayya arumugam avargalae! naanum kayalpattinathukaaranthaan. mudhalil engaloor varalarai patithu theriu munnar avasaramaga ethirvinai aatri yulleergal.kayalpattinathin tharpothaya makkal thohai enbadhu pazhayakayal,nellai pettailirundhum kudiyeriya nadar,sc,idayar,nayaackar saathi sananglae. idhu eppadi uyar saathi mana vilkkalaagum?
alaudeen
மனிதர்களே நிச்சயமாக உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்தே படைத்தோம் நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு பின்னர் உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கிநோம் ஆகவே உங்களில் எவர் பயபக்தயுடயவராக இருக்கிறாரோ அவர்தாம் அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவர் நிச்சயமாகஅல்லாஹ் நன்கறிபவன் . யாவற்றையும் (சூழ்ந்து) தெரிந்தவன் அல்குரான் 49: 13 நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்குரான் 49.10
இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது இறைவனின் அருட்கொடை (எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச் சிலரைவிட (இம்மையில்) இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும் மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரிது, மேன்மையிலும் மிகப் பெரிதாகும். அல்குரான் 17:20 ,21 இவ்வுலகில் அல்லா ஒருவருக்கு நல்ல செல்வதை கொடுத்து மேன்மை படுத்தி இருந்தாலும் மறுமை வாழ்வு இதைவிட பெரியது . அது பயபக்க்தி உடையவர்களுக்கு தான் கிடைக்கும் என்பதுதான் இஸ்லாம் . இதில் சாதியும் இல்லை கோத்திரங்களும் இல்லை கிளைகளும் கோத்திரங்களும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டுத்தான் என்று வருகிறதே தவிர உயர்வு தாழ்வு சொல்லப்படவில்லை . இஸ்லாத்தின் இப்போது இருப்பதாக சொல்கிற இந்த பிரிவை சேர்ந்தவர்கள் ஆனாலும் மற்ற பிரிவை பின்பற்றலாம் . இன்று சுன்னதவ்வல் ஜாமத்தை பின்பற்றுபவர்கள் நாளை தவ்கீத் ஜாமத்தை பின்பற்றலாம் இன்று தவ்கீத் ஜாமத்தை பின்பற்றுபவர்கள் நாளை சுன்னத்துல் அவ்வல் ஜாமத்தை பின்பற்றலாம் . யாரும் நான் பிறப்பால் உயர்ந்தவன் நீ பிறப்பால் தாழ்ந்தவன் என்று சொல்வதில்லை . மரக்காயர் ராவுத்தர் எல்லாம் இந்துகளிடம் இருந்ந்து வந்ததுதான் . முஸ்லிம் சாதிகலவரம் எங்கயாவது நடந்ததுண்டா ? அரபு நாடுகளில் ஒருவர் உயர்ந்த பதவியல் இருந்தாலும் மற்றவர்களுடன் சலாம் சொல்லி கைகொடுப்பதை பார்க்கலாம் . உள்ளத்தில் இருந்ந்து சாதியை எடுக்க இஸ்லாமால் மட்டும்தான் முடியும் . இஸ்லாமானால் ஆனால்தான் முடியும் , அல்லாஹுக்கே எல்லா புகழும் .
ஜபருல்லா ராவுத்தர்
அல்லாவுதீன், மரைக்காயர் ராவுத்தர்கள் பற்றிய மிகக்குறைந்த அறிவு உடையவர்கள் கூட சொல்லாத பொய், மரைக்காயர் ராவுத்தர்கள் இந்துக்களிலிருந்து வந்தவர்கள் என்னும் பொய். வல்லபாய் பட்டேல் என்ற ஒரு இந்து இருந்தால், அஹ்மது பட்டேல் என்ற முஸ்லீம் உண்டு. ஜெய்ப்பால் ரெட்டி என்ற இந்து இருந்தால், ராஜசேகர் ரெட்டி என்ற கிறிஸ்துவர் முகம்மது ரெட்டி என்ற முஸ்லீம் உண்டு. ராவுத்தர் மரைக்காயர் ஆகியோரில் இந்துக்கள் உண்டா? ஜபருல்லா ராவுத்தர் உண்டு, கணேசன் ராவுத்தர் உண்டா? ராவுத்தர் மரைக்காயர் லெப்பைகள் ஆகியோர் தமிழர்களோ இந்துக்களோ அல்ல. மதம் மாறியவர்கள் அவரவர் ஜாதிப்பெயரில்தான் அழைக்கப்பட வேண்டும். இஸ்லாம் ஜாதிக்கு எதிரானது அல்ல. ஜாதி குலம் கோத்திரம் ஆகியவை அல்லாவாலேயே உருவாக்கப்பட்டது. இங்குஇஸ்லாமுக்கு மதம் மாறியவர்கள் ராவுத்தர்களாகவும் மரைக்காயர்களாகவும் பெயர் ஜாதி மாற்றிக்கொள்வதை எதிர்க்கிறோம். இங்கே இருக்கும் முஸ்லீம்கள் அவரவர் சொந்த ஜாதிபெயரிலேயே போட்டுகொள்ளட்டும் நாங்கள் எதிர்க்கவில்லை. சோனியா காந்தியின் செயலாளர் அஹமது பட்டேல் போல, இங்கே இருக்கும் மதம் மாறிய பெரியார்தாசன் என்ற அப்துல்லா மரைக்காயராக முடியாது. அப்துல்லாஹ் முதலியார் என்று வேண்டுமானல் வைத்துகொள்ளட்டும். நாங்கள் எதிர்க்கவில்லை. எங்கள் குலப்பெயரை அவதூறு செய்வதை எதிர்க்கிறோம். அவ்வளவுதான்.
ஆறுமுகம்
basheerஅவர்களுக்கு வணக்கம்! தங்கள் பகுதி வரலாற்றை பாளை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி வரலாற்று துறையில் தெரிந்து கொள்க. அல்லது இக்கல்லூரி மோலான்மை அமைப்பில் உள்ள நிலையை அறிக. இல்லையேல் நெல்லை பேட்டையை குறிப்பிட்ட நீங்கள் மேலப்பாளையத்தில் அதிகம் யார் உள்ளார்கள் என்பதையும் அவர்கள் உணவு ப்பழகத்ததையும் உங்கள் உணவுப்பழக்கத்தையும் ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்க! நான் வரலாறு அறிந்தே எழுதினேன். இந்தியாவில் மக்கள் பாகுபாடு சாதி என்ற பெயரில் அறியப்படுகிறது ஆப்பிரிக்க நாடுகளில் இதற்க்கு ரேஸ் என்று பெயர். இப்போது தனிநாடான சூடான் ஏன் அப்படி மாறியது என்பதை அறிய முற்படுங்கள்.
இளம் மாறன்
கட்டுரையாளர் ஜீவசாகப்தன் ஒரு அறுமையான மீள் ஆய்வினை செய்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்.

