திருமழபாடி முனைவர் அ. ஆறுமுகம் அவர்கள் சங்க இலக்கியம், திருக்குறள் ஆகிய வற்றில் மிகச் சிறந்த ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். பெரி யார் கொள்கைகளிலும் முழுமை யான ஈடுபாடு உள்ளவர். தொகுப்பு நூல்களை விடாமல் படித்து முழக்கும் ஆற்றல் உள் ளவர். ஏற்கெனவே தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட பாவேந் தம், அய்யா வே.ஆனைமுத்து அவர்களின் கருத்துக் கருவூலம் ஆகியவற்றைப் படித்து அதில் உள்ள முக்கியப் பகுதிகளைத் தொகுத் துத் தனித்தனி நூல்களாக வெளியிட்டவர்.
அவருடைய அண்மை வெளியீடான ‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’ என்ற நூல் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
பெரியாருடைய பேச்சையும் எழுத்தையும் தொகுத்து வே. ஆனைமுத்து அவர்கள் பெரியார் ‘ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்ற தலைப்பில் 1974இல் முப்பெரும் தொகுதிகளாக சுமார் 2200 பக்கங்களில் வெளியிட் டார். அதன் விரிவாக்கப் பதிப்பாக 2010இல் இருபது தொகுதிகளில் 9300 பக்கங்களில் வெளியிட்டார். பெரி யாரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இன்று வரை இத்தொகுப்புகளே நன்கு பயன்படுகின்றன.
இந்த இருபது தொகுப்புகளையும் முழுமையாகப் படித்து, அவரே இந்நூலின் முன்னுரையில் கூறி யுள்ளபடி, மிகவும் சிறப்பான பகுதிகளைக் குறித்து வைத்துக்கொண்டு, தொகுப்பு வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், பெரியார் சிந்தனைகள் தொகுதி எண். பக்க எண் முதலியவற்றையும் குறித்து இந்நூலில் வழங்கியுள்ளார்.
பெரியார் சிந்தனைகள் இருபது தொகுதிகளையும் படிக்க வாய்ப்பு இல்லாதவர்கள், இந்த நூலைப் படித் தாலே ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளின்’ சுருக்கத்தைப் படித்தது போன்ற உணர்வு ஏற்படும். முனைவர் அ. ஆறுமுகம் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. பெரியார் தொண்டர்கள் ஒவ்வொருவரும் இந்நூலை வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.
நூலின் விலை ரூ.150/- பக்கங்கள் 240.
கிடைக்குமிடம் : பாவேந்தர் பதிப்பகம்,
“சீரகம்”, 4/79, நடுத்தெரு, திருமழபாடி - 621 851.
அரியலூர் மாவட்டம்.
தொலைப்பேசி : 04329 – 243245