ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக அரசில் சம உரிமைக்கான போராட்டமும், ஆதிக்க சாதியினரின் இருப்பைத் தக்கவைக்கும் போராட்டமும் சாதிக் கலவரங்களாகவும், சாதிச்சங்கங்களாகவும், சாதிக் கட்சிகளாகவும் உருமாறுகின்றன ஆயினும் இது ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலையல்ல; இது தமிழகத்தின் வடகிழக்கு மற்றும் தென் தமிழகத்தின் நிலைதான் இது. ஆனால் முற்றிலும் மாறுபட்ட சூழல் வடமேற்கு தமிழகமான கொங்குமண்டலம் என்று அழைக்கப்படுகின்ற ஈரோடு, நாமக்கல், கோவை, போன்ற மாவட்டங்களில் நிலவுகிறது.

சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளது போலவே இங்கும் நிலவுகிறது. பல ஊர்களில் இரட்டைக்குவளை முறையும் நீடிக்கிறது; வழிபாட்டுத்தலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையும் மறுக்கப்படுகிறது. குறிப்பாக பண்ணை அடிமை முறை இங்கு அதிகமாகவே காணப்படுகிறது. திருமண மண்டபங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாடகைக்கு விடப்படுவதில்லை ஆயினும் இங்கு பெரிய அளவில் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான கலகங்கள் ஏற்படவில்லை.

இங்கு நிலவம் சமூக சூழலை ஆய்ந்து நோக்கும்போது ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் வலுபெறாமல் போவதின் காரணமும் ஒடுக்குமுறையாளர்கள் தங்களின் இருப்பைத் தக்கவைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையற்ற சூழலையும் இங்கு நாம் காணமுடியும்.

இங்கு கிராமப்புறங்களில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் இக்கொடுமைகளிலிருந்து தப்பிக்க ஏற்ற சூழல் தொழில் வளம் மிக்க திருப்பூர், கோவை போன்ற தொழிற்சாலைகள் நிரம்பிய நகர்ப்புறங்களில் நிலவுகிறது. இதனால் படிக்கும் வாய்ப்புபெற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கிராமப்புறங்களில் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட துடிக்கும் கூலி உழைப்பாளர்களுக்கும், சாதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காத நகர்ப்புற வாழ்க்கை சிறந்த அடைக்கலமாக உள்ளது. இதன் பயனாக சாதி வன்கொடுமைகளுக்குகெதிரான போராட்ட சக்தி சிதறிப் போகின்ற காரணத்தால் மற்ற தென் மாவட்டங்களில் ஏற்பட்டது போன்ற போராட்டச் சூழல் இங்கு அண்மைக் காலம்வரை நிலவில்லை.

இந்நிலையில் மாற்றங்கள் தீவிரமடைந்து வருகின்றன. கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ளதாகக் கருதப்படும் வேளாளக்கவுண்டர்களின் ஆதிக்கமே  இப்பகுதிகளில் தொழில், அரசுப்பணி, அரசியல் ஆகிய அனைத்துத்துறைகளிலும் மேலோங்கி இருந்து வருகிறது. ஆயினும் இவ்வாதிக்க சக்திகள் தங்களது மேலாதிக்கத்தின் பிடியை மேலும் இறுக்கவும் இவ்வோட்டுப் பொறுக்கி சனநாயகத்தின் அரசியல் பொருளாதார ஆதாயங்களைப் பொறுக்கித் தின்றிடவும் ஒரு கூட்டமாக கிளம்பியுள்ளன.

தேர்தல்கால திடீர் அரசியல்வாதிகளான ஈஸ்வரன், பெஸ்ட்ராமசாமி போன்ற தரகு முதலாளிகள் புதியதாக “கொங்குநாடு முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் ஒர் அரசியல் வியாபரத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கு முதலீடுகளாக சில கோடிகளும், ஆதிக்க சாதியுணர்வும், மக்களின் மூடத்தனங்களுமே உள்ளது. இதைக்கொண்டு கூட்டத்தைக் கூட்டி சில சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றிட முடியும் என்ற கனவுடன் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இதற்குத் தோதாக ஆதிக்க சாதியுண‌ர்வைத் தூண்டி அதில் குளிர்காயும் யுக்தியைக் கையாள ஆரம்பித்து விட்டனர்.