சாதிய வண்மங்களுக்கு மத்தியில் கிறுஸ்துவத்தை இந்த நாட்டில் மிகவும் சிரத்தையுடன் தான் பரப்பபட்டது என்ற உண்மையை குறிப்பிட்டுள்ளார். பிற்பாடு கிருஷ்துவம் சாதிய சேரில் சிக்கி கொண்ட உண்மையையும் அதற்கான காரணத்தையும் மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். ஆனால் இங்கு ஏதோ கட்டுரையாளர் கிருஷ்துவத்திற்கு எதிரானவர் என்பது போன்ற மாயை ஏற்படுத்த நினைக்கும் கிருஷ்துவ,இஸ்லாமிய புனைப்பெயர் தாங்கிகளான “ ஆர்.எஸ்.எஸ் “ இந்துத்துவாதுகள் உண்மையில் இந்துமதத்தின் சாதிய படி நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியுடன் மறுப்புரை எழுதியுள்ளார்கள். அது அவர்கள் இஸ்லாத்தின் மீது காட்டிய வண்மங்களிலிருந்து அது புழப்படுகிறது. மேலும் இஸ்லாமிய மார்க்கங்களில் அவர்களின் சாதியத்தை பற்றிய கேள்விகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ன் இனைய தளங்களில் உள்ளன. இஸ்லாமியர்கள் சம்பந்தபட்ட கருத்துக்களை எப்படி எல்லாம் குழப்பி கேள்விகளை கேட்பது என்பது தான் அது. கருத்தாக்கத்தையும், வாழ்வியல் நடைமுறைகளின் வேறுபாடுகளையும் பிறித்து காணத்தெரியாதவர்களின் புழம்பல்கள்...அது சாதியவிடுதலை என்பது இந்தியாவில் சாத்தியமே இல்லை , எல்லா மதங்களிலும் சாதியம் என்பது இருக்கிறது என்ற பொய் கருத்தை பதிய வைக்கும் முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை. இஸ்லாமியர்களிடையே இருக்கும் வேறுபாடு என்பது தங்களின் வாழ்வியல் பூலோக அமைப்புகள் சார்ந்த வேறுபாடு தான் அன்றி அவர்களின் கொள்கைகளில் அல்ல என்பது கற்றரிந்தவர்களின் கூற்றாகும். ”மேலும் இஸ்லாத்தின் அருமை பெருமைகளை கூறுவது கட்டுரையாளரின் வேலையும் அல்ல.

