``பார்ப்பனர்களில் நல்லவர்களே இல்லையா?’’ என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதன் / ஒதுக்குவதன் மூலம் அவர்களில் உள்ள நல்லவர்களின் சேவை கிடைக்காமல் போய் விடும் என்றும், அதனால் சமுதாயத்திற்குப் பேரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக் களை அதிகாரப்படுத்தும் பணியைச் செய்த ஒரு பார்ப்பன ரையும் வரலாற்றின் எந்தக் கால கட்டத்திலும் எடுத்துக் காட்டியது இல்லை.
பார்ப்பனர்களை / பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து முதன் முதலாகப் போர்க் கொடி உயர்த்தி வரலாற்றில் முத்திரை பதித்தவர் புத்தரே. அப்படி அவர் போராடிய போது, அவர் பக்கம் நியாயம் இருக்கிறது என்று கூறி, அவருடன் சேர்ந்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எந்த ஒரு பார்ப்பனரும் துணை நின்றது இல்லை. அவருடைய மறைவுக்குப் பின், புத்த மதத்தை ஆக்கிரமித்து, நாத்திகரான புத்தரைக் கடவுள் அவதாரம் ஆக்கி, அம் மதத்தின் புரட்சிகர அம்சங்களை எல்லாம் நீர்த்துப் போகச் செய்தனர்.
ஒரு பார்ப்பனர் கூட புத்தரின் மனித குலச் சமத்துவக் கொள்கையை ஏற்கவில்லை என்பது மட்டும் அல்ல; அதை எதிர்த்துப் பார்ப்பன அதிகாரத்தை நிலைகுலையாமல் பார்த்துக் கொள்வதிலேயே உறுதியாக இருந்தனர்.
கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்; மந்திரம் பார்ப்பனர் களுக்குக் கட்டுப்பட்டது; ஆகவே கடவுளைவிடப் பார்ப்பனர் களே உயர்நதவர்கள். ஆகவே, பார்ப்பனர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல; அவர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு நேராமல் பாதுகாப்பாக வைத்துக் கொள் ளாமல் இருப்பதே கடவுளுக்கும் சமூகத்திற்கும் இழைக்கும் பெரும் பாவம் என்றும், அவ்வாறு செய்யாதவர்களைக் கடவுள் கடுமையாகத் தண்டிப்பார் என்றும் ஒரு மாய உருவை உருவாக்கி வைத்து இருந்தார்கள்.
கஜினி முகம்மது போன்ற இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்து இங்குள்ள செல்வங்களை எல்லாம் வாரிக் கொண்டு போனார்கள். செல்வங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் வசமே குவிந்து இருந்ததால், அவர்கள் பார்ப்பனர்களையே குறி வைத்துத் தாக்கி, துன்புறுத்தி, கவர்ந்து கொண்டு போனார் கள். பார்ப்பனர்களைத் தாக்குவதும், துன்புறுத்துவதும், அவர்களிடம் இருந்து செல்வங்களைக் கவர்வதுமான நிகழ்வுகள் தொடர்ந்து ஒவ்வொரு படை எடுப்பின் போதும் நடந்தன. அவ்வாறு பார்ப்பனர்களைத் துன்புறுத்திய இஸ்லா மியர்களுக்கு எந்தக் கேடும் நிகழவில்லை என்பது மட்டும் அல்ல; அவர்கள் மேலும் மேலும் வலிமையுடன் திரும்பத் திரும்பத் தாக்கியதையும் மக்கள் கண்டனர்.
பார்ப்பனர்களைத் துன்புறுத்தினால் அல்ல; அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாமல் இருந்தாலே ``சாமி கண்ணைக் குத்தி விடும்’’ என்று கட்டப்பட்டு வைத்து இருந்த மாய உரு (குயடளந ஐஅயபந) உடையத் தொடங்கி இருந்தது. இந் நிலை தொடர்ந்து இருந்தால் ``பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள்; அவர்கள் உயர்நிலை வேலைகளையே செய்ய வேண்டும்’’ என்ற வழக்கம் / எண்ணம் மறைந்து போயிருக்கும். அதிகாரம் கொண்ட வேலைகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும் என்ற நிலை மாறி, அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளையும் செய்யும்படி யான நிலை ஏற்பட்டு இருக்கும்.
