மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

தமிழ்த் தேசியப் பெருந்தலைவர் என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் மரியாதைக்குரிய அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு வணக்கம்.  நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்; விரும்புகிறேன்.

‘கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால் அங்க ரெண்டு கொடுமை அவுத்துப்போட்டு ஆடுச்சாம்’ என்ற கதையாக இந்துத்துவ-சாதியத்தை அடித்தளமாகக் கொண்ட இந்திய தேசிய கொள்கையிலிருந்தும் பார்ப்பனியக் கொள்கையிலிருந்தும் விடுபட்டு தமிழ்த்தேசியக் களத்திற்கு வந்தால் இங்கும் அதே கொடுமை தலைவிரித்தாடினால் என்ன செய்வதய்யா?  அந்தக் கொடுமைகளை உங்களைப் போன்றவர்களும் முன்னெடுத்துச் செல்வதைப் பொறுக்க முடியாமல்தான், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் விடுதலைச் சிறுத்தைகளில் ஒருவனாகவும் இருந்து தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.

nedumaran_300உங்களைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது திட்டமிட்ட அரசியல் நோக்கத்துடனோ இம்மடலை தங்களுக்கு எழுதவில்லை.  உங்களை, உங்களின் அரசியல் பயணத்தை மதிப்பவன் என்கிற உரிமையில் இந்த மடலை எழுதுகிறேன். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் உங்களால் பதில் சொல்லப்படுவதில்லை. ஒரே வார்த்தையில் அதை அவதூறு என்று சொல்லாமல் - மௌனமாக இருந்துவிட்டுச் செல்வீர்கள். முன்னர் எல்லா காலத்தையும் விட ஏராளமான இளைஞர்கள் இன்று தமிழ்த் தேசிய அரசியலில் ஈர்ப்பாகி அமைப்புகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இனியும் ஏமாறக்கூடாது என்பதாலேயே இதை எழுதுகிறேன்.

அது ஒரு காலம்.  உங்களை வியந்து நிமிர்ந்து பார்த்த காலம். உங்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள மதுரை, விவேகானந்தா அச்சகத்திற்கு நடையாய் அலைந்த காலம் அது.  ‘விடுதலைப் புலிகள்’, ‘பிரபாகரன்’, ‘தமிழ்த்தேசியம்’ என்கிற வினைச்சொற்களை நீங்கள் பேசப் பேச என்னைப் போன்றவர்கள் அதுவாகவே மாறத் துடித்த காலம்.  இன்று, ‘ஈழத் தாய்’ என்று உங்களைப் போன்றவர்களால் அழைக்கப்படுகிற ஜெயலலிதா அம்மையாரின் கடந்தகால ஆட்சியில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா எனும் கொடுஞ்சிறையில் நீங்கள் அடைக்கப்பட்டபோது பொடா எதிர்ப்பு இயக்கம் கட்டி தமிழகம் முழுக்க விடுதலைப் புலிகளை ஆதரித்தும் ஜெயலலிதா அம்மையாரைக் கண்டித்தும் களமாடிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் என்னைப் போன்ற இலட்சக்கணக்கான சிறுத்தைகள் பின்தொடர்ந்தபோது ஜெயலலிதா அம்மையாரே ஆட்டம் கண்டதை நீங்கள் கடலூர் சிறைக்குள்ளிருந்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சிறை உடைத்து நீங்கள் விடுதலையாகி வெளியே வந்தபோது, கடலூர் நடுவண் சிறையிலிருந்து சென்னை வரை வழிநெடுக மாலை மரியாதையுடன் வரவேற்பு கொடுத்தவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.   இதையும் அய்யா அவர்கள் நேரில் பார்த்திருப்பீர்கள்.  அந்த அளவுக்கு உங்கள் மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் அடங்காப் பற்று கொண்டவர்கள் சிறுத்தைகள்.

கடலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தவுடன், உங்களைப் போன்று பொடாவில் சிறை சென்றோரின் விடுதலைக்காக தமிழகம் முழுக்கக் களமாடிய எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களையும், பொடா எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அய்யா நல்லக்கண்ணு போன்றோரையும் சந்திப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நீங்கள் நேரடியாக கோபாலபுரம் சென்று இன்றைக்கு தமிழின துரோகியாக உங்களால் அடையாளங்காட்டப்பட்டுவரும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைச் சந்தித்து, தி.மு.க. கொடியைக் கையிலேந்தியபோதே உங்கள் அரசியல் உள்நோக்கம் அம்பலப்பட்டுப்போனது.

உங்கள் விடுதலைக்காக உண்மையாகக் களமாடிய விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரை சந்திக்க சிறுத்தைகள் அலுவலகம் செல்ல உங்களுக்கு எது தடையாக இருந்தது அய்யா?

தமிழ், தமிழினம், தமிழ்த்தேசியம், விடுதலைப் புலிகள் ஆதரவு, சாதி ஒழிப்பு என்று கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் தேசியக் களத்தில் களமாடி வரும் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைப் புறக்கணித்ததற்கான உங்களது உள்நோக்கம் இப்போதுதான் புரிகிறது.  என்னைப் போன்றவர்களுக்கு அது தாங்க முடியாத வேதனையாக அமைந்தது. ஏனென்றால் நீங்கள் வசித்த மயிலாப்பூர் பகுதியிலும், அடையாறு பகுதியிலும் மட்டுமே தெரியப்பட்ட தமிழ்த்தேசிய அரசியல், விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் என்கிற விடுதலை அரசியலை, நுழைய முடியாத கடைசிச் சேரியெங்கும் கொண்டு சென்றவர் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் பொடா கொடுஞ்சிறை என்ற போதும் "கைது செய்து பார்!" என்று கொள்கைரீதியாகவும் உணர்வுரீதியாகவும் அறைகூவல் விட்டு தமிழகம் முழுக்க பொடாவை எதிர்த்து தமிழ்த் தேசிய அரசியல் நெருப்பைப் பற்ற வைத்தவர் எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.  அன்றைக்கு உங்களைப் போன்றவர்களை பொடாவில் கைது செய்து விடுதலைப் போராட்டத்தை முடக்கிய ஜெயலலிதாவை - இந்துத்துவத்தை, பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஜெயலலிதாவை - இன்றைக்கு உங்களைப் போன்றவர்களாலேயே தமிழர்களுக்கு வாராது வந்த மாமணியாய், வேலுநாச்சியாராய் அடையாளம் காட்டப்படுவது எந்தவிதத்தில் சரி அய்யா?

கடந்த ஜனவரி 2, 2009 அன்று உலக நாடுகளின் உதவியோடு சிங்கள இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பிறகு, எமது தலைவர் உங்களைச் சந்தித்து அனைவரையும் ஒருங்கிணைத்துப் போராட அழைப்பு விடுத்தபோது, நீங்கள் அண்ணன் வைகோவை பெரியார் திடலுக்கு அழைத்து வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டு, பின் அழைத்து வராதது ஏன் அய்யா?

தலைவர்கள் கூடி முடிவெடுக்கிற நாளை, இடத்தை நீங்களே பலமுறை தள்ளித் தள்ளி வைத்தீர்கள்.  இதற்கான காரணத்தை என்றைக்காவது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா?

ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, கேவலம் இந்துத்துவவாதிகளையும், பா.ஜ.க.வினரையும்கூடச் சந்திக்கும் நீங்கள், அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியை, எமது தலைவர் தொல்.திருமாவளவன், ஆசிரியர் கி.வீரமணி, மருத்துவர் இராமதாசு ஆகியோர் சந்தித்ததை மட்டும் ஏன் அரசியலாகப் பார்த்தீர்கள்?

உங்களது நோக்கம் கலைஞரை இந்த விவகாரத்தில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதா? அல்லது எமது தலைவரின் ஒருங்கிணைப்பில் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைவதை தாங்கள் விரும்பவில்லையா?

உங்களுடைய ஒத்துழைப்பு இல்லாததால், அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைக்க முடியாத அதிருப்தியாலும், மன உளைச்சலாலும் கடந்த ஜனவரி 14, 2009ஆம் ஆண்டு மறைமலை நகரில் சாகும்வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தைத் தொடங்கிய எமது தலைவரின் போராட்டத்தில் நீங்களோ, மற்ற தமிழ்த் தேசியவாதிகளோ உடன் உண்ணாநிலையிருந்து அரசுக்குக் கூடுதல் நெருக்கடி கொடுத்திருக்கலாமே?  ஈழத்தில் மக்கள் கொத்துக்கொத்தாய் செத்துக் கொண்டிருந்தபோதும், போர் உக்கிரத்தை அடைந்து கொண்டிருந்தபோதும் ஜெயலலிதா தலைமையில் அணி கட்டத் துடித்துக் கொண்டிருந்த திரு. எம்.நடராசன் அவர்களோடு சேர்ந்து  அறிவிக்கப்படாத ‘ராஜகுரு’ போல தாங்கள் செயல்பட்டது ஏன் என்று விளக்க முடியுமா அய்யா?

நீண்டகாலமாக இந்த இனத்திற்காகவும் ஈழத்திற்காகவும் தியாகம் செய்த எத்தனையோ பேர் இருக்க  நடராசனோடு கூட்டுச் சேர்ந்திருப்பது ஏன் என்பதைச் சொல்ல முடியுமா? தனிப்பட்ட முறையில் நீங்கள்  நடராசனோடு மட்டுமல்ல எவருடனும் நட்பு பாராட்டலாம். ஆனால் நீங்களும் நடராசனும் ஒன்றிணையும் புள்ளிக்கு தமிழர் அரசியல் என்ற ஜோடணை எதற்கு?

ஈழ மக்களைக் காப்பாற்றுவதைவிட கருணாநிதியை எதிர்ப்பதில்தான் உங்களுடைய முழு கவனமும் இருந்ததை என்னைப் போன்றவர்கள் பின்னர்தான் புரிந்துகொள்ள முடிந்தது.  இராஜபக்சேவைத் திட்டுவதைவிட, கருணாநிதியைத் திட்டுவதில்தான் உங்களுக்கு கவனமும் ஆர்வமும் இருந்தது.  அதைவிட, எமது தலைவர் திருமாவளவன் தலைமையில் எந்த அணியும் உருவாகிவிடக் கூடாது என்பதிலும் கூடுதல் அரசியல் கவனத்துடன் நீங்கள் இருந்தை அறிந்துகொள்ள முடிந்தது.  ஏனென்றால், ‘தி.மு.க. அணியும் வேண்டாம்; அதிமுக அணியும் வேண்டாம்.  தமிழ்த் தேசிய ஆற்றல்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டுவோம்!’ என்று எமது தலைவர் 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தொடர்ந்து அறைகூவல் விடுத்ததை, தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதற்கான நல்ல வாய்ப்பு என்று, உங்களைப் போன்ற மூத்த தமிழ்த் தேசியவாதிகள் முன்வந்து  களத்தில் குதித்திருக்கலாம்.  ஆனால் அமைதியாக, கம்யூனிஸ்டுகள், வைகோ போன்ற தலைவர்களை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து, ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் சேர்ப்பதில்தான் குறியாக இருந்தீர்களே தவிர, தமிழ்த் தேசிய அரசியல் ஆற்றல்களை ஒருங்கிணைக்க என்ன முயற்சிகள் செய்தீர்கள் அய்யா? அன்றைக்கு மூன்றாவது அணி உருவாவதைத் தடுத்து என்ன கண்டீர்கள், வைகோவுக்கு ஜெயலலிதா இழைத்த துரோகத்தைத் தவிர?

‘ஆஸ்பத்திரியில் இழுத்துக்கிட்டிருக்கும்போது ஒண்ணும் செய்யாம, கருமாதியில போய் அழுது கத்தினானாம் ஒருவன்’ என்பது போல, போர் நடக்கும்போது உங்களைப் போன்றவர்கள் அமைதி காத்துவிட்டு, இப்போது முள்ளிவாய்க்கால் நினைவுக் களம் கட்ட ஆரம்பித்திருக்கிறீர்களே அய்யா!

தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவு அடைந்த அந்தப் போராளிகள் மற்றும் பொதுமக்களின் வீரத்தை ஒவ்வொரு தமிழனும் உள்வாங்க வேண்டும்;  அந்தத் தியாகத்தை, அர்ப்பணிப்பை தமிழகம் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரும் நெஞ்சில் நிறுத்த வேண்டும் என்கிற உங்களது முயற்சி பெரும் பாராட்டுக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான்.  ஆனால் அந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் கட்டுவதிலும்கூட நீங்கள் அரசியல் செய்வது நியாயந்தானா?

தமிழீழ விடுதலைக்காகவும், விடுதலைப் புலிகளை ஆதரித்தும், தமிழகத்தில், தமிழ்த் தேசியத் தலைவர்களிடத்திலும், இலட்சக்கணக்கான சிறுத்தைகளிடத்திலும், தமிழ்த் தேசியத் தொண்டர்களிடத்திலும் நிதி கோராமல், ஒரு சில முதலாளிகளிடம் மட்டும் பணம் பெற்று அந்தப் போராளிகளின் வீரத்தை, தியாகத்தை உங்களைப் போன்றவர்களே கொச்சைப்படுத்துவது நியாயந்தானா?

ராஜீவ் கொலை வழக்கில் உலகிலே பெரிய நீதிமன்றப் படுகொலையாக 26 பேருக்கு தூக்கு என்ற தீர்ப்பு வந்தபோது மக்களிடம் நிதி திரட்டி நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்து வென்றோமே, நினைவில்லையா? ஐந்து ரூபாயும் பத்து ரூபாயும் கொடுத்த ஏழைத் தமிழனின் அந்த வெற்றிதானய்யா கனமானது.

கடந்த தை முதல் மற்றும் இரண்டாம் நாள்களில் தஞ்சையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் கட்டுவதற்காகத் தனது சொகுசுந்து, தங்க மோதிரம் மற்றும் சங்கிலிகளை ஏலம் விட்டு அதில் கிடைத்த 50 இலட்சம் ரூபாயை மேடையிலேயே உங்களிடம் கொடுத்ததை - ஏற்கனவே பலமுறை திரு. ம.நடராசன் அவர்கள் ஒத்திகை பார்த்துத்தானே அரங்கேற்றியிருப்பார்?

nedumaran_natarajan

திடீரென ஏலம் விடப்பட்டதாம்! அந்தக் கூட்டத்திலேயே 50 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாம்!  அந்தப் பணம் உங்களிடம் சேர்க்கப்பட்டதாம்! பின்பு அந்த மகராசன் சொகுசுந்து இல்லாததால் நடந்தே சென்றாராம்!  ஏன் இந்த கதை, திரைக்கதை, நாடகம்?  அந்தப் புதிய தமிழ்த் தேசியத் தளபதி, இனி அவர் இருக்கும் வீடான பெசன்ட் நகருக்கோ வெளியூருக்கோ பேருந்துகளில்தான் போகப் போகிறாரா?  ஏன் இந்த நாடக அரங்கேற்றத்திற்குப் பலியானீர்கள் அய்யா?  இந்த நாடகத்தின் இன்னொரு ‘துணை பாத்திர’மாக எந்த அரசியல் நோக்கமும் இல்லாத ஈழத்துக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களையும் பலியாக்கியது ஏன் அய்யா?

ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் புனைந்து கைது செய்யப்பட்ட 26 பேரின் விடுதலைக்காக உயிர்காக்கும் குழு அமைத்து தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க நிதி திரட்டிய தாங்களா இப்படியொரு முதலாளியிடம், அதுவும் அரசியல் புரோக்கராக இருக்கும் ம.நடராசன் போன்றவர்களிடம் மொத்தப் பணத்தையும் வாங்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகத்தை, அர்ப்பணிப்பை கொச்சைப்படுத்துவது? இது எந்த வகையில் சரி?  அந்தப் பணம் நியாயமான பணமா  அல்லது ஜெயலலிதாவின் ஆட்சியில் கிடைத்த ஊழல் பணமா என்கிற கேள்விக்குள் யாரும் போகவில்லை.  ஆனால் நடராசன் போன்றவர்களை உலகத் தமிழர்களிடத்தில் தமிழ்த்தேசியவாதியாகத் தூக்கி நிறுத்துவதன் நோக்கம்தான் புரியவில்லை.

ஒவ்வொரு தமிழனிடத்திலும் நிதி வசூல் செய்து அதன் மூலம் தமிழ்த் தேசியத்தைப் பொதுமைப்படுத்த-பரவல்படுத்த முயற்சிக்காமல் ம.நடராசன் போன்ற அரசியல் புரோக்கர்களிடம் பணம் வாங்குவதன் நோக்கம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை தனியுடைமை ஆக்கவா?  அல்லது சாதி ஆதிக்கப் பின்னணி உள்ள நடராசன் போன்றவர்களை பொதுமைவாதியாகக் காட்டுகின்ற முயற்சியா?

பார்ப்பனர்களுக்கும் மன்னார்குடி குழுவினருக்கும் போயஸ் கார்டனை கைப்பற்றுவது யார் என்று வந்த போட்டியில் பார்ப்பனர்கள் வென்று, மன்னார்குடி கும்பல் வெளியேற்றப்பட்ட நிலையில், நடராசனை தமிழர் அரசியலின் அடையாளச் சின்னமாக உருமாற்றம் செய்கின்றீர்களே நியாயமா?

கடந்த காலங்களில் ‘தமிழால் ஒன்றிணைவோம்’ என்று தமிழகத்தில் பல இடங்களில் தமிழகப் பெருவிழாக்களை நடத்திய ஆனாரூனா என்று அழைக்கப்படும் நா.அருணாசலம் கடைசியில் தமது ‘நந்தன்’ இதழில் (பேராசியர் சுபவீ ஆசிரியராக இருந்தபோது அல்ல) சாதிவெறியில் அம்பலப்பட்டு நின்றதுபோல நடராசன் போன்றவர்கள் பூலித்தேவன், மருதுபாண்டியர்கள் விழாக்களை நடத்தி தமிழகம் முழுக்க தமது சாதிவெறியை வெளிப்படுத்தி வந்தபோதும் தாங்கள் மட்டும், சாதிவெறியர்களோடு கைகோர்ப்பது தமிழினத்திற்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா?

இது போதாதென்று தமிழீழக் கவிஞர் காசிஆனந்தன் அய்யா அவர்களையும் சாதி வெறியர்களோடு கைகோர்க்க வைத்து, அந்த அப்பாவி மீது சாதியக் கறை படியவைப்பது நியாயம்தானா?