உதாரணமாக பெங்கலூரில் உள்ள வளுபுரத்தம்மன் கோவிலில் வேளாளக்கவுண்டர்கள் கோவிலின் உள்ளே வழிபடவும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலின் வெளியே வழிபடுவதும் நடைமுறையாக இருக்கின்றது. இதைக்கூட சகிக்காத சில ஆதிக்க சாதி வெறியர்கள் கோவிலின் வெளியே வழிபாடு செய்துகொண்டிருந்த தாழ்த்த‌ப்பட்ட மக்களை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இதில் ஏற்பட்ட மோதலில் காவல் துறையினரால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஆதிக்க சாதியான வேளாளக்கவுண்டர்களுக்கு ஆதரவாக பெஸ்ட் ராமசாமி செயல்பட்டார். இதன் மூலம் ஆதிக்க சாதி சாதி நலன்களுக்காகப் போராடும் ஒர் இயக்கமாக கொங்குநாடு முன்னேற்றக்கழகத்தைக் காட்டிக்கொள்ள இப்பிரச்சனையைப் பயன்படுத்தினர்.

நம்பியூரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு திருமண மண்டபம் தர மறுத்த பிரச்சனையில் திருமண‌ மண்டபம் செட்டியார் சமூகத்திற்கு சொந்தமாக இருந்தபோதும் வேளாளக்கவுண்டர்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு தங்கள‌து ஆதிக்க சாதியுணர்வை நிரூபித்தனர். அதைத்தொடர்ந்து கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவை சார்பாக வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று போராட்டமும் நடத்தினர்.

சாதி ஒடுக்குமுறை மிகுந்துள்ள இங்கு இவ்வொடுக்குமுறையை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஒடுக்குமுறையாளர்களுக்கு பாதுகாப்புணர்வை அளிக்கும் வகையிலும் செயல்பட எத்தனிக்கும் கொங்குநாடு முன்னேற்றக் கழகம் போன்ற ஆதிக்க சாதிக்கட்சிகள் கொங்கு மண்டலப் பகுதியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லாமல் பதற்றமிக்க கலவரப்பகுதியாக மாற்றுவார்களே அல்லாமல் இவர்கள் கூறுவதுபோல் “கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்” என்பது வெறும் பிதற்றலாகவே முடியும்.

தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று அலையும் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சீட்டு வாங்கிவிடலாம் என்று எண்ணும் இவர்களுக்கு எந்தக் கூட்டணி சீட்டு கொடுத்தாலும் நிச்சயம் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பிறசாதிகளின் வாக்குகளை அக்கூட்டணி இழக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கொங்கு மண்டலப் பகுதியில் சரிவிகித பலமுள்ள திமுகவும் அதிமுகவும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு தொகுதிகள் வழங்குவதன் மூலம் புதிய அரசியல் எதிரியை உருவாக்க துணை போவ‌தாகவே அமையும். மேலும் தமது கட்சியின் வாக்காளர்களையும் நிரந்தரமாக இழக்கவும் சிதறடிக்கவும் செய்யும். வர்க்கப் பார்வையோ இன உணர்வோ சிறிதும் அற்ற இது போன்ற சாதிக்கட்சிகளை நாம் எதிர்ப்பதும் புறக்கணிப்பதும் நமது கடமையென்றே நினைக்கிறேன்.

சாதி மதங்களைக் கடந்து வர்க்கப்பார்வையுடன் இனரீதியாக ஒன்றுபட வேண்டிய தருணத்தில் நாம் உள்ளோம்.

