இந்திய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் முஸ்லிம்களுக்கான சிறப்பான திட்டங்களை அறிவித்திருக்கிறார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.

கடந்த 27ம் தேதி என்.டி.ஆர். டிரஸ்ட் பவனில் தெலுங்கு தேசம் கட்சியின் சிறுபான்மையினர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய சந்திரபாபு நாயுடு, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிக்கேற்ப முஸ்லிம்களுக்கு அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வருடா ந்திர பட்ஜெட்டில் 8 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்போம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இணையாக சிறுபான்மையினருக்கு சலுகைத் திட்டங்களை வழங் குவோம்...” என அறி வித்திருக்கிறார்.

“எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின்போது சிறுபான்மை சமூகத் தவர்களுக்கு 24 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவோம். இதில் மாநிலம் முழுவதிலிருந் தும் குறைந்தபட்சம் 15 வேட்பாளர்கள் திண்ணமாக வெற்றி பெறுவார்கள்...” என்றும் உறுதிபட தெரிவித்திருக்கி றார்.

மேலும், “அரசாங்கத் தின் அனைத்து பள்ளிக் கூடங்களிலும் உருது பாடங்கள் ஏற்பாடு செய் யப்படும். குறைந்தபட்சம் 20 மாணவர்களாவது உருது கல்வி கற்கும் வகையில் இது இருக்கும்.

முஸ்லிம் பெண்களுக்கு வட்டி யில்லா கடனுதவி சுமார் 50 ஆயிரம் வரை வழங்கப்படும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃபு சொத்துகள் மீட்கப்படும்; மாநி லம் முழுவதிலுமுள்ள பள்ளிவா சல் இமாம்கள், மோதினார்க ளுக்கு மாத வருமானமாக முறையே 3 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் வழங் கப்படும்.

அதோடு, மத கல்வி நிறுவனங் களான மதரஸô வில் கல்வி கற் கும் மாணவர்க ளுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும். வட்டி யில்லா இஸ்லாமிய வங்கி முறையை மாநிலத்தில் நிறுவ ஏற் பாடுகள் செய்யப்படும். தெலுங்கு தேசக் கட்சி, முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தில் தலையிடாது முஸ்லிம் பெண்கள் திருமண உதவித் தொகையாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்...” என்றெ ல்லாம் அட்டகாசமான அறிவிப் புகளை செய்துள்ள சந்திர பாபு நாயுடு,

நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை தெலுங்கு தேசம் கட்சி அமுல்ப டுத்தும் என்றும், முஸ்லிம் சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக தனி முஸ்லிம் அதிகாரக் கொள்கை திட்டம் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாயுடு காரு அறிவிப்பெல் லாம் பலமாகத்தான் இருக்கு; ஆனா நீங்க ஆட்சிக்கு வந்துட் டீங்கன்னா... இதையெல்லாம் செயல்படுத்துவீங்களாங்கிறது டவுட்டாகத்தான் இருக்கு. அரசியல்வாதிகளோட பேச்சை எப்படி உறுதியாக நம்ப முடியும். அப்புறமா, இந்த திட்டங்களை யெல்லாம் செயல்படுத்த விடாம எதிர்கட்சிகள் தடுக்கிறதுன்னு ஒத்த வரியில பதில் சொல்லிடுவீங்க. இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஹிதாயா

Pin It