இந்தியா 1947இல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை. இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.

'இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும்’ என்பதும்

'தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும்’ என்பதும்

இந்திய இறையாண்மை கொடுத்துள்ள உரிமையாகும். இந்த நிலையில் ''தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆள வேண்டும்” என்னும் கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறவர்கள் தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத, தமிழர்க்கு எதிரான அந்நியர்கள் ஆவர்.

இந்தியாவை வெள்ளையர் ஆளுவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ் நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.

இந்தியா விடுதலையடைந்தவுடன் வெள்ளையராகிய வெளிநாட்டினரை இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டோம். ஆனால், தமிழ் நாட்டின் மீது படை எடுத்து வந்து தமிழ் இனத்தை அடக்கி நசுக்கி ஆண்ட தமிழரல்லாத அந்நியர் வெளியேற்றப்படவில்லை. இதனால் தமிழரல்லாத அந்நியர் தமிழ் நாட்டை ஆளும் நிலை உருவாக்கப்பட்டது. மேலும், தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று கோருவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்த அந்நியர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இந்தியாவின் மருமகளாகிய சோனியாகாந்தி இந்தியாவை ஆள முற்பட்டபொழுது, வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆளக் கூடாது; இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தபொழுது, சோனியாகாந்தி கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டு, ஆட்சித் தலைமைக்கு ஓர் இந்தியருக்கு இடம் கொடுத்தார். அதைப் போன்று, தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாதார் தமிழரை ஆள விரும்பாமல், தமிழரை ஆட்சியில் அமர்த்திவிட்டு, கட்சிக்குத் தலைமை தாங்கலாம்.

மேலும், இந்தியா பல மொழி பேசும் மாநிலங்களாக இருக்கின்ற காரணத்தால், மற்ற மாநிலங்களில், தமிழர் அமைச்சராக்கப்பட்டிருந்தால், அந்த மாநிலத்தவர் இங்கும், அங்குள்ள எண்ணிக்கைக்கேற்ப அமைச்சராக்கப்படலாம்.

அந்நியர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற காரணத்தால் அழிந்து கொண்டிருக்கும்

தமிழ் இனம்-தமிழ் மொழி-தமிழர் பண்பாடு-தமிழர் சமயம்

அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்தக் காலத்தில் எழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

'இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும்'

என்பதும் அதைப் போன்று

'தமிழ் நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்’

என்பதும்

நியாயமானதும் இந்திய இறையாண்மைக்கு ஏற்றதும் ஆகும்.

இதைக் குறை கூறுவோர் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியரும் தமிழ் இனப் பகைவருமே ஆவர். இதனால் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியர்களிடமிருந்து தமிழ் நாட்டை விடுவிக்க வேண்டிய பிறவிக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தமிழர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இது இந்திய இறையாண்மை தமிழ் இன மக்களுக்குக் கொடுத்துள்ள உரிமையாகும்.

-அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு

தொடர்புக்கு,

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் - ஒருங்கிணைப்பாளர்

அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு, 278, கொன்னூர் நெடுஞ்சாலை,

அயன்புரம், சென்னை- 600 023. ( 04426743842; 9840003842 ; 9444817394)