இப்படி ஒருபக்கம் சாதிவெறியர்களோடு கைகோர்ப்பது, கோவையில் இசுலாமியர்களின் தொழில் நிறுவனங்களை அழித்தொழிப்பதில் உறுதுணையாக இருந்த இந்துத்துவவாதி பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு உங்களது உலகத் தமிழர் பேரமைப்பு மூலம் உலகப் பெருந்தமிழர் பட்டத்தைக் கொடுத்து இந்துத்துவ மதவெறியர்களோடும் கை கோர்ப்பது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதில்லையா?

இந்திய தேசியத்திற்கு அடிப்படை இந்துத்துவம்.  அந்த இந்துத்துவத்திற்கு அடிப்படை சாதியம்.  இந்திய தேசியம், இந்துத்துவம், சாதியம் இந்த மூன்றும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, இவை மூன்றுக்கும் மாற்று தமிழ்த்தேசியம்தான் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல.  ஆனால் நீங்கள் தெரிந்தே இப்படி இந்துத்துவ மதவெறியர்களோடும் சாதி ஆதிக்க வெறியர்களோடும் கை கோர்ப்பது தமிழ்த் தேசியத்திற்குள் இருந்துகொண்டு தமிழ்த் தேசியத்தை முடக்கவும் அழிக்கவும் செய்யும் சதி இல்லையா?

செப்டம்பர் 11ஆம் நாள் மாவீரன் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மக்களைக் கூடவிடாமல் ஜெயலலிதா அரசு செய்த காட்டுமிராண்டித்தனமான செயலை நீங்கள் இதுவரை கண்டித்து அறிக்கை விடாததிலிருந்து உங்களது சார்பு நிலை எங்களுக்குப் புரிகிறது.  தமிழீழப் படுகொலைகளை நினைவுபடுத்தும் வகையில் தலித்துகள் பரமக்குடியில் கொல்லப்பட்டதைக் கண்டும் நீங்கள் அமைதி காத்தது ஜெயலலிதாவுக்காகவா? அல்லது நடராசனின் சாதிப் பின்னணிக்காகவா?  எந்த ஒரு பிரச்சனைக்காகவும் தினமணி ஆசிரியரைப் போல அந்த நாளிதழில் சிறப்புக்கட்டுரைகளை எழுதித் தள்ளும் நீங்கள் என்றாவது பரமக்குடி படுகொலை குறித்துக் கண்டித்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனோம்.

அது மட்டுமல்ல, தமிழ்த் தேசியம் என்கிற பெயரில் நடத்தும் பல கூட்டங்களிலும் போராட்டங்களிலும் தேவேந்திரர் கூட்டமைப்புத் தலைவர் திரு.பசுபதி பாண்டியன் அவர்களை அழைத்து வந்து உங்கள் அருகில் உட்கார வைத்து ‘பேலன்ஸ்’ செய்து வந்தீர்கள்.  கடந்த 10-1-2012 அன்று திரு. பசுபதி பாண்டியன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து துடித்துப்போய் எமது தலைவர் உள்ளிட்ட தலித் மக்களுக்காகப் போராடும் தலைவர்கள் மட்டுமே தூத்துக்குடி சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்கள். நீங்கள் இதனைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை;  அந்த இடத்திற்கும் போய் அஞ்சலி செலுத்தவில்லை. நடராசன் வருத்தப்படுவார் என்பதுதான் இதற்குக் காரணமா?  அல்லது தலித் தலைவர்களுக்கெல்லாம் அஞ்சலி ஒரு கேடா என்கிற சாதிய மனப்பான்மையா?

தூக்குக் கொட்டடியில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கெதிராக ஜெயலலிதா அரசு மேற்கொள்ளும் துரோகச் செயலைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது வெளியிட்டிருக்கிறீர்களா?

கடந்த 18-1-2012 அன்று மலையாளிகளால் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட திருவேற்காடு சாந்தவேலு உடலை ஜெயலலிதாவின் காவல்துறையே தூக்கிச் சென்று திருட்டுத்தனமாக எரித்ததே...  அதையாவது கண்டித்து அறிக்கை விட்டீர்களா?   திருவேற்காடு சாந்தவேலு உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தமிழ் உணர்வாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததே ஜெயலலிதா போலிசு,  இதனைக் கண்டிக்க முன்வராததன் நோக்கம்தான் என்ன?

இப்போதுதான் உங்களது உள்நோக்கம் எமக்குப் புரிகிறது.  ஜெயலலிதாவின் அரசியல் புரோக்கரான நடராசனின் செயல்திட்டம் - கருணாநிதியை வீழ்த்தி, ஜெயலலிதாவை அரியணையில் அமர வைப்பது.  அதற்கு நீங்களும் உதவியாயிருந்தீர்கள். இப்போது உங்கள் வேலை முடிந்து விட்டது.  இந்துத்துவப் பார்ப்பனியத்தின் நோக்கத்தை நீங்கள் நிறைவேற்றி வைத்தீர்கள்.  உங்களது தமிழ்த் தேசியப் பணி இவ்வாறு தொடர்கிறது.

தமிழகத்தில் நீங்கள் காங்கிரசுப் பேரியக்கத்தின் தலைவராக இருந்ததிலிருந்தும், அதற்கு முன்பிருந்தும் சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடிக்கொண்டுதான் இருந்தன... இருக்கின்றன.  விழுப்புரம், ஊஞ்சனையிலிருந்து மேலவளவு, பரமக்குடி வரை தலித்துகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.  வீடு, வாசல்களை இழந்து ஊர் ஊராய் உறவினர்களின் வீடுகளில் ஓடி ஒளியும் தலித்துகளின் வாழ்நிலை, ஈழத் தமிழர்களின் வாழ்நிலைக்குச் சற்றும் குறைந்ததல்ல.  சிங்கள இனவெறியர்களைப் போல சாதி வெறியர்களும், சிங்களக் கொடுங்கோன்மை அரசைப் போல தமிழக ஆட்சியாளர்களும் அரச பயங்கரவாதத்தை தலித்துகள் மீது பாய்ச்சியபோது கண்டித்துப் போராட முன்வராத உங்களது தமிழ்த் தேசியம் உண்மையானதாக எப்படி இருக்க முடியும்?

ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விடுதலை அரசியல்தான் தமிழ்த்தேசியம்.  சாதித் தமிழன் செத்தால்தான் குரல் கொடுப்போம்! போராடுவோம்!  தலித்துகள் செத்தால் கண்டுகொள்ள மாட்டோம் என்கிற மனநிலை மனிதநேய மனநிலையா?  ஒடுக்குமுறை எங்கு நிகழ்ந்தாலும் அங்கு நிற்பவன்தான் விடுதலையை நேசிப்பவனாக இருப்பான்.  ‘ஈழ விடுதலைக்காக மட்டும் நிற்பது; தலித் விடுதலைக்கு எதிராக இருப்பது’ என்கிற உங்களது இரட்டை நிலைப்பாடு மேதகு பிரபாகரன் அவர்களின் நிலைப்பாட்டிற்கு, கொள்கைக்கு எதிரானது.

2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டில் பேசிய எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், "தமிழீழ விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் போராட்ட வெற்றிக்குப் பின் கிடைக்கும் தமிழீழத்தில் சாதி ஒழிக்கப்பட வேண்டும்.  சாதியற்ற தமிழ்த்தேசம் அமைய வேண்டும்" என்று பேசினார்.  இதற்குப் பதிலளித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கவிஞர் புதுவை ரத்தினதுரை, "தம்பி பிரபாகரன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தின் ஊடாகவே சாதியை ஒழித்து வருகிறோம்.  சாதி ஒழிக்கப்பட்ட தமிழீழம்தான் எமக்குத் தேவை.  சாதி அமைப்புடன் கூடிய தேசம் எங்களுக்குக் கிடைத்தால், அப்படியொரு தேசமே எமக்குத் தேவையில்லை" என்று பேசினார்.

மேதகு பிரபாகரன் அவர்களின் வழிநடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அய்யா நெடுமாறன் அவர்களே, இப்போது சொல்லுங்கள், உங்கள் வழி மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் நடராசன் வழியா?

மிக்க வேதனையுடன்

- வன்னிஅரசு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
மாநில செய்தித்தொடர்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

(படம் நன்றி: தினமணி)

Comments

67 comments

67
senthil
திரு.வன்னியரசு அவர்களே ,

முத்துக்குமார் இறுதி நிகழ்ச்சியை திசை திருப்பி மக்கள் எழுச்சி ஏற்படாமல் செய்ததாக வைக்கப்படும் குட்ரசாடுக்கு உங்கள் தலைவர் என்ன பதில் சொல்ல்கிறார்.

கூட்டணி கட்சி என்ற முறையில் அப்போதைய முதல்வருக்கு விசுவாசத்தை காட்ட, ஒரு உணர்வாலரின் தியாகத்தை பயன்படுத்தி கொண்டார் ...

எல்லா ஓட்டு பொருக்கி அரசியலும் ஒன்று தான் , நீங்கள் ஒன்றும் விதி விலக்கல்ல ,,...

உங்கள் மீது விமர்சனம் செய்யும் போது அதை நேரடியாக எதிர் கொள்ளுங்கள் ,. உங்களை காப்பாற்றி கொள்ளும் கேடயமாக தாழ்த்த பட்ட மக்களை பயன்படுதாதிர்கள் ..
Mohan Deva
அண்ணா அருமையாக எழுதி இருக்கிறீர்கள்... இவர்கள் எல்லாம் சாதி வெறி பிடித்த தமிழ் தேசியவாத அரசியல் செய்பவர்கள்...
Thamizhan velu
வன்னி அண்ணா.......வஞ்ச புகழ்ச்சி அணியில் அய்யாவை வதக்கி எடுத்துட்டீங்க......
rajasingam
மிக தெளிவான சிந்தனை உள்ள பதிவு அண்ணா, அய்யா பழநெடுமாறன் அவர்களின் இரட்டை வேடம் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள், அய்யா அவர்கள் இந்த கட்டுரைக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்...... (..இந்திய தேசியத்திற்கு அடிப்படை இந்துத்துவம். அந்த இந்துத்துவத்திற்கு அடிப்படை சாதியம். இந்திய தேசியம், இந்துத்துவம், சாதியம் இந்த மூன்றும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, இவை மூன்றுக்கும் மாற்று தமிழ்த்தேசியம்தான் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. ஆனால் நீங்கள் தெரிந்தே இப்படி இந்துத்துவ மதவெறியர்களோடும் சாதி ஆதிக்க வெறியர்களோடும் கை கோர்ப்பது தமிழ்த் தேசியத்திற்குள் இருந்துகொண்டு தமிழ்த் தேசியத்தை முடக்கவும் அழிக்கவும் செய்யும் சதி இல்லையா)....?
rajkumar
கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. பதிலளிக்கும் கடமை தலைவர்களுக்கு இருக்கிறது.
vijay
பழ.நெடுமாறன் அவர்கள் மீது தாங்கள் வைக்கும் விமர்சனம் சரியே.... அதே போல் உங்களிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன
1.முத்துகுமரன் இறந்த பிறகு அவரது உடலை அன்று மாலையே எரியூட்டவேண்டும் என்று உங்கள் தலைமை முடிவெடுத்தது ஏன்?
2.அன்று கூடியிருந்த மாணவர்களுக்கும் உங்களுக்கும் ஏன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது?
3.அந்த இறுதி ஊர்வலத்தின் முன்சென்ற தாங்கள் அமைப்பு போலீஸ் பாதை மாறி செல்ல பணித்தபோது அதற்க்கு பணிந்த து ஏன்?

பழ.நெடுமாறனை நிச்சயம் ஆதரிக்க்வில்லை... அவர் மீது தாங்கள் வைத்த அனைத்து கருத்தும் உன்மையே என்பது தான் எனது கருத்து.
டான் அசோக்
அருமையான பதிவு. போலி தமிழ்தேசிய வாதிகள் ஆதிக்கசாதிகளை மட்டுமே தமிழர்களாக மறைமுகமாக பறைசாற்றி வருவதை அருமையாக தோலுரித்துள்ளீர்கள்.
வேங்கைஇப்ராஹிம்
தோழர் வன்னிஅரசு அவர்களின் எழுத்துக்கள் தமிழ்தெசிய சாதியவாதத்தை தோழுரித்து காட்டியுள்ளது....
அருள்செழியன்
அய்யா பழ நெடுமாறன், ஜாதிப்பின்னணியை மட்டும் தன் பலமாக க்ருதிவாழும் கைசுத்தமற்ற நடராஜன் போன்ற ஒரு நபரோடு மேடை ஏறுவது அவரது பொது வாழ்க்கையில் ஒரு மாசை ஏற்படுத்தியிருக்கிறது.
மணி
பூலித்தேவனும், மருது சகோதர்களும் சாதி வெறியர்களா?

///இன்றைக்கு தமிழின துரோகியாக உங்களால் அடையாளங்காட்டப்பட்டுவரும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களைச் சந்தித்து, தி.மு.க. கொடியைக் கையிலேந்தியபோதே உங்கள் அரசியல் உள்நோக்கம் அம்பலப்பட்டுப்போனது.///

மிக சரியானது.கருணா நிதி தமிழின விரோதி. இன்னும் உங்கள் கட்சி தலைவருக்கு தெரியவில்லையா? காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழகத்தை விட்டு அகற்றுவேன் என உண்ணாவிரத மேடையில் முழங்கினார் அண்ணன் திருமா.ஆனால் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து எந்த விதத்தில் நியாயம். கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எரியும் கட்டுரை. அய்யா நெடுமாறன் இந்த அரசியல் சகதியில் சிக்கி தடுமாறுவது வேதனை.

அண்ணன் திருமா அடுத்து மஹிந்த ராஜ பக்சவை சந்திக்க போகிறாரா. அடுத்த முறை சந்திக்கும் போதாவது தமிழனை அழித்து வெறி கொண்ட அவனை அழித்தே தீருவோம் என உறுதியாக சொல்ல சொல்லுங்கள் அண்ணா.நன்றி
திலீபன்
நெடுமாறன் அய்யாவை குறைச்சொல்லும் வன்னி அரசு இனத்தினை காட்டிக் கொடுத்த கருணாநிதியோடு மட்டும் மாறா பற்றுக் கொண்ட திருமாவை போற்றுவது சுய கட்சி பற்று. இனத்தினை அழித்த ராசப்பக்சேவின் கரங்களை பற்றி குலுக்கும் போதே உங்களின் கைகளில் ரத்தக்கறை படிந்து விட்டதை தாங்கள் அறிவீர்களா?உண்ணாவிரத முடிவில் காங்கிரசை வீழ்த்துவதே இலட்சியம் என அறிவித்து விட்டு பொதுக்கூட்ட மேடையில் சோனியா காந்தி வாழ்க என கூக்குரலிட்டது திருமாவே ஒழிய வேறு யாருமில்லை. வேதனை.நம்பி நின்ற முத்துக்குமார் நாண்டுகிட்டு செத்ததுதான் மிச்சம்.விடுங்க தல.தேர்தல் வந்தால் தலித் அரசியல்.மற்ற நேரங்களில் தமிழ்த்தேசிய அரசியல்.நெடுமாறன் அய்யா விமர்சனங்கள் அற்றவர் அல்ல.பரமக்குடிக்காக அய்யாவின் குரல் இல்லாமல் போனது அப்பட்டமான தவறு. ஆனால் இதை சொல்லும் தகுதி வன்னி அரசுவிற்கு இருக்கிறதா என்பதுதான் எம் கேள்வி.நீங்கள் மட்டும் தேர்தல் நேரத்தில் அதிமுகவை வீழ்த்தி காங்கிரசை ஜெயிக்க வைக்க முயன்றீர்கள். இதற்கு நெடுமாறன் எவ்வளவோ தேவலாம்.வாய் இருக்கிறது என்பதற்காக கொட்டாவி விடலாம்.கொள்கை எல்லாம் பேசுவதற்கு முன்னால் சுய ஆய்வு செய்து கொண்டு பேசினால் தான் அது சரி.இல்லையேல் இதுவும் சராசரி.
Vairamuthu
தனது சுய விருப்பு வெறுப்புக்கேற்ப தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும் புலிகள் அமைப்பையும் தமிழ்தேசியத்தையும் பகடைக்காயாக பயன்படுத்தும் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் உண்மை முகத்தை உலகறிய வைத்திருக்கீறீர்கள்...
Susindran Panneer
திருமாவளவனுக்கும் கருணாநிதிக்கும் பெரிய வேறுபாடு இல்லை... கருணாநிதி சோனியாவை ஆதரித்தார் திருமா ஒரு படி மேலே போய் சோனியா வாழ்க என்று மேடையில் முழக்கமிட்டு கை உயர்த்தினார்.
ஈழம் தேவதை
வன்னிஅரசு ( வன்னி.விடுதலை@க்மைல்.சொம்)
மாநில செய்தித்தொடர்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி///இதை இந்த கட்சியை சேர்ந்தவர் சொல்லுவதுதான் வேடிக்கையாய் இருக்கு ??
குமார்
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1201/12/1120112025_1.htm

Please see this link.. Aiya Nedumaaran condolence message about pasupathy pandian murder...
sayanthan
why dont you lett all comments to be publish ,? you might thing people forget it.......
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
சுப.வீ அவர்களின் ”ஒன்றே சொல்! நன்றே சொல்!” வெளியீட்டுவிழாவில் அய்யா திருமா அவர்கள் கேட்ட கேள்விக்கு அன்றும், இன்றும் யாரும் பதில் சொல்லவில்லை. http://www.youtube.com/user/periyartv/search?query=%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D&view=u

எதற்கெடுத்தாலும் கலைஞரையும் அவர் உடன் இருந்தார்கள் இருக்கிறார்கள் என்று திருமா, சுப.வீ, போன்றோரையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் தோழர்கள் சிந்திக்கட்டும்!

முத்துக்குமார் மறைந்து மூன்றாம் நாள் தான் ஊர்வலம் நடைபெற்றது. அதில் திருமா அவர்கள் நடந்துகொண்ட விதம் சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைவர் போன்றது! காவல்துறை அனுமதி தந்த பாதையை விட்டுவிட்டு சாத்தியப்படாத அரைவேக்காடுகளின் ஆலோசனைகளுக்கெல்லாம் செவி சாய்க்க முடியாது.

யோக்கியப் பொறுப்புள்ள போராட்டம் எப்படி நடக்க வேண்டும் என்பதைப் புரிந்தவர்கள் சரியாகவே தான் நடத்தினார்கள்.
2009-ல் தேர்தல் அரசியலுக்காக ஈழத்தைப் பயன்படுத்தப் பார்த்தவர்களும், அதற்குப் பலியானவர்களும் அக்கேள்விகளுக்கு பதில் சொல்லப் பொறுப்புடையவர்கள்.

