பிறந்தமேனி ஓட்டமோடி மன்னர்முன்பு
பெருங்குண்டி காட்டிநிலக் கொடைகள்(மானியம்) பெற்று
இறந்தமானம் பாடையேற்றி மினுக்கி வாழ்ந்த
இம்முன்னோர் வழிவந்த உமாஆனந்தன்
சிறந்தசாதிப் பாப்பாத்தி எனும்பேர் காட்டிச்
செந்தழலின் பெரியாரின் ஒளிக்காணாது
திறந்தவெளிக் கழிவுதின்று நாறுகின்றாள்.
நிமிர்ந்தமதி வான்மீதே துப்புகின்றாள்.
தாழ்வீதி மனுநீதிச் சறைக்குள் பட்டுத்
தாழ்வாரப் புழுவாக நெளிந்த பெண்கள்
நீள்வான் வீதியில் உரிமைச் சிறகடிக்க
நேர்வீதிப் புரட்சியாளன் ‘விடியல்’ தந்தார்.
தாள்வீதி(எழுத்து) நாவீதி(பேச்சு) வழியே பெண்கள்
தீப்பொறியாய்த் தெறித்து வீறுகொள்ள வைத்தார்.
காலச் சலவையாளன் கைகளில், மண்டிக்
கிடந்த ‘பார்ப்பான்துறை அழுக்குத்’திணறும், மாமி!
பெண் ஏன் அடிமையானாள் என்று தந்தைப்
பெரியாரே எழுதியநூல் படித்துப் பார்ப்பாய்.
பெண்ஏன் அடங்கிவாழ வேண்டும் என்ற
பிற்போக்கு மனுநூலும் படித்துப் பார்ப்பாய்.
பெண்பிறப்பே இழிவாகும்; காம இச்சைப்
பிழிவாகும்; இரண்டகம்(துரோகம்) செய்யுமென்று கூறும்
பெண்சிறப்புப் பெண்ணுரிமைப் பெரியார் காக்கப்
பிறழ்நாக்கில் ‘நாயகன்’ என்பதை ‘நாயக்கன்’ என்றாய்.
பாலியல் உறவை வெளிநாடு ஒன்று (சுவீடன்)
விளையாட்டில் சேர்த்துளது; நமது நாட்டில்
தோலியல் உணர்வைத்தன் கணவன் அன்றித்
துணைவேற்றானிடம் தீர்க்கத் ‘தீர்ப்பே’ உண்டாம்.
மாலைபோல் மனைவி மாற்றும் ‘ஊரே’(கேரளம்) கண்டோம்
மணிப்பூரில், பிறந்தமேனியாக்கி வீதி
மேலிழுத்து வந்து பெருங்கூட்டுப்புணர்வின்
மாக்கொடுமை. மாமிவயிறு கலக்கலையோ?
விட்டெறிந்த கல்லுக்கும் செருப்புகட்கும்
இட்டடைத்த சிறைகளுக்கும் மனம்அஞ்சாது
சுட்டெரித்த ஆரியத்தின் சூழ்ச்சியெல்லாம்
சுட்டுவிரல் முனையத்தில் முறியடித்து
வெட்டரியும் களப்போரில் நிமிர்ந்துநின்று
வீழ்ந்திருந்த தமிழகத்தின் தலைநிமிர்த்திக்
கொட்டடியில் அஃறிணைபோல் கிடந்த பெண்கள்
கோலோச்ச வைத்தவர்பேர் (பெரியார்பேர்) உதட்டில் பூசு! (மாமி)
- பேராசிரியர் இரா.சோதிவாணன்