தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அதிமுக அரசு, ஈழத் தமிழர் சிக்கலில் (தீர்மானம்) நீலிக்கண்ணீர், கடலில் கரைக்கப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் போன்ற தமிழர் ஆதரவு நாடகத்தின் உச்சக்கட்டம் நடந்து முடிந்த பின், அதிமுக அரசின் அடுத்த நகர்வு சமச்சீர்க் கல்வி, சமச்சீர் கல்வியில் உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்புகளில், தமிழக அரசின் போக்கைக் கண்டித்த பின்னும் தமிழக அரசின் பார்ப்பனக் கருத்துச் சார்பும், கல்வி கொள்ளையர்கள் மீதான கரிசனமும் இப்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த ஆட்சி யாளர்கள் முத்துக் குமரன் குழு அளித்த 109 திட்டங் களில் 3, 4 எடுத்துக் கொண்டு மற்றவை களை அடுத்த கல்வியாண்டில் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறினார் கள். ஆனால் அதை யும் இந்த பார்ப்பனச் செயா அரசு இதை யும் எப்படியாவது மூடி விடலாம் என்று கங்கணம் கட்டி வேலை செய்தது. ஆனால் உச்ச, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்து விட்டது. அதன்பின் தன் பார்ப்பனப் பரிவாரங்கள் களத்தில் குதித்து விட்டது.

தினமலர், துக்ளக் போன்ற இதழ்கள் நேரடியாக தாங்கள் பார்ப்பன சார்பு கருத்துகளையும், தமிழர் விரோதத்தையும் எழுதி வருபவை புதியது அல்ல. ஆனால் முற்போக்கு முகமூடியில் எழுதும் தினமணியின் பார்ப்பனப் போக்கையும், அதன் நரித்தனத்தையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். 18.7.2011 அன்று உயர்நீதிமன்றம் சமச்சீர்க் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தபின் 19.07.11 அன்று தினமணி தன் தலையங்கத்தில்,

“இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக இருந்தால் செய்யலாம்தான். ஆனால் அதனால் என்ன பயன் கிடைத்து விடும் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறது தமிழக அரசு.

தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது என்பதை ஏன் தமிழக அரசு உணர்ந்து கொள்ளவில்லை என்பதும் நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு எதிரானதாக ஏன் கருதுகிறது என்பதும் விளங்காத புதிர். (அரசுக்கு புத்திமதி சொல்லியது தினமணி)

சமச்சீர் கல்வி கூடாது என்பது தமிழக அரசின் நோக்கமல்ல. சமச்சீர் கல்வித் திட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்பதுதான் தமிழக அரசின் விருப்பம். சில பாடங்கள் அடுத்த பாடத்துடன் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், சில பாடங்கள் தரமானதாக இல்லை என்பதும்.

ஆகவே பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்பதும் தமிழக அரசின் நியாயமான வாதம். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. பாடத் திட்டத்தில் சில பகுதிகளை நீக்குவதும், சேர்ப்பதும் தமிழக அரசின் கல்வித் துறையைப் பொறுத்த விவகாரம் என்று நீதிமன்றமே தெளிவாக சொல்லிவிட்டது.

தமிழக அரசின் அடிப்படை நோக்கத்தில் நீதிமன்றம் குறுக்கீடோ தடையோ செய்ய வில்லை. நீதிமன்றம் சொல்லும் ஒரே விஷயம் இந்தக் கல்வியாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பது தான். அந்த ஒரு விஷயம்தான் இப்போது தமிழக அரசைச் சங்கடப்படுத்துவதாக இருக்கிறது.

சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதும் தமிழக அரசு எந்தப் பாடங்கள் எல்லாம் திணிப்பு என்று கருதுகிறதோ அவற்றையெல்லாம் நீக்கி தரமானதாக மாற்றுவதும் தமிழக அரசுக்கு மிக மிகச் சுலபம். இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்.

நிச்சயமாக கடந்த அரசால் பரிந்துரைக்கப்பட்ட சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்பதையும், திமுக ஆட்சியாளர்கள் சிலவற்றை வேண்டுமென்றே திணித்திருக்கிறார்கள் என்பதையும் பாட நூல்களில் காண முடிகிறது.

