கூட்டாட்சி அரசியலும் நிதிக்குழுவும்

கூட்டாட்சி முறை என்பது பல அடுக்கு அமைப்பு களைக் கொண்ட அரசினைக் குறிப்பதாகும். இதில் ஆட்சியைப் பங்கிட்டுக் கொள்ளும் முறையும் மாநிலத் தன்னாட்சி முறையும் அடங்கும். அது ஒற்றுமைப் பண்புகளையும் வேற்றுமைக் கூறுகளையும் ஒன்று சேர்த்திடுதல் ஒரு பெரிய அரசியல் ஒன்றியத்திற்குள் பல்வேறு தனித்தன்மைகளுக்கு இடமளித்தல் அவற் றைக் காத்தல் மேம்படுத்தல் மதிப்பிடுதலின் அடிப் படையில் அமைந்ததாகும் என்று கூட்டாட்சியியல் அறிஞர் வாட்சு 1999இல் விளக்கமளித்தார்.

இந்தியா மேற்கூறிய இலக்கணத்திற்கு முற்றிலுமாகப் பொருந்து கிறது. உலகில் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கூட்டாட்சியியலையும் இந்திய அரசமைப்புச் சட்டம் சிறந்த முறையில் ஒன்றிணைக்கிறதா? என்ற வினாவைத் தாண்டி மக்களின் மாநிலங்களின் நன்மைக்காக இந்தியாவின் நிலைத்தத் தன்மைக்காக அடிப்படையான மாற்றங்களைச் செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.

கூட்டாட்சியியலின் ஒரு பெருங்கூறுதான் ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் உள்ள நிதி உறவுகளாகும். மாநிலங்கள் போதிய நிதி அதிகாரங்களைப் பெறாமல் இருந்ததால் மக்களின் உரிமைகளும் வாழ்வாதாரங் களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பண்பாட்டுப் பொருளாதார இன மத வேறுபாடுகளை அறிந்துதான் பிரிட்டி` ஆட்சி 1935ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் கூட்டாட்சித் தன்மைகளை ஒற்றையாட்சி முறையில் இணைத்தது.

பின்னர் பல மாகாணங்களில் காங்கிரசு ஆட்சிய மைந்தது. இத்தகைய அதிகாரக் குவியலை விடுதலைக்காகப் போராடிய காங்கிரசு இயக்கம் மிகக் கடுமையான முறையில் எதிர்த்தது. வெள்ளையரான சர் ஓட்டோ நிமியர் தலைமையில் ஒரு குழுவை உருவாக்கி மாகாணங்களின் மக்கள்தொகை திரட்டப்பட்ட வரி அளவுகள் ஆகிய குறியீடுகளினடிப்படையில் வருமான வரியில் 50விழுக்காடு ஏற்றுமதியில் 50விழுக்காடு முதல் 62விழுக்காடு வரை அளித்தது.

1930ஆம் ஆண்டில் அமெரிக்காவை ஒரு பெரும் பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்ற முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட டெடுக்க வழிவகுத்த இங்கிலாந்தின் தலைசிறந்த பொருளியல் அறிஞர் கீன்சும் சர் ஒட்டோ நிமியரும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் (ஐ.ஊ.ளு.) போட்டியிட்டனர். தேர்வில் கீன்சு தோற்றார். பின்பு மிகப்பெரிய பொருளாதார நிபுணராகத் தடம் பதித்தார். தேர்வில் வெற்றி பெற்ற ஒட்டோ நிமியர் இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து சிறப்புற பணிபுரிந்தார்.

