கல்வி அறக்கட்ட ளைகள் பல ஆயிரக்கணக்கில் இந்தியாவில் உள்ளன; தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் உள்ளன.
இவையெல்லாம் கல்வித் தொண்டு என்கிற பெயரில் பட்டயக் கல்வி, பட்டக் கல்வி, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி இவற்றை வழங்குகின்றன. இவை தனியார் நிறுவனங்கள். இவை கல்வியை முன்வைத்துக் கொழுத்த வணிகம் செய்பவை. சில நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளிக் கின்றன. அதற்கு ஏற்பக் கைந்நிறைய நன்கொடை யாக இலக்கக் கணக்கில் பணம் பெற்றுக் கொள்கின்றன.
இப்பணியைத் தொண்டறம் - கல்வித் தொண்டறம் என்று பெருமையாக அறிவிக்கின்றன. இது நச்சு நிரம்பிய பாம்பை நல்ல பாம்பு என்பது போன் றது. ஏன்?
இவற்றை எந்த அறக்கட்டளை அளித்தாலும், அந்தக் கல்வித் திட்டத்தில், பெரியாரின் தன்மானக் கொள்கைக்கு இடமில்லை; மேதை டாக்டர் அம்பேத்கரின் சாதி ஒழிப்புக் கொள்கைக்கு இடமில்லை; மார்க்சு - இலெனின் ஆகியோரின் சமதருமக் கொள்கைக்கு இடமில்லை.
மனித குலம் எல்லாத் துறை அடிமைத்தனங்களி லிருந்தும் விடுதலை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டைப் பற்றி இவற்றில் எந்தப் பெரிய படிப்புத் திட்டத்திலும் தனியாரோ, தமிழக அரசோ, இந்திய அரசோ - இக்கொள்கைகளைப் பாடத் திட்டங்களில் இணைக்கவில்லை. தனியார் அறக்கட்டளை கள் இவற்றைச் செய்ய முனைய வேண்டும். அவற் றுள் முதலாவதாக நிற்பது, “பெரியார் ஈவெ. இராமசாமி - நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை” ஆகும்.
இதற்குப் போதிய கட்டடங்கள், நூலக வசதி இன்மையினால், குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு, குறுகிய காலப் பயிற்சியையே இப்போது அளித்து வருகிறது.
மார்க்சிய - இலெனினிய - காந்திய - பெரியாரிய - அம்பேத்கரியக் கொள்கைகளில் தேர்ச்சி பெற்ற வர்களாக நூற்றுக்கணக்கானவர்களை உருவாக் குவது இந்த அறக்கட்டளையின் ஒரே குறிக் கோள் ஆகும்.
பொதுக்கல்வி - உயர்கல்வி தருவதை அரசு மட்டுமே செய்ய வேண்டும். அது மதச்சார்பு அற்ற கல்வியாக இருக்க வேண்டும். இன்றைய அரசு இதைச் செய்யவில்லை; செய்யாது.
அரசுதான் கல்வி தர வேண்டும் என்பதை மறைத்து விட்டுத், தனியாரே பொதுக் கல்வியைத் தருவது என்பது கல்வியைக் காட்டிக், காசு குவிக்கும் ஒரு குறுக்கு வழியே ஆகும். இது ஒரு நச்சு வணிக வட்டம்; இது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய திட்டம்.
பழமையையும் பார்ப்பனியத்தையும் கட்டிக் காப்பாற்றினால்தான் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முடியும். இதை உணர்ந்த பழமைவாதிகளும், பணக்காரர்களும், முதலாளிகளும் என்ன செய்கிறார்கள் என்று எல்லோரும் பாருங்கள்.
இவர்கள், அரசு கல்வி நிறுவனங்களும், தனியார் வணிகக் கொள்ளைக் கல்வி நிறுவனங்களும் செய்கிற பணிகளை அறவே ஒதுக்கிவிட்டு, வேதபாட சாலைகளை ஆயிரக்கணக்கில் நிறுவவும்; தேவாரப் பாடசாலைகளை நிறுவவும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்கு கிறார்கள்; இந்துமதக் கல்வியை வழங்குகிறார்கள்.
இசுலாமியர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து அரபு கல்லூரிகளை நிறுவுகிறார்கள்; மதக்கல்வியைக் கற்பிக்கிறார்கள்.
உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் கிறித்துவர்கள் கோடிக்கணக்கில் நிதி அளித்து இறையியல் கல்லூரிகளை இங்கே நிறுவு கிறார்கள்; மதக்கல்வியை அளிக்கிறார்கள்.
நாம் பகுத்தறிவு - சமதருமம் சார்ந்த கல்வியைத் தருகிற பயிற்சியை அளிப்பது நம் கடமை அல்லவா?
இதனைத் தமிழ்ப் பெருமக்களும், செல்வர்களும், பெரியார் அன்பர்களும், அம்பேத்கர் கொள்கையினரும் அன்புகூர்ந்து புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
அவரவர் மனமுவந்து ஆயிரக்கணக்கிலும், இலக்கக் கணக்கிலும் பெரியார் - நாகம்மை கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கிட முன்வர வேண்டுகிறோம். நன்கொடையாளர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு உண்டு. காசோலையாகவும், வங்கி முறியாகவும் நன்கொடை வழங்கிட - “Periyar E.V. Ramasami - Nagammai Education and Research Trust” என்ற பெயரில் பணம் விடுத்து உதவுங்கள் என வேண்டுகிறோம்.
அஞ்சல் விடுத்திட முகவரி :
வே.ஆனைமுத்து, தலைவர்
பெரியார் - நாகம்மை கல்வி, அறக்கட்டளை
19, முருகப்பா தெரு (மாடி),
சேப்பாக்கம், சென்னை - 600 005.