சொல்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

எல்லா சாமியார்களும் தங்களை சாமான்ய மனிதரிலி ருந்து வேறுபடுத்திக் காட்ட தங்களின் பெயருக்கு முன்னால் ஒரு "ஸ்ரீ' சேர்த்தால், சாமியார்களில் தான் மாறுபட்டவர் என்று காட்ட தன் பெயருக்கு முன்னால் இரண்டு "ஸ்ரீ' போட்டு வலம் வருபவர் ரவிசங்கர்.

இந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமீபத் தில் பேசும்போது, "இந்தியாவில் அரசு பள்ளிக்கூடங்களில் கழி வறை வசதி இல்லை. பள்ளிக் கூடங்கள் எல்லாம் நக்சலைட்டுகள் வளரும் கூடாரம் ஆகி விட்டன' என்று பேசியது புதிய சர்ச் சயை கிளப்பியுள்ளது.

அரசு கல்வியகங்கள் நக்சல் கள் வளரும் கூடாரங்கள் என்று குற்றம் சாட்டும் இந்த ரவிசங்கர், எந்த வகையில் அங்கு பயில்பவர் கள் நக்சல்களாக மாறுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அரசின் பாடத்திட் டங்கள் மாணவர்களை நக்சல்க ளாக மாற்றுகிறது என்று சொல்ல வருகிறாரா?

அல்லது அரசு கல்வியகங்க ளின் நிர்வாக முறை நக்சல்களை வளர்க்கிறது என்று சொல்ல வரு கிறாரா?

அப்படி பார்த்தால் இந்த ஸ்ரீ ஸ்ரீ தமிழகத்தில் பாபநாசம் என்ற ஊரில் பிறந்தவர்தானே! இவர் எந்த கான்வெண்டில் படித்தார்?

அரசு பள்ளியில் இவர் படித் திருந்தால் இவரது இப்போதைய பேச்சின்படி இவரும் ஒரு நக்ச லாக அல்லவா மாறியிருக்க வேண்டும்?

ஆனால் இவர் "வாழும்கலை' எனும் பெயரில் கோடிகளில் புர ளும் கோமகனாக அல்லவா கோலோச்சுகிறார். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் பற்றி பேசும் இவர், வாளோடும், துப்பாக்கியோடும், குண்டாந்தடிகளோடும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பயிற்சி வகுப்புகள் பற்றி பேசியதாக பார்க்க முடியவில்லையே! ஏன்? அணிந்திருக்கும் ஆடையின் நிறம் ஒன்று என்பதால் வந்த பாசமோ?

ஸ்ரீ ரவிசங்கரின் அரசுப் பள்ளி கள் குறித்த பேச்சு சர்ச்சையானவு டன்தான் அவ்வாறு பேசவில்லை என்று இந்த ஸ்ரீ ஸ்ரீ மறுத்தாலும், "ஸ்ரீரவிசங்கரின் கருத்தை ஏற்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி கள், பிரபல நீதிபதிகள், அரசில் உயர் பதவி வகிப்போர் என்று ஏரா ளமான பிரபலங்கள் அரசு பள்ளிக் கூடங்களில் படித்தவர்கள் என் பதை சுட்டிக்காட்ட விரும்புகி றேன். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த இவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா?' என்று கேட்டு மத் திய மனித வளத்துறை மந்திரி கபில் சிபல் கடும் கண்டனம் தெரிவித் துள்ள செய்தி, ஸ்ரீ ஸ்ரீ அப்படி பேசி யது உண்மை என்பதற்கு சான்றாக திகழ்கிறது.

இனியாவது ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ போன்ற சாமியார்கள், தங்களை சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களாக காட்டுவதற்காக இது போன்று பரபரப்பாக பேசுதல், உண்ணாவிரத நாடகம் ஆடுதல் இதையெல்லாம் விட்டு விட்டு, சேர்த்து வைத்துள்ள கோடிகளை மக்கள் நலனுக்கு செலவு செய்வ தன் மூலம் தங்களை பரிசுத்தப்ப டுத்த முன் வரட்டும்.

Comments

1 comment

1
கி.பிரபா
அரசுப் பள்ளிக்கூடங்கள் நக்சலைட்டுகளை உருவாக்கிறதே எனச் சொல்லும் இரவிசங்கர் சாமியார் போன்றவர்கள் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத நிலையாகும். கோடியில் பிறந்த இவரெல்லாம் இன்று ஊடகத்திலும் செய்தித்தாள்களிலும் வலம் வருவதே பெண்களைக் கொண்டு பித்தலாட்ட நாடகம் ஆடத் தானே! ஊரே இவர் போன்றவர்களைச் சிரி,சிரி இரவிசங்கர் சாமியார் எனச் சிரிப்பது தெரியாது போலும். வாழும் கலை என்ற பெயரில் வாழ்வைக் கொலை செய்யும் சாமியாராக வாழ்கிறாரே! இவரின் கட்டுப்பாட்டில் யார், யார் எதற்காக மயங்கிக் கிடக்கின்றனர் எனச் சில காலம் கழித்துவெளி வரும்போது தெரியும் இவரின் உண்மை சாயம்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.