1947ஆம் ஆண்டு வரை ஒட்டோ நிமியரின் நிதிப்பகிர்வு முறைதான் பின் பற்றப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினையால் ஒற்றை யாட்சிக் கூறுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் இடம் பெற்றன. ஒன்றிய மாநில நிதியுறவுகளைப் பொருத்த வரை 1935ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சிலர் இதைச் சட்டத்திருட்டு என்கின்றனர். அரசமைப்புச் சட்ட அவையில் பல வல்லுநர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். இதன் விளைவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக பிரிவு-280 இணைக்கப்பட்டது. மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறையைப் போக்குவதற்காக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் நிதிக்குழு அமைக்கப்படும் என்று உறுதிமொழியும் வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு வரை 14 நிதிக் குழுக்கள் தொடர்ந்து அமைக்கப்பட்டன. சட்டப்படி நிதிக்குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டிய நிலை இல்லாவிட்டாலும் அப்பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. இச்சூழலில் மாநிலங்கள் ஏன் நிதிச்சுமையைச் சந்திக்கின்றன? என்ற வினா எழுகிறது. நிதிக்குழுக்கள் சுயாட்சி தன்மைகளுடன் இயங்கவில்லையா? அல்லது நிதிக்குழுவின் அதிகார வரம்புகள் ஒடுக்கப்பட்டனவா என்ற ஐயங்களும் எழுகின்றன.

நிதிக்குழு திட்டக்குழு முரண்பாடுகள்

1967 வரை ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் காங்கிரசு ஆட்சி அமைந்ததால் முதன்மையான பொருளாதார நிதிப் பிரச்சினைகளுக்கு ஆளுமைமிக்க பிரதமர்கள் ஜவகர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் எடுக்கும் முடிவுகளே இன்றியமையாத தாயிருந்தன. இந்நிலை 1967க்குபின் மாறியது. மாநிலங் கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட விரும்பின.

அறிஞர் அண்ணா 1967-68 நிதிநிலை அறிக்கையில் மாநிலங்கள் தன்னுரிமை பெற வேண்டும் என்றார். ஒன்றிய மாநில நிதி உறவுகளில் மாற்றம் தேவை என்றார். இதன் தொடர்ச்சியாகத்தான் 1969இல் அண்ணாவின் மறைவிற்குப்பின் கலைஞர் முதல்வராக இருந்தபோது நீதிபதி இராசமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இந்திய அரசமைப்புச் சட்டத் தின் அனைத்து விதிகளையும் ஆய்வு செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் ஆக்கப்பூர்வ மான பரிந்துரைகளை வழங்கியது. நிதிக்குழுக்கள் தங்களது அறிக்கைகளில் - ஒன்றிய மாநில நிதி உறவுகள் மேம்படுவதற்கு பல அரிய கருத்துகளைத் தொடர்ந்து குறிப்பிட்டன. இரண்டாம் நிதிக்குழு நிதிப்பகிர்வு அதிகார எல்லையில் திட்டக்குழு தலையிடக் கூடாது என்று சுட்டியது. அதன் தலைவர் கே.சந்தானம் இது அரசமைப்புச்சட்ட விதிக்கு முரணானது என்றார்.

திட்டக்குழு மாநிலங்களுக்கு நிதிப் பகிரும்போது கடனாக 70 முதல் 80விழுக்காடு வரையிலும் மானியமாக 20 முதல் 30விழுக்காடு வரை அளித்தது. மாநில அரசுகள் இக்கடன்களுக்கு 4 முதல் 7 விழுக்காடு வட்டியினை ஒன்றிய அரசிற்கு அளித்தன. இதனால் மாநிலங்களின் கடனளவும் நிதிச்சுமையும் அதிகரித்தன. திட்டக்குழுவின் நிதியுதவியைப் பெறுவதற்கு 1968வரை எவ்வித அளவுகோல்களும் பின்பற்றப்படவில்லை. 1968ஆம் ஆண்டு திட்டக்குழுவின் துணைத்தலைவர் பேராசிரியர் காட்கில் மாநிலங்களின் மக்கள்தொகை அளவு நிலப்பரப்பு திரட்டும் வரிவருவாய் அளவு மாநிலங்களுக்கே உரித்தான குறிப்பிட்ட பிரச்சினைகள் பின்தங்கிய நிலைமை போன்ற குறியீடுகளை வைத்து புதிய வரையறையை அறிமுகப்படுத்தினார். இதைத்தான் காட்கில் வரையறை என்று அழைத்தனர்.

