சில தினங்களுக்கு முன் கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கேரளாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட வெடிமருந்து பொருட்கள் இரண்டு மாநில எல்லைப் பகுதியான கேரள கன்னூர் மாவட்டம் குட்டுப்புழா செக்போஸ்ட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிக்அப் ஜீப்பில் வைத்து இந்த வெடி பொருட்கள் கடத்தப்பட் டுள்ளன. இந்த வெடி பொருட் களில் 300 கிலோ அம்மோனியம் நைட்ரேட் 50 மூட்டைகளில் நிரப் பப்பட்டும், 16 பண்டல்கள் பியூஸ் ஒயர்களும், பத்து பாக்கெட்டு களில் சக்தி வாய்ந்த 1000 டெட்ட னேட்டர்களும் இருந்துள்ளன. இதனை கண்டு பிடித்து பறிமுதல் செய்தது காவல்துறை அல்ல. கலால் மற்றும் விற்பனை வரி அதிகாரிகள்தான்.

ஜீப்பின் பின்புறத்தில் காய்கறி களுக்கு மத்தியில் வெடி பொருட் களை மறைத்து வைத்து கடத்தி யுள்ளனர். இந்த வெடி பொருட் கள் ஒரு கிராமத்தையே முற்றிலும் அழிக்கவல்லவை என்கிறார் இதனை பறிமுதல் செய்த கலால் இன்ஸ்பெக்டரான ராஜிமோன்.

இந்த வெடி பொருட்களை கேரள மாநிலம் கெல்லரிக்காரா பகுதியைச் சேர்ந்த பில்லு என்பவ னும், மட்டனூருக்கு அருகேயுள்ள இளம்பரா என்ற இடத்தைச் சேர்ந்த ரஞ்சித்தும் கடத்தியுள்ள தாக கூறியுள்ள இன்ஸ்பெக்டர் ராஜிமோன் இருவரையும் இருட்டி காவல் நிலையத்தில் ஒப் படைத்துள்ளார்.

இந்த சம்பவம், கேரளாவில் பெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டு முஸ்லிம்கள் மீது அந்தப் பழியைப் போடும் சதித் திட்டமாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கின்றனர் கேரள மாநில முஸ்லிம்கள்.

கர்நாடகத்தைப் போலவே கேரளாவிலும் சங்பரிவாரின் ஆதிக்கம் நிறையவே இருக்கிறது. சமீப கால மாக கேரள முஸ்லிம்க ளின் அரசியல் செல் வாக்கு சங்பரிவாரங்க ளுக்கு அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. இந்நி லையில் ஒரு மிகப் பெரிய குண்டு வெடிப்பு நிகழ்த்தி முஸ்லிம்க ளின் மீது பழியைப் போட்டு அரசியல் ஆதாயம் அடையும் சங்பரிவாரின் முயற்சி தான் இது என நம்ப போதுமான முகாந்திரங்கள் உள்ளன.

கடந்த காலங்களில் வெடி பொருள் கடத்தலில் சங்பரிவார அமைப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை நேர்மையாக விசாரித் தால் சங்பரிவாரத்தின் சதித் திட்ட மும் வெளிப்படும். கேரள காவல் துறை என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப் போம்!

- ஃபைஸல்

Pin It