- வணங்காமண் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

20 comments

20
கொங்கு வேல்
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டான்க. வன்னியர்க்கு ஒரு பாட்டாளி மக்கள் கட்சி, தலித்திற்கு ஒரு விடுதலை சிருத்தைகள் கட்சி இருக்கலாம். ஆனா எங்களுக்கு ஒரு கொ. மு.க. இருக்கக் கூடாதா? அவ்வளவு எரிச்சல்!! பயம்!!!
balu
athikka saathigal thodangum katchigal ellam dalithukalai odukiye thangalai valarthu kolkinraner.
அய்யன்
வன்கொடுமை சட்டம் தமிழகத்தைப் பொருத்தவரையில் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது தலித் தலைவர்களுக்கே தெரியும். பிறசாதியினரை பழிவாங்கவும், மிரட்டவுமே இச்சட்டம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு விசாரணையும் இன்றி இச்சட்டத்தின் மூலம் கைது செய்ய முடியும். தண்டிக்க முடியும். இம்முட்டாள் தனமான சட்டத்தை முதலில் ஒழுங்கபடுத்த வேண்டும். பொய் புகார் தெரிவித்தால் கடுமையான தண்டனை வழங்கும் திருத்தம் வேண்டும். இவர் கொங்கு முன்னேற்ற கட்சியை மட்டும் குறைசொல்வது அபத்தம். திமுக - தெலுங்கர், அதிமுக-தேவர்+பிராமின், பா.ம.க. வன்னியர், தே.மு.தி.க- தெலுங்கர், ம.தி.மு.க.- நாயக்கர், வி.சி.- தலித்துகள், ஐ.ஜே.கே.-உடையார். இன்னும் இன்னும்... வெளிப்படையாக தெரியாவிட்டாலும் இதுதான் தமிழக நிலை. அவனவன் அவனவன் சாதிக்கு நல்லது செய்து, அடுத்தவனுக்கு துன்பம் தராமல் இருந்தாலே போதும். நாடு முன்னேறும்.
karthick
வன்கொடுமை சட்டம் தமிழகத்தைப் பொருத்தவரையில் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது தலித் தலைவர்களுக்கே தெரியும். பிறசாதியினரை பழிவாங்கவும், மிரட்டவுமே இச்சட்டம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எந்தவொரு விசாரணையும் இன்றி இச்சட்டத்தின் மூலம் கைது செய்ய முடியும். தண்டிக்க முடியும். இம்முட்டாள் தனமான சட்டத்தை முதலில் ஒழுங்கபடுத்த வேண்டும். பொய் புகார் தெரிவித்தால் கடுமையான தண்டனை வழங்கும் திருத்தம் வேண்டும்.
veeran
van kodumai thaduppu sattatthal ithu naal varai etthanai per thandanai petru irukkergal endru veliyeda thairiyam undar yarukkavathu?
kongan
வணக்கம் வணங்காமண் அவர்களே..

கொங்கு நாடு என்பது சங்க காலத்துல இருந்தே அமைதியான நாடு.. இங்கு பல ஜாதி இருந்தாலும் அனைவரும் ஓற்றுமையாக வாழ்ந்து வருவதால் இப்பகுதிகளில் பெரியதாக ஜாதி கலவரம் நடந்தது இல்லை.. ஏன் என்றல் இங்கு அதிக தொழில் வளம் உள்ளத்தால் தான். இதற்கு முழு கரணம் கொங்கு நாட்டில் வாழும் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்தான். இவர்களை நம்பி பல லச்சகணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. இவற்றை பார்த்த அரசியல் வாதிகள் கொங்கு பகுதியில் அரசு நல திட்டங்களை தடுத்தனர். கடந்த 20 வருடதுக்கும் மேலாக எந்த ஒரு திட்டமும் இங்கு செயல்படுத்த வில்லை. இதை கேட்க தான் "கொங்குநாடு முன்னேற்றக் கழகம்" என்ற அரசியல் கட்சி துவக்கப்பட்டது. இதில் கொங்கு நாட்டில் உள்ள அனைத்து ஜாதி மக்களும் உறுப்பினராக உள்ளனர். இதை ஒத்துக்கொள்ள முடியாத சில அரசியல் வாதிகள் இது ஜாதி கட்சி என்று மக்களிடம் பொய் வதந்தி பரப்பி விடுகின்றனர். மேலும் வரும் சட்ட மன்ற தேர்தலில் கொங்கு பகுதியில் "கொங்குநாடு முன்னேற்றக் கழகம்" இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. இது 100 % உண்மை. இதை மற்ற அரசியல் வாதிகள் ஒத்துகொள்ள முடியாததால் சாதி கட்சி என்று கூறுகின்றனர்.
கொங்குதமிழன் ரமேஷ்குமார் கவுண்
கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பது சாதி அல்ல !! எங்கள் குடும்பத்தின் பெயர் !! ஒரு கோடி கொங்கு வெள்ளாள கவுண்டர்களும் எங்களது குடும்பமே !!