ஆனால், இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து விடக் கூடாது என்று மிகத் தீவிரமாக யோசித்த இராமாநுஜர் வர்ணாசிரம அதர்மத்தைத் தளர விடாமல் காப்பதற்கு ஒரு உத்தியை வகுத்தார். அதன்படி பேச்சளவில் சாதி வேறுபாடு இல்லை என்றார். சில சூத்திரர்களைப் பார்ப்பனர்களாக ஏற்றுக் கொண்டார். ஆனால், திறமை இருக்கிறதோ இல்லையோ பார்ப்பனர்கள் உயர்நிலை வேலைகளில் அமர்த்தப்பட வேண்டும்; திறமை இருந்தாலும் சூத்திரர்கள் கீழ் நிலை வேலைகளையே செய்ய வேண்டும் என்ற வர்ணாசிரம அதர்மக் கோட்பாட்டில் சிறு கீறலும் விழுந்து விடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்; வெற்றியும் கண்டார்.
சரிந்துகொண்டு இருந்த வர்ணாசிரம அதர்மத்தைச் சரியாமல் தடுத்து மீண்டும் நிலை நிறுத்தியதால் இராமாநு ஜரைப் புரட்சியாளர் என்றும் சீர்திருத்தவாதி என்றும் அவாள் சொல்வதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், பெரியாரின் வழியில் நடந்து கொள்வதாகச் சொல்லும் சிலர் அவரை ``மதத்தில் புரட்சி செய்த மகான்’’ என்று கூறுவது விந்தை யிலும் விந்தை.
இராமாநுஜர் ஒரு பக்கம் இருக்கட்டும். மனித நேயம் கொண்டவர்கள் பாராட்டாமல் இருக்கமுடியாதபடி செயல்பட்ட இராஜா ராம்மோகன் ராயை எடுத்துக் கொள்வேம். கணவன் இறந்தால் அவனை எரிக்கும் சிதையுடன் மனைவியையும் சேர்த்து உயிருடன் எரிக்கும் உடன் கட்டை (ஏறும் அல்ல) ஏற்றும் பழக்கத்தை ஒழித்தவர் அவர். அப்பேர்பட்ட அவரும், திறமை இல்லா விட்டாலும் பார்ப்பனர்களை உயர் நிலை வேலைகளில்தான் அமர்த்த வேண்டும்; திறமை இருந் தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ்நிலை வேலைகளைத் தான் செய்ய வேண்டும் என்ற வர்ணாசிரம அதர்மத்திற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை.
பார்ப்பனர்களைப் பற்றிப் பெரியாருக்கும் காந்தியாருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் ``பார்ப்பனர்களில் நல்லவர்கள் இருக்கிறார்களா?’’ என்ற வினாவிற்கு விடை தேடிய காந்தி யார் நீண்ட நேரம் யோசித்த பின் கோபால கிருஷ்ண கோகலே இருப்பதாகக் கூறினார். அப்படிப்பட்ட கோபால கிருஷ்ண கோகலேயும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்றுதான் போராடினாரே ஒழிய, வர்ணாசிரம அதர்மத்தைக் குலைத்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களளை அதிகாரப்படுத்தும் விதமாக, அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளையும் செய்ய வேண்டும் என்று கூறவே இல்லை.
