இந்தியாவின் பொருளாதார இதயமாக துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் மும்பை, தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது. மும்பை தாக்குதல் வரலாற்றில் ஜூலை 13,2011 புதிய இடத்தைப் பிடித்துள் ளது.
1993 மார்ச் 12, 2006 ஜூலை 11, 2008 ஜூலை 26 ஆகிய தேதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதாகவோ, தண்டனை பெற்றதாகவோ தகவல் இல்லை. 2008 தாக்குதலில் மட்டும் அஜ்மல் கசாபை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கிறது மஹாராஷ்டிரா அரசு.
கடந்த ஜூலை 13ம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 21 அப்பாவிகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. 140க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜாவேரி பஜார், தாதர், ஓப்ரா ஹவுஸ் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்துள்ளதால் இழப்புகளை அதிகப்படுத்தியுள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல்க ளுக்கு மும்பை இலக்காகும்போ தெல்லாம் மத்திய அரசும், மஹா ராஷ்டிர அரசும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்; தீவிரவா தத் தடுப்புப் படை விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று மீடியாக்களுக்கு தகவல் அளிப்ப தும், நமது சூப்பர் உளவுத்துறை அமைப்புகளோ, சம்பவ இடத் திற்குச் செல்வதற்கு முன்பே லஷ் கரே தய்யிபா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆகியவைதான் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று தங்களது இயலாமையை வெளிப் படுத்துவதையும் கண்டு நாட்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.
இப்படித்தான் தற்போது நிகழ்ந் துள்ள குண்டு வெடிப்பை நடத்தி யவர்கள் இந்தியன் முஜாஹித் தீன் என்ற அமைப்பினர் என்று சொல்லிவிட்டு தங்களது பொறுப் பற்றதனத்தை வெளிப்படுத்தியுள் ளது நமது உளவுத்துறை.
இந்தியன் முஜாஹித்தீன் என்ற அமைப்பே டெல்லி காவல்துறை யின் மூளையில் உதித்ததுதான். அப்படியொரு அமைப்பே இல்லை என்று பிரபல எழுத்தா ளர் அருந்ததி ராய் பலமுறை மீடியாக்களுக்கு பேட்டியளித்தி ருந்தார்.
அருந்ததி ராயின் இக்கூற்றை இன்றுவரை டெல்லி போலீஸô ரால் மறுக்க முடியவில்லை. இந் தியன் முஜாஹித்தீன் அமைப்பை நடத்துபவர்கள் யார்? அதன் தலைமையகம் எங்கே அமைந் துள்ளது? இதுவரை நடந்த குணடு வெடிப்புகளின்போதும் இந்தியன் முஜாஹித்தீனை கார ணம் காட்டிய விசாரணை அமைப் புகள் அவ்வமைப்பைச் சேர்ந்த எவரையாவது கைது செய்திருக் கிறதா என்பது போன்ற கேள்வி களுக்கு டெல்லி போலீúஸô, தீவிரவாதத் தடுப்புப் படையி னரோ இதுவரை பதிலளிக்க வில்லை.
இந்நிலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் குண்டு வெடிப்புகளுக்கு யார்தான் கார ணம்? இதற்கான பதிலைத்தான் இன்னும் தேடிக் கொண்டிருக் கின்றன நமது உளவு அமைப்பு கள்.
மாநிலக் காவல்துறையின் திறமையோடு உளவு அமைப்பை ஒப்பிட்டுப் பார்த்தால் காவல்து றையின் செயல்பாடுகள் திருப்தி யளிப்பதாகவே உள்ளது.
2008ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பும், 2010ம் ஆண்டு புனேயில் ஜெர்மன் பேக் கரி குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பும் இது குறித்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ இந் திய உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அப்படியிருந்தும் நமது உளவுத்துறை கோட்டை விட்டது.
வெளிநாட்டு சதிகளை உளவ றிந்து சொல்வதற்கென்றே"ரா' (தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஹய்க் அய்ஹப்ஹ்ள்ண்ள் ரண்ய்ஞ் - தஅர) என்ற உளவு அமைப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த ரா என்னதான் செய்து கொண்டிருக் கிறது என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
""எல்லாத் தீவிரவாதத் தாக்குதல்களையும் தடுத்து விட முடியாது. ஆனால் 99 சதவீத தாக்குதல்கள் கடுக்கப்பட்டுள்ளன...'' என சிரிப்பூட்டும் அறிக்கையை வெளியிட்டுள் ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல். அப்படி தடுக்கப்பட்ட 99 சதவீத தாக்குதல் திட்டங்களில் ஒரு சிலவற்றையாவது ராகுல் விளக்கியிருந்தால் நாட்டு மக்கள் ஓரள வேணும் திருப்தி அடைந்திருப்பார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்ப ரமோ, "குண்டு வெடிப்புக்கு உளவுத்துறை காரணம் இல்லை; உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் முன்னேற்றம் காணப் படுகிறது. தினமும் உளவுத் தகவல்களை சேகரித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது...'' என வியாக்கியானம் தந்து பொது மக்களை நறநறக்க வைக்கிறார்.
உண்மையில் இந்த குண்டு வெடிப்புகள் எல்லாமே உளவுத்துறையின் தோல்வியால் தான் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு உளவு ஸ்தாபனங்கள்தான் பொறுப்பேற்க வேண் டும். அமெரிக்காவில் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் சுமார் 10 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் அங்கு மீண்டும் ஒரு தாக்குதல் நிகழவில்லை என்பது அமெரிக்க உளவு அமைப்பின் திறமையான செயல் பாட்டை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
குண்டு வெடிப்புகள் நிகழ்வது ஒரு புறம் என்றால் - அதில் ஈடுபட்டவர்கள் என்று நமது விசாரணை அமைப்புகள் கைது செய் யும் குற்றவாளிகளும் பெரும்பாலும் நீதி மன்ற வழக்குகளின்போது விடுதலை செய் யப்படுகிறார்கள்.
