1) சூரியனைப் பார்த்து
   நாயும்  குறைக்கச் சொல்கிறது
   பால்விலையை!
 
2) அடாது செய்த கொடுமை
    படாத பாடுகிறது
    தமிழகம். 

3) அரசு
  அன்றாடம் கொல்கிறது.
  தெய்வமாய் மக்கள்
  வாக்குச்சாவடியில்
  நின்று கொல்லப் போகிறார்கள்.

4) அல்லல்பட்டு
 அழுத மக்கள் கண்ணீர்
 தொகுதிகளையும் தேய்க்கும் படை.

 5) அசைந்து தின்னும் யானை
    அசையாமல் பிசைந்தும்
    சாப்பிட முடியவில்லை
    ரேசன் அரிசி சோற்றை.

6) அரைக்குத்தரிசி
   அன்னதானமாய் திட்டங்கள்
   விடிய விடிய
   இலவச தொலைக்காட்சியில்
   தேர்தல் விளம்பரங்கள்.

7) அழிந்த கொல்லையில்
   ஆடாய் மேய்ந்து
   மொட்டையாய்
   போய்விட்டது தமிழகம்.
   ஆடு, கோழியென
   விடவாமுடியும்?

8) அறிந்தறிந்து செய்த பாவம்
   கதறியழுதாலும்
  விடுமா கமிஷன்கள்?

- ப.கவிதா குமார்

Comments

2 comments

2
Swathi
kavithaigal nanru. EN VIKATAN kavithaigalum. Vaahthukkal.
கவிதா குமார்
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுவாதி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.