Comments

10 comments

10
durai ilamurugu
சோனியா ஆளவிரும்பவில்லை அதனால் ஆளவில்லை" இன்று உண்மையில் இந்தியாவை மன்மோகன் ஆளுகிறார் என்று எந்த தெளிவுள்ள மனிதனும் நினைக்க மாட்டான் 2 இந்தியாவின் அரசியல்சட்டம் இந்தியக் குடிமகன்( தமிழர் அல்லது தமிழர் தமிழர் அல்லதாவர் ) தமிழ் நாடு உள்பட எந்த மாநிலத்திலும் வசிக்க தொழில் செய்ய உரிமை அளித்துள்ளது . வசிக்க உரிமை என்றால் ஒட்டளீக்கவும் தேர்நதெடுக்கப்படவும் உரிமைஉண்டு என்பதாகும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபர் ஆளுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது . உங்களால் தனித்தமிழ் நாடு வேண்டும் என்று போராட துணீவு இல்லாவிட்டால் சும்மா இருக்கவும் குட்டையைக்குழப்பவேண்டாம்
1. சோனியா பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் அதற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாகப் பிரதமர் ஆகாமல் கட்சித்தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். இதைப் போல, தமிழர் அல்லாதவர் தலைமைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தமிழ் இனத்தின் உணர்வுகளை அவர் மதிக்கிறவராயிருந்தால் கட்சிக்குத் தலைமை தாங்கி அவருடைய கட்சியில் இருந்து ஆட்சிக்குத் தலைவராக ஒரு தமிழரை அமர்த்த வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை ஆகும். இதை எதிர்க்கும் உணர்வு தமிழ் இனத்தில் பிறந்தவர்களுக்கு வராது.
2. தமிழரல்லாத அந்நியர் தமிழ்நாட்டில் வாழ உரிமை உண்டு. ஆனால் தமிழர்களை அடக்கி ஆள முயலக்கூடாது. இது மொழிவழிமாநிலம் உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிரானது ஆகும்.
3. தனித்தமிழ்நாடு கேளுங்கள் என்று தூண்டுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானதும் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சியான முயற்சியுமே ஆகும். இது தமிழினத்திற்கு எதிரான அந்நியர்களின் சூழ்ச்சியே என்பதில் ஐயமில்லை.
ambalavanan
திரு தெய்வநாயகம் அவர்களே,
தமிழால் முடியாதது ஒன்றும் இல்லை , தமிழரால் முடியாதது ஒன்றும் இல்லை.
உலகுக்கே வழி காட்டும் திறன் நம்மிட்ம் உண்டு.பிறரை நம்பிக் கெடுபவர்கள் நாம்,
நம் மீது நாமே நம்பிக்கைக் கொள்வோம் , தமிழருக்கு என்று ஒரு நாடு நிச்சயம் உருவாகும்.
அந்த தமிழ் நாடு மற்றவற்றிற்கு ஓர் உதாரணமாய் விளங்கும். அது மனித்ரால்
ஆளப்படும், உலகிற்கு மனித நேயத்தைப் புரிய வைக்கும்.
durai ilamurugu
கட்சிக்கு தலமை தாங்கலாம் ஆனால் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற புதிய கருத்தைக் கொண்டுள்ள முனைவரை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியவில்லை
தனித்தமிழ் நாடுகோருபவர்கள் உண்மையான தமிழர்கள் இல்லையாம் தஞ்சைத் தமிழ் தேசிய வாதிகள் கவனிக்கவும் இதற்கு அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் அம்பலவணின் கருத்துக்கு முனைவரின் பதில் என்ன்வோ? அவர் தமிழ் நாடு ஓன்று உருவாகும் என்கீறார்
தனித்தமிழ்நாடு கேட்பது என்பது வேறு! அது பிரிவினைவாதம் சார்ந்த நிலையில் அமையும். இந்திய இறையாண்மைக்கு உட்பட்டுத் தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று சொல்வது வேறு! இது பிரிவினை இல்லாமல் அமையக்கூடியது. 'தனித்தமிழ்நாடு கேட்பவர்கள் தமிழர்கள் இல்லை' என்று நாங்கள் சொல்வதாகக் கூறுவது தமிழர்களைப் பிரித்து மோதவிடும் அந்நியரின் சூழ்ச்சியாகும். இச்சூழ்ச்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இறைகற்பனைஇலான்
அய்யா, தமிழர் என்றால் புரிகிறது,தமிழ்சமயமெண்றால் யாது? இறை ந்ம்பிக்கையுள்ளோர் மட்டுமே தமிழரா?
ஐயா,
தமிழ் சமயம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்; தமிழர் சமயம் என்று திருத்திக்கொள்ளுங்கள். உலகில் இறை நம்பிக்கை உள்ள சமயங்களும் உண்டு; இறை நம்பிக்கை இல்லாத சமயங்களும் உண்டு. சமணம், ஹீனயான பெளத்தம் ஆகிய இரண்டு சமயங்களும் கடவுள் நம்பிக்கை இல்லாத சமயங்கள். மொத்த உலக சமயங்களின் கருத்துகளை ஆராய்ந்து தெளிவுபடுத்துவதே தமிழர் சமயம் ஆகும். தமிழருடைய ஆன்மீகச் சிந்தனையில் இருந்தே உலக சமயங்கள் அனைத்தும் வளர்ந்துள்ளன. தமிழர் சமயம் என்பது உலக சமயங்களின் பொதுப்பெயர்.
durai ilamurugu
சமணம் கடவுளை மறுக்கிறது என்ற புதிய செய்தியை உலகுகு அளித்த முனைவர் வாழிய அவர் எதில் முனைவர் என்று தெரியவில்லை மயிலை சீனி வெங்கிடசாமியின் சமணமும் தமிழும் நூலைபடித்துப் பார்க்கவும் அல்லது சமண சமையத்தைசேர்ந்த்வர்களிடம் கேட்டுப்பார்க்கவும்
துரை இளமுருகு,
கடவுள் கொள்கை என்றால் என்ன என்று தெரியாத நிலையில் நீங்கள் சமணத்தைப் பற்றி எழுதுகின்றீர்கள். சமணம் கூறும் அருகன் என்பது உலகைப் படைத்த கடவுளைக் குறிப்பது அன்று. அருக நிலை என்பது கடவுளோடு சேர்ந்த நிலையும் அன்று. சமண அறிஞர்களிடம் கடவுள் கொள்கையைப் பற்றிச் சரியாகக் கேட்டுவிட்டு பின்னர் எங்களுடன் உரையாடலாம். அத்வைதம், விசிஷ்டாதுவைதம், துவைதம், ஆகிய மூன்று கொள்கைகளும் சிற்றுயிரையும் பேருயிரையும் ஆராயும் கொள்கைகளேயன்றிக் கடவுளை அறியாத கொள்கைகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடவுளைப் பற்றி அறிவியல் வழியில் விளக்கம் கொடுப்பது பழந்தமிழ் இலக்கணமும் அத்வைதம், விசிஷ்டாதுவைதம், துவைதம், ஆகிய மூன்றையும் மறுக்கும் சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படையான சிவஞான போதமுமே ஆகும். இதைச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால் 1. சிற்றுடல் 2. பேருடல், 3. சிற்றுயிர், 4. பேருயிர், 5. சிற்றான்மா, 6. பேரான்மா, 7. ஆணவம் ஆகிய ஏழையும் பற்றிய தெளிவு வேண்டும். இந்த ஏழையும் பற்றிய தெளிவைப் புரிந்து கொள்வதற்கு, 'உலக சமயங்களை ஒன்றிணைக்கும் தமிழர் சமயமும் தமிழர் ஆன்மவியலும்' என்னும் நூலை நோக்குக.
raja
in tamilnadu legislative council they are 48 peoples those dont have Tamizh as a mother tounge,they know only to speak tamil but not to read or write.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.