2008 மும்பை குண்டு வெடிப்பின் சூத்திர தாரி என்று கைது செய்யப்பட்ட பாகிஸ்தா னைச் சேர்ந்த ராணாவை அமெரிக்க கோர்ட் விடுதலை செய்கிறது. மும்பை தாக்குதலில் யாரை நமது விசாரணை அமைப்புகள் முக்கி யக் குற்றவாளி என்று அடையாளப்படுத் தியதோ அவரை அமெரிக்க கோர்ட் விடு தலை செய்கிறது என்றால் - அந்த ராணா விற்கு எதிராக வலுவான ஆதாரங்களை விசாரணை அமைப்புகள் சமர்ப்பிக்கவில்லை என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
ஆக இந்த லட்சணத்தில் இந்தியாவில் பாதுகாப்பு இருந்து கொண்டிருக்கும் நிலை யில் சர்வதேச அளவில் இந்தியா வல்லரசு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
இலங்கைத் தமிழர்களை இனப்படு கொலை செய்த அதிபர் ராஜபக்ஷேவை போர்க் குற்றத்திலிருந்து எப்படிக் காப் பாற்றலாம் என்று நமது உளவுத்துறை காட் டும் முஸ்தீபுகளில் கால் பங்கை இந்திய பாதுகாப்பு விஷயத்தில் செலுத்தியிருந்தால் மும்பை தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
தற்போது நிகழ்ந்துள்ள மும்பைத் தாக்கு தல் விவகாரத்தில் ஒரு ஆறுதலான விஷயம் என்று சொன்னால்... அது இந்திய முஸ்லிம்க ளின் மீது விசாரணை அமைப்புகள் சந்தேகப் பட்டு மீடியாக்கள் சொல்லாததுதான். இந்த இடத்தை சமீப காலமாக காவி பயங்கரவா தம் ஆக்கிரமித்துக் கொண்டதும் இதற்கு காரணமாகக் கொள்ளலாம்.
உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ""வெளிநாட்டுத் தீவிரவாதத்தை விட காவி பயங்கரவாதமே இந்தியாவிற்கு ஆபத்தா னது...'' என்று பேசியிருந்தது இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
எனவே குண்டு வெடிப்பின்போது - "காவி களின் பக்கமும் விசாரணை அமைப்புகளின் பார்வை திரும்ப வேண்டும். இதற்கு மாலேகான், நான்தெத், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் காவிகள் நடத்திய குண்டு வெடிப்புகளே ஆதாரங்களாக இருக்கின்றன.
இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் இதுபோன்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணம் வெளிநாட்டு சக்திகளா? உள்நாட்டு பயங்கரவாதிகளா? என்பதை மத்திய அரசு முதலில் முடிவு செய்ய வேண்டும். இதுதான் இந்தியாவின் இன்றைய தேவை.
- ஃபைஸல்
மும்பை குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு தொடர்பா?
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரவாதத் தடுப்புப் படையும், மும்பை காவல்துறை யும் புலன் விசாரணையில் ஈடு பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய் சிங், "மும்பை குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதை மறுக்க முடி யாது.
இந்த சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தொடர்பு குறித்த ஆதாரம் என்னிடம் இல்லை. ஆயி னும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது...'' எனத் தெரிவித்திருப்பது கவனத்திற்குரி யதாக உள்ளது.
புலனாய்வு அமைப்புகள் மும்பை குண்டு வெடிப் பில் ஆர்எஸ்எஸ்ஸýக்கு தொடர்பிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணையை மேற்கொள்ள வேண் டும். கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டு தப்பித்து வந்ததை மீடியாக்களும், விசாரணை அமைப்புகளும் கண்டு பிடித்திருக்கின் றன.
மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த 3 இடங்களில் ஒன்றான ஜாவேரி பஜார் குண்டு வெடிப்புக்கு ஸ்கூட் டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வைக்கப் பட்டிருந்த வெடிபொருட்கள்தான் வெடித்துச் சிதறி யுள்ளது. இந்த ஸ்கூட்டரின் உரிமையாளரை விசா ரணை அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
இதை வைத்துப் பார்க்கும்போது திக் விஜய் சிங் கின் கூற்றில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. மாலேகானில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய இந்துத் துவா அமைப்புகளில் ஒன்றான அபினவ் பாரத், இக்குண்டு வெடிப்புகளுக்கு ஸ்கூட்டரை பயன்படுத் தியது. இது காவல்துறைக்குத் தெரிந்த செய்திதான். மாலேகான் குண்டு வெடிப்பிலும், கடந்த அக்டோபர் 2009ல் மர்கோவாவில் கிரேஸ் சர்ச்சுக்கு அருகில் உள்ள மைதானத்தில் நடந்த ராம் லீலா நிகழ்ச்சி யின்போது நிகழ்ந்த குண்டு வெடிப்பிலும் ஸ்கூட்டர் பயன்படுத்தப்பட்டதும் இரண்டு சம்பவங்களிலும் அபினவ் பாரத்தும், சனாதன் சாஸ்தா அமைப்பும் சம்பந்தப்பட்டிருப்பதை விசாரணை அமைப்புகள் வெளிப்படுத்தியிருந்தன. மும்பை குண்டு வெடிப்பும் இந்த கோணத்தில் விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளி வரலாம்.
- ஃபைஸல்