வெள்ளிக்கிழமை மாலைகள் குதூகலத்தையும் திங்கட்கிழமை காலைகள் மிகுந்த மனச்சோர்வையும் கொணர்ந்தன. பள்ளிக்குப் போக வேண்டுமென்ற நினைப்பே என் வயிற்றின் அமிலக் குதிப்பை அதிகரித்தது. பள்ளியை மிகவும் அஞ்சினேன். ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பது போன்ற அசௌகரிய உணர்வுடனேயே பள்ளியில் எனது ஒவ்வொரு நிமிடமும் கழிந்தது. மூன்று வயதில் முதல் முறையாகப் பள்ளிக்குப் போகும் பாலகனைப் போல எனக்குள் பள்ளியைப் பற்றியேற்பட்டிருந்த இந்த பயத்தை யாரிடமும் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளவும் முடியாமலே இருந்து வந்தது.

பழைய பள்ளியையே நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த என் மனதுக்குள் புதுப் பள்ளியை விட்டுக் கிளம்பும் மாலை வேளைகளில்தான் மிகமிக லேசான உற்சாகமே பிறக்கும். அதைச் சொன்ன போதெல்லாம் அம்மாவும் வகுப்பாசிரியரும்  ஒரே போல, “புது இடத்துல பழகக் கொஞ்சம் நாளாகுமில்ல?”, என்றார்கள். வகுப்பறையின் இருக்கைகள், சீருடை என்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களிலிருந்து பள்ளி வளாகத்தின் அமைப்பு, கற்பிக்கும் முறை போன்ற பெரிய விஷயங்கள் வரை என் மனம் சதா பழைய பள்ளியுடன் ஒப்பிட்டபடியே இருந்தது. அதை என்னால் உதறவும் முடியாமலிருந்தது.

அவ்வாறான சிந்தனைகளைச் சில சமயம் அண்ணனிடமும் வேறு சில நேரங்களில் அம்மாவிடமும் பகிர்ந்து கொண்ட போதிலும் யாராலும் என் மனவோட்டத்தையும் அது என்னில் கொணர்ந்த பதட்டத்தையும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை. எல்லா இடங்களையும் ஒருசுற்று சுற்றிப் பார்க்கவே ஒருமணி நேரத்துக்கும் மேல் வேண்டியிருக்கும் அளவிலிருந்த பள்ளி வளாகத்தில் கூடைப்பந்து, விரைவோட்டப் பயிற்சி என்று அவ்வந்த இடத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எப்போதும் நிகழ்ந்தவண்ணமிருந்தன. மிகச் சுவாதீனமாகவும் தன்னியல்புடனும் நடந்து கொண்ட இரண்டாமாண்டு மாணவர்களைத் தயங்கித் தயங்கி நின்ற முதலாமாண்டு மாணவர்களிலிருந்து யாராலும் சுலபமாகப் பிரித்தறிய முடியும். என்னுள் இருந்து கொண்டே இருந்த இரண்டாண்டுகள் முடியும் போது கூட நல்ல நண்பர்கள் அமைவார்களா என்ற ஐயம்தான் ஆக அதிக அழுத்தத்தை கொணர்ந்தது.

கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுமே கற்பித்தலில் சிறந்தவர்களாகவும் நட்புடன் பேசுபவர்களாகவும் இருப்பதாகத் தான் தோன்றியது. பையன்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் நான்காண்டுகள் படித்துவிட்டு, பெண்களும் சேர்ந்து படிக்கும் இந்தப் புதுச் சூழல் என்பதால் மிகப் புதியதாகவும் ஒருவித அசௌகரியமாகவுமே இருந்தது. மிகச் சில மாணவிகளைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே எப்போதும் ஒருவித மிரட்சியுடன் காணப்பட்டார்கள். சிறு ஆர்பாட்டத்துக்கும் கத்தலுக்குமே மிரண்டு விடுவதைப் போன்றிருந்த அவர்களைப் பார்த்த போது குரலை உயர்த்திப் பேசி விடுவோமோ என்றதொரு தயக்கம் எப்போதுமே எனக்கிருந்தது. தவறி அப்படிப் பேசினால் அதை காட்டுமிராண்டித்தனம் என்று கொள்வார்களோ என்றெல்லாம் என்னில் ஒருவித குழப்பம்.

