சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் ஓடும் அனைத்து மாநகர மற்றும் அரசுப் பேருந்துகள் மிக, மிகக் கேவலமாகப் பராமரிக்கப்படுகின்றன. நகர, மாநகர பேருந்துகளில் குப்பையும் மண்ணும் நிறைந்து காணப்படுகின்றன. சன்னல்கள் எந்தப் பேருந்திலும் சரியில்லை. மேற்கூரையும் ஓட்டை உடைச்சலு மாக உள்ளது. தினந்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன.

பேருந்துகள் பெரும்பாலும் நிறுத்தத்தில் நிற்பது இல்லை. சில பணியாளர்கள் பயணிகளிடம் சரியாக நடந்துகொள் வதில்லை. பயணச்சீட்டுப் பரிசோதகர்கள், பயணச்சீட்டு இல்லாத வர்களை மட்டும் பரிசோதித்துத் தண்டனை விதிக்கின்றனர். பேருந்துக்குள் உள்ள குப்பைகளையும் ஓட்டைகளையும் கிழிந்து கிடக்கும் தகரங்களையும், நீட்டிக்கொண்டு கிடக்கும் ஆணிகளையும் கவனிப்பதில்லை. இதையும் கவனிக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களிடம் கூடுதலாகப் பொறுப் பாக்க கொடுக்க வேண்டும்.

அனைத்து அரசுப் பேருந்துகளும் குறிப்பிட்ட வண்ணத் துடன் இயக்க வேண்டும். நகரப் பேருந்துகள் நிற்கும் இடம் தள்ளி, புறநகர் பேருந்துகள் நிற்க வேண்டும். குறிப்பாகத் தாம்பரத்தில் நகரப் பேருந்து நிறுத்தும் இடத்திற்கு முன்பாகப் புறநகர மற்றும் விரைவு பேருந்துகள் நிற்கின்றன. புறநகர பேருந்து நடத்துநர்கள் நகரப் பேருந்து நிற்கும் இடத்தில் நிறுத்திவிட்டுக் கூவி அழைக்கின்றனர். அதனால் புறநகரப் பேருந்துகள் நகரப் பேருந்துக்கு முன்பக்கமாகச் சிறிது தூரம் தள்ளி நிறுத்தலாம்.

பேருந்துகளில் ஒரே இடத்திற்குப் பலவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சாதாரணப் பேருந்துகளை குறைத்துக் கொண்டு, விரைவுப் பேருந்துகளையும், சொகுசுப் பேருந்துகளையும், குளிர்சாதனப் பேருந்துகளையும் இயக்குகின்றனர். காலை மற்றும் மாலையில் பணிக்குச் செல்வோர்களிடம் சொகுசு பேருந்துகளை மட்டுமே இயக்கிக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். சாதாரணக் கட்டணப் பேருந்துகளுக்குக் காத்திருப்போர் பணிக்கு நேரத்திற்குச் செல்ல முடியாமல் பணியையும் இழக்கின்றனர்.

மேலும் பல பணியாளர்கள் கையூட்டுக் கொடுத்துப் பணிக்கு வந்துள்ளனர். அவர்கள் தாங்கள் கொடுத்த தொகையை வசூலிக்கப் பல வழிகளில் முயற்சிக்கின் றனர். உடந்தையாகப் பல அரசு அதிகாரிகளும் உள்ளனர். இவ்வகையில் இயங்கும் போக்குவரத்துத் துறை, மக்கள் மத்தியில் பொய்யான முகத்துடன் செயல்படு கின்றது.

வயது முதிர்ந்தவர்களுக்கு மாதம் ஐந்து முறை பேருந்தில் போய்வர அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மாதம் முழுவதும் நீட்டிக்கலாம். அய்ந்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கட்டண வசூல் தொடங்கலாம். பணியாளர்களும் தன் சொந்த வாகனம் போல் கவனித்துப் பணி செய்யலாம். இது மக்களுக்குப் போக்குவரத்துத் துறையின் பொய் முகத்தைப் போக்கும்.

Pin It