“ இந்தியாவில் இஸ்லாம் மதம் பெரும்பான்மையாக பரவுவதற்கு காரணம் அது சாதி இல்லா ஒரு சன்மார்க்கமாக இருப்பது தான் காரணம். அந்த சத்திய ஒளியின் பக்கம் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் கவர்ந்து இழுக்கப்படுகிறார்கள்” --- விவேகானந்தர்.

”சாதியம் என்னும் நோய் தீர்க்க சர்வ நிவாரணி இஸ்லாம் மட்டுமே ஆகும் “ பெரியார்

40 வருட காலம் பகுத்தறிவு கொள்கைகளை பேசி பரப்புரை செய்து வந்த பெரியார் தாசன் இன்று அப்துல்லா தாசன் ஆகியுள்ளாரே அவரிடமும் இன்னும் நாள் தோறும் இஸ்லாத்தின் பால் இனைந்து கொண்டிருக்கும் அறிஞர்களிடம் கேட்க்க வேண்டிய கேள்விகள் இது.

கீற்று தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கான இனையதளமாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.
இஸ்லாம் என்ற மதத்திற்காக அல்ல இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் இஸ்லாமியர்களுக்காகவும் கீற்று செயல் பட்டு வருகிறது.

பெரியாரிய கொள்கைகளை முழுமையாக வழியுறுத்தி வரும் கீற்று இனையதளம் கூட பெரியார் இஸ்லாத்தின் மீது வைத்திருந்த பார்வைகளிருந்து வேறுபடுகின்றனர்.

கடவுள் மறுப்பாளர்களாக் தங்களை காட்டிக் கொள்ளும் நாத்திகர்கள், பெரியார் வழியுறுத்திய இஸ்லாத்தினை ஆதரிப்பதில் மட்டும் ஒருவித தயக்கமும் அந்த கருத்தாக்கத்தை தொடர்ந்து இருட்டடிப்பும் செய்வது ஏன்.

சாதிய விடுதலைக்கு ஏன் பெரியார் வழியுறுத்திய இஸ்லாத்தினை முன் மொழிவது இல்லை???

“ இல்லை ,இல்லை கடவுள் இல்லவே இல்லை ”என்று சொன்ன பெரியார் அவர்கள்
இல்லை ,இல்லை பல கடவுள்கள் இல்லை இறைவன் ஒருவனை தவிற என்ற இஸ்லாத்தின் முற்பகுதியை தான் அவர் வழியுறுத்தியுள்ளார்.

