[குறிப்பு : ம.பொ.சி. தமிழன் குரல் இதழில், புனை பெயரில் எழுதிய இரு கட்டுரைகள் கீழே தரப்பட்டுள்ளன. பொதுவாக திராவிட இயக்கம் பற்றி பேச்சோ, விமர்சனமோ வந்தால் அது ஏதோ திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த தலைவர்களைக் குறை சொல்வதாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. எந்தத் தலைவரும், எல்லாரையும் போல இயல்பான மனிதர்களே. எனவே, எவரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதுபோல திராவிட இயக்கத் தோற்றத் தலைவர்களும் விமர்சனத்திற்குட்பட்டவர்களே என்பது பொது விதி.

ஆனால் இங்கே நம் விமர்சனம் திராவிட இயக்கக் கருத்தியல் பற்றியதுதானே தவிர தலைவர்கள் பற்றியதல்ல. இந்தத் தலைவர்கள் தாங்கள் கொண்ட கொள்கைகளுக்காக கடுமையாக உழைத்திருக்கலாம். தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்திருக்கலாம். அது பாராட்டி வரவேற்று மதிக்கத் தக்கவையாக இருக்கலாம். அது வேறு செய்தி. ஆனால் அவர்கள் எந்தக் கொள்கைகளுக்காக உழைத்தார்கள். அதனால் தமிழ்த் தேசத்துக்கு தமிழக மக்களுக்கு ஏற்பட்ட சாதகமோ, பாதகமோ என்ன என்பதுதான் நமக்கு இங்கே கேள்வி.

இந்த வகையில் திராவிடம் என்னும் கருத்தாக்கம், அதனடிப்படையிலான திராவிட நாடு கோரிக்கை, அது சார்ந்த கருத்தியல் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எப்படிப்பட்ட கேடுகளை விளைவித்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுவதும், இந்தத் திராவிட மாயையிலிருந்து நாம் விடுபட, மக்களை விடுவிக்க வேண்டுவதும் நம் கடமை என்பதையும், இந்தக் கடமையை நாம் சரியே நிறைவேற்றாமல், தமிழகத்தில் தமிழ்த்தேச எழுச்சியை ஏற்படுத்த முடியாது. தமிழக உரிமைகளை மீட்க முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும். இந்தப் புரிதலோடு ம.பொ.சி.யின் கருத்துகளை உள்வாங்க வேண்டும்.]

 ***

திராவிட இனத்துக்கு (அப்படி ஒன்று இருப்பதாக நம்பி) விடுதலை கோரி, திராவிட நாட்டை இந்தி யாவின் தொடர்பிலிருந்து துண்டாட விரும்பி, தமிழகத்தில் மட்டுமே ஒரு இயக்கம் நடைபெறுவதைத் தமிழ் மக்கள் அறிவர்.

நான்கு மொழிகள் பேசும் திரா விட இனத்துக்கு விடுதலை கோரி நடைபெறும் இந்த இயக்கம், ஒரு மொழியினருக்குரிய தமிழகத்தில் மட்டுமே இயங்குவது கவனிக்கத் தக்கது.

திராவிட நாட்டுப் பிரிவினை இயக்கம் பல்லாண்டுகளாக நடை பெற்றுவரினும் திராவிடநாடு எது? திராவிடர் யார் என்ற கேள்விகளுக்குத் திராவிட இயக்கத்தார் இதுவரை தெளி வாகப் பதிலளிக்கவில்லை. இவற்றைப் பற்றி சந்தர்ப்பத்திற்கும் இடத்திற்கும் ஏற்றாற்போல், முன்னுக்கும் பின் முரணாகப் பேசுகின்றனர் இந்த இயக்கத்தின் தலைவர்கள்.

