senandhaya adhikalar 450சீனந்தல் அடிகளார் என்கிற சிவசண்முக ஞானாச்சாரிய சுவமிகள் 26.12.2018 காலை 10.30 மணி அளவில் திருவண்ணாமலையில் தம் இளைய மகன் வீட்டில் தம் 98 ஆம் அகவையில் மறைந்தார் என்கிற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் விஸ்வகர்மா எனப்படும் கம்மாளர்கள், கன்னட நாட்டு, லிங்காயத்துகள், கொங்கு நாட்டுக் கவுண்டர்கள் ஆகிய உள்சாதியினர் தங்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் பார்ப்பனப் புரோகிதரை அழைப்பதில்லை. கம்மாளர்கள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் பார்ப்பானை அழைக்காமல் தங்கள் சாதி கம்மாள உபாத்யாயர் எனப்படும் வாத்தியாரை வைத்து சமஸ்கிருத மொழியில் வேதப்படி நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்வார்கள்.

சீனந்தல் அடிகளார் 21.2.2005ஆம் நாள் வேலூரில் லோகநாத ஆச்சாரியின் பேத்தியும் ரூபம் ஆர்ட்ஸ் இரத்தினக் குமாரின் மகளுமான சிந்தனைக்கும் நீலகண்ட ஆச்சாரியின் பேரனும் தமிழறிஞர் தமிழவேள் என்கின்ற நீ.தங்கவேலன் மகனுமான மதிவாணனுக்கும் திருமணத்தைத் தமிழில் வே.ஆனைமுத்து ஆகிய என் முன்னிலையில் நடத்திவைத்த பெருமை சீனந்தல் அடிகளாரையே சேரும். இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

24.8.2007ஆம் நாள் சென்னை  அம்பத்தூரில் எங்களுடைய பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளையின் கட்டடக் கால்கோள் விழவில் சீனந்தல் அடிகளார் பங்கேற்றார்.

13.9.2008ஆம் நாள் சென்னை இராசா அண் ணாமலை மன்றத்தில் டாக்டர் பொற்கோ தலைமையில், வே.ஆனைமுத்து, மருத்துவர் ச. இராமதாசு ஆகியோர் முன்னிலையில் நான் தமிழில் எழுதிய மாமனிதர் கியானி ஜெயில் சிங் எனும் நூலை சீனந்தல் அடிகளார் வெளியிட்டார். 2010ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் நூலின் விரிவாக்கம் செய்யப்பட்ட இரண்டாம் பதிப்புக்கு 7.2.2010ஆம் நாள் இரண்டாம் சென்னை அண்ணா சாலை பாவாணர் அரங்கில் முன் பதிவுத்தொகையின் முதலாவது தொகை ரூ.1,30,000/-ஐ சீனந்தல் அடிகளார் வே.ஆனைமுத்துவிடம்  அளித்தார். அதனைத் தொடர்ந்து 19.2.2010ஆம் நாள் இரண்டாம் தவணையாக சேப்பாக்கம் சிந்தனையாளன் அலுவல கத்தில் ரூ.1,71,000/-ஐ அடிகளார் வே.ஆனைமுத்து விடம் அளித்தார். இரண்டு தவணைகளையும் சேர்த்து அளிக்கப்பட்டது ரூ.3,01,000/- இது அந் நூலின் 86 படிகளுக்கு உரியது. 26.2.2012ஆம் நாள் சென்னை சேப்பாக்கத்தில் கோ.ரா.வெற்றியின் கருத்துக் கணிமம் நூல் வெளியீட்டு விழாவில் நானும் சீனந்தல் அடிக ளாரும் பங்கேற்றோம். உரையாடலின்போது நான் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு விகிதாசார இடப்பங்கீடு பெறும் வேலையாக அடுத்த நாள் தில்லிக்குப் புறப்படப் போவதை அறிந்து அடிகளார் அந்தப் பணிக்காக தம் சமுதாயத்தினர் சார்பாக மேடையில் உரூபா பத்தாயிரம் நன்கொடையினை என்னிடம் அளித்து ஊக்குவித்தார்.

12.6.2016 ஆம் நாள் பண்ருட்டி ரங்கா மகாலில் கியானி ஜெயில் சிங் பற்றி வே.ஆனைமுத்து ஆங்கிலத்தில் எழுதிய நூலினை சீனந்தல் அடிகளார் வெளியிட்டார். இதற்கு இடைப்பட்ட ஓர் ஆண்டில் ஒரு நாள் நாங்கள் எங்கள் கட்சியின் கொள்கை பரப்புரைப் பணியாக திருவண்ணாமலையில் தங்கிய நாளில் வே.ஆனைமுத்து, கலசம் மற்றும் கட்சித் தொண்டர்  அடங்கிய குழுவினரை சீனந்தல் அடிகளார் தம் இல்லத்துக்கு அழைத்து உணவளித்து உபசரித்தார். தந்தை பெரியார், குன்றக்குடி அடிகளாரை மதித்து அவருடைய தமிழ் உணர்வை-தமிழின உணர்வைப் போற்றி தமிழ்ச் சமுதாய மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டது போல மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் சார்பிலும் ஒடுக்கப்பட்டோர் பேரவையின் சார்பிலும் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சீனந்தல் அடிகளாரின் மனமுவந்த  ஒத்துழைப்பை  எங்கள் பேரவை யின் அனைத்திந்தியப் பொதுச்செயலாளர் கலச. இராமலிங்கம் எனும் கலசம் அவர்களின் ஒருங்கிணைப் புடன் பெற்றோம் என்பதை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

சீனந்தல் அடிகளார் பெரிதும் விரும்பி ஒத்துழைப்பு நல்கிய எல்லா வகுப்புகளுக்குமான  விகிதாசார வகுப்புவாரிப் பங்கீடு பெற்றிடவதற்கு தொடர்ந்து பாடுபட உறுதிகொள்வோம்.

வே.ஆனைமுத்து

பொதுச் செயலாளர்,

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி,

அம்பத்தூர், சென்னை-50

புரவலர்- தலைவர்,

(கைப்பேசி : 9444804980)

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட, பட்டியல் வகுப்பு, பழங்குடியினர், மதச்சிறுபாண்மை பேரவை, சென்னை-5.

Pin It