மனித கேடயமாக மக்களை பயன்படுத்து வதை பற்றிய இந்த பதிவு அப்பட்டமான ஒரு உண்மையை உரைக்கிறது. உண்மைக் கும் உயிருக்கும் நடுவில் இந்த பதிவை எழுதுகின் றேன். உண்மையை புரியும் பட்சம் அப்பாவி உயிர்கள் காப்பற்றப்படலாம். அதே நேரம் அந்த இடத்தில் என்னை போல ஒரு ராணுவ வீரன் இறக்கப்பட நேரிடலாம் என்றும் தெரிந்தே எழுதுகிறேன்.
காஷ்மீரில் நடக்கும் முக்கியமான ஆபரேசன் Cardon and Search Operation. சுருக்கமாக CASO. அதா வது முற்றுகை இட்டு சோதனை செய்தல்.
நம்ம ஊருக்குள்ளே ஒரு போராளி ஏதோ ஒரு காரணமாக வந்துள்ளார். அதை தெரிஞ்சிகிட்ட ராணுவம் ஊரை வளைச்சி முற்றுகை இட்டு உள் ளது என்றால் அதுதான் CASO. வீடு வீடா சோதனை நடக்கும். ஆம்பிளை பசங்க மொத்தமும் பொதுவா ஒரு இடத் துக்கு வந்துடனும்.தவறி வீட்டுக்குள் இருந்தா தவறுதலாக தீவிரவாதியா கருதப் பட்டு தவறுதலாக சுடப்படலாம். தவறுத லாக சாகலாம். அரசால், ஊடகங்களால் சரியாக்கப்படலாம். சரியாக்கபடும்.
ஒவ்வொரு வீடாக நுழைந்து சோதனை செய்ய வேண்டும். எந்த வீட்டின் உள்ளே இருந்தும் குண்டுகள் சீறி வரலாம். நுழை வாயிலில் கண்ணி வெடி வைத்திருக்கலாம். உயிரை பணயம் வைத்து யார் முன்பே செல்வது? வீட்டுக் குள் எப்படி நுழைவது? எப்படி சோதனை போடுவது?
இங்கேதான் ராணுவம் தனது எல் லையை மீறுகிறது. மனித கேடயமாக காஷ்மீரிகளை பயன்படுத்துகிறது.
ஆம்,ராணுவம் நான்கைந்து காஷ்மீரி வாலிபர்களை பிடித்து வலுக்கட்டாயமாக ஒவ்வொரு வீடாக உள்ளே அனுப்பி வைப்பார்கள். அந்த இளைஞர்கள்தான் முதலில் உள்ளே போய் அனைத்து ஜன் னல்களையும் திறந்து காண்பிக்க வேண் டும். உள்ளே இருந்து வரும் முதல் அட் டாக்கை அவர்கள்தான் எதிர் கொள்ள வேண்டும்.
கவசம் தாங்கிய உடை கள், ஹெல்மெட் என்று எந்த பாதுகாப்பும் இல்லாமல் நிராயுதபாணியாக உள்ளே அனுப்பப்படும் அந்த இளை ஞர்கள்தான் ராணுவத்திற்கு மனித கேடயங்கள்.
பலவித ஆயுதங்களும், பாதுகாப்புகளும், பயிற்சிக ளும் கொண்ட ராணுவம் உள்ளே நுழைய வேண் டுமா? நிராயுதபாணி இளை ஞர்கள் நுழையவேண்டுமா?
அந்த மனித கேடயங் கள் சோதனை செய்த பிறகு தான் ராணுவம் உள்ளே நுழையும். அந்த இளைஞர் கள் ஒருவேளை உள்ளே செல்ல மறுத்தால்?
உள்ளே போக மறுத்தால் அடிகளும், உதைகளும், பிறப்பு பற்றிய அசிங்க பேச் சுக்களும் ஏச்சுக்களும் கிடை க்கும். தீவிரவாதிகளுக்கு ஆதரவான ஊர் என்ற சிறப்பு கவனிப்பில் அடிக்கடி சோதனை நடைபெறும்.பல கைதுகள், சித்திரவதைகள், உயிரிழப்புகள் தொடர்கதை யாகும்.
ஒருவேளை அப்படி அந்த வாலிபர்களின் உயி ருக்கு ஏதும் நேர்ந்தால் அவனுக்கு சத்தி யமாக இந்தியா மெடல் குத்தப்போவ தில்லை. மாறாக அவனையும் தீவிரவாதி யாக்கும் வேலைகள் நடைபெறும். இல் லையெனில் Cross fireல் செத்ததாக காண்பிக்கும்.
அந்த வாலிபர்களின், பதின் வயது பையன்களின் வலிகளையும் கண் முன்னே பலியாடாய் போகும் மகன்களை பெற்ற தாய்களின் தந்தையர்களின் கண் ணீர்களையும் நாம் என்று உணர்வோம்?
ஒவ்வொரு வீடும் சோதனை செய்யும் போது வேர்க்க விறு விறுக்க உள் நுழைந்து வெளியே வரும் காஷ்மீர் பசங்களை போலத்தான் இந்தியாவின் அனைத்து இடங்களிலும் CASO ஆபரேசன்கள் நடக்கின்றன.
ஊர்ல உள்ள உங்க தம்பியையும் பக்கத்து வீட்டு பசங்களையும் பிடிச்சி கட் டாயமாக அந்த மாதிரி தீவிரவாதி இருக் கிற வீட்டுக்குள் அனுப்பி வைத்தால் எப் படி இருக்கும்? உள்ளே உள்ள ஆயுத போராளி ராணுவம் நுழைகிறது என்று சுட்டால்? அதில் உங்கள் தம்பியோ மச் சானோ உடல் சிதறி விழுந்தால்? ஊனமா னால்? உயிரிழந்தால்? கொஞ்சமாக கற் பனை செய்து பாருங்கள்.
இங்கே மனித கேடயமாக யார் யாரை பயன்படுத்துகிறார்கள் என்று 'சோ' போன்ற அண்ணாவிகள் அவசியம் தெரிஞ் சுக்கனும். இது சரிதானா என்று தன் வீட்டில் உட்கார்ந்து இவற்றை நிறுத்தி யோசிக்கனும்.
2006ல் கமாண்டோ பயிற்சியின் போது இதை பற்றிய வகுப்பில் இது போல செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எனது அதிகாரி ஒருவர் சொன்ன போதுதான் எனக்கும் உண்மை தெரிந்தது.
- சதீஷ் செல்லதுரை
(ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பணியாற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரரான நெல்லைத் தமிழர்.)