கீழக்கரை நகராட்சிக்குச் சொந்தமான 12 ஏக் கர் நிலத்தில் குப்பைக் கூளங்களைக் கொட்டு வதற்காக உருவாக்கி வரும் உரக் கிடங்கை பயன்படுத்த முடியாமல் செய்வதற்காக கீழக்கரை நகரம், தில்லையேந்தல் பஞ்சாயத்து ஆகிய இரண்டு ஊர்களிலும் பணம் பறிப்பதற்காக அண்டர் கிரவுண்ட் வேலைகள் செய்யும் கவுன்சிலர்களால் முஸ்லிம், தலீத் சகோதரர்களுக்கிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு, மாவட்ட ஆட் சியர், இராமநாதபுரம் நீதிமன் றம், மாசு கட்டுப்பாட்டுத்துறை ஆகிய அனைத்தும் அனுமதி அளித்து அதன் மூலம் 50 கோடி செலவில் சுற்றுச் சுவர், தார் சாலை அமைக்கப்பட்டு கீழக்கரை நக ராட்சி மூலம் உரக் கிடங்கு கட் டப்பட்டு வருகிறது. இதன் சுற் றுச் சுவரை விஷமிகள் பலர் இடித்ததால் காவல்துறை, மாவ ட்ட ஆட்சியர் துணையோடு மீண்டும் கட்டப்பட்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

இந்த உரக் கிடங்கில் மண் புழு உரம் மற்றும் தார் சாலை அமைக்க தேவைப்படும் (மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ் டிக்) கழிவுகளைக் கொண்டு தார் தயாரிக்க எக்ஸ்னோரா அமைப் புடன் இணைந்து செயல்பட இருக்கிறது நகராட்சி.

இதற்கிடையில் இந்தப் பணி நடைபெறக் கூடாது என்று கடந்த 22-08-2012 அன்று தில் லையேல் பஞ்சாயத்து கவுன்சி லர் ஊரில் உள்ள ஒரு சிலரைத் திரட்டி சாலை மறியல் செய்வ தாக இருந்தார். அதனை மாவ ட்ட ஆட்சியர் தடுத்ததால் 24-08-2012 அன்று அவர் உண்ணா விரதம் இருந்தார். அன்றை தினம் கீழக்கரையைச் சேர்ந்த நகராட்சி சேர்மன் ராபியத் காதி ரியா, கவுன்சிலர் முகம்மது மைதீன், திட்ட மேலாளர், காண்ட்ராக் டர், ஐஎன்டிஜே மாவட்டத் தலைவர் முஸம்மில் ஹார், துணைச் செயலாளர் நாசர், உஸ்மான் மற்றும் தினகரன் நிரு பர் ஆகியோர் சென்று உரக்கி டங்கை பார்வையிட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தி லேயே நவீனமாக கட்டப்பட்ட முதல் தரமான உரக்கிடங்கு இது தான். இதனை செயல்படுத்தி னால் கீழக்கரை, தில்லையேந் தல் ஆகிய இரு கிராமங்களுக் குத்தான் பயன்படும். இரு ஊர்க ளும் சுகாதாரமாக மாறும். ஆனால் இதனை செயல்படுத்த விடாமல் தடுக்கும் விஷமிகள், மதச்சாயம் பூசி பாழ்படுத்த நினைக்கின்றனர்.

கீழக்கரையின் சுகாதாரத் திற்கு கடந்த சில வருடங்களாக எடுக்கப்பட்ட முயற்சி தற்போது வெற்றி பெறும் நிலையில், கீழக் கரை நகராட்சியில் 12 வருடங்க ளாக சரியாக வேலை செய்யா மல் "சீன்' காட்டி வரும் துப்புரவு பணியாளர்களுக்கான மேஸ்த் திரி ராமநாதன் என்பவர் தன் பங்கிற்கு துப்புரவு பணியாளர் களை பணி செய்ய விடாமல் கீழக்கரை நகராட்சிக்கு தலைவ லியை உண்டாக்கி வந்தார்.

உரக்கிடங்கை எதிர்க்கும் கவுன்சிலர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு குதியாட் டம் போட்டு வந்த ராமநாதன் சமீபத்தில் வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந் தப் பணி மாற்றத்தை எதிர்த்து இவரது உறவினர் கிருஷ்ணன் என்பவர், தான் சசிகலாவின் கார் டிரைவர் என்றும், ராமநா தனை உடனே கீழக்கரையில் மீண்டும் பணி அமர்த்த வேண் டும்; இல்லாவிட்டால் சேர்மன் ராபியத்துல் காதிரியா சென் னையில் தங்கும்போது அவரை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து சேர்மன் ராபி யத்துல் காதிரியா போலீஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து பல நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் கிருஷ் ணனை காவல்துறை கைது செய் யவில்லை. இது ஒருபுறமிருக்க, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மாவட்டச் செயலாளர் ஆணி முத்து, நகராட்சி பொது மேலாளர் ஆகியோரையும் மிரட்டியுள்ளார் கிருஷ்ணன். இதன் விளைவாக மேஸ்த்திரி ராமநாதன் கீழக்கரை நகரா ட்சியிலேயேரீ போஸ்ட் டிங் போடப்பட்டுள்ளார்.

ஆனால், ராமநாதன் மீண்டும் இந்த நகராட்சியில் பணியமர்த் தப்பட்டால் நாங்களெல்லாம் ராஜினாமா செய்வோம் என சேர்மன் ராபியா எச்சரித்ததை யடுத்து மீண்டும் ஜெயங் கொண் டம் நகராட்சிக்கு மாற்றப்பட்டி ருக்கிறார் ராமநாதன்.

கீழக்கரை நகராட்சியைப் பொறுத்தவரை மக்களுக்காக பல விதமான புதிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நக ராட்சி சேர்மன் எடுக்கும் முயற் சிக்கு எதிர் கட்சியினரும், "கட்டிங்' ஒன்றையே குறியாகக் கொண் டுள்ள கவுன்சிலர்கள் பலரும் தடை யாக இருக்கிறார்கள் என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத அதிமுக கவுன்சிலர் ஒருவரே!

அதிமுக முதன் முறையாக கீழக்கரை நகராட்சியை கைப் பற்றியுள்ளது. இந்த ஒருமுறை யோடு அதிமுகவிற்கு இங்கே மூடு விழா நடத்தும் முயற்சியில் பல கவுன்சிலர்கள் இருக்கிறார் கள் என்பது உண்மையான செய் திதான்.

அண்மையில் கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுத்த முதல் வர் கீழக்கரை கவுன்சிலர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற் குள் சம்பந்தப்பட்ட கவுன்சிலர் கள் உஷாராக வேண்டும்.

- அபு முஜாஹித்

Pin It