நிதிக்குழுக்கள் அவ்வப்போது மாநிலங்களின் நிதித்தேவைகள் ஒன்றிய அரசின் நிதிநிலைமைகளுக்கு ஏற்றவாறு சில வரையறைகளைப் பின்பற்றின. மாநில மக்கள் தொகையில் 80 அல்லது 90விழுக்காடு மாநிலங்களின் நிதிதிரட்டும் திறனுக்காக 10 அல்லது 20விழுக்காடு ஆகிய கூறுகள் அடிப்படையில் சில ஒன்றிய அரசின் வரிகளின் வருவாயை மட்டும் மாநிலங்களுக்கு நிதிக்குழுக்கள் கொடுத்தன. பின்தங்கிய மாநிலங்களின் தேவைக்கு மானியத்தையும் பரிந்துரைத்தது. மாநிலங்களுக் கிடையே காணப்படும் நிதி ஆதாரங்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு அதனடிப்படையில் உருவாக்கப்படும் பின்தங்கிய நிலை பற்றிய புள்ளி விவரங்கள் துல்லியமாகக் கணக்கிடப்படாததால் பின் தங்கிய கோட்பாடு அடிப்படையிலேயே சரியாக அமைய வில்லை என்பதைப் பல வல்லுநர்கள் மெய்ப்பித் துள்ளனர்.

இதற்கிடையில் ஒன்றிய அரசு தன்னிச்சையாக அசாம் ஜம்மு-கா`மீர் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களைச் சிறப்புத்தகுதி மாநிலங்கள் என அறிவித்து எவ்வித அளவுகோல்களையும் பின்பற்றாமல் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வு அளிக்கப்பட்டது. 70 விழுக்காடு மானியத்தை யும் 30விழுக்காடு கடனையும் திட்டக்குழு இம்மாநிலங் களுக்கு அளித்தது. மென்மேலும் மாநிலங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றன. 8 மாநிலங்கள் சிறப்புத்தகுதி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. இதைத்தவிர ஒன்றிய அரசின் துறைவாரியான திட்டங்கள் வழியாகச் சிறப்புத் தகுதிப் பெற்ற மாநிலங் களுக்கு தனி நிதிஒதுக்கீடும் அளிக்கப்பட்டது. பின்பு அனைத்து மாநிலங்களுக்கும் இந்நிதி அளிப்புமுறை விரிவுப்படுத்தப்பட்டது. இதன்வழியாக நிதிப்பகிர்வில் திட்டக்குழுவின் ஆதிக்கம் நிலைப்பெற தொடங்கியது. ஆளும் கட்சியின் கைப்பாவையாகத் திட்டக்குழு செயல் பட்டது.

ஜனதா ஆட்சியின் அணுகுமுறை

1977இல் ஜனதா ஆட்சியில் மொரார்ஜி பிரதம ரானார். குஜராத் மாநிலத்தின் நீதிபதி சிலாட் தலை மையில் 7வது நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது. இந் நிதிக்குழுதான் விதிவிலக்காக அதிகளவு நிதிப்பகிர்வை மாநிலங்களுக்கு அளித்தது. வருமான வரியில் 85விழுக்காடும் தீர்வை வரியில் 45 விழுக்காடும் கூடுதல் தீர்வை வரியில் 96விழுக்காடும் மாநிலங்கள் பெற்றன. ஜனதா அரசும் இப்பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதால் எல்லா மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகமாகக் கிடைத்தது. சான்றாக தமிழ்நாட்டிற்கு மொத்த நிதிஒதுக்கீட்டில் 7விழுக்காடு கிடைத்தது. தற்போது 4விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுநெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி 3.8.1978 அன்று எல்லா மாநிலங்களும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அரசாணையை வெளியிட்டது. இது வேண்டுகோளாகவே கருதப்பட்டது. மதுவிலக்கைப் பின்பற்றும் மாநில அரசு கள் மதுவின் மீது விதிக்கப்படும் தீர்வைவரி இழப்பை ஈடுசெய்வதற்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடும் ஏழாவது நிதிக்குழுவில் அளிக்கப்பட்டது.