நாட்கள் செல்லச் செல்ல அம்மா ஒருபுறம், “எப்ப நீ புது ஸ்கூல்ல செட்டில் ஆகி எப்ப நீ பாடத்துல கவனம் செலுத்த ஆரம்பிக்கப் போற?”, என்று கேட்டு என்னை நச்சரித்தார். அப்பாவோ, “உனக்கு படிக்கிற ஐடியா இருக்குதா இல்லையா?”, என்று சற்று கடுமையாகவே மிரட்டினார்.

நேரமிருந்தால், “படிக்கிறத விட இந்த வயசுல வேற என்ன வேல உனக்கு?”, என்று ஆரம்பித்து தன் பள்ளி நாட்களையும் தான் ஏதோ உதாரண மாணவனாய் இருந்தது போன்ற மிகைகளை விரித்து ஒரு பிரசங்கமே செய்தார். நழுவி நகர முடிந்தால், அன்றைய தினம் அதிருஷ்டம் நிறைந்தது தான். சில நாட்களில், இடத்தை விட்டகல விடாமல் ஒருசிறு உறுமலுடன்

நிற்கச் சொல்லி, தான் என்னில் செய்து வரும் கல்வி முதலீட்டையும் அது ஈட்ட வேண்டிய குறைந்த பட்ச லாபத்தையும் விலாவாரியாக விளக்கி மிகவும் அலுப்படைய வைத்தார். சமீபத்தில் ஏற்பட்டிருந்த என்னுடைய வெறித்த பார்வையுடன் செய்த குருட்டு யோசனைகள், நீண்ட தூக்கங்கள், சோம்பல் போன்றவற்றையெல்லாம் பட்டியலிட்டு என்னை ‘உதவாக்கரை’ என்று நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக நிறுவ முயன்றார்.

பள்ளி துவங்கி மூன்றாவது வார இறுதியில் வந்த வெள்ளியன்று பள்ளியை விட்டு வெளியேறி, சாலையைக் கடந்து வுட்லண்ட்ஸ் ரயில் நிலையத்தை நோக்கி நான்கடிகள் நடந்ததுமே பின்னால் தொம் தொம் தொம் என்று கேட்ட பேரிரைச்சல் என்னவென்று இயல்பாகத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு நொடி அப்படியே அதிர்ந்துறைந்தேன். நான் நடக்க நடக்க, எனது பள்ளியும் அதிர்வுகளூடே சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் தன்னுடலிலிருந்து தொப் தொப்பென்று உதிர்த்தபடி பெரும்பூதத்தைப் போல என் பின்னாலேயே வந்தது. இதென்னடா வம்பாகிவிட்டது! என்ன செய்வதென்று ஒரு கணம் குழம்பினேன். என்னுடன் வீட்டுக்கே வந்துவிடுமோ என்று நினைத்ததுமே, அதைச் சற்றும் விரும்பாதவனாக பேசாமல் திரும்பி நடந்து பள்ளிக்குள் நுழைந்து நூலகத்தில் அமர்ந்து வீட்டுப் பாடத்தை முடிப்போமா என்று ஒரே ஒரு கணம் தான் யோசித்தேன்.

ரயிலில் ஏறியதும் வேறு வழியில்லாமல் பின்தங்கி நின்று விடும் என்று சமாதானப்படுத்திக் கொண்டு தொகைவீடுகளூடாக வேகவேகமாக நடந்து சென்றேன்.

இருமருங்கிலுமிருந்த உயர்மாடிக் கட்டடங்களைப் பொடிப் பொடியாகத் தகர்த்தபடி பின்னால் வந்தது. மிக வேகமாக மேல்த்தளத்துக்கு மின்படிகளில் ஓடிச்சென்று கிளம்பவிருந்த ரயிலில் ஏறி அமர்ந்து வெளியே பார்த்தபோது நான் அதிவேகமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தேன். பள்ளிக் கட்டடம் ரயிலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தூரத்தில் வெறித்தபடி நின்று குரோதத்துடன் என்னை முறைத்தது.

இடது தொடையை யாரோ லேசாகப் பிராண்டுதைப் போலிருக்க திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் என்னையே பார்த்துக் கொண்டது போன்ற முகத்துடனும் வேறு மாதிரியான ஆடைகளுடனும் ஒருவன்.