சாதி ஒழிப்பு வீரராகத் தூக்கி நிறுத்திக் காட்டப்படும் பாரதியாரும் நீதிக் கட்சியினர் முன்வைத்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவக் கொள்கையைக் கண்டு முகம் சுளித்தார். இதைப் பற்றிக் கருத்து சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போது, அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார். அது மட்டும் அல்லாமல் வர்ணாசிரம அதர்மத்தை வானளாவப் புகழ்ந்தும் உள்ளார். அவருடைய கருத்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைத் துன்புறுத்தி வேலை வாங்கக் கூடாது என்பதுதான். திறமைக் குறைவான பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் அமர்த்தப்படக் கூடாது என்பதையே, திறமைமிகுந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலை வேலைகளில் அமர்த்தப்பட வேண்டும் என்பதையே அவர் விரும்பவில்லை. ஆனால், பார்ப்பனர் அல்லாத வ.உ.சி. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், விகிதாச் சாரப் பிரதிநிதித்துவக் கொள்கையைத் தனது அரசியல் பெருஞ் சொல்லாகப் பிரகடனம் செய்தார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பின், பொதுவுடைமைக் கட்சியின் போராட்டங்கள் பலவற்றில் பார்ப்பனர்கள் பங்குகொண்டு பல ஈகங்களைப் புரிந்துள்ள னர். ஆனால், அவை யாவும் கூலி உயர்வுப் போராட்டங் களே ஒழிய, சமூக மாற்றப் போராட்டங்கள் அல்ல. முக்கிய மாக, திறமைக் குறைவான பார்ப்பனர்களைக் கீழ் நிலை வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப வைக்கும், மற்றும் திறமை உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை உயர் நிலை வேலைகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கும் வர்ணாசிரம அதர்ம முறைக்கு எதிரான போராட்டங்கள் அல்லவே அல்ல. அப்படிப்பட்ட போராட்டங்களைப் பொதுவுடைமைக் கட்சிகள் முன் வைக்கவில்லை. அப்படி முன்வைத்தால் அப்பொழுது தான் அக்கட்சிகளில் உள்ள பார்ப்பனர்கள் நல்லவர்களா / புரட்சியாளர்களா என்று தெரிந்து கொள்ள முடியும்.
இன்னும் சில பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்; மருத்துவ மனைகளில் குருதிக்காகத் தவிப்போர்களுக்குக் குருதி கொடுத்து உயிர் காக்கும் பண்பாளர்கள். அப்படிப்பட்ட பண்பாளர்கள் பழகுவதற்கும் இனியவர்களாகவே இருப்பார் கள். ஆனால், வர்ணாசிரம அதர்மத்திற்கு எதிராகப் பேசி னால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இப்படியாக எங்கெங்கு சுற்றினாலும், எப்படி எப்படிப் பார்த்தாலும் நல்லவர்கள், புரட்சியாளர்கள் என்று நினைக்கத் தோன்றும் பார்ப்பனர்கள் யாருமே வர்ணாசிரம அதர்மத் திற்கு எதிராக என்று வரும் போது பதுங்கிக் கொள்கிறார்கள்; குழப்புகிறார்கள்; முரண்டு பிடிக்கிறார்கள்; எதிர்த்துச் சீறுகிறார்கள்.
அனைத்து வகுப்பிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர்களும் இருக்கையில், உயர் நிலை வேலைகளில் பார்ப்பனர்களையும், அடுத்த நிலை வேலைகளில் ஒடுக்கப் பட்ட வகுப்பு மக்களையும் தேர்ந்தெடுப்பதால் பொதுப் போட்டி முறை திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கச் சற்றும் திற னற்றது என்பதை அவாளால் உள்வாங்க முடிவதே இல்லை.
இதை உள்வாங்கி விகிதாச்சாரப் பங்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடல் உழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியக் கூடாது என்பதிலும், திறமைசாலிகளான ஒடுக் கப்பட்ட வகுப்பு மக்கள் அதிகாரம் கொண்ட வேலைகளைப் பெறுவதில் உள்ள தடைகள் தகர்க்கப்பட வேண்டும் என்பதி லும் உறுதியாக நிற்கும் பார்ப்பனர்களைத் தான் நல்லவர்கள் என்று கூற முடியும். அப்படிப்பட்ட பார்ப்பனர்களுடன் சேர்ந்து பணியாற்ற முற்போக்கு உள்ளம் கொண்ட அனைவரும் ஆயத்தமாகவே உள்ளனர்.