ஜனதா அரசு மதுவிலக்கிற்காக அளித்த அரசாணை யையும் 7வது நிதிக்குழு அளித்த சலுகைகளையும் எந்த மாநில அரசும் இதுவரை குறிப்பிடுவதில்லை. சாமானிய மக்கள் வாழ்விழந்து சாராய மன்னர்கள் லாபம் பெறும் கொள்கையை எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பசுவதையைத் தடை செய்ய வேண்டும் என இன்று கேட்பவர்கள் மதுவிலக்குக் குறித்த அரசாணையை மீண்டும் புதுப்பித்துச் சிறப்பு நிதிப்பகிர்வைச் செய்ய வேண்டும் என ஏன் கேட்கவில்லை? குடியால் இளை ஞர்கள் குடலும் உடலும் வெந்து உடல் மெலிந்து வேலைத்திறனும் சீரழிந்து மாநில அரசுகளின் சுகாதாரச் செலவுகள் அதிகரிக்கும் இழிநிலைக் கண்டு ஏன் அரசியல் தலைவர்கள் மௌனம் கடைபிடிக்கின்றனர்? பசு மாட்டைவிட மனிதன் மாண்பிழந்துவிட்டானா? என்று குறிப்பிடும் அளவிற்கு இந்துமத சனாதன ஆட்சி முறை நிலைப் பெற்று வருகிறது.

முதல் தென்னக மாநில முதல்வர்கள் மாநாடு 1983

எட்டாவது நிதிக்குழுவிடம் அதிக நிதியைப் பெறுவ தற்கு பெங்க;ரில் தென்னக மாநில முதல்வர்களின் இரண்டு நாள் மாநாட்டை கர்நாடகா முதல்வர் இராமகிரு`ண ஹெக்டே 1983இல் கூட்டினார். இம்மாநாட்டில் முதல்வர் கள் எம்.ஜி.இராமச்சந்திரன் இராமகிரு`ண ஹெக்டே என்.டி.இராமராவ் தெ.இராமச்சந்திரன் ஆகியோர் ஒன்றிய-மாநில அரசுகளின் அதிகாரங்களும் மாற்றிய மைக்கப்பட்ட வேண்டும் என்று பல ஆக்கம் தரும் கருத்துகளைப் பதிவு செய்தனர். ஒன்றிய-மாநில அரசுகளுடைய அதிகாரங்களை மாற்றியமைக்க ஒரு புதிய வல்லுநர் குழுவை அமைக்க முடிவெடுத்தனர்.

இம்முயற்சியில் மாநில முதல்வர்கள் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கில் இந்திய அரசமைப்புச் சட்டப்படிப் பொதுப் பட்டியலிலுள்ள விதியின்படி நீதிபதி சர்க்காரியா குழுவை அமைப்பதாக ஒன்றிய அரசு ஞாயிறு நள்ளிரவில் அறிவித்தது. பொதுப்பட்டியலின் அதே விதியின் கீழ் மற்றொரு குழுவை மாநில அரசுகள் அமைக்க முடியாது. இதனால் தென்னக முதல்வர்களின் கூட்டுமுயற்சி தோற்றது.

மாநிலங்களின் நிதித் தேவைகளை முழு அளவில் புரிந்து கொண்டு சுயாட்சி தன்மைகளோடு நிதிக்குழுக்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வெற்றி பெறவில்லை. தென்னக ராமர்களைவிட வடநாட்டு பத்ரகாளிதான் சக்தி வாய்ந்தவர் என்பதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

நிதிக்குழுக்களின் சுயாட்சி தன்மை கட்டுப்படுத்தப்படுகின்றன

நிதிக்குழுக்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் நிதித்துறை நிதிக்குழு எவ்வகையில் செயல்பட வேண்டும் என்பதற்கான ஆய்வு நெறிமுறை களைத் (Terms of Referece) தன்னிச்சயைக அறிவிக் கிறது. மாநில அரசுகளைக் கலந்து கொண்டு இந்த ஆய்வு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டால் நிதிக்குழுச் சிறந்த முறையில் செயல்பட முடியும்.