இடையில் ஏதும் கண்ணாடியிருக்கிறதா என்று கையை நீட்டும் போதே, “கண்ணாடியெல்லாம் இல்ல”, என்று சொன்னான். சுற்றுமுற்றும் பார்த்தேன். எல்லோரும் அவரவர் உலகில் மூழ்கியிருந்தனர். என் சிந்தனையோட்டத்தை அறிந்தவனாக, “நம்பலையா? உண்மை தாம்பா. நானும் இன்னொரு நீ தான்”, என்றான்.

“உனக்கு இப்பயெல்லாம் ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கிறதில்லையோ? முன்னயெல்லாம் நீ இப்படியில்லயே?”, என்றவனிடம், “ஆமா, நீ யாரு?”, என்று கேட்டேன். “ஓ, என்னத் தெர்லயா உனக்கு? அதான் சொன்னனே, நீ தான் நான். அதாவது, நீ இருக்க விரும்பும் நீதான் நான்.

கொஞ்ச நாளா உன்னால இருக்க முடியாத உன்னோட பழைய உருவத்த கண்ணாடில பார்த்த மாதிரி இருக்குதா?”, என்று புதுமொழியில் கேட்டான். குரலும் கேசமும் உடையும் உடல்மொழியும் அப்படியே என்னைப்போல தான் இருந்தான்.

நேர்த்தியாகவும் அளவாகவும் வெட்டப்பட்டிருந்த முடியை ஒழுங்காகச் சீவியிருந்தான். அவனுடைய கால்சட்டையின் கீழ்ப்பகுதியும் காலணிகளும் அழுக்கின்றித் தூய்மையாக இருந்ததைப் பார்த்ததும் அனிச்சையாக என் கால்கள் இருக்கைக்கடியில் மறைந்தன. சமீபமாக மாறியிருந்த என்னைப் பார்க்க எனக்கே பிடிக்கவில்லை.

“அதுக்கு தானே நா வந்திருக்கேன். கொஞ்ச நாளா உன்னோடயே இருந்திட்டிருக்கேன். இருந்தும், இன்னைக்கித் தான் நீ என்னக் கவனிச்ச”, என்றவனின் முகத்தில் எனக்குப் புரியாததொரு பெருமிதம் மின்னியது. என்ன சொல்கிறான் இவன்? எனக்கே தெரியாமல் என்னுடன் வந்து கொண்டிருப்பதாகச் சொல்லும் இவன் யார்? ஒரு வேளை, உலகில் ஒரே உருவம் கொண்ட எழுவர் இருப்பதாகச் சொல்கிறார்களே, அதில் ஒருவன் தானோ இவன்?

ஒன்றும் சொல்லாமல் விழித்த என்னைப் படித்தவனைப் போல, “ரொம்ப யோசிக்காத. போன வாரம் மார்க்ஸ் கொறைஞ்சி போன போது இருந்த அதே மொகத்தோட இருக்கியே. இன்னைக்கி தான் வகுப்புல முதல் மதிப்பெண் வாங்கினீல்ல? அப்டியும், ஏன் உன் மூஞ்சில ஒரு சந்தோசமேயில்ல?” சென்ற வாரம், முதல் தேர்விலேயே மதிப்பெண் மிகக் குறைந்து மிகவும் சஞ்சல மனநிலையில் இருந்தேன்.

உடலும் மனமும் மிகவும் சோர்வுற்றிருந்ததால் சூழலைக் கவனிக்கவில்லையோ. என்னுடனேயே பேருந்தில் பயணித்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பதை நினைக்கவே மிக ஆச்சரியமாக இருந்தது. சுருக்கமாக, “எனக்கு ஜே.ஸி லைஃபே பிடிக்கல்ல”, என்றேன். பயணிகள் ஒருவரும் என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கைப்பேசியில் பேசுகிறேன் என்று நினைத்தார்களோ என்னவோ.

“உன் மார்க்கை டீச்சர் வகுப்புல சொன்னதும் க்ளாஸ்ல எல்லோரும் கை தட்டினாங்களே, அதுக்குக் கூடவா உனக்கு உற்சாகமில்ல?” இடது தொடையை யாரோ லேசாகப் பிராண்டுதைப் போலிருக்க திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் என்னையே பார்த்துக் கொண்டது போன்ற முகத்துடனும் வேறு மாதிரியான ஆடைகளுடனும் ஒருவன்.