தோழர் வன்னி அரசு அவர்களின் கேள்விகள் மிக முக்கியமானவை! - பதில் கிடைக்காது என்றாலும் கூட! (முதல் பாராவை மீண்டும் படியுங்கள்)
சே.ரெ.பட்டணம் மணி
திரு நெடுமாறன் அவர்கள் சாதிய சாக்கடையின் உள்ளே புறண்டு கொண்டே தமிழ்தேசியம் பேசும் ஒருவர்தான் என்பது எப்போதோ அம்பலப் பட்டுப் போன உண்மை .அவர் ஜெயலலிதாவால் சிறைப் படுத்தப் பட்டு உள்ளே இருந்த போது அவரின் கருத்துக்களை பதிவு செய்து மக்களுக்கு கொண்டு சென்றது சிறுத்தைகளின் தாய்மண் மாத இதழ்தான் அவர் விடுதலைக்காக களமாடி சிறை சென்று சிறை மீட்டதும் சிறுத்தைகள்தான் ஆனால் அதற்கவர் தலைவர் திருமா அவர்களுக்கு காட்டியது நம்பிக்கை துரோகம் மட்டுமே..
Sathesh
எல்லாம் சரி தான்... ஆனால் தமிழின துரோகி , துரோகி என்று சொல்லப்படும் காங்கிரஸ் மற்றும் தி. மு. க உடன் சேர்த்தே இருந்து மக்களை ஏன் சந்திக்க வேண்டும்... அது மட்டும் "அரசியல் பிழைப்பு" இல்லையா...... கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிந்தால் ? சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு காங்கிரஸ் கூட்டு தேவை இல்லை, என்று "காபந்து முதல்வர்" சொன்ன உடன், திருமா அவர்கள் அவருக்கு சால்வை எல்லாம் போர்த்தி வாழ்த்து சொனபிறகு, "காபந்து முதல்வரின் வார்த்தை மாறிய பிறகு, அவரிடம் ஏன் அய்யா, இப்படி மாற்றி மாற்றி பிதற்றுகீர்கள் என்று ஒரு வார்த்தை கேட்காமல், கூட்டணி தர்மம் என்று மனதை பொய்யாக தானே தேற்றிக்கொண்டார்.... நீங்கள் யாரையும் விமர்சனம் செய்யலாம், கேள்வி கேட்கலாம், ஆனால், அதற்க்குமுன் சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது..... உங்களுக்கு மன்னார்குடி கும்பல், அவர்கள் சார்ந்த சாதி பிடிக்கவில்லை, அவ்ளோதான்.... அவர்களிடம் காட்டவேண்டிய கோபத்தை அய்யா அவர்களிடம் காட்டிவிட்டிர்கள்....
தமிழன் ஒருவன்
திருமாவும்,நெடுமாறனும் சந்தித்து இவற்றை பேசி தீர்க்கலாம். நடைமுறையில் இதை எதிர்க்கவில்லை அதை எதிர்க்கவில்லை என்று ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை விட முரண்களை நேர்மையாக அணுகலாம்.பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு விருது கொடுத்த நெடுமாறன் இந்துவாவிற்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடு எடுத்தவரில்லை, எதிர்த்து எழுதியவர்.இங்கு குறைகளற்ற அமைப்புகள்,தலைவர்கள் இல்லை.இரு தரப்பில் இன்னொரு தரப்பின் குறைகளை பெரிதுபடுத்தி,நபர்களை சிறுமைப்படுத்தி எழுதிக் கொண்டே இருப்பது சரியான போக்கு அல்ல.வன்னி அரசு திருமாவும்,நெடுமாறனும் சந்தித்து பேச முயற்சி செய்திருக்க வேண்டும்.பகிரங்க கடிதம் எதற்கும் இட்டுச்செல்லாது.
vijay
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
//முத்துக்குமார் மறைந்து மூன்றாம் நாள் தான் ஊர்வலம் நடைபெற்றது. அதில் திருமா அவர்கள் நடந்துகொண்ட விதம் சமூகப் பொறுப்புள்ள ஒரு தலைவர் போன்றது! காவல்துறை அனுமதி தந்த பாதையை விட்டுவிட்டு சாத்தியப்படாத அரைவேக்காடுகளின் ஆலோசனைகளுக்கெல்லாம் செவி சாய்க்க முடியாது. யோக்கியப் பொறுப்புள்ள போராட்டம் எப்படி நடக்க வேண்டும் என்பதைப் புரிந்தவர்கள் சரியாகவே தான் நடத்தினார்கள்.///

1)மூன்றாம் நாள் எரியூட்டபட்டது என்று கூறுகிறீர்கள்.... இந்த திருமா, வைகோ,நெடுமாறன் போன்ற தலைவர்கள் கூறியது என்ன? முதல்நாளே எரியூட்டவேன்டும் என்பது தானே? வெள்ளையன் அவர்களும் ம.க.இ.க போன்ற அமைப்புகளும் தான் முத்துகுமார் விருப்படி அவர் உடலால் எழுச்சு உண்டாக வேண்டுமானால் தூத்துகுடி வரை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும் என்றார்கள்... மேடையில் தோன்றி இதை வெள்ளையன் கூறினார்.அடுத்து பேச முற்பட்ட தலைவர்களை மாணவர்கள் பேசவே விடவில்லை.இதனால வேறு வழியில்லாமல் ஒத்துகொண்டனர்.
2)காவல்துறை அனுமதி தந்த பாதை மக்கள் எழுச்சியை கட்டுபடுத்தவே..அதை மறுப்பது எப்படி அரைவேக்காட்டு தனமாகும்..தெழுங்கானா மாணவர்கள் போராட்டம் போன்று அரசை நிலைகுழைய வைக்க வாய்பிருந்தும் கருணாநிதி ஆட்சியின் சட்டம் ஒழுங்குதான் அனைவருக்கும் தெரிந்ததே ஒழிய போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எந்த தலைவருக்கும் இல்லை. வை.கோ ஜெக்கு காவடி எடுத்தார்,திருமா கருனாநிதிக்கு....
mu.kalanchiyam
கேல்விகள் விலை மதிப்பட்ரவை .....கேல்விகளே புதிய சிந்தனைகலின் பிறப்பிடம்....ஆனால் கேல்விகலுக்கு உயிரும்,மரியாதையும் பதில்கள் வரும் பொது தான் வரும்.கட்டயம் பதில் சொல்லுவர் என நம்புவொம்...அது தான் சரியான அரசியல்...
இன்ரைக்கு தமிழ் மக்கள் மனதிலே உள்ள கெல்விகள் இவைகள்.....
தொழர் வன்னியரசு தொடர்ந்து இது போன்ற கேல்விகளை...தமிழ் தெசியம் பேசும் அனைவரின் மீதும் வைக்கலம்.நல்ல சுய ஆய்வாக அமையும்...நான் சரி என்று தானே எல்லா அரசியல் வாதியும் வாழ்கிறார்கள்..அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு....
Guest
tamil innathai aliga thunai ponna neegalum sari ungal thalivanum sari kelikettukum thaguthiyai illanthuvitterigal. Congress undan kuttani vaithhu avamanapattathu pothatha.
கிரிஷ்ணா என்கிற கலகக்காரன்
மரியாதைக்குரிய தோழர் வன்னியரசு அவர்களே, மிக அருமையான பதிவு. சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு. தமிழ் தேசியமும், அதை தொடரும் இளைஞர்களும் சரியான பாதையில் பயணிக்க பெரிதும் வழிவகுக்கும்!

அதே நேரத்தில், இதையெல்லாம் 'அப்படியே' வேறு வகையில் செய்யும் உங்கள் தலைவர் திருமாவுக்கு யார் கடிதம் எழுதுவது? எங்களுக்கு நேரமும் இல்லை, எழுதி பயனும் இல்லை. நீங்களே எழுதுங்களேன்? போர் உக்கிரத்தில் இருந்தபோது கருணாவின் துரோகங்களை தட்டிகேக்காது ஒட்டி இருந்தது, சோனியாவோடு ஒரே மேடையில் உறவாடியது, தேர்தல் நேரங்களில் சாதிய தலைவர்களோடு கூட்டு வைப்பது. (இந்த லிஸ்ட்ல ராசபக்சேவை ஆரத்தழுவியதை சேர்க்கவில்லை, ஏனெனில் பின் என் குடும்பத்தை வசைபாடும் சிறுத்தைகளின் ஒரு பிரிவு!)

முதலில் உங்களை போன்ற உண்மையான போராளிகளுக்கு தேர்தலில் சீட்டு வழங்க சொல்லுங்கள்! எல்லாம் தானாக சரியாகிவிடும்! ரெண்டாவது தலைமை தவறு செய்யும்போது பூசிமொழுகாமல் கேள்வி கேளுங்கள் மீண்டும் அண்ணன் திருமாவின் தலைமையை ஏற்கிறோம்! புரிதலுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

தமிழனின் தாகம் சாதிகளற்ற தமிழருக்கான தாயகம்!!!
சம்பூகன்
இங்கே தமிழ் தேசியம் என்றால் ஜாதி தேசியம்தான். எந்த ஜாதியையும் சாராத தமிழன் எங்கே இருக்கிறான்?ஒடுக்கப்பட்டோரான ஆதிதிராவிடர்கள் தமிழ் தேசியம் பேசுவதை ஏற்கலாம். தோழர் திருமாதான் இந்து அடையாளத்தைச் சுமந்துகொண்டிருந்த ஆதி திராவிடத் தோழர்களின் வடமொழிப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தினார். ஈழச் சிக்கலிலும் மிகச் சரியான நிலை எடுத்துள்ளார். ஈழச் சிக்கல் மட்டும் அவரது வேலைத்திட்டமல்ல; மாறாக தமிழகத்தில் நிலவும் ஜாதிக்கொடுமைக்கு எதிராகக் களம் அமைத்துப் போராடுவது மிக முக்கியப் பணி. அதனைச் சரியாகவே செய்கிறார். கருணாநிதியை துரோகி என்று கூறி ஜெயலலிதா என்ற எதிரியையா ஆதரிப்பது? நெடுமாறன் உள்ளிட்ட ஈழ வியாபாரிகள் கடந்த தேர்தலின் போது ஜெ.யை ஆதரித்தனர். இப்போது என்ன நிலை? அவர் தனது பார்ப்பனப் புத்தியைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.(சமச்சீர் கல்வி ஒழிப்பு,அண்ணாநூலகம் சிதைப்பு,செம்மொழி நூலகம் மூடல்,தமிழ்ப்புத்தாண்டு மாற்றம்,பரமக்குடி கொடுங்கோண்மை....இப்படித் தொடர்கிறது)நெடுமாறன் இது பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லையே ஏன்? தோழர் வன்னியரசு கேட்ட அத்தனைக் கேள்விகளையும்,வரிக்கு வரி வழிமொழிகிறேன். தமிழ் தேசியர்களே வாய் திறங்கள் பார்க்கலாம்.
சிபிசந்தர் திரைப்பட இயக்குனர
தமிழர்களை பிளந்து சாதிய பாகுபாட்டை ஏற்படுத்தி தீண்டாமை தீயை இன்று வரை கொளுத்திக்கொண்டிருக்கிற மனுநீதியின் மடியில் வளர்ந்தவர்களை ஆட்சியில் அமரவைக்க தமிழ்தேசிய கேடயத்தை பயண்படுத்தும் நெடுமாறன் போன்றோருக்கு தோழர் வன்னியின் சாட்டையடி ஒரு மனமாற்றத்தையும் கொள்கைமாற்றத்தையும் ஏற்படுத்தவேண்டும்..இல்லாவிடில் தமிழ்தேசியம் மலரும்போது பதிவுகளில் துரோகிகளாக இனம் காணப்படுவர்.எழுச்சி தமிழரை மதிக்காதவர்களை தமிழ்தேசியம் புறந்தள்ளும் காரணம் தேசியதலைவரின் கனவான சாதிகள் அற்ற தமிழ் தேசிய போராட்டத்தை வளர்ந்தெடுக்க அவர் ஒருவரால் மட்டுமே முடியும்..
dhanasekar
மிகச்சரியான கட்டுரை....
த. முத்து கிருஷ்ணன்
சோனியாவின் கூட்டாளியாக அவருக்கு உடன் நின்ற கருணாநிதிக்கு திருமாவோடு இணைந்தது காவடி தூக்க வில்லையாம் அய்யா நெடுமாறன், இன்று வரை காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இவர்களுக்கு மரியாதை செய்யவில்லை யாம்?
saidai ma.anbarasan
தோழர் வன்னி அரசுக்கு,வணக்கம் ! அய்யா நெடுமாறன் குறித்த தங்களின் விமர்சனக் கட்டுரையைப் படித்தேன்.
சாதியத்திற்கு எதிராகவும்,தமிழ்த் தேசியம்
மற்றும் தமிழீழத்திற்கு ஆதரவாகவும் செயல் பட்டுவரும் தோழர்கள் சிநதனையில் இருக்கும் கேள்விகளே தங்களின் கட்டுரை வாயிலாக வெளிவந்துள்ளது.
kandarvan
யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ளே வை

௧. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை வேண்டும் என்று திருமா கோரியது ஏன் ?
௨.திண்ணியம் கொடுமையை நிகழ்த்தியவர்கள் வீட்டிலேயே திருமா விருந்துண்டது ஏன்?
௩. தலித்துகளின் தலித்தான அருந்ததியர்களைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?
௪. ராசபக்செவிடம் விருந்துண்டதே ஏன்?
௫ இன்றளவும் வி.சி கட்சியினர் பல இடங்களில் நில ஆக்கிரமிப்பு முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்காமல் இருப்பது ஏன்?
௬.உத்தமபுரம் பிரச்சினையில் எந்த ஆக்கபூர்வ பங்களிப்பும் செய்யாதது ஏன்? ஏன் ஏன் ?
akchandrasekaran
திருமாவளவனுக்கும் கருணாநிதிக்கும் பெரிய வேறுபாடு இல்லை... கருணாநிதி சோனியாவை ஆதரித்தார் திருமா ஒரு படி மேலே போய் சோனியா வாழ்க என்று மேடையில் முழக்கமிட்டு கை உயர்த்தினார்.
பாக்கியராஜன்
அய்யா நெடுமாறன் அவர்கள் நடராசன் அவர்கள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார். அது தமிழர் கலை இலக்கிய விழா, முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழமக்களின் அழிவுக்கு சாட்சியாக அமைக்கப்படும் அரும்பணிக்கு அங்கே நன்கொடை வழங்கப்படுகிறது, அத்தோடு மருதப்பா அறக்கட்டளை சார்பாக அய்யா நெடுமாறனுக்கும், அய்யா காசி ஆனந்தனுக்கும் விருது வழங்கப்படுகிறது. எனக்கும் நடராசன் எற்ப்புடையவர் இல்லை. அய்யா அவரின் நிகழ்வில் எல்லாம் கலந்து கொள்ளவேண்டாம் என்பது தான் என் எண்ணமும். ஆனால் ஆதற்கு அய்யா நெடுமாறனுக்கு அறிவுரை சொல்லி விமர்சித்து கடிதம் எழுத விடுதலை சிறுத்தைகளில் இருக்கும் ஒருவர் எழுதுவது காலக்கொடுமை.. அய்யா நெடுமாறன் நடராசன் கூட்டத்தில் கலந்துக்கொண்டதை விமர்சிப்பவர்கள்.. திமுக கருணாநிதியின் மனைவி, மகள் நாடார் சங்க விழாவில் கலந்துகொண்டதை விமர்சிப்பார்களா? ஸ்டாலின் தேவர் சாதி கட்சியின் தேவர் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு திறந்துவைத்தாரே அவருக்கு அறிவுரை சொல்வார்களா? அழகிரி முதலியார் சங்க விழாவை துவங்கிவைத்தாரே அவருக்கு கடிதம் எழுதுவார்களா? திமுகவிற்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் என்று இருக்கும் விடுதலை சிறுத்தைகள் அய்யா நெடுமாறனுக்கு கடிதம் எழுதுவது எவ்வகை நியாயம் என்று தெரியவில்லை. பசுபதிபாண்டியன் கொலையை முதலில் கண்டித்த அய்யா நெடுமாறன் சாதியவாதி? அதை பற்றி வாயே திறக்காத கலைஞர் சாதி மறுப்பாளரா?...