ஈது போல் தமிழகத்தில் எங்கள்கு வரும் சலுகைகளை வருவதில்லை ஆகவா எங்களுக்கு வரும் சலுகைகளை பெறுவதற்கும் கொங்கு நாடு மக்களுக்கு அணைத்து சலுகைகளை பெற்று தருவதற்கும் ஆரம்பிகபட்டதே
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் --
ஆகவா இந்த தவரான கட்டுரையை வெளிஇட்டவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துகொள்கேறேன் .
kongu king
கொங்கு செழித்தல் ... எங்கும் செழிக்கும் ...
நம்மல இவ்வளவு தூரம் கீழ தள்ள முயற்சி நடக்குதுன்ன நம்ம வளர்ச்சி அடையரோம்னு தா அர்த்தம் ...வன்னியர்க்கு ஒரு பாட்டாளி மக்கள் கட்சி, தலித்திற்கு ஒரு விடுதலை சிருத்தைகள் கட்சி இருக்கலாம். ஆனா எங்களுக்கு ஒரு
கொ. மு.க. இருக்கக் கூடாதா? அவ்வளவு எரிச்சல்!! பயம்!!!

கொங்கு செழித்தல் ... எங்கும் செழிக்கும் ...

கொங்கினமே உன்னை வெல்ல இனி எவராலும் முடியாது ...நமக்கு அரசியல் புதியது அல்ல ...தீரன் சின்னமலை வாரிசுகளே இனி கோட்டையில் கொங்கு கொடி பறக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வோம் ...இனி கவுண்டன் இல்லாத கட்சி ஆட்சிக்கு வர முடியாது என்னும் நிலையை உருவாக்குவோம்... மானமுள்ள கொங்கினமே வீறு கொண்டு எழு...
கடவுளை கண்டவனும் இல்லை ...கவுண்டனை வென்றவனும் இல்லை ...என்னும் நிலை வரும் ...வன்னியர்க்கு ஒரு பாட்டாளி மக்கள் கட்சி, தலித்திற்கு ஒரு விடுதலை சிருத்தைகள் கட்சி இருக்கலாம். ஆனா எங்களுக்கு ஒரு
கொ. மு.க. இருக்கக் கூடாதா? அவ்வளவு எரிச்சல்!! பயம்!!!
karthikeyan
Intha mari arivu illatha pasanga eludharadhu nala tha entha nalladum nadakala !
Tamilan
intha seithiyai kuuriya unakum oru jathi onnudu. antha jathiyaiyum antha makkalaiyum munnaetra vali theriyamal,antha jathiyel piranthomae yendru nee veekappatukkondu , nallathu seiya erukkum kongunadu munnaetra kalagathai kurai kurukirai. nee than jathi kalavarathai thoondukirai.
KATHIR
Don't add fuel to the fire &
Don't cast pearls before swines.

