பல வழிகளில் வரி என்ற பெயரில் மத்திய அரசும் மாநில அரசும் முன்பு வசூலித்து வந்தன. கடந்த சூலை 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரில் மத்திய அரசும், சொத்துவரி, குடிநீர் வரி, சாலை வரி, தொழிலாளர் வரி, நலவாரிய வரி, கல்வி வரி, தொழில் வரி என்ற பெயரில் வரியை மாநில அரசும் வசூல் செய்கின்றன.
சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு வசூல் செய்கிறது. வியாபாரம் நன்கு ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. எந்தவொரு பொருள் வாங்கினாலும், விற்றாலும் கணக்கில் காட்டித்தான் ஆகவேண்டும். வரியை வசூலிக்கவும் வரியைக் கட்டவும் நன்கு திட்டமிட்டுச் செயல்படுகின்றன. சரக்கு மற்றும் சேவைவரிக் கணக்கில் தவறுதலாகப் (எழுத்துப் பிழையாக) பதிந்த கணக்குகளைத் திருத்த வழி (பிழை என்றால் சரியான எண் 100க்கு பதில் 1000 என்று பதிந்தால்) இன்றுவரை வழி வகைகள் செய்யவில்லை.
இந்த வரிவசூல் செய்யும் கணக்கை இந்திய அரசு ஒழுங் குப்படுத்த இன்போசீஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து வேலைக்கு ஒப்பந்த முறையில் அமர்த்தி, கணக்கைச் சரி பார்க்கின்றனர். இந்த ஒப்பந்தத்தால் விற்பனைவரித் துறையில் பணி செய்ய புதிய ஆட்களைப் பணியமர்த்தாமல் தற்போது பணியில் இருப்பவர் களையும் அனுப்பும் முயற்சிகள் நடக்கின்றன. இனி இதே போன்று அனைத்துத் துறைகளும் தனியார் மயமாக்கப் படும். அப்படித் தனியார்மயமானால் இடஒதுக்கீட்டுக்கு நிர்பந்தம் குறைகின்றது. கையூட்டுக்குப் பதில் பங்குபோட்டு, கேள்விக்கு இடமின்றி மத்திய அரசு கொள்ளையடிக்கின்றது.
பொதுமக்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படு கின்றது. சரக்கு மற்றும் சேவை வரியில் கணக்கில் காட்டப் படாத சேவைவரி அதிகமாக மறைக்கப்படுகின்றது (உதாரணம் அனைத்து உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்கள் காட்டியதுதான் கணக்கு, காட்டப்படாத 80% கணக்கு வரி ஏய்ப்புதான். இதிலும் அரசியல்வாதிகள் பங்கு வாங்கிக் கொண்டு விட்டுவிடுகின்றனர்.
பொதுமக்களுக்கு வரிப்பணம் முழுமையாகப் பயனளிக்க வில்லை. இப்பொழுது நடைபெறும் வங்கி ஊழலை மறைக்க ஆளும் கட்சி ரதயாத்திரை விடுகின்றது. பொதுமக்களைத் திசை திருப்பியே எல்லா ஊழல்களும் மறைக்கப்படுகின்றன.