தமிழின பிரச்சனைகளை அலசி ஆராய்ந்த கட்டுரைகள் பல கீற்றில் வந்திருக்கிறது அதை எல்லாம் பகிராத சிலர் இதை பகிர்கிறார்கள் ஓடி வந்து முதல் வேலையாக. அதும் விடுதலை சிறுத்தைகளை எக்காலத்திலும் ஏற்காத மாற்று மொழி சேச்சிகள், சேட்டன்கள், மனவாடுகள் எல்லாம் ஏதோ நடுநிலைவாதிகளை போலவும் சாதி மறுப்பாளர் போலவும் இந்தக்கட்டுரையை பகிர்கிறார்கள். உச்சு கொட்டுகிறார்கள்.. நிரம்பா வருத்தப்படுகிறார்கள்.. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று ஆள் ஆளுக்கு தமிழ்த்தேசியவாதிகளை விமர்சிக்க கிளம்பிவிடுகிறார்கள்.. விடுதலை சிறுத்தை உறவுகள் இந்தக்கட்டுரையை யார் யார் எதற்கு பயன்ப்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொண்டாலே இந்த இனம் எங்கே வீழ்ந்தது என்று அறிந்துகொள்வார்கள்.. நாம் இருவரும் இப்படி சண்டையிட்டு கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்தவன் அதில் குளிர் காய்ந்து நம்மையே ஆளும் அதிகாரத்தை பெற்று விடுகிறான். நமக்குள் இருக்கும் சண்டையில் பலனடைவது அவனே.. ஏனினில் நாம் சண்டையில் சிதறுண்டு பலவீனமாகிவிடுகிறோம் அவன் நமக்கே அறிவுரை சொல்லி நம்மை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றுகிறான். இனியும் அந்த தவறை நாம் செய்ய வேண்டாம்.. தமிழர்களின் ஒற்றுமையே தமிழ்த்தேசியத்தின் வெற்றி..
Guest
I SAW THE ABOVE DETAILS. IF WE DID NOT WANT CASTE, THEN WE HAVE TO REFUGE THE CASTE, RELIGIOUS AND GENDER BASED RESERVATIONS IN ALL PLACES. IS IT YOU CORRECT?
மதுசூதனன்
நீங்கள் அடைக்கப்பட்டபோது பொடா எதிர்ப்பு இயக்கம் கட்டி தமிழகம் முழுக்க விடுதலைப் புலிகளை ஆதரித்தும் ஜெயலலிதா அம்மையாரைக் கண்டித்தும் களமாடிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் என்னைப் போன்ற இலட்சக்கணக்கான சிறுத்தைகள் பிந்தொடர்ந்தபோது ஜெயலலிதா அம்மையாரே ஆட்டம் கண்டதை நீங்கள் கடலூர் சிறைக்குள்ளிருந்து கேள்விப்பட்டிருப்பீர்கள்...//

எந்த திருமா? ராஜபக்ஷேவின் குருதி தோய்ந்த கையை துடைத்து விட்டு வந்தாரே அவரா?
மதுசூதனன்
2009 க்கு பிறகு தானே 2011வந்துச்சு.அப்போ எந்த கூட்டணியில் இருந்தாராம் இந்த "முருக்கு" மீசை?
rajan
பாகியராசன் எழுதிய மருமொழியையும் படிக்கவும்.
சாதியம் எல்லா இடத்திலெயும் உள்ளது.
சிறுதைகள் தி.மு.க வில் இருக்கும் சாதியதையும் அடையாளம் காணவேண்டும். ஏன் என்றால் நடராசனிடம் நேரடி சாதியம் என்றால் தி.மு.க விடம் வஞக சாதியம் உள்ளது. இரன்டுமே நம் இலக்குக்கு உதவாது!!
சே.ரெ.பட்டணம் மணி
யாராவது வன்னி அரசு வின் கேள்விகளூக்கு பதில் சொல்வார்கள் என்று பார்த்தோம் ஆனால் வழக்கம் போலவே .சாக்கடை அள்ளி வீசுவதிலேயே கவணம் செழுத்தியுள்ளார்கள் .என்ன செய்வது பழ.நெடுமாறனே பதில் சொல்லவில்லை.பிறகு இவர்கள் எங்கே சொல்வார்கள்.அதனால்தான்.எங்கள் அயோக்கியத்தனத்தை விமர்சிக்கும் தகுதி உனக்கு இல்லை என்று கூறியுள்ளார்கள்..
dhina
i remember Mr.Thirumavalavan also took part in that same function held few years ago along with Mr K.Veeramani.....i forgot exact year...people who follow politics for past ten years would remember....
kalai
முதலில் தோழர் வன்னியரசின் இந்த கட்டுரைக்கான விமர்சனத்தை முன்வைத்து பேசுன்கல்...அது தன் சரியனது தொழர்களே....காழ்ப்புனர்வோடு மட்டம் தட்டுவதும்...தேவை இல்லாமல் உயர்த்தி பிடிப்பதும் தவிர்த்து...ஆக்க பூர்வமக சிந்திக்க பழகுன்கல்.
இதில் கூரப்பட்டுல்ல கருத்துக்கலுக்கு உன்கலின் பதில் என்ன?
அது சரிய? தவற?...அதை பதிவு செய்ன்கள்...அதை விட்டுவிட்டு கட்டுரையாள்னை தனிப்பட்ட முறையில் தாக்குவது நாகரிகம் அட்ரது....
ப்ழ.நெடுமாறன் மீதான குற்ற சாட்டுக்கு பதில் சொல்லுவதே பண்பட்ட விவதமாக இருக்கும்.....
தொழர்களே புரிந்து கொள்ளுன்கள்.....
raguraman
ஐயா பாக்கியநாதா, நடராசன் நடத்துனது தமிழர் கலை இலக்கிய விழாவா? சிரிக்க முடியலை சாமி? எந்த கலை இலக்கியங்கள் அங்கே பாராட்டப்பட்டன? அல்லது அந்த அமைப்பு அப்படியெதுவும் செய்யுதா? அப்புறம் ஏதோ விருதுன்னு வேற சொல்றீங்க? அதென்ன தமிழ்நாட்டின் ஆஸ்கரா இல்லை நோபல் பரிசா? நடராசன் என்கிற அரசியல் புரோக்கர் நடத்துன கேவலமான ஒரு பொதுக்கூட்டத்துக்கு இப்படியெல்லாம் பில்டப்பா? நடராசனை மாதிரி ஆளுங்களை நியாயப்படுத்தி இப்படியெல்லாம் பேச முடிம்னா, திருமாவளவனை நியாயப்படுத்த நூறு காரணம் இருக்குங்க. அதையெல்லாம் உங்களை மாதிரி ஜாதி திமிர் பிடித்த அறிவு ஜீவிகளுக்கும் உன்களுக்கு எடுப்பு மாதீரி செயற்படும் ராஜன் மாதிரியானவங்களுக்கும் புரியாது. மத்தபடி வன்னி அரசு முன்வைக்கும் கேள்விக்கு நேரடியான பதில் சொல்றதுக்கு உங்க கிட்ட வக்கில்லை. கருணாநிதி கிட்டே நீங்க கேட்டீங்களா, ஸ்டாலின் கிட்ட கேட்டீங்களான்னு எதிர் கேள்வி கேட்கிறது எப்படி அறிவு நாணயமான பதில்னு புரியலை. நீ ஏண்டா திருடினேன்னு கேட்டா அவன் திருடினப்ப நீ ஏன் கேக்கலைங்கிறது நியாயமான பதிலா? திருமா, கருணாநிதி, ஸ்டாலின் எல்லாம் ஓட்டு வாங்கற கட்சிகள் நடத்தறாங்க. அதற்காக அவங்க இரட்டை வேடம் போடறதா வெச்சிக்கிவோம். ஐயா நெடுமாறன் தேர்தல் அரசியல்லே குதிக்காத சொக்கத்தங்கமாச்சே, அவர் ஏன் அரசியல் புரோக்கர் நடராஜனிடம் கையேந்தணும்? அடுத்தது, நடராஜன் கிட்டே கையேந்த கூச்சமில்லாதவருக்கு திருமாவளவனுடன் சேர்ந்து அரசியல் செய்வதில் மட்டும் தேர்தெடுத்த தீண்டாமையை கடைபிடிப்பது ஏன் என்பது தான் வன்னி அரசுவின் கேள்வி. அதுக்கு பதிலைச்சொல்லுங்க பார்க்கலாம். அதை விட்டுட்டு தேவையே இல்லாம கருணாநிதி எதிர்ப்புங்கிற கண்மூடித்தனமான வெத்து கோஷத்தை வைக்காதீங்க.
Pandian
திருமாவளவனோ, அவரது கட்சியோ எதை செய்தாலும் குற்றம் என்று சொல்ல ஒரு பெரும் கூட்டமே எப்போதும் இருக்கிறது. அவர்களை குறை சொல்வதே இவர்களின் வேலையாக உள்லது. எனக்கு தெரிநுது தமிழக அளவில் ஒடுக்கப்பட்ட் மக்களிடம் ஈழ பிரச்சினையை கொண்டு சென்றதலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அதன் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கும் மிகப்பெரும் பங்குண்ண்டு. அவர்களின் கட்சி அரசியலை தக்க வைக்க சில நேரங்களில் அவர்கள் எடுக்கும் முடிவை மட்டும் விமர்சிக்கும் கேவலப்படுத்தும் தமிழ் உணர்வாளர்கள் அவர்களின் போராட்டத்தை ஒருபோதும் வாழ்த்தியதில்லை..
த. முத்துகிருஷ்ணன்
பாலாவின் இணையம் ‎@ மூன்றாவது அணி அமைக்க திருமா முயன்றாரா..? அப்போது நடந்த நாடகத்தை நான் சொல்லுகிறேன்.. திருமா-வும் இராமதாசும் சேர்ந்து போட்ட நாடகம்தான் அது.. இந்த நாடகத்தில் காங்கிரசின் பங்கும் உண்டு.. அவர்களுக்கு தேவை வைகோ-வை அதிமுக கூட்டணியில் இருந்து பிரிக்க வேண்டும் என்கிற தேவை இருந்தது.. இந்த பக்கம் திருமா மூன்றாவது அணி என்று சொல்லிக்கொண்டே இராமதாசை அதிமுக கூட்டணிக்குள் திணிக்க நடந்த நாடகம் அது.. இராமதாஸ் ஜெயலலிதா-விடம் போய் வைகோ மூன்றாவது அணி அமைக்க திருமா-வுடன் முயலுகிறார், நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன் என்று சொல்லி பாமக-வுக்கு 7 சீட்டுக்கள் வாங்கினார்.. ஜெயலலிதா-வும் அதை நம்பி 7 தொகுதிகள் கொடுத்துவிட்டார்.. இதற்கிடையில் எக்மோர் இரயில் நிலையத்தில் ஈழப்பிரச்சாரத்திர்க்கு தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் சென்ற இளைஞர்களை வரவேற்க வைகோ சென்றார்.. நான் உட்பட சில நண்பர்களும் சென்றிருந்தோம்.. இரயிலில் அந்த இளைஞர்களோடு வந்த 3 பேர் மட்டும் வைகோ-வுக்கு எதிராக குரல் எழுப்பியும், திருமா, இராமதாசை வாழ்த்தியும் கோசம் இட்டார்கள்.. மூன்றாவது அணி அமைக்க வேண்டும் ஆவேசமாக சொன்னார்கள். ஆனால் உண்மையில் பிரச்சாரத்திர்க்கு சென்றவர்களுக்கும் அந்த மூவருக்கும் சம்பந்தமில்லை.. வைகோ-வுக்கு எதிராக குரல் எழுப்புவதர்க்காக ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி இடையில் அந்த இளைஞர்களோடு சேர்ந்துகொண்டவர்கள்.. வைகோ-வை அதன் பின் மற்ற இளைஞர்கள் வந்து சந்தித்து நடந்த சம்பவங்களை விவரித்தார்கள்.. அப்போது தமிழகத்திலும், ஈழத்திலும் இருந்த டென்சனான சூழ்நிலையால் வைகோ மற்ற கூட்டணி செய்திகளில் கருத்து சொல்லாமல் அதிமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறேன் என்று மட்டும் சொன்னார்.. வைகோ மற்றவர்களை பற்றி சூழ்ச்சி செய்தோ, போட்டுக்கொடுத்தோ, குறைகள் சொல்லியோ தன்னை வளர்த்துக்கொள்ள எந்தக்காலத்திலும் விரும்பாதவர்.. அதுதான் அவரின் பலம்.. அப்படியே நாங்கள் செல்ல விரும்புகிறோம்.. நேர்மையான அரசியலை முன்னெடுப்போம்.. மாற்று அரசியலை மக்கள் முன் வைப்போம்.. இதுதான் எங்கள் நோக்கம்..
அமீர் அப்பாஸ்
பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என காத்திருந்தேன். வன்னியரசு கட்டி விட்டார். திருமாவளவனை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தனிமைப் படுத்தி, மீண்டும் தி.மு.க. கூட்டணிக்கு திரும்ப செய்த உத்தமர்கள் யார்? என காலம் காட்டிக் கொடுத்து விட்டது.
சமீரா மீரான்
ஈழ மக்களின் அவலத்திற்கு பழ. நெடுமாறன் உட்பட தமிழக, இந்திய அரசியல் தலைவர்கள் அத்தனை பேருமே ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கும்போது, வஞ்சகமாகக் கலைஞரை மட்டும் காரணம் காட்டி, ஈழ மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒரு ஆட்சி தமிழ் நாட்டில் அமைய உதவியதைத் தவிர இவர்கள் (பழ. நெடுமாறன், நடராசன், சீமான் வகையறாக்கள்) சாதித்தது ஒன்றுமில்லை.
இரா.தமிழ்மாறன்
மதிப்புக்குரிய திரு.வன்னி அரசு அவர்களுக்கு,

நம்மை வீழ்த்துவதற்கும் நமது வளங்களை சுரண்டுவதற்கும் நம்மைச்சுற்றி அன்னிய நச்சுப்பாம்புகள் படையெடுத்து நிற்கின்றன்.நம்மை அறியாமலேயே வரலாற்று நெடுக நம் இனம் பலியாகிக்கொண்டே வந்திருக்கின்றது.இத்தனை அழிவுகளுக்குப்பிறகும் இத்தனை இழப்புகளுக்குப்பிறகும் இனிமேலும் தமிழனுக்கு வர இருக்கின்ற ஆபத்தை கருத்திற்கொண்டும் நாம் அனைவரும் தமிழனாக ஒன்றுபட வேண்டிய தருணம் இது.திரும்புகிற பக்கமெல்லாம் தமிழனை அடிக்கிறான், உதைக்கிறான், துரத்துகிறான், சுட்டுத்தள்ளுகிறான்.நமது சகோதரிகளை மானபங்கப்படுத்துகிறான்.வெந்நீர் ஊற்றி துடிதுடிக்க படுகொலை செய்கிறான்.நாம் அமர்ந்து இருக்க வேண்டிய அதிகார மையம் வந்தேறிகளிடம் அகப்பட்டுக்கிடக்கினறது.இதனால் தட்டிக்கேட்க ஆளில்லாத நாதியற்ற இனமாய் செத்துத்தொலைகின்றேம்.
இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றது.ஒரே இனமாக திரண்டு இந்த கொடுமைகளுக்கொல்லாம் முடிவுகட்ட முடியாத வலுவில்லாத இனமாக கையறு நிலையில் இருப்பதோடல்லாமல் தொடர்ந்து சாதியின் பெயரால் நமக்குள் நாமே அடிபட்டுக்கொள்கிறோம்.அண்டை மாநிலமான கேரளாவையும் கர்நாடகாவையும் உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.காவிரிநீரை தமிழ்நாட்டுக்கு தரக்கூடாது என்று கர்நாடகாவும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டுமென்று கேரளாவும் சாதி,மதங்கள்,அரசியல், சமூக,வர்க்க வேறுபாறுபடுகளை கடந்து மிக ஒற்றுமையாக அணிதிரள முடிகின்றது.காரணம் அவர்கள் தங்கள் மொழியையும் இனத்தையும் நேசிப்பது தான்.இவற்றை நாம் செய்யாததால் தான் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றோம்.கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.தமிழர்கள் கைகளில் இருந்த வணிகமெல்லாம் கிட்டத்தட்ட நம் கையைவிட்டு அந்நியர் கைகளுக்கு மாறிவிட்டது.தமிழர்களுக்கென்று ஊடக பலம் என்ற ஒன்றில்லை.அதிகாரமிக்க உயர்பதவிகளில் அமரமுடிவதில்லை.அப்படியே அமர்ந்தாலும் சாதிய சிந்தனைகளுக்குள் அமிழ்ந்து தன் இனத்தை நேசிக்காமல் துரோகியாய் மாறும் அவலம் தொடர்கின்றது. ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்றால் கண்ணுக்குத்தெரிகின்ற பொது எதிரியை விட்டுவிட்டு முன்பின் அறிந்திருக்காமல் கூட நம் இனத்தின் சகோதரியை சகோதரனை சாதியின் பெயரால் நாம் எதிரியாக பார்க்கின்றோம். நமது பேச்சிலும் சரி எழுத்திலும் சரி கருத்துப்பரிமாறல்களின் போதும் கூட சாதிய சிந்தனைகளை அறவே ஒதுக்கித்தள்ள வேண்டிய கட்டாயத்தில் நமது இனம் வந்து நிற்கின்றது.நடந்துமுடிந்த தேர்தல் நல்ல ஒரு சான்றாய் அமைந்திருக்கின்றது.சாதியம் பேசிக்கொண்டும் சாதிக்கட்சியாய் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டும் தமிழின விரோதிகளிடம் கூட்டுவைத்துக்கொண்டும் தேர்தலை சந்தித்த கட்சிகளை காலத்தின் கட்டாயம் கருதி ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரித்துள்ளதை மனதில் கொள்வேம். தமிழர் இலக்கியங்களில் நம்மை வீரமறவர் என்று சித்தரித்துள்ளதை நாமே மறுப்பதுபோல் நம் இனத்தின் வழிவந்தவர்கள் பணத்திற்காக, பதவிக்காக, பட்டத்திற்காக விலைபோகும் ஒரு மானக்கோடான மறவர்களாக மாறிக்கொண்டு வருவதை காண்கின்றோம்.வெற்றுமுழக்கங்களையும் வீரவசனங்களையும் அலங்கார வார்த்தைகளையும் பேசிக்கொண்டு தான் விலைபோனது மட்டுமல்லாது தன்னை நம்பி வாக்களித்த மக்களையும் அடமானம் வைக்கின்ற படுபாதக செயலில் சாதியம் பேசும் கட்சிகள் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றன.தமிழனை கூறுபோடும் வேலையை எதிரிகளுக்காக அவர்களே செய்ய முடியாத அளவுக்கு மிக நேர்த்தியாக செய்து வருகின்றனர்.தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டே அதை காட்டிக்கொடுப்பவர்கள் உள்ளேயும் வெளியேயும் நிறையப்பேர் இருக்கத்தான் செய்வார்கள்.இது வரலாறு கற்றுத்தந்த பாடம்.நாம் அவர்களை அடையாளம் காண்போம்.அவதானமாக இருப்போம்.ஆனால் நாம் துக்கிநிலைநிறுத்த முயற்சிக்கும் தமிழ்த்தேசியத்திற்காக செயற்படுபவர்களை விமர்சிக்கும் பொழுது தமிழ்தேசியத்தை அழிக்கத்துடித்துக்கும் எதிரிகளுக்கு எத்தனை வாய்ப்பாக அமையும் என்பதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. இதனால் தேவையற்ற பிளவுகளையும் பின்னடைவுகளையுமே தமிழ்தேசியம் சந்திக்கும்.சாதியத்தின் பேரால் நமக்குள் நாமே அடிபட்டுச்சாவது தொடரவே செய்யும்.
ஆறுமுகம்
அன்று வைக்கோவும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருந்தார். இருவர் விடுதலைக்காக அணைவரும் தான் போராடினர். கருணாநிதி வைக்கோவை சிறையிலேயே சந்தித்து ஜாமினில் வரக் கோரினார். பின்னர் இந்த பிரச்சினை தீவிரமானது அணைவரும் அறிந்தது. அப்போது கருணாநிதி எடுத்த நிலையை அணைவரும் அதரிக்க வே செய்தனர். அவரது பிந்தைய நிலையைதான் துரோகியாக்கியது. விடு‌தலை சிறுத்தைகள் மட்டுமல்ல பிறகட்சி தலைவர் யாரை நெடுமாறன் சந்தித்தார் ? இப்போது கூட திருமாவளவன் திமுகவோடுதானே உள்ளார். ஒருவரை சந்திக்க வில்லை என்பது புறக்கணிப்பு என்று கூற இயலாது. இன்றும் அவர் தமிழர்கள் ஒழிக்க நினைத்த காங்கிரஸோடுதான் கூட்டாக உள்ளார். திருமா ஏன் காங்கிரஸூடன் கூட்டு கொள்ள வேண்டும். காங்கிரஸை வளரக்கவா? அது பெரியாரின் கொள்கையோடு உடன்பாடானதா? திமுகவின் தயவால்தான் ஆட்சி இருக்கிறது என்ற நிலையில் 2ஜி ஊழல் பணத்திற்காக திமுக இனப்படுகொலைக்கு துணைபோக அதோடு வி.சி. களும் காங்கிரஸை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தது எந்த வகையில் நியாயம்? திமுக தலைவர் மூன்று மாதங்கள் கழித்து திமுக பொதுக் குழு கூடி முடிவெடுக்கும் என்றது அணைவரும் கொல்லப்பட்ட பின் அந்த முடிவால் பயன் இல்லை என்று விசி ஏன் கண்டிக்க வில்லை ஆனால் அதை பாமக தலைவர் ராமதாஸ் கண்டித்துள்ளாரே? இந்துத்துவ பாஜக ஆட்சியல் தமிழன் படுகொலை செய்ப்படவில்லை ஆனால் காங்கிரஜோடு திமுக மற்றும் விசி இணைந்து ஆட்சியில் இருந்தபோது தான் இனப்படுகொலை நடந்தது. திருமா தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயம் இல்லை ஆனால் ஆட்சியாளர்களுடன் உள்ள உறவு அணைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளும் மூலமாகத்தான் அவரை பயன் படுத்தும்.
ஆறுமுகம்
ஆட்சியல் இல்லாதவர்களை விட ஆட்சியில் இருந்த வர்களைதான் மக்க்ள ஈழத்தமிழர்களை காப்பற்ற நம்பினர். காரணம் தமிழின் தலைவராக முன்னிலைப்படுத்தப்பட்டவர் கருணாநிதி மட்டுமே. ஜெயலலிதாவை தமிழர்களின் எதிரியாகத்தான் கண்டனர். ராமதாஸ் தமிழர் நலனில் அக்கரை உள்ளவர்கள் அணைவரையும் அழைத்தபோது வர மறுத்தவர் விசி தலைவர் என்று குற்றம் சாட்டப்படுகிறத. போர் நடந்த காலத்தில் எவ்வளவு காலம் திமுக தலைவர் மருத்துவமனையில் முதல்வராக இருக்கும் பொழுது இருந்தார். இப்போது மருத்துவ மனையில் எவ்வளவு காலம் இருந்தார், இருக்கிறார், ஏன் ? நியாயமாக இப்போது அவர் அடிக்கடி மருத்துவ மணையில் வயது மூப்பின் காரணமாக அணுமதிக்கப்பட்டிருக்க வேண்டுமே? தமிழர்களுக்கான ஆதரவு யாரிடம் இருந்து பெற்ற ல் என்ன உயிரை காப்பாற்ற வேண்டிய நிலையில் விசிகளிடம் தான் பணம் பெற வேண்டும் என்று கூறுவது காங்கிரஸ் கூட்டனியில் இருந்து பணம் பெற்றால் காங்கிரஸிடம் பணம் பெற்றதாக ஆகாதா? மூன்று தமிழர்களின் உயிருக்கு உலைவைக்கும் விதமாக தூக்கிலிடலாம் என்று முடிவு செய்து பரிந்துரைத்தது திமுக தானே தவிர அதிமுக இல்லையே. இனி தமிழர்களுக்காக தேவர் நாடார் முதலியார் என்று யாரும் போராட உரிமையில்லை அதை தலித் தலைவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று சொன் னால் முடிந்தது. போராட்டங்கள் அணைத்து தரப்பினரி்ன் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றி பெறும் இல்லாவிட்டால் அது போராட்டமாக அமையாது நசுக்கப்பட்டுவிடும். திருமாவின் தமிழுனர்வு மதிக்கப்படவேண்டியது என்பதில் சந்தேகம் இல்லை அதே வேளை அவ்வுணர்வுகள் அடுத்தவர்களுக்கு இருக்க கூடாது என்று நினைப்பது எந்த வகை உணர்வோ? தமிழனை காக்கவா அல்லது இன்னும் காவு கொடுக்கவா?
Guest
who is the original leader i dont understand
Pandian
வைகொ மிக்க நல்லவர் தான் , செஞ்சோலை குழந்தைகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது ஒன்றும் தவரில்லை என்று பேசிய அம்மாவை எதிர்த்துக்கூட அறிக்கைவிடாமல் எங்கே கூட்டணியில் இருந்து கழட்டிவிடுமோ என்று ஒன்றுமே தெரியாமல் புரட்சி செய்த போராளி தான் வைகோ.
mani
முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