for You............
kongu youth
you have fear to tell in these way...
your real human being means publish your name and address.
ask government . y caste is division. caste in the country means. these are araise in normal.
i think ur ________________
ELANGO
வடக்கு -வன்னியர்க்கு ,
தெற்கு -தேவருக்கு ,
மேற்கு -கவுண்டருக்கு ,
எங்களுக்கு என்ன ?
TRRAMESH
கொ.மு.க.சாதி கட்சி அல்ல! சாதிகக பெரந்த கட்சி முட்டால் தனமான கட்டுனர.புரியுத [வனகாமன் ]
gm
வன்னியர்க்கு ஒரு பாட்டாளி மக்கள் கட்சி, தலித்திற்கு ஒரு விடுதலை சிருத்தைகள் கட்சி இருக்கலாம். ஆனா எங்களுக்கு ஒரு கொ. மு.க. இருக்கக் கூடாதா? அவ்வளவு எரிச்சல்!!
chris
சாதி வன்கொடுமை தடுப்பு ஷட்டம், இதன் படி ஒருவர் இன்னொருவருடைய ஜாதி பெயர் கோரி திட்டினார் என்ரு காவல் நிலயதில் புகார் கோரினால் சாட்ஷி இல்லாமல் கைது செஇயா முடியுமா? விலக்கம் தெவை.
manamulla gounden
What the hell...pollachi kalappatti il dalits kum gounderhalukkum nadandha prachanail..dalits ah arrest pannamal 64 gounderhalai arrest panninar..appoludhu engalukku katchi illa..namakkal mavattam solasiramani matrum sirupulampalayam ennum oorkalil kongu vellala gounderkal adhigam irukindranar..mattrum vettuvarkal kanisamaga vaalgindranar pala aandukaluku munbu andha ooril mudhaliyar kudumbam ondrai kolla thirindha vettvargalai adakki vellala gounderkal andha mudhaliyar kudimbathai kaathanar..aanalum otrayagal vellala gounderkalai adikka mudiadha vettuvarkal dalits ahi payan baduthi andha mudhliyar kudumbathil oru uirai eduthanar angu vellala gounderkal dhan oru kudumbathai kaaka sandai ittanar...dalits oh illai aranagamo illai..kongu makkalukku katchi vendum...
boopathi
வடக்கு -வன்னியர்க்கு , தெற்கு -தேவருக்கு , மேற்கு -கவுண்டருக்கு , எங்களுக்கு என்ன ?///// elango ungaluku tha government job irukudhulla adha poai paarunga..enga kooda yean modhreenga??? keetru il update panravan nalla kudumbathla porakadhavan
annadurai
பட்டா இடத்தை ஆக்கிரமித்து வெளியேறும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொன்டால் செத்துப் போன பட்டாதாரரைக் கூட்டி வா. உன் வாரிசு சான்றை காட்டு. நீ அவருக்கு வாரிசு இல்லை.இது பொய்யான சான்று.பொய்யான பத்திரம். நீ தீர்வை கட்டவில்லை.இந்த இடம் அரசுக்கு சொந்தம். இதுல தான் எஙளுக்கு இலவச வீட்டு மனை வேண்டும். இவ்வளவு தொந்தரவுக்குள்ள ஒரு சாமான்யன் அந்த சொத்தை அனுபவிக்க முடியுமா ? அவர்கள் சாதிக்காரருக்கே விற்று விட்டால்........................
இப்பொ கொலை மிரட்டல்,சாதியச் சொல்லி திட்டியது, போலி வாரிசு,போலி பத்திரம், நில மோசடி இத்தனை வழக்குகள் சொத்துக்கு சொந்தக்காரர்களாகிய 5 பெண்கள் உட்பட 12 பேர் மீது. சுவாரஸ்யமாக இருக்கிறதா ?
வன் கொடுமை சட்டம் பற்றி தெரியாத பாமர கூட்டம் தற்போது தெரிய வரும் போது அழுகையும் விம்மலும்,கண்ணீரும்,கம்பலையுமாக தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற யோசனையில் இருக்கிறது.
சாதிகள் தீதே,மனிதனில் ஏற்றத் தாழ்வுகள் கொடிதே. அனைவரும் ஆண்டவன் பிள்ளாய்கள்.மறுப்பில்லை.
நான் மேலே சொன்ன கதைக்கு என்ன தீர்வு. ஏன் அடுத்தவன் சொத்தை சாதிப் பெயரை சொல்லி அபகரிக்க வேண்டும். மக்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டத்தை காட்டி பயமுறுத்த வேண்டும். இவர்களும் இன்னாட்டுப் பிரஜைகள் தானே. யார் காப்பாற்றப் போகிறார்கள். யாரேனும் உதவி செய்யுங்கள்.

அவர்கள் சார்பில்
அண்ணா
Guest
kongu vellaler meethu vankodumai sattam thavaraga payanpaduthuvathai ethirkirom vankodumai satathai matri eluthavendum engali KONGU katchi kalai yaralum asaika mudiyathu valarthu kondathan irukum by KONGARASAN

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.