காப்பி அடித்த திட்டம்

திராவிடஸ்தான் என்பதே முஸ் லிம்களின் பாக்கிஸ்தான் கோரிக்கை யிலிருந்து ‘காப்பி’ அடிக்கப்பட்ட தாகும்! ஆம் 1941ல் இந்திய முஸ்லீம் களின் பிரதிநிதித்துவ ஸ்தாபனமாக இருந்த முஸ்லீம் லீக், பாக்கிஸ்தான் கோரிக்கையைப் பிரகடனம் செய்தது. அதற்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1944ல் திராவிடக் கழகத் தினரும் இந்தியாவிலிருந்து துண் டாடப்பட்ட திராவிடத் தனி நாடு கோரினர். 1944 ஆகஸ்டு 27ந் தேதி சேலத்தில் திராவிடக் கழக முதல் மாநாட்டில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1. (அ) இந்த மாநாடானது, ஜஸ்டிஸ் கட்சி என்னும் இக்கட்சிக்கு உள்ள தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடர் கழகம் (ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ கிssஷீநீவீணீtவீஷீஸீ) என்று பெயர் மாற்றத் தீர்மானிக்கிறது.

(ஆ) அதன் கொள்கைகளில் ‘திராவிட நாடு’ என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அர சாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லா ததும், நேரே பிரிட்டிஷ் செக்ரட்டேரி யட் ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி ஸ்டேட் நாடாகப் பிரிக்கப்பட வேண்டியது என்ற கொள்கையை முதற்கொள்கையாகச் சேர்க்கப் பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

மேற்படி தீர்மானப் பகுதி திரு. ஈ.வெ.ராவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘குடிஅரசு’ வாரப் பத் திரிகை 26.8.44ல் வெளியான இதழின் 3ம் பக்கத்தில் 3ம் பத்தியில் காணப்படு வதாகும்.

அடிமைத் திராவிடம்

மேற்படி தீர்மானத்திலிருந்து 1944ல் திராவிடக் கழகம் கோரிய தனித் திராவிட நாடு, முஸ்லிம் லீகினர் கோரிய பாக்கிஸ்தான் போன்ற பரி பூரண சுதந்திரநாடு அல்லது என்பதும், பிரிட்டிஷ் நேர் அதிகாரத்துக்கு கட்டுப் பட்ட அடிமை நாடு என்பதும் தெளி வாகின்றது. அதாவது, இன்று பிரிட் டிஷ் சாம்ராஜ்யத்தில் மலேயா ஒரு அடிமை காலனியாக இருக்கின்றதல் லவா? அதுபோன்ற அடிமைத்தனத் தையே திராவிடக் கழகம் கோரியது. எந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கோரிக்கை கிளப்பப்பட்ட தென்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

1944ம் ஆண்டு இறுதியில் பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து அடி யோடு வெளியேறுவதற்கு ஆயத்த மாகிக் கொண்டிருந்தனர். அதனாற் றான் “பாக்கிஸ்தானைப் பிரித்துவிட்டு வெளியேறு” என்று முஸ்லீம் லீக் கோரியது.

ஆனால், திராவிடக் கழகத்தி னரோ, “பிரிட்டிஷ் எஜமானே! தாங் கள் வெளியேறத் தேவை இல்லை, திராவிட நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்துவிட்டால், அந்தப் பகுதியில் காருள்ளளவும், கடல் நீருள்ளளவும், திராவிட இனமுள்ளளவும் தாங்கள் அதிகாரம் செலுத்தலாம்” என்று விண்ணப்பம் போட்டனர். ஆனால் அவர்களுடைய விண்ணப்பத்தை மண் ணில் எறிந்து வெள்ளை ஏகாதிபத்தியம் வெளியேறி விட்டதால், இப்போது ‘சுதந்திர’ப் பிரியர்களாக நடிக்கின் றனர்!

எது திராவிட நாடு?

திராவிட நாடு எது? அதன் எல் லைகள் யாவை? என்பவற்றைப் பற்றி, திராவிட இயக்கத் தலைவர்களி டையே ஒருமித்த கருத்தில்லை. ஆளுக் கொரு அபிப்பிராயம்! ஒரு ஆளுக்கே பலவித அபிப்பிராயங்கள்!!