ஜனவரி 29 வியாழக் கிழமை
நண்பகல் 12 மணிக்கு தோழர் செந்தமிழன் தஞ்சையில் இருந்து தொடர்பு கொண்டு ”ஒருவர் ஈழத்திற்காய் தீக்குளித்து விட்டார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்”என்ற தகவலைச் சொன்னார்.
கீழ்பாக்கம் மருத்துவமனையை நான் அடைந்த போது அவருடையபெயர் முத்துக்குமார் என்பதும் அவர் இறந்துவிட்டார் என்பதும் தெரிந்தது. குமுதம் நிருபர் அவர் எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றைக் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள் ஒரு 40 பேர் வந்திருந்தனர். தலைவர்கள் திரு.வை.கோ, திரு.நெடுமாறன், திரு.திருமாவளவன், திரு.ராமதாஸ், திரு.வெள்ளையன் (வணிகர் சங்கத் தலைவர்) ஆஜர் ஆனார்கள். ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் தவிர தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் வந்த பாடில்லை. முத்துக்குமாரின் சடலத்தை அன்று மாலையே தகனம் செய்யலாம் என மற்றத் தலைவர்கள் பேசிய போது திரு.வெள்ளையன் முத்துக்குமாரின் தந்தைக்குத் தகவல் சொல்லி அவர் வர நேரமாகும் என மறுத்தார். (நல்ல வேளை அவர் மறுத்தார்).
அவருடைய சடலத்தை எங்கு வைப்பது என விவாதம் தலைவர்களுக்குள் வந்த போது அந்தப் பொறுப்பையும் திரு.வெள்ளையனிடமே ஒப்புவித்தார்கள் மற்றத் தலைவர்கள். மற்றவர் பொறுப்பெடுத்தால் அதில் அரசியல் சாயம் வந்து விடும் என்பதே தலைவர்களின் ஒட்டு மொத்தக் கருத்து. மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு முத்துக்குமாரின் சடலத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். தலைவர்கள் அக்கோரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் வழக்கறிஞர்கள் சிலர், பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கிட்டதட்ட கைகலப்பு ஏற்படும் சூழல் உருவான போது திரு.வை.கோ தலையிட்டு சமாதானம் செய்தார். தலைவர்கள் இது போன்ற சமாதனங்கள் செய்ததோடு மற்றுமின்றி ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு பெரும் விருப்பத்துடன் பேட்டிகளை உணர்ச்சி பொங்க கொடுத்தார்கள். ஆனால் இதே ஆங்கில செய்தி ஊடகங்கள் முத்துக்குமாரின் தியாகத்தைக் கொச்சைப் படுத்தியதை அறிந்த மாணவர்களும் மற்றும் சில தமிழ் ஆர்வலர்களும் அச் செய்தி ஊடகங்களை அவ்விடத்தை விட்டு விரட்டி அடித்தனர்.
மாலை 3 மணிக்கு மேலாக பிரேத பரிசோதனை முடிந்து முத்துக்குமாரனின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஏறக்குறைய மாணவர்கள் வக்கீல்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் மற்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என சுமார் 300 பேர் கூடியிருந்தனர். தலைவர்கள் முத்துக் குமாரனின் சடலத்தை வண்டியில் போக்குவரத்துக்கு இடையூறின்றி விரைவாகக் கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தனர். ஆனால் இந்த 300 சொச்சம் பேரும் அதை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி வாசலில் இருந்து ஈகா திரையரங்கம் வரை முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டி நகர ஏறக்குறைய 45 நிமிடங்கள் ஆனது. திரு.வை.கோவும் திரு.நெடுமாறனும் மாணவர்களிடம் விரைவாகச் செல்வோம் அனுமதி இல்லாமல் ஊர்வலம் போக முடியாது, நாம் ட்ராஃபிக்கை இடைஞ்சல் செய்கிறோம் என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். மாணவர்களும் மற்றவர்களும் கேட்காமல் போக வேறு வழியின்றி அவர்களும் நடந்தே வந்தார்கள் கெஞ்சிக் கொண்டு. (திரு.திருமாவும் திரு.ராமதாஸும் முன்பே சென்று விட்டிருந்தார்கள்)
ஈகா திரையரங்க சிக்னலில் இருந்து சிறிய சந்திற்குள் நுழைந்த பின் தலைவர்கள் தங்கள் வண்டியில் ஏறிக்கொள்ள வேகமாய் ஊர்வலத்தை நகர விடாமல் நடந்தே போக வேண்டும் என்று முயன்ற அந்த 300 பேரையும் காவல்துறை அடித்து கலைத்தது. பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப யார் யாருடைய பைக்கிலோ ஏறிக்கொண்டு தலைவர்கள் போன வேகத்திற்கு முத்துக்குமாரனின் சடலத்தை பின் தொடர்ந்தார்கள். சென்னையின் பிராதன வீதிகளில் முத்துக்குமாரனின் சடலம் 40 கி.மீ வேகத்திற்கும் கூடுதலாகக் கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் மற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்கள் திரைப்பட உதவி இயக்குநர்கள் என எவருக்கும் அந்த வேகத்தில் உடன்பாடில்லை. ஏனெனில் சென்னையின் பிரதான வீதிகளைச் சில மணி நேரமாவது முடக்குவது என்பது செய்திகளில் ஒரு விதமான பாதிப்பை உண்டாக்கும் என நினைத்தனர். ஆனால் தலைவர்கள் ஏனோ இதைப் புரிந்து கொள்ளவில்லை.
மாலை 6 மணியளவில் கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்கு அருகில் இருந்த சாலையில் முத்துக்குமாரனின் சடலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அந்தச் சாலை பிரதான சாலை அல்ல. அச்சாலையை மறிப்பது சென்னையின் ஜீவனை எந்த வகையிலும் பாதிக்காது. வணிகர் சங்க கட்டிடம் என்பது 16 க்கு 10 அடி அளவுள்ள ஒரு அறை. மாலை 7 மணி வாக்கில் தலைவர்கள் அவ்வறையினுள் கலந்தாலோசித்தார்கள். நாங்கள் முத்துக்குமாரனின் சடலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்தோம். 8 மணி வாக்கில் தலைவர்கள் கிளம்பிப் போக திரு.வெள்ளையன் வெளியே வந்தார். திரு.வெள்ளையன் அறிமுகம் எனக்குக் கிடையாது. அவருடைய தம்பி இயக்குநர் திரு.புகழேந்தி(காற்றுக் கென்ன வேலி) மூலம் அவரிடம் பேசினேன். நாளை மதியத்திற்குள் முத்துக்குமாரனின் அடக்கம் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டில் என்று தலைவர்கள் எடுத்த முடிவைக்கூறினார்.
நாங்கள் முத்துக்குமாரனின் கடிதத்தைக் கொண்டு அவரிடம் வாதம் செய்தோம்.
”1.தமிழகத்தில் இருந்து பலரும் செய்தி அறிந்து வந்து சேர ஒரு நாள் போதாது.
2.முத்துக்குமார் அவருடைய சடலத்தை ஆயுதமாக வைத்து போராடும் படி வேண்டி இருக்கிறார். எனவே போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமார் சடலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
3.முத்துக்குமார் சடலத்தை அருகில் உள்ள மயானத்திற்குக்கொண்டு செல்லாமல் சென்னையில் பிரதான மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அம்மயானம் குறைந்த பட்சம் 15 கி மீ தூரத்திலாவது இருக்க வேண்டும்.
4.அல்லது முத்துக்குமாரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி எடுத்துச் சென்றால் தென் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த முடியும்.
திரு.வெள்ளையன் அனைத்துக் கருத்துக்களையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார். தலைவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டுமே என்றார். நாளை காலை தலைவர்களிடம் கேட்டுப் பார்ப்போம் என்றார். கூட்டம் வெகு குறைவாய் இருக்கிறதே? நாளை யாரும் வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்றார். இன்னமும் செய்தி பரவவில்லை என்றோம். வாகனம் ஏற்பாடு செய்து தந்தால் கல்லூரி விடுதிகளூக்கு செல்ல முடியும் என்றோம். மாணவர் நகலகம் அருணாச்சலத்தின் மகன் திரு செளரி ராஜன் வண்டிகளுக்கான பணம் கொடுத்தார். மாணவர்களோடு இயக்குநர் புகழேந்தியும் கல்லூரி விடுதிகளுக்கு கிளம்பிச் சென்றார்கள்.
நான் எனக்குத் தெரிந்த திரைப்பட இயக்குநர்களுக்குத் தகவல் சொன்னேன். இயக்குநர் சேரன் மறுநாள் காலை வருவதாக சொன்னார். இரவு 12 மணிக்கு மேல் கொளத்தூர் போனேன். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் (சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்) வந்திருந்தார்கள்.
முத்துக்குமாரனின் சடலத்தோடும் நாங்கள் ஒரு 20 பேர் அன்றைய இரவு விழித்திருந்தோம். விடியலில் கூட்டம் வந்து விடும் என்று நம்பினோம். தமிழகம் எப்படி இந்த இரவிலும் உறங்குகிறதென கோபித்துக் கொண்டோம்.
ஜனவரி 30
வெள்ளிக் கிழமை
மெல்ல அந்த இரவு விடிந்தது.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி,
தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சி
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
புரட்சிகர இளைஞர் முன்னணி
பெரியார் தி.க
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை(ஆனால் சுப.வீ வரவில்லை)
புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கம்
போன்ற தமிழகத்தின் அனைத்து சிறிய அரசியல் அமைப்புகளில் இருந்து வீர வணக்கம் சொன்னபடி அவரவர் கொடிகளுடன் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வீதியை நிறைக்கத் தொடங்கினார்கள். கல்லூரி மாணவர்களின் கூட்டம் கூடத்தொடங்கியது. வெளியூரில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். குறைந்தது ஒரு 2000 பேர் முத்துக்குமாரனைச் சுற்றி நிற்கத்தொடங்கிய போது காலை 9 மணி.
ம.தி.மு.க தலைவர் திரு.வை.கோ, பா.ம.க தலைவர் திரு.ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு.திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு.பழ.நெடுமாறன், வணிகர் சங்கத் தலைவர் திரு.வெள்ளையன் ஆகியோர் வணிகர் சங்கத்தின் அச்சிறிய அறைக்குள் கூடினார்கள். அவர்களோடு பார்வையாளர்களாக இயக்குநர் சேரன், அறிவுமதி மற்றும் ஒரு 20 பேர் இருந்தனர். இவ்வாலோசனைக் கூட்டத்திற்கு வரவேற்கப்படாத மேற்சொன்ன சிறிய அரசியல் அமைப்புகள் முத்துக்குமாரனின் மேடைக்குப் பின்புறம் தங்களுக்குள்ளான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
”சனிக்கிழமை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முதல் கூட்டரங்கம் இருப்பதால் இன்றே தகனம் செய்ய வேண்டும்” – திரு.பழ.நெடுமாறன்.
திரு.வெள்ளையன் நேற்றிரவு நாங்கள் அவரிடம் சொன்னக் கருத்தைப் பதிவு செய்தார். அதற்குப் திரு.பழ. நெடுமாறன், ”சனிப் பொணம் தனியாய் போகாது, எனவே இன்றே எடுக்க வேண்டும்” என்றார். இவரின் இந்தக் கருத்திற்கு பார்வையாளர்களாய் இருந்த நாங்கள் சிரித்தோம்.
திரு.வெள்ளையன் மீண்டும் வாதம் செய்தார்.
“பொனத்தை வச்சுக்கிட்டு அரசியல் பண்றோம்னு கேவலமா பேசுவாங்கப்பா, எனவே இன்றே எடுத்துடுவோம்”- பா.ம.க திரு.ராமதாஸ்
”நாம் செய்யும் தாமதம் நம்மால் சந்திக்க இயலாத பிரச்சனைகளைக் கொண்டு வரும் எனவே இப்போதே எடுக்க வேண்டும்”என்று பொருள் பட – திரு.திருமாவளவன்.
திரு வை.கோ வும் இதே கருத்தைத் தெரிவித்தார். வெள்ளையன் விடாமல் தன்னால் இயன்ற வரை வாதம் செய்து கொண்டிருந்தார். “உங்கள் தேர்தல் அரசியலுக்காக முத்துக்குமாரனின் தியாகத்தை வீணாக்கக்கூடாது என எச்சரித்தார்”, தலைவர்களை.
இயக்குநர் சேரன் முத்துக்குமாரனின் இறுதிஊர்வலத்தை இரு நாளேனும் தள்ளிப் போட வேண்டிய அவசியத்தை தன்னால் இயன்ற வரை வாதிட்டார். திரு.திருமாவளவன் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் நீங்கள் அமைதியாய் இருங்கள் என அவரை பேசாமல் இருக்கச் சொன்னார். வெளியில் இருந்து மாணவர்கள் எனக்குச் செய்தி அனுப்பினார்கள் கைப்பேசிக்கு. “விடுதலைச் சிறித்தையினர் மாணவர்களை அடிக்கிறார்கள்”. நான் திரு.வன்னியரசிடம் சொல்ல அவர் அதை தடுப்பதற்காக வெளியேறினார். நானும் அவரோடு வெளியேறினேன். வெளியில் இருந்த மாணவர்களிடம் கூட்டம் நடைபெறும் விதத்தையும் தலைவர்களின் கருத்தையும் தெரிவித்தேன். மேடைக்குப் பின்புறம் இருந்த சிறிய அரசியல் கட்சிகளிடமும் தெரிவித்தேன். அனைவரின் மனநிலையும் தலைவர்களின் கருத்துக்கு எதிராய் இருந்தது. தலைவர்கள் வருமு்ன் மாணவர்கள் மேடையைக் கைப்பற்றினர். மேடையையும் மேடையைச் சுற்றியும் மாணவர்களும் சிறிய அரசியல்கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் இருந்தனர். பா.ம.க, ம.தி.மு.க ஆகிய இரு பெரும் அரசியல் கட்சியிலிருந்து எந்த தொண்டனும் வந்த பாடில்லை.
திரு.ராமதாஸும் திரு.வை.கோவும் தங்கள் தொண்டனையும் அழைக்காமலேயே அந்த இறுதி ஊர்வலத்தை அன்று நடத்த அறைக்குள் வாதிட்டுக் கொண்டிருந்தனர். நண்பகல் 11 மணி வாக்கில் திரு வெள்ளையன் ஒலிபெருக்கியில் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவின் படி இன்னமும் 1 மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் தொடங்கும் என்று அறிவித்தார். மாணவர்களும் ஏனையோரும் ஏற்க முடியாது என்றனர். திரு.வெள்ளையன் பேசிக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து வாங்கி நான் கூட்டத்தின் மனநிலையைப் பதிவு செய்தேன். வெள்ளையனுக்கு உள்ளூர சந்தோசமே. திரு.ராமதாஸு மேடைக்கு வராமலேயே கிளம்பிச் சென்றார் இதற்குப்பின் திரு.ராமதாஸ் வரவே இல்லை. திரு.வை.கோ பேச முயற்சி செய்தார்.
”யாரோடு உன் தேர்தல் கூட்டணி என்று சொல்லிவிட்டுப் பேசு”, என மாணவர்கள் ஒருமையில் அவரை பேச விடாமல் தடுத்தனர்.
”போதும் உன் உணர்ச்சி நாடகம்” என்று அவரை நோக்கி வசைகூட பேச்சை நிறுத்தி விட்டார். திரு.திருமாவளவனும் பேச வில்லை. தலைவர்கள் கிளம்பிச் சென்றார்கள். கிளம்பும் முன் திரு நடேசனின் அறிக்கையை திரு.வை.கோ கூட்டத்திற்கு முன் வாசித்தார்.