ஒரு குழந்தைக்கான பாடப் புத்தகத்தில் சூரியன் உதிப்பது கிழக்கு என்று படம் போடுவதில் தவறில்லை. அதை உதயசூரியன் சின்னத்தைப் போல் போடுவது ஆட்சியாளர் களின் குறுகிய மனநிலையைத் தானே காட்டுகிறது.

மின்காந்த விசையைச் சித்திரமாக வரையும் போது அது உதயசூரியனின் கதிர்கள் போல் விரிய வேண்டிய தேவை இல்லைதான். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தரப்படும் பள்ளிக் கூடப் பாடப் புத்தகம் என்ன கரை வேட்டியா? ஆங்கிலப் பாடப் பத்தகத்தில் எழுத்து களைக் கருப்பு சிவப்பு வண்ணங்களில் பிரசுரித்திருக் கிறார்களே என்று கேட்கலாம். இவை தப்புதான்.

இதையெல்லாம் நீக்கி விட்டு முறையாகப் பாட நூல்களை அச்சிடுவதும் பாடங்களை முறைப்படுத்து வதும் மிகவும் அவசியம்தான். அதை நீதிமன்றமும் அங்கீரிக்கும் போது ஏன் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தாமல் தள்ளிப் போட வேண்டும். (இந்த இடத்தில் திருவள்ளுவர் படம் அழிப்பு, பாரதிதாசன் ஆத்திச்சூடி, அப்துல் ரகுமான் கவிதை) இவை களைப் பற்றி தினமணி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இவர்கள் அனைவரும் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்பதால், அதனால் இவர்களை நேரடியாக எதிர்க்க முடியாது என்ற காரணங்களைச் சொல்லி தப்பித்துக் கொள்ள முயல்கின்றன.

சமச்சீர் கல்வித் திட்டத்தில் திமுக அரசு நியமித்த குழு தயாரித்த பாடத் திட்டம் தரமானதாக இல்லை என்பதும், இதில் திமுக சார்பான சில கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன என்பதும்தான் தமிழக அரசின் ஆட்சேபமாக இருக்கிறது. இந்த ஆட்சேபம் நியாமானதும் கூட. அதுதான் ஒரு மாதத்திற்கு முன்பே கருணாநிதி தான் கூறிவிட்டாரே, சமச்சீர் கல்வியில் அரசுக்கு ஏற்படும் பிரச்சினை என் கவிதை என்றால் நீக்கிவிட்டு, தாமதப்படுத்தாமல் தொடரலாம் என்று. மேலும் தினமணியின் கருத்துகள் (தினமணி, 26.6.11)

சமச்சீர் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரை நமது கருத்தில் மாற்றமே இல்லை. அகில இந்திய தரத்திலான,சிறந்த தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தரத்திலான ஒரே கல்வித் திட்டம்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும்.

சமச்சீர் கல்வி என்ற பெயரில் தரம் குறைந்த கல்வித் திட்டமும் ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி, தனியார் பள்ளிகளில் வேறொரு பாடத் திட்டம் என்பதும் ஏற்புடையதல்ல.

உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை, மெட்ரிகுலேசன் உள்ளிட்ட பாடத்திட்டங் களுடன் செயல்படும் தனியார் பள்ளி மாணவர்களின் தரத்துக்கு உயர்த்துவதாக இருக்க வேண்டும். தவிர (அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, தரம் குறைந்த கட்டடம், கழிப்பிடம் இல்லாத பள்ளிகள் பற்றி இவர்கள் இப்போது கவலைப்படுகிறார்கள்) தனியார் பள்ளிகளில் பாடத் திட்டத் தரத்தைக் குறைக்கும் விதத்தில் அமைந்து விடக் கூடாது.

மேலும் சமச்சீர் கல்வியின் பெயரால், பள்ளிகள் செயல்படாமல், மாணவர்களின் பொன்னான நேரம் வீணாக்கப்படுவதும் கூடாது. தமிழகத்தை எதிர் நோக்கும் மிகப் பெரிய பிரச்சனை இதுதான் என்பதை முதல்வரும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஐ.ஐ.டி.யில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு பேச்சு வரும்போது மறக்காமல் உயர் படிப்பில் சாதி பார்க்கக் கூடாது, கல்வி தகுதிதான் பார்க்க வேண்டும். சாதி வெறித்தனத்தை நேரடியாக பேசும் இவர்கள் இப்போதும் சமச்சீர் கல்விக்கு இவர்கள் கொடுக் கும் விளக்கம் எல் லாம் நன்றாகவே இருக்கிறது. ஆனா லும் இதில் எல்லாம் ஏமாந்து போக பழைய ஏகலைவனும் நந்தனும் இல்லையே என்ன செய்வது?