திராவிடர் யார்? என்பதைப் பற்றி திராவிட நாட்டுப்பிரிவினை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே ஆராய்ச்சி அறிஞர் பலர் தங்கள் அபிப் பிராயத்தை தெரிவித்திருக்கின்றனர். கால்டுவெல், கிரீயர்சன் போன்ற ஆராய்ச்சியாளர்கள், தமிழ்-தெலுங்கு-கன்னடம்-மலையாளம் ஆகிய நான் கும் திராவிட மொழிகளென்றும், அம் மொழிகளைப் பேசுவோரெல்லாம் திராவிடர் என்றும் குறிப்பிட்டனர். அதையும் அரசியல் உரிமைக்காக அல் லாமல், ஆராய்ச்சிக்காகவே குறிப்பிட் டனர்.

அவர்களுடைய கருத்துப்படி பார்த்தால், திராவிட மொழிகள் வழங் கப்படுவதும், அம்மொழிகளைப் பேசும் திராவிட மக்கள் பெரும்பான் மையோராக வாழ்வதும், தொடர்ந் தாற்போல் உள்ளதுமான நிலப்பரப் பையே திராவிட நாடு எனலாம்.

ஆம், இன்றைய சென்னை, ஆந் திரம், மைசூர், திருவிதாங்கூர், கொச்சி, குடகு ஆகிய ராஜ்யங்களும், ஹைதரா பாத் ராஜ்யத்தில் பதினோரு ஜில்லாக் களும், பம்பாய் ராஜ்யத்தில் நான்கு ஜில்லாக்களும் கொண்ட ஐக்கிய வடி வந்தான் சரியான திராவிட நாடாக இருக்க முடியும். இந்த உண்மைக்கு மாறாக, ஆந்திரம் பிரிவதற்கு முன்பு இருந்த சென்னை மாகாணம் தான் முழுத் திராவிட நாடு என்று முடிவு கட்டிவிட்டது சேலம் தீர்மானம். ஆம். அந்த சென்னை மாகாணத்தைப் போன்று இரண்டு பகுதி விஸ்தீரண முள்ள திராவிடப் பகுதிகள் மீது சேலம் தீர்மானம் உரிமை கொண்டாட வில்லை. அவற்றை வடநாட்டின் ஆதிக்கத்தில் விட்டுவிட மறைமுக மாகச் சம்மதித்து விட்டது. இதிலி ருந்து 1944ல் திராவிட இனத்துக்கு விடுதலை அல்ல; வெளியேறும் நிலை யிலிருந்த பிரிட்டிஷாரை நிலைநிறுத்த ஒரு காலனி! சிரிக்காதீர்கள்; அந்தக் காலத்தில் திராவிடக் கழகத்தினர் பிரிட்டிஷார் மீது அவ்வளவு விசு வாசம் வைத்திருந்தார்கள்!

அறிஞரின் குழப்பம்!

சேலம் தீர்மானம் நிறைவேறு வதற்குக் காரணஸ்தராயிருந்தவர் திரு. சி.என்.அண்ணாத்துரை. அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “திராவிட நாடு” பத்திரிகை, விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள நிலப்பரப்பு முழுவதும் திராவிட நாடு என்று தனது அட்டைப் பக்கத்தின் தலைப்பில் வாரா வாரம் படம் போட்டுக் காட்டுகிறது. இப்போது மட்டுமல்ல; சென்னை மாகாணம் மட்டுமே திராவிட நாடு என்று சேலத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்ட அப்போதிருந்தே!

திரு.சி.என். அண்ணாத்துரை தி.க.வின் தளபதியாக இருந்த நிலை மாறி, தி.மு.க.வின் பொதுச் செயலாள ரான பிறகு 1951ல் அவர் தில்லையில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவு ‘நாம்’ என்ற தலைப்பில் சிறு நூலாக வெளி வந்திருக்கிறது. அதில்,

“இப்போதுள்ள சென்னை மாகாணத்தையே திராவிட நாடு என்று அழைக்கின்றோம்.”