மேடை இதற்குப் பின் முழுக்க மாணவர்கள் வசமானது.
மாணவர்கள் அதற்குப்பின் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றினார்கள். ஒலி பெருக்கி மாணவர் வசமானது. மேடை புலிக் கொடி வசமானது. கூட்டம் கூடியவாறே இருந்தது. சாலை முழுவதும் அடங்காத கூட்டம்.
கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார். தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்.
முத்துக்குமாரனின் சடலத்தை அன்று சூழ்ந்திருந்த மாபெரும் கூட்டம் அரசியல் கட்சி சாராதது. எந்த அரசியல் கட்சிக் கொடியையும் ஏந்தாதது.
தமிழகம் முழுவதும் இருந்து கூட்டம் திரண்டிருந்தது. முத்துக்குமார் நிஜமாகவே ஒரு எழுச்சியை ஏற்படுத்திவிட்டான். எந்த பெரிய அரசியல் கட்சியும் கையில் எடுக்காமல் வகைப்படுத்தாமல் விட்டும் சாரை சாரையாய் மக்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டிருந்தனர்.
வந்த கூட்டம் நம்பிக்கைக் கொடுத்தது. போர் நிறுத்தம் வரும் வரை முத்துக்குமாரனின் சடலத்தைக் கொண்டு போராட வேண்டும் என்று மாணவர்கள் மற்றவர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருந்தார்கள். திரு.வெள்ளையன் மருத்துவர் ஒருவரை வரவழைத்து முத்துக்குமாரனின் சடலத்தைப் பரிசோதித்தார்.
ஏதேனும் மருந்துள்ளதா சடலத்தைப் பேண என வழி கேட்டார். மருத்துவர் அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரம் எனக் கையை விரித்தார். நேற்றே மருந்து ஏற்றியிருக்க வேண்டும் என்றார். செய்வதறியாது நின்றோம்.
இரவும் வந்தது. கூட்டம் மெல்ல நகரத் தொடங்கியது. நாளையும் சடலத்தை எடுக்கக் கூடாது என்பதைத்தவிர மாணவர்களிடமும் ஏனையோரிடமும் அரசியல் ரீதியான செயல்பாடு எதுவும் இல்லை. நாளை அரசியல்வாதிகளிடமிருந்து முத்துக்குமாரின் சடலத்தை எப்படிக் காப்பாற்றுவது என்பதே அவர்கள் முன் இருந்த சவாலாக அவர்களுடைய உரையாடல்கள் அமைந்திருந்தன . இரவு திரு.வை.கோ வந்தார். மாணவர்களிடம் அமர்ந்து அவர்களின் எழுச்சியைப் பாராட்டினார், தானும் அவர்களைப் போல்தான் ஒரு காலத்தில் இருந்தேன் என்றார். மனசாட்சி உறுத்தி வந்தாரா? இல்லை காலையில் பழுதான அவரின் முகத்தைச் சரி செய்ய வந்தாரா தெரியவில்லை என மாணவர்கள் அவர் போனபின் சொல்லிச் சிரித்தார்கள். .
ஜனவரி 31
சனிக்கிழமை
மாணவர்கள் கூட்டம் நிறைந்து இருந்தது. மேடை அவர்களின் வசமே இருந்தது. கட்சிக் கொடிகள் மேடைக்கு வரக் கூடாது என்ற கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்தார்கள். பெரும் கட்சியிலிருந்து சிறுகட்சி வரை அக்கோரிக்கையை ஏற்று கட்சிக் கொடி இல்லாமல் மேடைக்கு வந்து மரியாதை செலுத்தினார்கள். புலிக் கொடி மேடையை அலங்கரித்தது. மதியம் வரை தலைவர்கள் யாரும் வந்தபாடில்லை. குறைந்தப் பட்சம் 10000 பேராவது அன்று மரியாதை செலுத்தினார்கள். திரைப்படத் துறையிலிருந்து இயக்குநர்கள், நடிகர்கள், உதவி இயக்குநர்கள் இன்னும் மற்றத் துறையினரும் வந்தவாறு இருந்தார்கள். இயக்குநர் சங்கத்தின் பிரதிநிதிகள் அனைவரும் வந்திருந்தார்கள்.
நடிகர்களில் மன்சூர் அலிகான் வந்தது நினைவு இருக்கிறது. இயக்குநர்களில் பாரதிராஜா,அமீர், ஆர்.கே.செல்வமணி,சேரன், சுப்ரமணிய சிவா, சரவண சுப்பையா, சீமான் வந்தது என் நினைவில் இருக்கிறது. இறுதி ஊர்வலம் அன்று வேண்டாம் என்பதும் ஈழத்தில் சமாதானம் வரும் வரை போராடுவோம் முத்துக்குமாரன் தந்த அவன் உடல் என்ற ஆயுதத்தோடு என மாணவர்கள் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள். இரண்டு மணி வாக்கில் வை.கோ வந்தார். முத்துக்குமாரனின் சடலத்திற்கு முன் இருந்த பந்தலில் அமர்ந்தார். கட்சிக் கொடி கொண்டு வர வேண்டாம் என்று தன் கட்சிக் காரர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள்தான் முன்பிருந்து நடத்த வேண்டும் என்று ஒத்துக் கொண்டார். பொழிலனின் உறவினர் வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல்தான் ஒலிபெருக்கியில் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.
3 மணி நெருங்கும் போது திரு.திருமாவளவன் தன் கட்சியினருடன் வந்தார். அவரது கட்சியினர் மேடையில் ஏற மேடைக் கூட்டத்தின் அளவு கொள்ளாமல் ஆடியது, வழக்குரைஞர் அங்கயற்கன்னி என்ற கயல் மாணவர்கள் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் வைக்க, அதைப் பொருட்படுத்தாமல் ஏறக்குறைய ஒலிபெருக்கியை அவரிடம் இருந்து பிடுங்கினார். அதன் பின் மேடையும் நிகழ்வும் அவர் மற்றும் அவர் தொண்டர் வசமானது.
3 மணிக்கு முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் தொடங்கும் என அறிவித்தார். ஊர்வலத்தின் பாதையை இயக்குநர் புகழேந்தியும், கவிஞர் அறிவுமதியும் முன்பே எழுதி காவல் துறை வசம் ஒப்படைத்திருந்தனர். பெரம்பூரில் இருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், சூளை ஹை ரோட், யானை கவுளி, வால்டேக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் இடுகாட்டை அடைவது என்பதுதான் இறுதி ஊர்வலத்தின் வழி. காவல்துறையினர் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் இடுகாட்டிற்குப் போனால் போதும் என்பதே அவர்களுடையதும் அரசாங்கத்தின் மனநிலையும் என ஜனவரி 30 இரவு காவல்துறையினரிடம் பேசிய திரு.வெள்ளையன் எங்களிடம் சொன்னார். அரசாங்கம் எந்த விதத்திலும் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தை தொல்லை செய்ய விரும்பவில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் முத்துக்குமாரனின் சடலத்திடம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. மூலக்கொத்தளம் இடுகாட்டை சிபாரிசு செய்தவர் திரு.திருமாவளவன். மொழிப்போர் தியாகிகளின் நினைவிடம் அங்கிருப்பதாலே அவர் அதனை சிபாரிசு செய்வதாய் சொல்லியிருந்தார். இக்காரணத்தினால் பெசண்ட்நகர் இடுகாடு போன்ற பரீசீலனைகள் நிராகரிக்கப்பட்டன.
ஊர்வலம் தொடங்கியது. அரசியல் கட்சியைச் சேராத பலரும் மாணவர்களும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இயக்குநர் அமீர் முத்துக்குமாரனின் சடலம் இருந்த வண்டியில் ஏறி சடலத்திற்கு அருகில் அமர்ந்து வந்தார். அவர் விளம்பரம் தேடுகிறார் இறங்க வேண்டும் என அவரிடம் கீழ் இருந்த பலரும் வாதிட்டுக் கொண்டிருந்தனர், மாணவர் ஒருவர் அவரிடம் என்னைச் சொல்லச் சொல்லுமாறு சொன்னார். நான் இயக்குநர் சுப்ரமணிய சிவாவிடம் சொன்னேன். அவர் அமீரிடம் சொன்ன போது அமீர் தன் நோக்கம் விளம்பரம் தேடுவது அல்ல என மறுத்தார். இருட்டிய பின் வண்டியிலிருந்து இறங்கினார்.
அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்த தோழர் திரு.வெள்ளையன் ஊர்வலத்தின் இறுதியில் மாட்டிக் கொள்ள முத்துக்குமாரனின் சடலம் ஊர்வலத்தின் நடுவே வர திரு.வை.கோ அதற்கு முன்னும், திரு.திருமாவளவன் ஊர்வலத்தின் தொடக்கத்தில் நின்றும் வழி நடத்திச் செல்ல கண்ணுக்கெட்டிய தூரம் வரை புலிக் கொடிகளும் தலைவன் பிரபாகரனின் உருவப்படங்களும் மனிதக் கூட்டமும் தெரிந்தது. அப்பகுதி கடைகள் வணிகர் சங்கம் கடையடைப்பு அறிவித்திருந்த காரணத்தால் மூடப்பட்டிருந்தன.
பெரம்பூர் அடிப்பாலம் அருகே ஊர்வலத்திற்கு முன் சென்ற திரு.திருமாவளவன் ஒரு வேனின் மீது ஏறி நின்றவாறு ஊர்வலத்தின் பாதையை பெரம்பூர் புறவழிச் சாலைக்குத்திருப்பினார்.
முன் சென்ற ஒரு அணி அப்பாதையில் திரும்பிச் சென்றது. அவர்களுக்குப் பின் வந்த மற்ற அணியில் இருந்த மாணவர்களும் அரசியல் கட்சி சாராத சிலரும் அப்பாதையில் செல்ல முடியாது, ஏற்கனவே முடிவு செய்த ஓட்டேரி ,புரசைவாக்கம் வழி செல்ல வேண்டும் என்ற கோரிக்கையுடன் சாலையில் அமர்ந்து ஊர்வலத்தை தடுத்தார்கள்.
மற்றத் தலைவர்கள் யாரும் அவ்விடத்தில் இல்லை. தகவல் அறிந்து இயக்குநர் சேரன் அவர் உதவியாளர்களுடன் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார். அமர்ந்து இருந்தவர்களை வன்னியரசு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார். அதில் மூவருக்குப் பலத்த அடி. அவர்கள் பின்பு என்னிடம் முறையிட்டார்கள். இயக்குநர் சேரனுக்கு திரு.திருமாவளவன் நடந்த வாறே விளக்கம் சொன்னார், புரசைவாக்கம் பகுதியில் ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்த சிலர் சதி செய்து உள்ளனர் அதனால்தான் தான் வேறு வழி இன்றி பாதையை மாற்றினேன் என்றார்.
நடந்து வந்த திரு.வை.கோ வும் வண்டியில் வந்த திரு.பழ. நெடுமாறனும் இது குறித்து எதுவும் யாரிடமும் கேட்கவில்லை. யார் சொல்வதில் எது உண்மை என அறியாமலே நாங்கள் ஊர்வலத்தில் நின்றோம். மாற்றி விடப்பட்ட புற வழிச் சாலையில் வீடுகளோ கடைகளோ இல்லை. ஒரு புறம் பெரிய மதில் சுவர், மறுபுறம் ரயிலடி. 3 கிலோமீட்டர்கள் யாரும் இல்லாத அச்சாலையில் ஊர்வலம் நகர்ந்தது. சாலையின் எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டியும் வந்த பாடில்லை.காவல் துறையினர் ஊர்வலம் திரும்பிய உடனேயே வண்டிகளின் போக்குவரத்தை தடுத்திருக்கலாம். அல்லது கூட்டத்தின் பெரும்பான்மைக்குத் தெரியாத ஊர்வலப்பாதை அவர்களுக்கு முன்பே தெரிந்தும் இருக்கலாம். புறவழிச் சாலையில் நகரத்தொடங்கிய சிரிது நேரத்திற்கெல்லாம் மின்சாரம் போனது.
அதற்குப் பின் மூலக்கொத்தளம் போக ஆன அந்த 6 மணி நேரத்திலும் மின்சாரம் ஊர்வலம் போன எந்தப் பாதையிலும் இல்லை. அங்கங்கே மக்கள் மெழுகு வர்த்தியுடன் நின்றார்கள். கூட்டத்தின் பின்புறம் இருந்து எப்படியோ ஒரு ம்80 யில் தொற்றி முன் செல்ல முயன்று கொண்டிருந்த திரு.வெள்ளையன் எங்களைக் கடந்தார்.
அவரிடம் இயக்குநர் சேரன் திரு.திருமாவளவன் பாதையை மாற்றுவதற்காய் சொன்ன காரணத்தைச் சொன்னார். அதற்கு திரு.வெள்ளையன் ” புரசைவாக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு கடையும் வணிகர் சங்கத்திற்கு உட்பட்டது. புரசைவாக்கம் எங்களுடைய கோட்டை, அங்கு அப்படி நடக்க வழியில்லை, ஏன் மாற்றினார் பாதையை என்பது எனக்கு விளங்கவில்லை” என்று சொல்லிப் போனார். அவரின் சகோதரர் புகழேந்தி பாதை மாறிய வருத்தத்தில் ”முத்துக்குமாரனின் ஊர்வலம் ஆளற்ற மின்சாரம் அற்ற பாதையில் பொகிறதே, அவன் தியாகம் இருட்டடிக்கப்பட்டதே” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கினார். யார் என்று தெரியாத ஒருவர் சொன்னார், ”இப்பகுதி விடுதலைச் சிறுத்தை” கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாய் உள்ளப் பகுதி, அவர்களிடம் தன் முக்கியத்துவத்தை உணர்த்த திருமாவளவன் பாதையை இப்பக்கம் திருப்பி இருக்கலாம், மூலக் கொத்தளத்தை தேர்வு செய்யவும் இதே காரணமாய் இருந்திருக்கலாம் என்று அவருடைய கருத்தைச் சொன்னார்.
எது எப்படியோ மின்சாரம் இல்லாத தெருக்களின் வழியாய் முத்துக்குமாரும் அவனுடைய தியாகமும் இருள் வீதிகளில் போனது. ஊர்வலத்தின் முன் பகுதி இடுகாட்டினுள் சென்றுவிட முத்துக்குமாரனின் சடலம் அவன் வார்த்தையில் சொல்வதாய் இருந்தால் அவன் நமக்குத் தந்த ஆயுதம் இடுகாட்டினுள் வந்த பாடில்லை. மாணவர்களும் மற்றவர்களும் பாலத்தில் அமர்ந்து மறியல் செய்கின்றனர் சடலத்தை விட மறுக்கிறார்கள் என்று தகவல் வர தலைவர்கள் தங்களால் வந்து பேச இயலாது, அளவுக்கு மீறிப் போகிறார்கள் என்றார்கள். இயக்குநர் சேரனுடன் பாலத்திற்குச் சென்றேன். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள்(சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்கள்), மூன்று நாட்களாய் முத்துக்குமாரனோடு இருந்தவர்கள், சில மணி நேரத்திற்கு முன் வன்னியரசால் வலுக்கட்டாயமாக சாலை மாறிய போது தள்ளப்பட்டவர்கள் அரசியல் கட்சி சாராதோர் சிலர் என ஒரு 300 பேர் முத்துக்குமாரனின் உடல் இருந்த வண்டி முன் மறியல் செய்து கொண்டிருந்தார்கள். தமிழகம் முழுவது கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அரசாங்கம் அறிவித்தது அப்போதுதான் அவர்கள் வாயிலாக எங்களுக்குத் தெரிந்தது. கல்லூரி விடுமுறையானால் மாணவர்கள் ஒன்று சேர இயலாது ,போராட்டங்களை முன்னெடுக்க முடியாது, முத்துக்குமாரின் தியாகம் விழலுக்கு இரைத்த நீராகிவிடும், எனவே கலைஞர் இல்லத்திற்கோ தலைமைச் செயலகத்திற்கோ முத்துக்குமாரனின் சடலத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எங்களால் பதில் சொல்ல இயலாமல் நாங்கள் திகைத்தோம். அவர்களின் பார்வையும் புரிதலும் சரியாகவே இருந்தது. வன்னியரசும் பேசிப்பார்த்தார். இறுதியில் வலுக்கட்டாயமாக ஊர்வலத்தை இடுகாட்டிற்குள் திருப்பினார்கள்.
நானும் சேரனும் முன் சென்றோம். தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தோம். தலைவர்கள் மிகுந்த எரிச்சலில் இருந்தார்கள். திரு.பழ. நெடுமாறன் ”இவங்கல்லாம் மாணவங்களே இல்லை” என்றார். திரு.வை.கோ அரஜாகவாதிகள் எனப் பொருள் படச் சொன்னார். முத்துக்குமார் நமக்கு தந்த ஆயுதம் எரியூட்டப்பட்டது. அதற்குப்பின் மேடையில் அனைவரும் வீர உரையாற்றினார்கள்.
பயணி
http://sagotharan.wordpress.com/2012/01/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