தினமணி இப்பொழுதுதான் உறங்கி விழித்துள் ளது. உங்களின் (பார்ப்பனக்) கரிசனம் உங்கள் சமூகத்திற்காக, நீங்கள் உங்கள் மூளையைக் கசக்கி வருந்துவதும் எழுதுவதும் எங்களுக்குப் புரிகிறது. இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் போராடிய போதும், உரிமை கேட்டபோதும் அப்போது நீங்கள் சமூகம் தனது திறமையான (ஏழை உயர் சாதி) மனிதரை இழப்பதாக வருந்தினீர். ஒருபோதும் நீங்கள் நேரடியாக எதிர்த்துப் பேசியது இல்லை. ஆனால் அப்போதும் ஒடுக்கப்பட்ட ஏழைகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக பேசினீர். சோசலிசம் பேசி இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பு என்ற காயை அழகாக நகர்த்தினர்.

“மாணவர்களின் எதிர்கால நலன், கல்வி அறிவு, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டி மிகுந்துள்ள நிலையில் திறமையான மாணவர்களாக அவர்கள் வரவேண்டும் என்பனவற்றைக் கருத்தில் கொண்டும், அரசியல் கலப்புள்ள, தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததை வரவேற்கிற (தினமணியும், அதிமுக) கவலைப்படும் நீங்கள் கடந்த ஆண்டு சமச்சீர் கல்வியை தமிழக அரசு கொண்டு வந்தபேது "தினமணியோ தற்போதைய தமிழக முதல்வரோ எங்கே போனார்கள்.

பல வருடங்களாக சமச்சீர் கல்வியைப் பற்றி பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசப்படும்போது, கொட நாட்டில் உறங்கிக் கொண்டு இருந்த அம்மையார் மக்களின் ஆதரவுடன் அதை எதிர்க்க வேண்டியது தானே! மக்களைக் கொண்டு போராட வேண்டியது தானே! கட்சிப் பணத்தைக் கொண்டு செலவு செய்து வழக்குகள் போட வேண்டியதுதானே! தங்கள் வழக்கறிஞர் அணியைக் கொண்டு வாதாட வேண்டியதுதானே! கடந்த ஆண்டில் சமச்சீர் கல்வியை அறிமுகப் படுத்திய பொழுது அவர் வேறு கிரகத்தில் இருந்தாரா? அதை விடுத்து மக்களுக்காக அன்று போராடாமல், இன்று போராடுவது மக்கள் விரோத செயல்தானே!

அதேபோல தினமணி செம்மொழி மாநாடு வரை கடந்த ஆட்சியாளர் களுக்கு குழைந்தும் நெளிந்தும் எழுதியதை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். செம்மொழி மாநாடு பின் கருணாநிதிக்கு தினமணிக்கு என்ன சிக்கல் என்பது புரியவில்லை.

அதன் பின் அதிமுக செம்மொழி மாநாடு முடிந்தவுடன் கோவையில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. அதன் பின் அதிமுக ஆதரவு பல்லவி பாட ஆரம்பித்தது.

தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் வரும் ஐந்து ஆண்டுகள் நம்மை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது என்று தினமணியும், பார்ப்பன செயாவும் நினைக்கிறார்கள். இளித்தவாய் (தமிழ்) மக்களுக்கு ஈழத் தமிழர் ஆதரவு, கச்சத்தீவு மீட்பு தீர்மானம் போதுமானது என்று நினைத்து விட்டார்கள் போலும், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு போராடிய அம்பேத்கர், பெரியார், கொள்கைகள் இப்போதும் இந்த பார்ப்பன சனதானவாதிக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக நினைக்கிறார்கள். அதனால்தான் பார்ப்பன சார்பு கருத்துகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். அவர்கள் நினைப்பது சரிதான். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமநீதி கிடைக்கும் வரை அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகள் நீடித்து வாழும். அதுவரை இந்த பார்ப்பனச் சூழ்ச்சியாளர் நம்மை பின் தொடர்வார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு, சம உரிமை, சம கல்விக்கு நாம் தொடர்ந்து போராடுவோம்.

Pin It