முதல்ல 2500 கோடி ரூபாயும், 1500 கிலோ தங்கமும் ஊழல்னு சொல்லி கிளப்புனாங்க. சரி, அது வேற டிபார்ட்மெண்டு, நான் வேற டிபார்ட்மெண்டுன்னு சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லிட்டேன். அப்புறம் கல்மாடின்னு ஒருத்தர் 60,000 கோடி ஊழல்னு சொல்லி என்னை கலங்கடிச்சிட்டாங்க. என்னமோ அவங்க காசை திருடுன மாதிரியே எல்லாரும் கோபப்பட்டாங்க. சரி, போனாப்போகுது எதுக்கும் நடவடிக்கை எடுக்கிறேன்னு நானும் பெருந்தன்மையா சொல்லி வைச்சேன்.அப்புறம், திடீர்னு, 2ஜி ஊழல்னு சொன்னாங்க. நானும் பதறிப்போய் நம்ம சோனியாஜி, ராகுல்ஜி மேல தான் சொல்லுறாங்களோன்னு நம்பி ஊழலே நடக்கலைன்னு சொல்லிட்டேன். ஒரு லட்சத்து 76,000 கோடி சேதாரம், ஆதாரம்னு வைச்சுருக்கிறவங்க சும்மா இருப்பாங்களா.

ஒரு பத்து நாளு நாடாளுமன்றத்தில சும்மா சுத்தி சுத்தி அடிச்சாங்க. சும்மாவே ஏன் இருந்தீங்கன்னு சுப்ரீம் கோர்ட்டும் கிளம்பிருச்சு. விட்டுருவேனா நானு. எனக்கு தெரியும், ஆனா தெரியாதுன்னு சொல்லி சமாளிச்சு பார்த்தேன்.விடலியே என்னை அவங்க. சரி, இதுக்கு நடவடிக்கையெல்லாம் எடுக்க முடியாதுங்கறதால, பொறுப்பு எடுத்துக்கறேன்னு ஒரு புது பிட்ட போட்டு பார்த்தேன். இதோட விட்ருவாங்கன்னும், பாரின் போயிட்டு வந்தா சரியாய்ரும்னும் நம்பித்தான் பொறுப்பெடுத்துக்கிட்டேன். அப்புறம், 3ஜி ன்னு ஏதோ ஒன்ன சொல்லி மறுபடியும் கிளப்பிட்டாங்க.என்னடா இது நமக்கு தெரியாத இன்னொரு ஜி புதுசா இருக்கேன்னு ரொம்ப ஷாக்காயிட்டேன். அப்புறந்தேன் தெரிஞ்சது. அந்த ஜி வேற யாருமல்ல. நாந்தேன்னு.

அடுத்தவன் துறைன்னாலே அதாங்க டிபார்மெண்டு, நம்மளைத் தான் உதறுவாங்க. அது வேற என் டிபார்மெண்டா போச்சா. சும்மா பிச்சு உதறிட்டாங்க. ஒரு பிரதமர்ன்னு கூட இரக்கப்படாம சும்மா இருபது நாளு கதற கதற பிழிஞ்சுட்டாங்க. சரி என்ன செய்யலாம்னு யோசிப்போம். இப்போதைக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லி வைப்போம், அப்புறம் நம்ம தலைவி நம்மள காப்பாத்தும்னு நம்பி தெரியாதுன்னேன். வழக்கம் போல யாரும் உதவிக்கு வராததனாலே, நானே இதுக்கும் பொறுப்பு எடுத்துக்கறேன்னு வருத்தப்பட்டு சொன்னேன்.சரி இதோட முடிஞ்சிரும்னு நம்பித்தாங்க நானும் இருந்தேன்.அப்புறம், தாமஸ் தாமஸ்னு ஒருத்தரு. அவரு வண்டியிலேயே என்னை சுப்ரீம் கோர்ட் வரை கூட்டிட்டு போயிட்டாருங்க. அத நினைச்சா தான் மனசு வருத்தமா இருக்கு. அவரு ஏதோ ஊழல் பண்ணிருந்தாராம்.

அவரை எப்படி ஊழல் ஒழிப்பு ஆணையர் ஆக்கலாம்னு ஒரே பிரச்னைங்க. அய்யா நாந்தான் பிரதமர், ஆனா எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நானும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேங்க. ஆனால் என்ன சின்னப் புள்ளத்தனமா பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு ஜட்ஜய்யா கண்டிச்சிட்டாருங்க. சரி, பொறுப்பெடுத்துக்கிட்டா ஜட்ஜய்யா நம்ம மேல இரக்கப்பட்டு விட்டுருவாரு இதோட எல்லாம் முடிஞ்சிரும்னு நம்பி அதுக்கும் பொறுப்பெடுத்துகிட்டேங்க. அவரும் சரி இனி எதுன்னாலும் கரெக்டா பிளான் பண்ணி செய்யனும் கண்டிச்சு விட்டாருங்க.அப்புறந்தாங்க.விக்கிலீக்ஸ்னு கிளப்பிட்டாங்க. பிரதமர் பதவிய காப்பாத்த எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தேன்னு புதுசா என் புழப்புக்கே உலை வைக்க கிளம்பிட்டாங்க.

சரி இதுக்கும் பொறுப்பு எடுத்துக்கலாம்னா, அப்ப நீ தான் காசு கொடுத்தியான்னு மறுபடியும் இவங்க, சுப்ரீம் கோர்ட்டு எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டாங்கன்னா அதுல பல பிராப்ளம்ஸ் வருமேன்னு ஒரே கலக்கமா இருக்குங்க. கட்சியில வேற அதுக்கு இவன் சரிப்படமாட்டான்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பிருவாங்களேன்னு நினைச்சாதாங்க வவுறு கலங்குது.யார் பெத்த பிள்ளையோ, யார் தப்பு செய்தாலும் ஒடி ஒடிப்போய் ஏத்துக்கிது. இது ரொம்ப நல்ல பிள்ளைன்னு பல பேருகிட்ட அடி வாங்கி சம்பாதிச்ச பேரெல்லாம் ஸ்பாயில் ஆகிருமோன்னு பயமா இருக்குது.

Pin It