திராவிட நாட்டுக்கு மூன்று பக் கமும் கடல் வடக்கே உயர்ந்த விந்திய மலை, இயற்கை அரண் உடைய நாடு 5லு கோடி மக்களையுடைய நாடு (பக்கம் 53) என்று பேசியதாகப் பிர சுரிக்கப்பட்டிருக்கிறது.

விந்தியத்திற்குத் தெற்கே, கூர் ஜரம், இந்தி, மராத்தி ஆகிய திராவிட மொழிகளல்லாத ஆரியத் தொடர் புடைய மொழிகளின் பிரதேசங்கள் பெருமளவுக்கு இருக்கின்றன என் பதும், மைசூர், திருவாங்கூர், கொச்சி, ஹைதராபாத், குடகு ஆகிய ராஜ்யங் கள் சென்னை மாகாணத்தில் இல்லை யென்பதும் திரு.சி. என் அண்ணாத் துரைக்குத் தெரியாது போலும். ஒரு வேளை, அவர் படித்த காலத்தில் விந் திய மலை விஜயவாடாவின் எல்லை யில் இருந்ததோ என்னவோ! இல்லா விடில் சரித்திர எம்.ஏ. பட்டதாரியான அவர் பூங்கோளத்தின் இவ்வளவு குளறுபடி செய்வாரா!

தற்போது, திரு.சி.என். அண் ணாத்துரையை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘நம் நாடு’ பத் திரிகையின் முகப்பில் இன்னொரு புது வகைத் திராவிடப் படம் காணப்படு கின்றது. அந்த நிலப்பரப்புகளுக்குள் ஹைதராபாத் ராஜ்யத்திலுள்ள தெலுங்கு, கன்னட மொழிகள் வழங் கும் பதினோரு ஜில்லாக்களும், பம் பாய் ராஜ்யத்திலுள்ள நான்கு கன்னட ஜில்லாக்களும் காணப்படவில்லை.

ஆம். திரு.சி.என். அண்ணாத் துரையை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும், ‘திராவிட நாடு’ வாரப் பத்திரிகை ஒரு திராவிடத்தைக் காட்டுகிறது. அவரையே ஆசிரிய ராகக் கொண்டு வெளிவரும் ‘நம் நாடு’ தினப்பத்திரிகை மற்றொரு திராவிடத் தைக் காட்டுகிறது. இவற்றில் தி.மு.க. அதிகார பூர்வமாக அங்கீகரித்த திரா விடம் எதுவோ?

திராவிட சாம்ராஜ்யமா?

திரு.சி.என். அண்ணாத்துரை யால் பொன்னாடை போர்த்திப் புகழப்பட்ட திராவிட இயக்கத்தின் புரட்சிக் கவிஞர், திராவிட நாட்டின் வடக்கெல்லை ‘ அடல் சேர் வங்கம்’ என்று தமது பாடல் ஒன்றில் கூறுகின் றார். அவர் விரும்புவது திராவிட ஏகாதிபத்தியம் போலும்!

மேலும், தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழித் திராவிட இனத்துக்கு விடு தலை கோரும் ஒரு இயக்கத்தை வேங் கடத்துக்கு வடக்கே ஒரு சிற்றூரில் கூடச் சீந்துவாரில்லை, இந்தியா முழு வதற்கும் விடுதலை கோரிய காங்கிரஸ், தான் பிறந்தநாளன்று முதற்கொண்டே பாரதநாடு முழுவதும் பரவி இருந்தது. முஸ்லிம் பிரதேசங்களுக்கு விடுதலை கோரிய முஸ்லிம்லீக், அந்தப் பிரதேசங் களில் மட்டுமின்றி, இந்தியா முழு வதும் தழைத்திருந்தது. ஆனால், திரா விடத் தனிநாடு கோரும் திராவிட இயக்கம் பல்லாண்டுகளாக நடை பெற்று வந்தும் வேங்கடத்து வடக்கே செல்வது பற்றி இன்றும் சிந்திக்க வில்லை. தமிழர் அல்லாத திராவிடர் களும் அதை வாவென்று அழைக்க வில்லை!

சிறுபான்மையினர் நிலை என்ன?