“நா என்ன ப்ரைமரி ஸ்கூல் ஸ்டூடண்டா? ப்ச, உனக்கெங்க அதெல்லாம் புரியும்? கொறச்ச மார்க் கெடைச்சாலும் செகண்டரி ஸ்கூல்லனா மகிழ்ச்சியாக இருப்பேன்.”

 “ஓ, இது மட்டும் பதினாறு வயசுப் பையன் பேசற பேச்சோ? சரி, அதல்லாம் விடு. உன் மதிப்பெண் உயர நான்தான் காரணம்ன்றதாவது தெரியுமா உனக்கு?”

சற்றே ஆச்சரியத்துடன், “ஆங், அது எப்டி?”, என்று கேட்டேன்.

“அப்டி தான்”, என்றவனின் தொனியில் தீர்மானமும் உறுதியும் தெரித்தது.

அதான் எப்டினு கேக்கறேன்”, என்றேன் அலுப்புடன்.

“மார்க்ஸ் மட்டுமில்ல, உனக்கு நடக்கற எல்லா நல்லதுக்கும் நான்தான் காரணம்“, என்றவனின் குரலில் இருந்த கர்வம் என்னை மேலும் எரிச்சலூட்டியது.

“ஓஹோ,.. அப்ப மத்ததுக்கெல்லாம்?”, என்று கேட்டேன் கேலியுடன்.

“இதென்ன கேள்வி? நீதான்”, என்றவனை இழுத்து ஓர் அறை விட வேண்டுமென்ற வெறியேற்பட்டது என்னுள். படித்து எழுதியது நான்! இவன் ஏதேதோ அளக்கிறானே! வளவளவென்று பேசியவனிடம் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தேன். வேறு ஏதேதோ கேள்விகள் கேட்டவனுக்கு பதிலும் சொல்லவில்லை.

“இப்பல்லாம் நீ அதிகமும் மனசுக்குள்ளயே பேசிக்கிற, இல்ல? அதான் உனக்கு பதிலா நான்,..”, என்று ஏதோ சொல்லிக் கொண்டே கூடவே வந்தவனைக் கண்டாலே ஆத்திரமாக வந்தது. எங்கள் தொகைவீட்டு மின்தூக்கியினுள் என்னுடன் நுழையாமல் வெளியே நின்று கொண்டான். அன்றிலிருந்து நான் பள்ளிக்குப் போகும் போதும் திரும்பும் போதும் என்னுடனேயே திரிந்த அவனைப் பொருட் படுத்தாமலிருக்கப் பழகினேன்.

அவனுடைய பேச்சுக்களைக் காதில் வாங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல் இருக்கவும் ஏதும் பதில் பேசாமல் இருக்கவும் முடிவெடுத்துக் கொண்டேன். ஆனால், என் மனதில் ஓடும் சிந்தனைகளுக்கு ஏற்றாற்போல சதா பேசுபவனாக இருந்த அவனை அலட்சியப் படுத்தவும் முடியாமல் இருந்தது. எனக்குள் ஓடும் எண்ணங்கள் நின்றால் ஒருவேளை அது சாத்தியமாகியிருக்கலாம்.

முதல் காலாண்டு முடியும் போது கிடைத்த ஒரு வார விடுமுறைக்காகவே காத்திருந்து பழைய வகுப்பு நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். உயர்நிலைப் பள்ளியில் நாங்கள் சேர்ந்து செய்த குறும்புகள், அட்டகாசங்கள் எல்லாம் நினைவில் வரிசையாக வந்தன. அவற்றைப் பற்றியெல்ல்லாம் பேசித் திளைக்கும் உற்சாகத்துடன் தான் கிளம்பினேன். தினமும் ரயிலில் சென்று அலுத்துப் போனதில் ஒரு மாறுதலுக்கு அன்றைக்கு பேருந்தில் கிளம்பினேன்.

வழக்கம் போல மின்தூக்கியினருகில் நின்றிருந்த அவன் என்னைப் பின் தொடர்ந்தான். பேருந்திலும் அருகில் நின்று பயணித்த அவனை நிமிர்ந்து பார்க்கப் பிடிக்காமல் சன்னல் வழியாக வேடிக்கை பார்க்க முயன்றேன். பெயர் சொல்லி என்னைக் கூப்பிட்ட போதும் அலட்சியப் படுத்தினேன்.

