தம்பி, பாப்பா கதை கேளு
தந்தை பெரியார் கதை கேளு
ஈரோட்டுச் சிங்கம் அவராகும்
இராமசாமி அவர் பெயராகும்!
 (தம்பி)
தந்தை பெயரோ வெங்கட்ட நாயக்கர்
தாயார் பெயரோ சின்னத் தாயம்மாள்
அண்ணன் பெயரோ கிருட்டினசாமி
தங்கை பெயரோ கண்ணம்மாள்!
 (தம்பி)
மூட வழக்கங்கள் ஒழித்துக் கட்டினார்
அறிவும் மானமும் பெற்றிட உழைத்திட்டார்
வைதிக மணமுறை ஒழித்துக் கட்டினார்
சுயமரியாதை மணமுறை நடத்தி வைத்தார்!
 (தம்பி)
சாதிமத பேதங்கள் மறுத்தார்
தீண்டாமைக் கொடுமை சாடினார்
எந்தக் கடவுளும் இல்லையென முழங்கினார்
சமயச் சடங்ககுகள் ஒழியப் போராடினார்!
 (தம்பி)
Pin It