மனிதர்கள் யாவரும் சமம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் இல்லை என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை தத்துவம்.
தேவாதி தேவன்
இந்துகளுக்கு இதுதான் கடவுள் என்று யாருமே சொன்னதில்லை. அவர்கள் ஏசுவை ஏற்றுக் கொண்டால், கிறிஸ்துவராக மாற வேண்டும் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பல இந்துகளுக்கு ஏசு பிடித்தமான தெய்வம், அதுபோல தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களையும் அவர்கள் வழிபட விரும்புகிறார்கள். இதற்கு இந்து மதம் எதிர்பு தெரிவிக்க வேண்டியதில்லை. யாருக்கும் அதற்கான உரிமை இல்லை. இந்துகள் என்ற பெயரில் இருக்கும் பலருக்கும் இதுதான் இந்துமதம் என்று தெரியாது. அவர்கள் விருப்பம் கொண்ட அனைத்தையும் வழிபடுகிறார்கள். கடை பிடிக்கின்றார்கள். அல்லாவினை கும்பிடும் இந்துகளை நீங்கள் பார்த்தால் அதன் பிற்கு பேசமாட்டீர்கள். ஆட்டோகளில், நிறுவனங்களில் ஏசு, பிள்ளையார், அல்லா போட்டோ வைத்து பூவைத்து வணங்கும் சராசரி மனிதனை மதத்தின் பெயரால் கலங்கம் செய்யதீர்கள்.
பகின்சூப்
// ஆரம்பகாலத்தில், கிறிஸ்த்துவ பாதிரிமார்கள் தங்களது உயிருக்குப் பயந்து உயர்சாதி அடையாளங்களுடன் மதப்பிரச்சாரத்தை செய்து வந்தார்கள். மீடையர், றில்ங்பேஐயர் போன்று பல பிரெஞ்சு பாதிரியார்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் பார்ப்பன அடையாளத்தை வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். //

கட்டுரை எழுதியவரின் ஆராய்ச்சி மிகவும் குறைவு.

ஆயர் என்ற சொல் ரெவரண்ட் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு ப்பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. ஆயர் என்பது திரிந்து ஐயர் என்று ஆனது. கோவில் குருக்களை ஐயர் என்று அழைப்பது போல, சர்ச் பாதிரியார்களை ஐயர் என்று அழைப்பது சரியானது, மரியாதைக்குறியது என்று நினைத்ததால் மீடையர், றில்ங்தோபேஐயர் என்று கூற ஆரம்பித்தனர். இன்றும் சி எஸ் ஐ சபைகளிளில் ரெவரண்டுகளை ஐயர் என்று அழைக்கும் மரபே உள்ளது, மற்றபடி பெயருக்குப் பின்னால் பார்ப்பன அடையாளத்தை வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார்கள் எந்தெல்லாம் சும்மா மனம் போனபோக்கில் எழுத முயற்சிபது தான்.
ரூபன். J G
உடன்பிறப்புகளுக்கு வணக்கம்.
கீதையில் கண்ணன் சொல்கிறான்
நான்கு ஜாதிகளையும் நான் படைத்
தென் என்று.
குர்ஆனில் அன்லா சொல்கிறான்
உங்களை குலங்களாகவும், கோத்திரங்
களாகவும் படைத்தேன் என்று.
விவிலியத்தில் எங்கும் தான் ஜாதியை
படைத்ததாக யாவே கடவுள் சொல்ல
வில்லை.
ஆணவம் கொண்டவன் இறைஎதிரி
எனவும்,
அடிபட்டவன், உதைபட்டவன், நொறுக்கப்
பட்டவன். தாழ்த்தப்பட்டவன், தண்டனை
பெற்றவன், பாவப்பட்டவன், ஆதரவற்றவன்
போன்றோர் இறைவனின் அன்புக்கு உரியோர்
என்பதே கிருத்துவம் காட்டும் பாதை.
ஆனால் பணத்திமிர் பிடித்தவனை இறைவன்
வெறுக்கிறார். அதுபோலவே ஜாதிவெறி
பிடித்தவனையும் இறைவன் வெறுக்கிறார்.
கிருஸ்துவ மதத்தில் ஜாதி இல்லை ஆனால்
ஜாதிவெறியன் இருப்பான் .
அவன் கிருஸ்தவன் என்று சொல்லிக்கொள்
ளலாமே தவிர அவனை இறைவன் ஏற்க
மாட்டார்.
கிருஸ்தவ மார்கத்துக்கு வர பாவம் மட்டுமே
தடையாக இருக்கும். ஜாதி போன்றவை தடை
யாக இருக்காது.என்பதே உண்மை.
ஜாதி வெறியும் பெரும்பாவம. இவர்கள்
மதத்துக்கு உள்ளே வரமுடியும் ஆனால்
இறைவனை நெருங்க முடியாது என்பதே
என் நம்பிக்கை.
ஜோசப் கிரகரி ரூபன்.
உள்ளே வரலாம்
நடராஜன்
சாதியில்லை ஏற்றத் தாழ்வு தவறு தவறு என்று சொல்லிக் கொண்டே அடித்துக் கொள்ளும் கிறுமிகள்....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.