சற்றே பின்புறம் நின்றிருந்த அவன் ஒரு முறை என் பிடரியில் தட்டினான். அதையும் அலட்சியப் படுத்த முயன்றாலும் விடாமல் என் தலையை மீண்டும் தட்டிக் கூப்பிட்டான். என்னவென்று கேட்டால், “ஒரு தடவ கூப்டா நிமிந்து ஏன்னு கேட்க முடியாதா?”, என்றவனின் குரலில் முகத்திலும் கோபம். “என்ன?”, என்று கேட்டேன்.

“ம்ம்ம், உன் தல. கூப்டும் போது ஏன்னு கேக்கலீல்ல நீ,.. அதுக்கு தண்டனையா உன் அம்மா, அப்பா, உங்கண்ணே மூணு பேரையும் முழுங்கிட்டேனே”, என்றான் விகாரமாகச் சிரித்துக் கொண்டே.

தூரங்களும் கால நெருக்கடிகளும் தனக்கில்லை என்று ஏதேதோ சொல்லிப் பீற்றிக் கொண்டான். “நீ வெளிய பார்த்துகிட்டிருக்குறப்பவே உங்க வீட்டுக்குப் போயி திரும்பிட்டேனே”, என்றான். அதிர்ந்து, “பொய் சொல்ற”, என்றதும், “சரி, காட்டட்டுமா? ம்,... பாரு, இதோ!”, என்று வயிற்றுக்குள்ளிருந்து மூவரையும் சரசரவென்று இழுத்து வெளியேற்றிக் காட்டியவன், நொடிப் பொழுதில் மீண்டும் மூவரையும் லபக் லபக் லபக்கென்று விழுங்கி ஏஏஎவ்வென்று பெரிய ஏப்பம் விட்டான். அவன் நின்ற இடத்தில் பேருந்தின் தரையெங்கும் கோழையும் எச்சிலுமாக ஒரே சொதசொதப்பு.

அதிர்ச்சி விலகி ஆத்திரத்தில் நான் துள்ளி எழுந்தேன். அழுகையாக வந்தது. அவன் கழுத்தை நொறுக்கிவிடும் வேகத்துடன் நெருங்குவதற்கு முன், நிறுத்ததில் நின்ற பேருந்திலிருந்து இறங்கியவன் பின்னால் அவசர அவசரமாக நானும் இறங்கினேன். பின்னால் வரும் என் வேகத்துக்கேற்ப தன் வேகத்தையும் படிப்படியாக அதிகரித்தான். கிடுகிடுவென்று ஓடிச் சென்று அவனை நெருங்கி விட்டேன். அருகில் கிடந்த உருட்டுக் கட்டையைத் தூக்கி தலையில் ஒரே போடாகப் போடுவேன் என்று நானே அதிர்ச்சி விலகி ஆத்திரத்தில் நான் துள்ளி எழுந்தேன்.

அழுகையாக வந்தது. அவன் கழுத்தை நொறுக்கிவிடும் வேகத்துடன் நெருங்குவதற்கு முன், நிறுத்ததில் நின்ற பேருந்திலிருந்து இறங்கியவன் பின்னால் அவசர அவசரமாக நானும் இறங்கினேன். எதிர்பார்த்திருக்கவில்லை. கண்டிப்பாக செத்திருப்பான். நின்று என்ன ஏதென்று பார்க்காமல் பத்தடி நடந்து விட்டுத் திரும்பிப் பார்த்தபோது, வெற்றிக் களிப்புடன் நின்று சிரித்த அவனைக் கண்டு மிரண்டு விட்டேன்.

சட்டென்று ஓடி நிறுத்தத்தில் கிளம்பவிருந்த பேருந்தில் டக்கென்று ஏறி விட்டேன். பின்னாலே ஏறி என்னுடன் வந்தவனைக் கண்டு கொள்ளாமல், அண்ணாவுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே,‘இப்போது மிகவும் மும்முரமாகப் நூலத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன்.

பிறகு பேசுகிறேன்’, என்று பதில் வந்தது. அதைப் பார்த்து நிம்மதியுடன் அப்பாவையும் அம்மாவையும் அழைக்க நினைத்து வீட்டு எண்ணை அழுத்தும் போது, “இப்ப உனக்கு பதில் போட்டது யார்னு நெனச்ச ? நானே தான்”, என்றான். நம்புவதா வேண்டாமா என்ற தயக்கத்துடனிருந்த போதிலும் எனக்குள்ளே சிறு கலவரமேற்பட்டது.