திராவிட நாட்டிலுள்ள சிறு பான்மையினர் பற்றித் திராவிட இயக் கத்தவர் கொண்டுள்ள கொள்கை இன் றைய சர்வதேச நியதிக்கு மாறானது. மற்றும், தமிழகத்துக்கு வெளியேயுள்ள தமிழர் நலன்களுக்கு விரோதமானது. தமிழகத்தின் பொருளாதாரக் கட்டுக் கோப்பையே குலைத்துவிடக் கூடியது.

தமிழகத்திலுள்ள வட இந்தியர் கள் வெளியேற வேண்டும். அல்லது வெளியேற்றப்படுவார்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் திட்டவட்ட மாகத் தெரிவித்திருக்கின்றனர் திராவிட இயக்கத்தினர். குறிப்பாக, மார்வாரி, குஜராத்தி ஆகிய இருதரப்பினர் மீதே திராவிட இயக்கத்தினர் நேரடித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். தமிழ் நாட்டில் வாழும் மார்வாரி, குஜராத்தி மக்களின் ஜனத்தொகை அதிகமில்லை. 1941ம் ஆண்டு ஜனக் கணிதப்படி தமிழகத்தில் வாழும் குஜராத்தியர் 5309பேர். மார்வாரிகள் 1260பேர். இவர்களைத் தவிர வடஇந்திய மக்கள் என்ற பொதுக்கணக்கில் வருபவர்கள் 15,000 பேருக்கு மேல் இல்லை. இவர் களையெல்லாம் தமிழகத்திலிருந்து விரட்டிவிடுவதுதான் அல்லது இவர் களுக்கெல்லாம் தமிழகத்தில் வாணிபம், தொழில் செய்ய உரிமை இருக் கக்கூடாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை என்றால், இதன் எதிரொலியாக வெளிநாடுகளில் வாழும் தமிழருக்கு நேரக்கூடிய இன் னல்களையும் கவனிக்கவேண்டும். இந் தியாவிலேயே பம்பாய் ராஜ்யத்தில் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். வங்காளத்திலும் 50 அல்லது 60 ஆயிரம் தமிழர்கள் வாழ் கிறார்கள். பொதுவாகச் சொன்னால் சுமார் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் வேங்கடத்துக்கு வடக்கே யுள்ள விந்தியப்பகுதிகளில் இருக்கின் றனர். தமிழகத்திலிருந்து சுமார் 20,000 வடஇந்தியர்களை விரட்டுவதானால், வடக்கேயுள்ள ஐந்து லட்சம் தமிழர்களும் விரட்டப்படுவது எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான். இந்த நிலையை ஏற்படுத்துவது தமிழருக்கு நன்மை செய்தாகுமா?

இம்மாதிரி, இந்திய யூனியனுக் குள்ளேயே ஒரு மகாகாணத்து மக்கள் இன்னொரு மாகாணத்தில் குடியேறி வாணிபமும் தொழிலும் செய்து வாழ உரிமை இல்லை என்று ஏற்படுமாயின, இந்தியாவிலுள்ள தமிழர்கள் வெளி நாடுகளில் இருக்க உரிமை கிடைக் குமா? வடஇலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்குத் தாம் விரட்டுவது நியாயமானதே என்று பிரதமர் கொத்த லாவலை கூறமாட்டாரா? அது போலவே பர்மாவிலிருந்தும் தென் னாப்பிரிக்காவிலிருந்தும் தமிழ் மக்கள் வெளியேற்றப்படும் நிலைமை ஏற்படு வது இயற்கைதானே! இவ்வாறு வெளி நாடுகளிலுள்ள 30 லட்சத்திற்கு மேற் பட்ட தமிழர்கள் அகதிகளாகத் தமி ழகம் வந்தால் நம் கதி என்னாவது?

