இந்துதேசம் இந்துநாடாய் மாற்றத்துணிகிறார் மோடி

தேசியஇனத்தின் உரிமையை நசுக்குது அத்தாடி

தமிழ்த்தாய் வாழ்த்தை மறுப்போர்மேலே ஒருபடி

அய்அய்டியில் பாடுவர்யானை கணபதி துதி

பார்ப்பனியம் இராமராச்சியத்தை திணிக்கத் துடிக்குது

பாரெங்கிலும் மனுதர்மத்தை வேரூன்ற பார்க்குது

ஆர்எசசும் பரிவாரங்களும் ஆரியக் கூத்தாடுது

பார்தமிழினமோ அடிமை போதையில் திளைக்குது

ஆண்டாண்டாய் அநீதிதமிழர்க்கு காவிரி உரிமையில்

ஆண்டஅரசுகளால் பயனென்ன? நாமளித்த வாக்குரிமையில்

மேலாண்மை வாரியம் மட்டுமே நெடுந்தீர்வு

நீராண்மையை முறைமை செய்தால்தான் நமக்குவாழ்வு

அச்சுறுத்தியே மக்களை வதைக்குது பாசகஅரசு

எச்சைராசா வகையராக்கள் கக்குவர் பாசிசநஞ்சு

சிலைகளை தகர்த்தது வரலாற்றின் வடு

பழனிச்சாமியும் பன்னீரும் தமிழ்நாட்டிற்குக் கேடு

நிலங்களை மலடாக்கி வேளான்மை பாழாக்குது

வளங்களை வணிகமாக்கி சுரண்டுது தரகுஅரசு

மரபுமாற்று விதைவிதைக்க கார்ப்பரேட்டோடு கைகோக்குது

அய்ட்ரோகார்பனும் இசுடெர்லைட்டும் மண்ணிற்குப் பேராபத்து.

பொதுமை கோட்பாட்டை வகுத்த மார்க்சுஎங்கல்சும்

மடமையை மடைமாற்றிய பகுத்தறிவன் பெரியாரும்

தீண்டாமைக்குத் தீயிட்ட மேதை அம்பேத்கரும்

இவர்களின் இயமேதீர்வு தொடர்வோம் துணிந்து

Pin It