“அடேய் மடையா, இனி நானா உன்னைய விட்டு விலகிப் போனாதான் உண்டு. உன்னால என்னக் கொல்ல முடியாது. நா செத்தா நீயும் சாக  வேண்டியதுதான். புரிதா? என் வயித்துக்குள்ள இருக்குற மூணு பேரைப் பத்தியாச்சும் நெனச்சிப் பார்த்தியா? ம்? அந்த பயமாச்சும் வேணாமா உனக்கு?” சேர்ந்து படித்த பழைய பள்ளியைக் குறித்துப் பேசவில்லை யாருமே.

பழைய நினைவுகளை அவர்களில் மீட்டெடுக்கும் முயற்சியில் பேச முற்பட்ட என்னையும் அவர்கள் பேச விடவில்லை. வெவ்வேறு பள்ளிகளில் சேர்ந்திருந்த பழைய நண்பர்களிடம் ஒரே மாதிரியானதொரு அடர்ந்த விலகல் தெரிந்ததால் பழைய அன்யோன்யத்தைத் தேட தான் வேண்டியிருந்தது.

 யாருடைய வாயிலும் ‘நம்ம ஸ்கூல்ல’ என்பது போன்ற சொற்கள் வரக்காணோம். எல்லோரும், “என் பள்ளிக் கூடத்துல,. “, என்றும், “இதென்ன பிரமாதம், என் பள்ளிக் கூடத்துக்கு வந்து பாரு லா, அசந்துருவ,..” என்றும் அவரவர் புதுப்பள்ளியைப் பற்றியே பெருமையாகவும் பெருமிதத்தோடும் அதற்காகவே அன்று அங்கே கூடியது போலப் பேசிக் கொண்டிருந்தனர்.

எல்லோரிடமும் பீற்றிக் கொள்ளும் மனோபாவம் மட்டுமே இருந்தது. அன்றைக்கு நண்பர்கள் பேசிய விவரங்கள் என் மனதில் தரித்திருக்கவில்லை. ஆகவே, அவற்றை அசைபோடவும் வழியில்லை. பொதுவாக, அவர்களின் போக்குகளை மட்டுமே அடுத்து வந்த நாட்களில் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையிலும் எல்லோருமே புதுப்பள்ளியில் ஒன்றி விட்டோம் என்பது போலப் பேசிய போதிலும் அதை என்னால் நம்ப முடியவில்லை.

என் மனம் தான் எதார்த்ததை நம்பத் தயாராக இல்லையோ. என்னைப் போலவே அவர்களும் தத்தமது புது இடத்தில் ஊன்றச் சிரமப்பட்டு, அதை வெளிக்காட்ட விரும்பாமல் தான் அவ்வாறு பேசிக் கொண்டார்கள் என்று நினைப்பது தான் எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. ஆனால், யோசிக்க யோசிக்க அவர்களின் விலகலில் இருந்த உண்மைதான் என் மனதிற்குள் மிஞ்சியது.

ஒருவார விடுமுறையும் நான் திட்டமிட்டபடி கழியவில்லை. திரைப்படம் பார்க்கவோ வேறு எங்கேனும் சுற்றவோ கிளம்பப் பிடிக்காமல் போனது. வெளியே போனால், ‘அவன்’ பிடித்துக் கொள்வானோ என்ற ஒருவித பயம் வேறு இருந்து கொண்டே இருந்ததால், வீட்டுக்குள்ளே தனியே அடைந்து கிடந்தேன். வெறுமையில் விடுமுறையும் ஓடிப் போனது.

பள்ளி திறந்த அன்றைக்கு அதிகாலையில் விழித்த போது அறையின் அடுத்த படுக்கையில் இல்லாத அண்ணன் நினைவு அழுத்தியது. குளித்து முன்பு போல ஒழுங்காக உடுத்திக் கொண்டு கிளம்பிய எனக்கு வீட்டில் யாருமே இல்லாததுதான் மிகப்பெரிய விரக்தியாக இருந்தது. விளக்கைப் போட்டுக் கொண்டு தலை சீவி உடை மாற்றிக் கொண்ட போதும் அண்ணன் நினைவு வந்தது. “லைட்ட ஆஃப் பண்ணு”, என்று சீறிக் கொண்டே முகத்தைப் போர்வைக்குள் புதைத்துக் கொண்டு குப்புரக் கவிழும் அவனைச் சீண்டவென்றே அறை விளக்கைப் போடுவேன்.