திராவிட இயக்கத்தார் இதை யெல்லாம் பற்றிச் சித்தித்ததாகத் தெரியவில்லை. சுரண்டும் நோக்கத் துடன் ஒர மாகாணத்தார் இன்னொரு மாகா ணத்தில் குடியேறுவதும், குடி புகுந்து மாகாணத்து மக்களோடு குலவி வாழா மல் எல்லாவற்றிலும் ஒதுங்கி நிற்பதும் வெறுக்கத்தக்கவை தான். ஆனால், அதற்குப் பரிகாரம் அவர்களை வெளி யேற்றுவது அல்ல. முக்கிய தொழில்களை எல்லாம் தேசீய மயமாக்கி சோஷலிச அடிப்படையில் சமுதாயம் அமைக்கப்படுமானால், ஒரு மாகாணத்தார் இன்னொரு மாகாணத் தில் குடியேறிச் சுரண்டுவது போன்ற கொடுமைகளுக்கே இடமில்லாமல் போகும்.

ஆம், தமிழகம், தமிழரல்லா தாரின் சுரண்டலிலிருந்து விடுபடத் தான் வேண்டும். ஆனால், அதற்குப் பொருளாதார ரீதியாகப் போராட வேண்டுமேயன்றி, ஆசிரியர் - திரா விடர் என்ற நிறவேற்றுமை அடிப் படையிலோ, வட நாட்டார் - தென் னாட்டார் என்ற பிரதேச அடிப்படை யிலோ போராடுவது நன்மையை விட தீமையையே விளைவிக்கும்.

எவ்வகையில் பார்த்தாலும், திராவிட இயக்கம் அரசியல், பொரு ளாதார அம்சங்களில் தெளிவற்ற குழப்ப நிலையில் இயங்குகிறது. அதனுடைய போக்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில் நன்மைக்குப் பதி லாகத் தீமையே விளைவிப்பது.

செப்டம்பர் 1954

 ***

தமிழ்நாட்டிலே எதற்கெடுத் தாலும் “ஐ.நா.சபைக்குச் செல்வோம்” என்று சிலர், குறிப்பாக திராவிட முன் னேற்றக் கழகத்தினர் அடிக்கடி கூறி வருகின்றனர். இவர்களுடைய கூற்று அர்த்தமற்றது; ஐ.நா. சபையின் அமைப்பு விதிகளுக்கு விரோதமானது.

சமீபத்தில் திருச்சியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் “கவர்னர் சம்பளக் குறைப்புக்காகவும் ஐ.நா.சபை சென்று வாதாடுவீர்களா?” என்று தி.மு.க. பொதுச் செயலாளரை ஒருவா¢¢ கேள்வி கேட்டாராம். அதற்கு ‘ஆம்’ என்று பதலிறுத்தாராம் திரு.அண் ணாத்துரை. இது, ஒரு தமிழ்த் தினசரி யிலே வெளியான செய்தி.

இந்தச் செய்தி, திரித்துப் பிரசுரிக்கப்பட்ட தென்றும் திரு.அண் ணாத்துரை அப்படிச் சொல்லவில்லை என்றும், “திராவிட நாட்டுப் பிரி வினைப் பிரச்சனையை ஐ.நா. சபைக் குக் கொண்டு செல்வீர்களா?” என்று கேட்கப் பட்டபோது, “வாய்ப்பும் வசதியும், காலமும் கருவியும், ஒன்று சேர்ந்து வந்து எய்தும்போது ஐக்கிய நாடுகள் சபைக்குப் போவோம்” என்று சொன்னதுதான் உண்மைச் செய்தி யென்றும் தி.மு.க. தலைவர் ஒருவரால் நடத்தப்படும் “மன்றம்” என்ற மாத ஏட்டின் வினா-விடைப் பகுதியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ‘உண்மைச்’ செய்தியையே ஆராய் வோம். சாதாரண மனிதனுக்கு ஐ.நா. சபையென்பது என்ன? அதன் கொள் கைகள் யாவை? என்ற விவரங்கள் தெரிந்திருக்க சந்தர்ப்பமில்லை. ஆகவே, அதைப் பற்றிச் சிறிது விளக்கி விட்டுப் பின்னர் மேலே சொன்ன செய்தியை ஆராய்வோம்.