இந்த பின்னுட்டங்களை வாசிக்கும் போதும் இந்த கடிதத்தை வாசிக்கும் போதும் எனக்கு தோணியது இது தான்..
எந்த அரசியல்வாதிகளையும் நம்ப முடியாது. அது கருணாநிதியோ ஜெயலலிதாவோ வைகோவோ ராமதாசோ திருமாவளவனோ நெடுமாறனோ இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிற எந்த அரசியல்வாதியும் நம்பவோ பின்பற்றவோ முடியாத நிலைமை தான் காண படுகிறது.
சுய சார்பு, அரசியல் முன்னேற்றம், தனிப்பட்ட செல்வாக்கு இவற்றை அதிகரிக்க போரட்டங்களை நடத்தவும் முன்னால் சென்று நடத்தவும் விழைகின்றனர்.

சில இணைப்புகளை பகிர்ந்து இருக்கிறேன். நிங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்கள். முத்துக்குமார் போன்ற தீயில் எரிந்து
உயிர்தந்த தோழர்களின் தியாகங்கள் இந்த அரசியல் தலைவர்களால் எவ்வாறு முனை மழுங்கடிக்க பட்டது என்பதை அறியும் போது வேதனையும் வெட்கமும் வருகிறது.

http://tamil.oneindia.in/news/2011/01/29/tamil-leaders-pay-homage-muthukumar-aid0091.html

http://www.dinakaran.com/2012_new/News_Detail.asp?Nid=1028
மால்கம் X இராச‌கம்பீரத்தான்
தமிழ்தேசியம் என்பது இந்துதேசியத்தின் இன்னொரு வடிவமாக மாற்றும் தமிழ் சக்திகள் என்ற சந்தேகத்தை மிக அழகாக தோலுரித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் வன்னி அரசு!

ஒடுக்கப்பட்ட மக்கள், தலித் மக்கள் மீதான புரிதல் இல்லாத எந்த ஒரு தமிழ் தேசியம் பேசும் தலைவரக்ளையும் நாம் நம்புவதாக இல்லை, பெரியாரியம் இல்லாத தமிழ்தேசியம் நிச்சயம் இந்துத்துவா தேசியமாகத்தான் இருக்க முடியும்.
paramagourou jagadeesan
அனைவருக்கும் வணக்கம் முதலில் ஜாதியை விட்டு தள்ளுங்க நாம தமிழ் இனமாக இருப்போம்
மனோகரன்
கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனயை பற்றி நடராசன் கட்டுரை எழுதி உள்ளார் புதிய பார்வையில்.
சோவையும் தினமலரையும் மிஞ்சிவிட்டார் நடராசன் அக்கட்டுரையில்.
aathi
திரு.வன்னியரசு அவர்களே , முத்துக்குமார் இறுதி நிகழ்ச்சியை திசை திருப்பி மக்கள் எழுச்சி ஏற்படாமல் செய்ததாக வைக்கப்படும் குட்ரசாடுக்கு உங்கள் தலைவர் என்ன பதில் சொல்ல்கிறார். கூட்டணி கட்சி என்ற முறையில் அப்போதைய முதல்வருக்கு விசுவாசத்தை காட்ட, ஒரு உணர்வாலரின் தியாகத்தை பயன்படுத்தி கொண்டார் ... எல்லா ஓட்டு பொருக்கி அரசியலும் ஒன்று தான் , நீங்கள் ஒன்றும் விதி விலக்கல்ல ,,... உங்கள் மீது விமர்சனம் செய்யும் போது அதை நேரடியாக எதிர் கொள்ளுங்கள் ,. உங்களை காப்பாற்றி கொள்ளும் கேடயமாக தாழ்த்த பட்ட மக்களை பயன்படுதாதிர்கள் .
Raju
தமிழ்தேசியம் இலவசம், இலவசம், முற்றிலும் இலவசம்
------------------------------------------------------------------------------------------

நண்பர்களே ஒரே நாளில் தமிழ்த்தேசியவாதியாக வேண்டுமா, கீழே உள்ள
வழிமுறைகளை பின்பற்றினால் போதும்
வாய்ப்பை நழுவவிடாதிர்கள்.

1 . முதலில் நீங்கள் ஒரு தலித்தாக இருக்க கூடாது.

2 . நீங்கள் தமிழ் ஈழம் வெல்க என்று சொல்லவில்லை என்றால் கூட பரவா இல்லை
கட்டாயம் கருணாநிதி ஒழிக என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
(பிற்காலத்தில் கருணாநிதி வாழ்க என்று சொல்ல வேண்டி வந்தால் அப்போது சூடு
சொரணை இல்லாமல் வாழ்க சொல்லியே ஆக வேண்டும்) தூக்கத்தில் கூட ஜெயலலிதாவை
எதிர்க்ககூடாது. ஜெயலலிதாவை எதிர்ப்பது தமிழ்த்தேசியத்திற்கே எதிரானது.

3 . 43 ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்ட காங்கிரசை மீண்டும் ஒழிக்க
வேண்டும். தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, ஆந்தராவிலும் காங்கிரசை ஒழிக்க
வேண்டும். அதற்க்கு அங்குள்ள மிகபெரிய அரசியல் தலைவர் அல்லது தலைவி மூலமாக செய்யவேண்டும்.

4 . ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துகொள்ள வேண்டும், ஆம் கருணாநிதியை எதிர்பதுதான் தமிழ் தேசியம்.

இப்போது நீங்கள் முழு தமிழ்த்தேசியவாதியாக ஃபொர்ம் ஆகி இருப்பீர்கள். இப்போது உங்களை கைது செய்ய காவல்துறை தயாராக இருக்கும், உங்கள் மீது
செக்ஸ் வழக்கு கூட போடுவார்கள். முன்பு போல் நீங்கள், "நான் ஜெயிலுக்கு போறேன்", "ஜெயிலுக்கு போறேன்" என்று சொல்லி ஜெயிலுக்கு போககூடாது.

ஏனென்றால் நீங்கள் ஜெயிலுக்கு சென்று விட்டால் யார் தமிழ் தேசியத்தை காப்பது. அதற்க்கு சிறந்த வழி நீங்கள் காவல் துறையை கையில்
வைத்திருக்கும் முதல்வரை சந்திக்க வேண்டும். அவர் தமிழ் தேசியத்திற்கும், ஈழத்திற்க்கும், எதிரானவராக இருந்தால் கூட பரவாஇல்லை, அவர் நமது தேசிய
தலைவரை தூக்கிலிட வேண்டும், போரென்றால் மக்கள் கொள்ளபடுவது இயல்புதான், புலிகள் மீதான தடைக்கு நாந்தான் காரணம் என்று சொன்னவராக இருந்தால் கூட
பராவில்லை அவருக்கு நீங்கள் ஈழ தாய் பட்டம் கொடுத்து ஒரு பாராட்டு கூட்டம் நடத்தி விட்டால் போதும். அதன் பிறகு பாருங்கள் உங்களை, கனடா,
அமெரிக்க போன்ற நாடுகளுக்கு அழைப்பு மேல் அழைப்பு விடுவார்கள், புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள். (மன்னிக்கவும் இலங்கை தமிழர்கள்).

இதையெல்லாம் நீங்கள் கடைபிடித்தால் நீங்களும் ஒரு தழிதேசியவதிதான்.
திராவிடன்
முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்--- “கையில் லத்தியுடன் இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் படைசூழ முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்த வந்த புரசை எம்.எல்.ஏ.(தி.மு,க) வி.எஸ்.பாபு செருப்பு, கற்கள் வீசி துரத்தியடிக்கப்பட்டார். தலைதெறிக்க அவர் ஓடிய காட்சி அருமையாக இருந்தது. அண்ணா திமுக மதுசூதனன் மலரஞ்சலி செலுத்தினார். இவர், “போர் என்றால் அப்பாவி மக்கள் சாகத் தான் செய்வார்கள்“ என்று முழங்கிய அம்மாவின் தொண்டன்….. மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது.”

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாடு முழுக்க அடிவாங்கியவன் திமுக காரன். எமர்ஜென்ஸியில் கூட திமுகவின் குறிப்பிட்ட சில தலைவர்கள் தான் கைது செய்யப்பட்டார்கள். சிறையில் தாக்கப்பட்டார்கள். ஆனால் ராஜீவ் கொல்லப்பட்டபோது அடிபடாத, சொந்த அழிவுகளை சந்திக்காத திமுககாரனே இல்லை. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரின் 15 லாரிகள் முதல், சிறுவண்டி வைத்து வியாபாரம் செய்த சில்லறை வியாபாரி வரை எல்லா திமுககாரனும் அடிபட்டான். குடும்பம் குடும்பமாக அடிபட்டார்கள். வீடு புகுந்து தாக்கப்பட்டார்கள். பல திமுக காரன் வீட்டில் அன்று அடுப்பு எரியவில்லை. அதுமட்டுமல்ல, திமுகவின் தலைவரான ம்கருணாநிதி டெல்லி சென்று ஜெயின் கமிஷனில் நின்று கொலைகாரன் என்கிற குற்றச்சாட்டுக்களை கூண்டில் ஏறி மறுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. ஒரு நாள் அல்ல, ஒரு வாரம் கூண்டில் நின்றபடி விசாரிக்கப்பட்டார். அப்படிப்பட்ட கட்சிக்காரனுக்கு நீங்கள் காட்டிய மரியாதை, செறுப்படி, கற்கள் வீச்சு. அதுவும் இழவு வீட்டுக்கு வந்தவன் எதிரியே ஆனாலும் அவனை அடிக்கக்கூடாது என்கிற உலக அளவில் கடைபிடிக்கப்படும் அடிப்படை மனித நாகரிகத்தையும் மீறி தாக்குவதும், அதை “அருமையாக இருந்தது” என்று ஒருவர் பாராட்டி எழுதுவதும் திமுகவுக்கு ஒன்றும் கேவலமில்லை. அதை செய்த அரசியல் தற்குறிகளுக்கும் அதை ரசித்த ஞான சூனியங்களுக்கும் தான் கேவலம்.

திமுக காரனை இப்படி அடித்த இதே பிரகஸ்பதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று உலகிலேயே முதன் முதலில் முத்திரை குத்தி, சட்டரீதியாக தடை செய்ய எல்லாமும் செய்த ஜெயலலிதாவின் கட்சிக்காரனுக்கு அஞ்சலி செலுத்த அனுமதித்திருப்பதும் இவரின் ஒப்புதல் வாக்குமூலம் சொல்கிறது. அதைவிட உச்சகட்ட புல்லரிப்பு “மன்சூர் அலிகானின் பேச்சு மிகுந்த உத்வேகத்தை கூட்டத்தினருக்குத் தந்தது”.

விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் எல்லா நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தும் ஏன் இப்படி அடியோடு தோற்றார்கள் என்கிற எதிர்கால ஆய்வுக்கு இயக்குநர் ராமின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் மிகப்பெரிய உண்மையை கூறும். அவர்களுக்கு தங்களின் நேச சக்திகளை அடையாளம் காணவும் தெரியவில்லை. எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும் தெரியவில்லை. அதைவிட முக்கியமாக நடிகனுக்கும் நண்பனுக்குமான வித்தியாசத்தை கூட உணர முடியாத அரசியல் அறிவிலிகளாக இருந்தார்கள் என்பதை தான் இயக்குநர் ராமின் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்கிறது.

இவர்களின் அணுகுமுறை ஈழத்தமிழர்களின் பேரழிவில் முடிந்த பிறகும் இவர்கள் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதைத்தான் நெடுமாறனுக்கான வன்னி அரசுவின் கடித்தத்திற்கு தமழ்தேசிய குஞ்சுகள் ஆற்றும் எதிர்வினையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. உங்களின் அரசியல் தற்குறித்தனத்தால் லட்சக்கணக்கான ஈழத்தமிழன் ஏதிலியானால் என்ன, அழிவதற்கு தமிழ்நாட்டில் இன்னமும் ஏழு கோடி தமிழர்கள் பாக்கியிருக்கிறார்கள். தொடரட்டும் உங்கள் தொண்டு.

ஒரு முட்டாள் திராவிடன்
nakkiran
திரு வன்னியரசு அவர்கட்கு! வணக்கம். உங்களது நீண்ட அறிக்கையைப் படித்தேன். உங்களது உள்நாட்டுப் பனிப் போரில் நான் தலையிட விரும்பவில்லை. திரு பழ.நெடுமாறன் மீது நீங்கள் அடுக்கிக் காட்டும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதிலளிப்பார் என நம்புகிறேன். அவரிடம் அந்தத் திறமையும் பட்டறிவும் இருக்கிறது. கடந்த காலங்களில் தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகள் ஒரு அணியில் நின்று தேர்தலைச் சந்திக்காததற்கான முழுக் காரணம் திரு. திரு தொல்திருமாவளவன் அவர்களே. அவர்தான் அவசர அவசரமாக திமுக கூட்டணியில் சேர்ந்து சிதம்பரம் தொகுதியைப் பெற்றுக் கொண்டார். திரு கருணாநிதியோடு தொல். திருமாவளவன் எந்த முகத்தோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டார்? திமுக தமிழ்த் தேசியத்தின் பரம வைரியான காங்கிரசோடு கூட்டணி வைத்திருந்ததை தொல். திருமாவளவன் தேர்தல் அரசியலுக்காக கண்டுகொள்ள ஏன் மறுத்தார்? . அது மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அவர் பரப்புரை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்பட்டார். திமுக - காங்கிரஸ் பரப்புரை மேடையில் “அன்னை சோனியா வாழ்க!”” “ என்று தொல். திருமாவளவன் முழக்கம் இட்டாரோ அன்றே அவர் தமிழ்த் தேசியத்தை முற்றாகக் காட்டிக் கொடுத்துவிட்ட குற்றச் சாட்டுக்கு ஆளாகிவிட்டார். இவ்வளவிற்கும் அன்னை சோனியா அவரைக் கண்டு கொள்ளவே இல்லை! தொல். திருமாவளவனை கக்கத்தில் வைத்துக் கொண்டுதான் திமுக – காங்கிரஸ் ஆட்’சி முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையை மகிந்த இராசபக்சே மூலம் நிறைவேற்றியது. இதன் பின்னர்தான் தொல். திருமாவளவன் மீது புலம்பெயர் தமிழ்மக்கள் மலையளவு வைத்திருந்த நம்பிக்கை சுக்கு நூறாகியது. அந்தக் கட்டத்தில் ஆவது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழ் மானத்தை திருமாவளவன் காப்பாற்றியிருக்கலாம். அதை திருமாவளவன் செய்யவில்லை.உண்ணாவிரதம் இருந்தாரே ஒழிய தனது பதவியை விட்டு விலகவில்லை. கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். தஞ்சையில் கட்டப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு “முதலாளி” நடராசனிடம் இருந்து 50 இலட்சம் பெற்றதை வைத்துக் கொண்டு பழ.நெடுமாறன் பஞ்சமா பாதகம் செய்து விட்டார்”“ என்று புலம்புவது தேவையற்றது. நடராசன் ஒரு முதலாளி என்பதால் அவருக்குத் தமிழ்த் தேசியப் பற்று இருக்கக் கூடாதா? அப்படிப் பார்த்தால் பல கோடிகளை வைத்திருந்த பெரியார் கூட ஏழை எளிய மக்கள் சார்பாகப் போராடியது தவறுதான்! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பணக்காரன் – ஏழை விவாதம் எடுபடாது. தமிழர்கள் எல்லோருமே பணத்தால், கல்வியால், பண்பாட்டால் வானளவு உயர வேண்டும்! “ஒவ்வொரு தமிழனிடத்திலும் நிதி வசூல் செய்து அதன் மூலம் தமிழ்த் தேசியத்தைப் பொதுமைப்படுத்த-பரவல்படுத்த முயற்சிக்காமல் ............................................பழ. நெடுமாறன் அப்படிப் பணம் சேர்க்க வேண்டாம் என்று சொன்னாரா? நீங்கள் பணம் சேர்த்துக் கொடுத்திருக்கலாம்தானே? உங்களை யார் தடுத்தது? “இந்திய தேசியத்திற்கு அடிப்படை இந்துத்துவம். அந்த இந்துத்துவத்திற்கு அடிப்படை சாதியம். இந்திய தேசியம், இந்துத்துவம், சாதியம் இந்த மூன்றும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவை மட்டுமல்ல, இவை மூன்றுக்கும் மாற்று தமிழ்த்தேசியம்தான் என்பது நீங்கள் அறியாத ஒன்றல்ல. ஆனால் நீங்கள் தெரிந்தே இப்படி இந்துத்துவ மதவெறியர்களோடும் சாதி ஆதிக்க வெறியர்களோடும் கை கோர்ப்பது தமிழ்த் தேசியத்திற்குள் இருந்துகொண்டு தமிழ்த் தேசியத்தை முடக்கவும் அழிக்கவும் செய்யும் சதி இல்லையா?” எனக் கேட்கிறீர்கள். ” நல்ல கேள்வி. கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கிப் பாருங்கள். இதே ஜெயலலிதாவோடு தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத் தேர்தலில் பத்துக் கோடி வாங்கிக் கொண்டு தேர்தல் கூட்டணி வைத்த போது அவர் ஒரு இந்துத்துவ பார்ப்பனிய அடிப்படைவாதி என்பது தொல். திருமாவளவனுக்குத் தெரியவில்லையா? “2006 ஆம் ஆண்டு தமிழக சட்ட பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறிக் கடைசிவரை சேர்க்காமல் பொதுச்செயலாளர் திருமாவளவனை அவமானப்படுத்தி கருணாநிதி திருப்பி அனுப்பியதை இவ்வளவு விரைவில் வன்னியரசு மறந்து விட்டாரா? அதை அடுத்து போயஸ் தோட்டம் ஓடிச்சென்று ஜெயலலிதாவைச் சந்தித்து சட்டபேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்த்து மறந்து போச்சா? ஜெயல்லிதா எதிர்பாராத அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு 9 இடங்களை ஒதுக்கி முதல் ஒப்பந்தத்தை செய்து திருமாவளவனைப் பெருமைப்படுத்தினார். அப்போது திருமாவளவன் என்ன சொன்னார்? “தலித்துகளின் விரோதி கருணாநிதி தலித்துகளை மதிப்பவர் அன்பு சகோதரி ஜெயலலிதா. என்றென்றும் நான் அவருக்கு விசுவாசத்துடன் இருப்பதோடு அதிமுக வெற்றிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன்” என்றார். பின்னர் நடந்த தேர்தல் பரப்புரையில் இந்துத்துவ இந்து அடிப்படைவாதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். இதன் விளைவாக 9 கட்சி கூட்டணி பலத்தையும் மிஞ்சி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு 2 இடங்களில் வெற்றிப் பெற்றது. போட்டியிட்ட மற்ற இடங்களில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. கூட்டணியில் வி.சிறுத்தைகள் சிறிய கட்சியாக இருந்தாலும் அதனை அதிமுக, மதிமுக, விசி என்று 3 ஆவது இடத்தில் வைத்து திருமாவளவனுக்கு முழுமரியாதை அளித்து “அன்பு சகோதரர் திருமா என்று” அழைத்தார் ஜெயலலிதா. இதன் பின்னர் ஜெயலலிதாவின் பெருந்தன்மையில் 2 எமெலே பதவியை பிடித்த திருமாவளவன் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வுடன் உடன்பாடு கண்டபிறகு திடீரென அதேநாள் திமுக கூட்டணிக்குத் தாவிவிட்டார். “தலித் விரோதி” என்று கருணாநிதியைப் பழித்தவர் மீண்டும் அவரிடம் சரணாகதி அடைந்தார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் தொல் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க! சகோதரி என்ற முறையில் அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான்_ ஆத்திரமும், அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது!” “இந்துத்துவவாதி பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு பழ. நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பு மூலம் உலகப் பெருந்தமிழர் பட்டத்தைக் கொடுத்து இந்துத்துவ மதவெறியர்களோடும் கை கோர்ப்பது தமிழ்த் தேசியத்திற்கு
எதிரானதில்லையா?”” எனக் கடாவுகிறீர்கள். அதற்கான பதில் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரானதல்ல என்பதுதான். உங்களுடைய வாதத்தின்படி இந்துத் தமிழர்களும் முதலாளித் தமிழர்களும் தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக இருக்கக் கூடாது. வேறு விதமாகச் சொன்னால் தமிழர்கள் எல்லோரும் எப்போதும் ஏழைபாளைகள் ஆகவே இருக்க வேண்டும். தொழில் செய்து பணம் சேர்க்கக் கூடாது. இது கிணற்றுத் தவளையின் சிந்தனை. வி.புலிகளுக்கு பணம் படைத்த புலம்பெயர் தமிழர்கள் பெரும் பங்களிப்புச் செய்தார்கள். அதனால் தமிழ்த் தேசியத்துக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.உங்கள் அறிக்கையைப் படிப்பவர்களுக்கு நீங்கள் கலைஞர் மீது இன்னமும் நேசமும் பாசமும் வைத்திருப்பது தெரிகிறது. ஆனால் எம்மைப் பொறுத்தவரை கருணாநிதி எமது போராட்டத்தை காங்கிரசோடு சேர்ந்து அழித்தார் என்ற எண்ணம்தான் இருக்கிறது. அது சரி. நடராசனை முதலாளி என்கிறீர்களே? கருணாநிதி என்ன பரம ஏழையா? அடுத்த நேரச் சாப்பாட்டுக்கு அல்லல் படுகிறாரா? அவரே தனது சொத்து மதிப்பு 62 கோடி என்று சொல்லிவிட்டாரே?முடிவாக “அப்பாவி”“ உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அய்யா அவர்களை “தமிழீழக் கவிஞர் காசிஆனந்தன் அய்யா அவர்களையும் சாதி வெறியர்களோடு கைகோர்க்க வைத்து, அந்த அப்பாவி மீது சாதியக் கறை படியவைப்பது நியாயம்தானா?”” என்று பழ. நெடுமாறனைக் கேட்கிறீர்கள்? தெரியாமல்தான் கேட்கிறேன். காசி ஆனந்தன் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? படியாதவரா? அவர் என்ன சொந்தமாக சிந்திக்கத் தெரியாத பச்சைக் குழந்தையா? வி.சிறுத்தைகள் இயக்கம் நடந்து வந்த பாதையை மீள் ஆய்வு செய்வது நல்லது. இப்படியான உப்புப் புளியில்லாத அறிக்கையால் யாருக்கும் பலனில்லை. ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். கலைஞர் கருணாநிதியின் காட்டிக் கொடுப்புக்களை, பச்சைத் துரோகத்தை தொல் திருமாவளவன் கண்டு கொண்டும் தேர்தல் இலாபத்துக்காக அவரோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை என்போன்றோரது ஆதரவு அவருக்கு இருக்காது. எமது மனட்சாட்சி அதற்கு இடம் கொடுக்காது.
மிக்க அன்புடன்
நக்கீரன் (வேலுப்பிள்ளை தங்கவேலு)
கனடா
ராஜு
2010 ஆம் ஆண்டு சென்னை அருகில் மறைமலை நகரில் தமிழர் இறையாண்மை மாநாடு எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டில் தமிழ் நாட்டுகென்று ஒரு தனி தேசிய கோடி ஏற்றபட்டு, தனிநாடுக்கான அடித்தளம் போடபட்டத்தை உங்களுக்கு தெரிவிக்க கடமை படுகிறேன். 43 ஆண்டுகளுக்கு முன்பு போடபட்ட திராவிட நாடு தீர்மானத்திற்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் நிறைவேற்றிய இந்த தீர்மானம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது.

