தற்பொழுது நாடு முழுவதிலும் உள்ள அரசு வங்கிகளில் இயக்குநர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 32 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 1 லட்சம் கோடி அளவிற்கு வராக்கடன் வசூல் செய்யப்படாமல் உள்ளது. வங்கிகளும், உலகமயமாக்கத்தினால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ‘உத்தமர்களும்’ வங்கிகளை நிர்வாகம் செய்ய வருவது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். நியமனம் செய்யப்பட்ட 32 இயக்குநர்களின் பட்டியல்

1. ராம் சந்திரா குண்டியா- ஆந்திரா வங்கி
(அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவர். ராஜ்யசபா எம்.பியாக 2004 ஆம் ஆண்டு வரை இருந்தவர்.)

2. மசாரத் சாஹித்- பேங்க் ஆப் பரோடா
(குஜராத் காங்கிரஸ சேவா தளத் தலைவர்)

3. பிரபா கே தாவியத்-பேங்க் ஆப் இந்தியா.
(குஜராத் மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர், 2006 ஆம் ஆண்டு அகில இந்திய மகிளா காங்கிரஸ் உதவித் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர்)

4. சந்தாபெண் சாவ்டா - பேங்க் ஆப் இந்தியா.
(முன்னாள் குஜராத் மாநில மகிளா காங்கிரஸ் தலைவர், தற்பொழுது குஜராத் மாநில காங்கிரஸ் உதவித் தலைவர்)

5. அவி அசிசி, - பேங்க் ஆப் மகாராஷ்டிரா,
(மகாராஷ்டிர காங்கிரஸ் ஓபிசி பிரிவுச் செயலாளர்)

6. பங்கஜ் கோபால்ஜி தக்கர் - கனரா வங்கி.
(இவரது தாயார் குஜராத் முன்னாள் காங்கிரஸ் எம்.பி)

7. வேத் பிரகாஷ்-சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
(செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி)

8. ஹர்ஷ் சந்தேக்-சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா.
(முன்னாள் ம.பி.முதல்வர் திக் விஜய சிங் அவர்களுக்கு நெருக்கமானவர்)

9. சத்ய பென்-சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா.
(முன்னாள் காங்கிரஸ் எம்.பி காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர்)

10. ரொமேஷ் சபர்வால் - சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா.
(டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர். டெல்லி சுற்றா மற்றும் போக்குவரத்து வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர்)

11. இந்து சிங் பவார்- சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா.
(அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளர். (பொறுப்பு) ஒரிசா மற்றும் மேகாலயா)

12. சரத் சந்திரன்- இந்தியன் வங்கி
(தமிழ்நாடு, தென் ஆற்காடு மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் தலைவர். இவர் தமக்கு இயக்குநர் பதவி அளித்ததற்காக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கட்கு நன்றி தெரிவித்து மாவட்டம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்).

13. நஃபீசா அலி சோதி, இந்தியன் வங்கி,
(மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்துச் சென்ற தேர்தலில் காங். சார்பில் போட்டியிட்டவர். காங்கிரஸ் மனித உரிமையாளர் ஆணையம் தெற்கு டெல்லி தலைவர்)

14. பொங்குலெட்டி சுதாகர் ஒப்பு - இந்தியன் வங்கி.
(அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவர்)

15. சூராஜ் பிரகாஷ் காத்ரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
(ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்களில் ஒருவர்.)

16. எம்.என்.கந்தசாமி - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
(அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்)

17. கிருஷ்ணா மோகினி - பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க்.
(அகில இந்திய மகிளா காங்கிரஸ் உதவித் தலைவர்)

18. அர்ஜூன் சிங் ஜோசப் இயக்குனர். பஞ்சாய் அண்டு சிந்த் பேங்க்.
(அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மையினர் பிரிவுத் தலைவராக இருந்தவர்)

19. உமேஷ் குமார், சர்மா - பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க்.
-முன்னாள் ஹரியானா மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்.

20. கே.கே.சர்மா - இயக்குனர் பஞ்சாப் அண்டு சிந்த் பேங்க்.
(முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் தற்பொழுது உறுப்பினர்)

21. கமல் மாஸ் - பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க்.
(ஹரியானா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர்)

22. வினய் குமார் சோரகே- இயக்குனர் சிண்டிகேட் வங்கி.
(முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,)

23. ஷோபா ஓவு - சிண்டிகேட் வங்கி.
(மத்திய பிரதேச மகிளா காங்கிரஸ் தலைவர்)

24. நிர்மல் காத்ரி - யுகோவங்கி.
(முன்னாள் பைசா பாத் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்)

25. ஓமன் மோயங்க் திபோரில் இயக்குனர் யூகோ பேங்க்.
(காங்கிரஸ் சாரிபக் கமிட்டி சிறப்பு அழைப்பாளர், அருணாச்சல பிரதேசம்)
Pin It