1990க்குப் பின் மாநிலக் கட்சிகளைச் சார்ந்துதான் ஒன்றிய அரசு ஆட்சியமைக் கும் நிலை ஏற்பட்டபோதும் ஒன்றிய அரசின் இந்தத் தன்னிச்சையான அதிகாரத்தை எந்த அரசியல் கட்சியும் தட்டிக் கேட்கவில்லை. இதன் காரணமாக ஒன்றிய அரசின் நிதி அதிகாரக் குவியலுக்கு மாநில உரிமை பேணும் அரசியல் கட்சிகள் துணைப் போயின. சான்றாக வாட் வரியை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசிற்கு மாற்றும் குழுவிற்கு தலைவராக மேற்கு வங்க இடதுசாரி ஆட்சியில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய அஜிம் தாஸ் குப்தா மாநிலங்கள் தங்கள் அதிகாரத்தை விரைவில் விட்டுத் தர வேண்டினார். மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சியில் முதலில் நிதி அமைச்சராக பணியாற்றிய பொருளாதார அறிஞர் அசோக் மித்ரா வாட் வரியை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வதை எதிர்த்தார். இது கூட்டாட்சி இயலுக்கு எதிரானது என்று மேற்கு வங்க உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

14வது நிதிக்குழுவின் அறிக்கையில் (பக்.94) 2014ஆம் ஆண்டில் நிதிக்குழுவின் வழியாக மாநிலங்களுக்கு 31.5 விழுக்காடும் திட்டக்குழுவின் வழியாக 34.9 விழுக்காடும் ஒன்றிய அரசின் துறைசார் திட்டங்கள் வழியாக 33.6 விழுக்காடும் நிதிப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் நிதிக்குழுவின் அதிகாரவரம்பு சுருக்கப்பட்டதால் ஒன்றிய அரசின் துறைகளும் திட்டங்களும் சேர்ந்து மாநில அரசிற்கு அளிக்கும் நிதிப்பகிர்வு 68.5ரூ அளவாக மாறியது. எடுத்துகாட்டாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதி 100கோடி ரூபாய் எனில் 14வது நிதிக்குழுவால் வெறும் ரூபாய் 31.5கோடியை மட்டுமே பகிர்ந்தளிக்க முடியும்.

இவ்வித முறைமையால் வளர்ந்த மாநிலங்களும் பின்தங்கிய மாநிலங்களும் நிதியிழப்பைச் சந்திக்கின்றன. அரசியல் காரணங்களுக்காக எவ்விதப் பொருளாதார நிதிக் காரணிகளின்றி நிதி வரம்பை மீறித் தங்கள் விருப்பமுள்ள மாநிலங்களுக்குச் சிறப்புத் தகுதி மாநிலங்கள் என்ற பெயரில் நிதிப் பகிர்வை மேற் கொள்ளும் முறைமையும் உறுதிபட்டது. இவ்வகையான நிதிப்பகிர்வை எல்லா நிதிக்குழுக்களும் தங்கள் பரிந்துரையில் வலியுறுத்திச் சுட்டிக்காட்டியதையும் நடுவணரசு கண்டுகொள்ளவேயில்லை. மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்த இராஜமன்னார் (1971) சர்க்காரியா (1983) வெங்கடாச்சலய்யா (2003) அரசமைப்புச் சட்டக் குழுக்கள் ஒன்றிய-மாநில அரசுகளுக் கிடையேயான நிதி பொருளாதார உறவுகளை உரிய சட்டத்திருத்தங்கள் வழியாக மேம்படுத்த வலியுறுத்தின.