43 ஆண்டுகளாக தமிழ் தேசியம் பேசுபவர்கள் இதனை சிந்திக்க வேண்டும்.
durai ilamurugu
இதில்வரும் மாணவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள? எந்த அமைப்பையும் சேரதவர்கள் எப்படி கூட்டம் கூட்டமாய் வரமுடியும்? போர் நிறுத்தம் வரை உடலை வைத்திருப்பது நடக்ககும் காரியம? தி முக பிணத்தை வைத்தை அரசியல் நடத்துகிறது(மொழிப் போர் ) என்று சொன்ன்வர்கள் இதற்கு சொல்லும் நீதி என்ன? தமிழ் நாடு முழுவதும் கொந்தளித்து இருந்த்தது என்பதெல்லாம் ரொம்ப கூடுதலான செய்திகள் இறுதியாகமுத்துக் குமார் தியாகத்தின் பலந்தான் என்ன? பல்லாயயிரக் கணக்கில் தமிழர்கள் இறந்த போதும் அசையாத நடுவண் அரசு ஒரு மனிதனின் இறப்புக்கு அஞ்சி தனது கொள்கையை மற்றிக் கொள்ளூமா? அல்லது நடுவண் அரசை மீறி கருணானிதி என்னசெய்ய இயலும்?அதிக படசமாக பதவிவிலகி இருக்கலாம். நடுவண் அரசை கலைத்து இருக்கலாம் அதனால் ஈழப்,போருக்கு என்ன நனமை ? செயலலிதாவின்//கருனானிதியின் கைப்பாவைகளும் அதில் இருந்துஅரசியலாதயம் பெற நினைத்தனர் தமிழக மக்களின் மன நிலை அவ்விதம் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தின இதுவே உண்மை
Elavarasan
அண்ணன் வன்னி அரசுவுக்கு வணக்கம்,
நடராசன் என்ற சாதி இந்துவை தமிழ் தேசிய வாதியாக காட்ட முயல்வது மிக பெரிய தவறு தான்.உங்களிடம் சில கேள்விகள் உள்ளன.இந்த கேள்விகளை ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தி எழுப்புகிறீற்கள். தமிழின துரொகி கருணானிதியுடன் உங்கள் உறவு புளித்து விட்டதா?? தமிழ் தேசியம் பேசும் நீங்கள் சிதம்பரம் தொகுதி எம் பி யாகிய நீங்கள் உங்கள் தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்குடி அகதிகள் முகாமை பார்வையிட்டது உண்டா?? அவர்கள் மிகவும் குறைந்த கூலிக்கு சாலை அமைக்கும் பணிக்கும், மற்ற கேவலமான தொழிலிலும் ஈடுபட்டு வயிற்றை கழுவுவதை தடுக்க என்ன முயற்சி செய்தீர்கள்???
maduraisuki
தீண்டாமை- இன்னும் தமிழகதில் தொடர்கிரதெ அது குருஇது கவலப்பட யருமீலை இன்கெ ஆன சிலொன் தொடர்பா நேரய சைன்டை!!! உததப்புரதில சந்தொசம் வந்திருக்கு அத கொன்ட்டடுவொம்! உல்லுரப்பத்தி கவலைபட முதல முய்யர்ர்ஷி
INIYAN
இக்கடிதம் உன்மையான தமிழ்த்தேசியவாதிகலுக்கு பொருந்தும்
mathiarasan
சாதி தமிழர்களுக்கு ஒரு ஆதிதமிழன் கொடுத்த சவுக்கு அடி
அ.மு.அன்வர் சதாத்
சகோதரன் வன்னி அரசு அவர்களே,

என்னுள் இருக்கும் ஆதங்கத்தை அப்படியே
தாங்கள் வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

எவ்வளவு அருமையான ஒரு புரட்சி
சாத்தியம் எனும் சாத்தானின் கொடுங்கரங்களில்
சிக்கி சிதறுண்டது பெரும் கொடுமை.

......................."2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
விடுதலைப் புலிகள் நடத்திய ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’
மாநாட்டில் பேசிய எமது தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்,
"தமிழீழ விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின்
போராட்ட வெற்றிக்குப் பின் கிடைக்கும்
தமிழீழத்தில் சாதி ஒழிக்கப்பட வேண்டும்.
சாதியற்ற தமிழ்த்தேசம் அமைய வேண்டும்"
என்று பேசினார்.

இதற்குப் பதிலளித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
கவிஞர் புதுவை ரத்தினதுரை, "தம்பி பிரபாகரன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தின்
ஊடாகவே சாதியை ஒழித்து வருகிறோம்.
சாதி ஒழிக்கப்பட்ட தமிழீழம்தான் எமக்குத் தேவை.
சாதி அமைப்புடன் கூடிய தேசம் எங்களுக்குக் கிடைத்தால்,
அப்படியொரு தேசமே எமக்குத் தேவையில்லை"
என்று பேசினார்.".............................

சகோதரன் வன்னி அரசு அவர்களே,

மீண்டும் மீண்டும் படியுங்கள் இந்த வரிகளை
அப்பொழுதுதான் இதன் உள்ளர்த்தம் புரியும்.

விடுவார்களா சாதியத்தின் சூழ்ச்சி மூலம்
சாதிக்க நினைக்கும் சாத்தான்கள்.

அதனால் தான் யாசர் அரபாத்திடம் இருந்து திருப்பி
ஏரியல் சரோனிடம் நிறுத்தி தன்
முதல் இருப்பை நிறுத்தி கொண்டது பார்ப்பனீயம்.

முதல் சறுக்கல் முற்றிலும் சருக்களாகி போனதய்யா.
மோசம் போனோம்

தமிழ் தேசியம் என்பது வர்ணாசிரமத்திற்கு
நேர் எதிர் வரிசை கொண்டது.

எப்படி எனில் பறையனே இதன் உயர்குடி.

எப்படி சகித்து கொள்ளமுடியும்
இந்த வர்ணாசிரமத்திடம்
பட்டம் பெற்ற பட்டதாரிகளால்.

வரும் காலங்களில்லாவது நாம்
விளங்கி கொள்ளவேண்டும்.

தொல் திருமாவை முன்னிறுத்துங்கள்.

ஆதி திராவிடர்களை,முஸ்லீம்களை ஒருங்கிணையுங்கள்.
அதன் மூலம் தமிழ் தேசியம் வலுப்படுத்துவோம்.

அன்புடன்
அ.மு.அன்வர் சதாத்
kodimuthu
தமிழரல்லாத எத்தனையோ பேர் நம் தமிழுக்கும் நமக்கும் பெருமை தேடி தந்துள்ளனர் ஜி.யு.போப், என்ன தமிழரா? அவர் தன் கல்லறையில் எழுதி வைக்க சொன்னாரே இங்கு ஒரு தமிழ் மாணாக்கன் துயில்கிறான் என்று. திரு எம்ஜிஆர், வைகோ, சீமான், போன்றவர்களை இனத்தின் பெயரை சொல்லி ஒதுக்குவதை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
தமிழராய் இருந்தும் துரோகியாக வாழும் கருணா, டக்லஸ், பத்மநாபன், மேலும் தமிழின தலைவன் என்று பசுதோல் போர்த்தி திரியும் கருணாநிதி, அவரது அல்லக்கை அனபழகன், பச்சை துரோகிகள் தமிழக காங்கிரசு கட்சியினர் போன்ற ஏராளமான துரோகிகள் நாம் விமர்சிப்பதற்கும், அவர்களின் சுயௌருவம் வெளியில் தெரிவதற்கும் நமது நேரத்தை செலவிடுவோம், அதை விடுத்து தாகத்தை தணிப்பதற்கு நீர் கொடுப்பவர் சொம்பை சுத்தம் பார்க்ககூடாது. துரோகிகளை விமர்சிப்பதை விட்டு விட்டு போராடுபவர்களை விமர்சிப்பது என்ன நியாயம். வைகோ ஒருபோதும் தமிழர்களையும் புலிகளையும் விட்டுக்கொடுத்ததில்லை. பதவியே இல்லாவிட்டாலும் இன்னும் போராடும் அவர் போன்றோருக்கு நாம் துணை நிற்கவில்லை என்றாலும் தொல்லை தர கூடாது .
பாரதியை பிராமணன் என்கிறீர்,எம்ஜிஆரை மலையாளி, இவர்களிருவரையும் அந்த இனத்தின் எதிரிகளாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள்.
போராளிகளுக்கு இனம் கிடையாது, நியாயம் ஒன்றுதான் அவர்களின் பாதை. காந்திஜி தென்னாப்பிரிக்காவில் போராடும் பொது இனம் பார்த்து போராடவில்லை. சேகுவேரா கியுபாவில் போராடும் பொது இனம் பார்த்து போராடவில்லை. அன்னை தெரசா இனம் பார்த்து தொன்றாட்டவில்லை.

அன்புடன் . மு.கொடிமுத்து.
அதிரடியான்
உண்மைகளை மறைக்கும் பொய்யர் - வன்னியரசு

பொய் - 1:
வன்னியரசு தனது கட்டுரையில், “பரமக்குடியில் ஜெயலலிதா அரசு செய்த காட்டுமிராண்டித்தனமான செயலை நீங்கள் இதுவரை கண்டித்து அறிக்கை விடாததிலிருந்து உங்களது சார்பு நிலை எங்களுக்குப் புரிகிறது” என நெடுமாறன் அய்யாவைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறார்.

உண்மை என்ன:
1. பரமக்குடி படுகொலைகளைக் கண்டித்து செப்டம்பர் 2011இல், பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை, அவரது இணையத்திலேயே கிடைக்கிறது. (சான்று:
ஹ்ட்ட்ப்://டமில்.தென்செஇடெ.சொம்/செஇடெ/இன்டெ௯.ப்ஹ்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட்&விஎந்=அர்டிச்லெ&இட்=304:201206௧1௧3௪8௪2&சடிட்=27:ச்டடெமென்ட்ச்&ஈடெமிட்=40) ஊடகங்களிலும் இது வெளியானது.

2. 2011 அக்டோபரில், பரமக்குடி சம்பவம் தொடர்பாக, ம.க.இ.க, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைத் தொடர்ந்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதை பழ.நெடுமாறன் வெளியிட்டார். (சான்று: ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.சவுக்கு.னெட்/இன்டெ௯.ப்ஹ்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட்&விஎந்=அர்டிச்லெ&இட்=1324:2011௰௧209௫2௨2&சடிட்=15:போகின்ட்ரொடுச்டிஒன்&ஈடெமிட்=22)

3. 2011- திசம்பரில் பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பில் சென்னையில் பொது விசாரணை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வியாளர் வசந்திதேவி அறிக்கையை வெளியிட, அதை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். அதில், பழ.நெடுமாறன் மட்டுமின்றி வன்னியரசின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும் கலந்து கொண்டார் (சான்று: ஹ்ட்ட்ப்://டினமனி.சொம்/டமில்னடு/அர்டிச்லெ635318.எசெ?செர்விசெ=ப்ரின்ட்).

பொய் - 2:
“எந்த ஒரு பிரச்சனைக்காகவும் தினமணி ஆசிரியரைப் போல அந்த நாளிதழில் சிறப்புக்கட்டுரைகளை எழுதித் தள்ளும் நீங்கள் என்றாவது பரமக்குடி படுகொலை குறித்துக் கண்டித்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனோம்” என வன்னியரசு எழுதியுள்ளார்.

உண்மை என்ன:
5.12.12 நாளிட்ட தினமணி நாளேட்டில், பரமக்குடி மற்றும் தர்மபுரி சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டித்து பழ.நெடுமாறன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார்.
(சான்று: ஹ்ட்ட்ப்://டமில்.தென்செஇடெ.சொம்/செஇடெ/இன்டெ௯.ப்ஹ்ப்?ஒப்டிஒன்=சொம்_சொன்டென்ட்&விஎந்=அர்டிச்லெ&இட்=495:ஃ----&சடிட்=31:தென்செஇடெ&ஈடெமிட்=27)

பொய் - 3:
“கடந்த 10௧௨012 அன்று திரு. பசுபதி பாண்டியன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து துடித்துப்போய் எமது தலைவர் உள்ளிட்ட தலித் மக்களுக்காகப் போராடும் தலைவர்கள் மட்டுமே தூத்துக்குடி சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்கள். நீங்கள் இதனைக் கண்டித்து ஒரு அறிக்கைகூட விடவில்லை” என எழுதியுள்ளார் வன்னியரசு.

உண்மை என்ன:
பசுபதி பாண்டியன் கொல்லப்பட்ட போது, முதன் முதலில் அறிக்கை விடுத்த தலைவர்களில் ஒருவர் பழ.நெடுமாறன் (சான்று: ஹ்ட்ட்ப்://டினமனி.சொம்/லடெச்ட்_னெந்ச்/அர்டிச்லெ853139.எசெ?செர்விசெ=ப்ரின்ட்)

ஊரே பார்த்த இந்நிகழ்வுகளை வைத்தே, வன்னியரசு இவ்வளவு புளுகினால், பார்க்காத விடயங்களிலெள்ளாம் எப்படி புளுகுவார்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.