அம்மா இருந்திருந்தால் கண்டிப்பாகக் காலையில் ஒன்றும் சாப்பிடாமல் கிளம்ப விட்டிருக்க மாட்டார். “இந்தப் பாலையாச்சும் குடிச்சிட்டுப் போ”, என்று பாலைக் கோப்பையில் ஏந்திக் கொண்டு பின்னாடி வந்து நின்று குடிக்க வைத்திருப்பார். “ஸ்டேஷனுக்குப் போறதுக்குள்ளற முடிச்சிரலாம்.

ம், இந்தா”, என்று சொல்லி காகிதத்தில் பொதிந்த ரொட்டியையும் நீட்டுவார்.

அரிது தானென்றாலும் அப்பாவுக்கு நேரமிருந்தால், தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு போய் பள்ளியில் விடுவார். வழியில் கூடவே ஒட்டிக் கொண்டே கழுத்தறுக்கும் அவனிடம் மூவரையும் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்க வேண்டும். குறைந்த பட்சம் அண்ணாவை மட்டுமாவது திரும்பக் கொடுத்துவிடுமாறு கெஞ்சிக் கேட்க வேண்டுமென்று வீட்டைப் பூட்டும்போது நினைத்துக் கொண்டேன். அவன் நிற்குமிடத்தில் இல்லை.

பின் தொடர்ந்தும் வரக் காணோம். ரயிலில் ஏறியதும் பார்வையைச் சுழற்றி சுற்றுமுற்றும் தேடினேன். ஆனால், அவனைக் காணவில்லை.

இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒட்டிப்பிறந்த பிறவியைப் போல உடன் வந்தவன், கூடவே பேசிக் கொண்டிருந்து பழகிய எனக்கு திடீரென்று உடற்குறைபாடு ஏற்பட்டு விட்டதைப் போன்றதொரு விநோத உணர்வேற்பட்டது. அவனிடமிருந்து மீட்காமல் விட்ட அப்பா, அம்மா மற்றும் அண்ணாவைப் பற்றிய கவலைதான் விடாமல் அரித்தது. இனி எப்படி?

கல்லூரி நுழைவாயிலில் தவழும் குழந்தையாக இன்னொரு நான். என்னை வரவேற்பதற்கென்றே ஏற்பாடு செய்தது போல இருந்தது. கெக்கெக்கென்று சிரித்தபடி கல்லூரி வளாகமெங்கும் தவழ்ந்து தவழ்ந்து வந்த என்னைப் பார்த்துக் கடந்து சென்ற மாணவிகள் உள்ளிட்ட அனைவரும், “ஸோ க்யூட் !”, “ஹெள வெரி ஸ்வீட் !”, என்றெல்லாம் கூவிக் கொஞ்சியதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் உள்ளூரப் பெருமையாகவே இருந்தது. அவன் அங்கேதான் எங்கேயோ மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தது போன்றதொரு அலாதி உணர்வேற்பட்டதும் பார்வையைச் சுற்றிலும் ஓட்டினேன்.

சக மாணவர்கள், ஆசிரியர்கள், சூழல் எல்லாவற்றிலும் லேசான புதியதோர் ஒட்டுதல். முதன்முதலில் அன்றுதான் பள்ளியில் இயல்பாக உணர்ந்தேன். மாலையில் வீடு திரும்பியதும் சாவியை எடுத்து கதவுத் துவாரத்தில் பொருத்தும் முன்னர், அம்மா கதவைத் திறந்தார். அப்பாவும் அண்ணாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அடக்க முடியாமல் முகம் கோணி நான் அழுததையும் சட்டென்று சமாளித்துக் கொண்டதையும் மூவரும் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள். “ஏய், என்னாச்சி? ஏதாச்சும் வம்புச் சண்டைய வாங்கிட்டு வந்திட்டியா?”, என்று கேட்ட அம்மாவிடம் ஒன்றுமே சொல்லாமல் அறைக்குள் போய் கதவைச் சாத்திக் கொண்டேன்.

Pin It