1945ம் ஆண்டில் அமெரிக்க நகரமான சான்பிரான்ஸிஸ் கோவில் உலகத்திலுள்ள (இந்தியா உள்பட) 50 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, உலகத்தில் சமாதானம் நிலவவும், இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல் களைச் சமாதான முறையிலே தீர்த்துக் கொள்ளவும், உலகத்தின் எல்லா குடி மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் எல்லா சமூக, பொருளாதார, கலாசார ரீதியிலும் கிடைக்கச் செய்யவும் பாடு படுவதற்காக ஒரு அமைப்பை ஏற் படுத்த முடிவு செய்தனர். பின்னர், அந்த முடிவு சகல நாடுகளாலும் அங்கீ கரிக்கப்பட்டு, அதே ஆண்டு அக் டோபர் மாதம் 24ல் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் ஐ.நா. சபை. அதில் தற் போது இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் - ஒரு சில தவிர - அங்கம் வகிக்கின்றன. அது நாளது வரை தனது கொள்கைகளின் அடிப்படையில் உலக சமாதானத்துக்காகப் பாடுபட்டு வருகிறது.

ஆனால், தி.மு.க. தலைவர் நினைப்பது போல் எதற்கெடுத்தாலும் ஐ.நா. சபைக்குச் சென்று விட முடி யுமா? ஒருபோதும் முடியாது.

“இந்தச் சபையானது, எந்த ஒரு நாட்டிலும் அதன் ஆட்சிக்குட்பட்ட உள்நாட்டுப் பிரச்னைகள் எதிலும் தலையிடாது” என்பது ஐ.நா. சபையின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்று. இதன்படிப் பார்த்தால், திராவிட நாட்டுப் பிரிவினைப் பிரச்னைக்கும் ஐ.நா. சபைக்கும் சம்பந்தம் இல்லை என்பது நன்கு விளங்கும்.

திராவிட நாட்டுப் பிரச்னை தமிழரில் ஒரு சிலர் கொடுக்கும் கோஷ மேயழிய, பத்துக் கோடிக்கும் மேலுள்ள திராவிடர் எனப்படு வோரின் ஏகோபித்த கோரிக்கையன்று. திராவிடத்தின் எல்லைகளைக் கூட இதுவரை திட்டவட்டமாக நிர்ண யித்துக் கூறியதில்லை திராவிட இயக் கத் தலைவர்கள்.

கேள்வி கேட்டதற்கு, “வாய்ப் பும் வசதியும், காலமும் கருவியும், ஒன்று சேர்ந்து எய்தும்போது ஐ.நா. சபைக்குச் செல்வோம்” என்று அடுக்குச் சொற்களில் பதில் சொல்லிவிட்டால் போதுமா? பிரச்னைக்கும் ஐ.நா.வுக்கும் உள்ள தொடர்பை விளக்கியிருக்க வேண்டுமல்லா?

உதாரணமாக 1948ல் ஹைதரா பாத் ராஜ்யத்தை போலீஸ் நடவடிக் கையின் மூலம் ராஜாக்கர்களிடமிருந்து இந்தியா கைப்பற்றியபோது அது பற்றி ஐ.நா. சபையில் புகார் எழுப்பப் பட்டது. ஆனால், “அது முற்றிலும் உள்நாட்டுப் பிரச்னை” எனக்கூறி இந்தியா எதிர்த்ததால் புகார் வாபஸ் பெறப்பட்டது.

சகல வாய்ப்பும் வசதியும் பெற் றிருந்து தனியாட்சி நடத்திய நிஜாமின் நிலை இதுவென்றால், மக்கள் ஆதர வற்ற திராவிடநாட்டுப் பிரச்னையை ஐ.நா.வுக்குக் கொண்டு செல்வோம் என்று சொல்பவர்களைப் பார்த்து அனுதாப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!.

அக்டோபர் 1954

நன்றி : தமிழன் குரல் இதழ்க் கட்டுரைகள் தொகுப்பு.

தொகுப்பாசிரியர்:

தி. பரமேஸ்வரி.

வெளியீடு: சந்தியா பதிப்பகம், 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083. தொலைபேசி: 044-24896979