2014இல் பிரதமர் மோடி ஆட்சியமைத்த பிறகு திட்டக்குழு மாற்றியமைக்கப்பட்டதால் ஒன்றிய அரசு அளித்த மானியமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கலால் வரி தீர்வை வரிகள் நிதிக்குழுவின் பரிந்துரைகளிலிருந்து நீக்கப்படுகின்றன. 14ஆம் நிதிக்குழு அளித்துள்ள 42 விழுக்காடு ஒரு நிதி மாயை யைத்தான் உருவாக்கியுள்ளது.

மாநிலங்களுக்கான அனைத்து வகையான மொத்த நிதிப் பகிர்வு நாட்டு மொத்த உற்பத்தயில் 5விழுக்காடு மட்டுமேயாகும் என்று 14வதுநிதிக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒன்றிய அரசு துறைகளின் வழித் திட்டங்களில் 8 திட்டங்கள் மூடப்பட்டு விட்டன. 20 திட்டங்களுக்குத்தான் ஒன்றிய அரசு நிதியுதவியை அளிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 24 திட்டங்களுக்கு ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் திட்டத்திற்கான நிதியைப் பகிர்ந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் ஏற்கனவே 12ஆம் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையின்படி(2012-17) தங்களின் திட்டங்களையும் நிதியாதாரங்களையும் வடிவமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது இத்தகைய அறிவிப்பால் எல்லா மாநிலங்களும் நிதிச்சிக்கல்களைச் சந்திக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தனியார் மயமும் ஒன்றிய அரசு அளித்த வரிச்சலுகைகளும்

1990லிருந்து தனியார் முதலீட்டை ஊக்குவிப் பதற்கு நேர்முக-மறைமுக வரிகளில் சலுகைகளை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. நிறுவன வரியில் 2006 முதல் 2015 வரை ரூபாய் 5இலட்சத்து 55ஆயிரத்து 514 கோடியும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க ரூபாய் 62ஆயிரத்து 392கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. வரிசமத்துவ (Tax Equity) நெறிக்கு எதிராக 2015இல் நிறுவனவரி 30விழுக்காட்டிலிருந்து 25விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. வரித்திறனை வளர்த்து வரி வருவாயைப் பெருக்குவதற்கு ஒரே சீரான அமைப்பு தேவை என்கிற பெயரால் மாநில அரசுகள் விதித்து வந்த வரிகள் கடந்த 20 ஆண்டுகளாக ஒன்றியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

வாட்வரி தற்போதைய ஜி.எஸ்.டி.வரி ஆகியன இதில் அடங்கும். மேலும் ஜி.எஸ்.டி. வரியை எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறோம் என்பதைக்கூட ஒன்றிய அரசு 14வது நிதிக்குழுவிடம் கூறவும் இல்லை கருத்து கேட்கவும் இல்லை என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு விதிக்கும் வரிகளில் கடந்த 10ஆண்டுகளில் கணக்கில் வராத பணம் பெருமளவு அதிகரித்துள்ளது. ஏறக்குறைய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 60விழுக்காட்டுக்கு மேல் கணக்கில் வராத வரி ஏய்ப்புப் பணம் உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுதான் ஒன்றிய அரசின் வரி திரட்டும் திறனா? இந்த வரி வருவாய் முறைப்படுத்தப்பட்டு மாநிலங்களுக்கு நிதிக்குழுக்களின் மூலமே நிதிப் பகிர்வு செய்யப்பட்டிருந்தால் மாநிலங்கள் தற்போது சந்திக்கும் நிதி நெருக்கடி எற்பட்டிருக்காது.

நிகல்வி பொது சுகாதாரம் திட்டங்களில் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருக்க முடியும். இச்சூழலில் 14ஆவது நிதிக்குழு முற்போக்கான பரிந்துரைகளையும் கருத்துகளையும் வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் மாநிலங்களுக் கான மன்றத்தைக் (Inter State Council-Article 263 of the Indian Consti tution) கூட்டி ஒன்றிய-மாநில உறவுகளைச் சீரமைக்க வேண்டும் என்பதாகும். இந்நிலையிலாவது மாநில உரிமை கோரும் கட்சிகளும் இடதுசாரிகளும் விழித்துக்கொள்வார்களா?

Pin It