மாநிலங்களின் உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மாநில உரிமைகள் பற்றிய உரையாடலைத் தொடர்ந்து எடுத்துச் செல்லும் வகையில், சாதியற்ற பாலினச் சமத்துவமுள்ள தமிழ்ச் சமூகத்தை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் புதிய குரல் அமைப்பு 16.09.2017 அன்று சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

nagaland 251

வடகிழக்கு இந்திய மக்கள் நலச் சங்கம், சென்னைக் கிளையின் தலைவர் வபாங் தோஷி அவர்கள் நாகாலாந்தின் கடந்த காலப் போராட்ட வரலாற்றையும், தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் உரிமைக்கான முழக்கங்களையும் சிறப்பாக எடுத்துரைத்தார். அவ்வுரையின் சாரம் பின் வருமாறு.

நாகாலாந்து என்றால் அது தற்போது இருக்கும் 16,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நாகாலாந்து அன்று. உண்¬யை£ன நாகாலாந்து என்பது 1,20,000 சதுர கி.மீ. க்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. இப்பகுதி தற்போது இரண்டாகப்பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவிலும் மற்றொரு பகுதி மியான்மரிலும் உள்ளது. நாகாலாந்தின் இப்பிரிவை வேடிக்கையாக இப்படிச் சொல்வார்கள். இந்தியாவில் உள்ள நாகாலாந்தில் கிரிக்கெட் விளையாடும் போது பவுண்டரி அடித்தால் அது பர்மாவுக்குச்(மியான்மர்) சென்றுவிடும்.

‘நாகா’ என்னும் சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. சிலர்பாம்புகளை வழிபடுகிறவர்கள் என்றும் சிலர் மதப்பற்று உடையவர்கள் என்றும், துறவிகள் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் இவை எதுவும் உண்¬யைல்ல. ‘நாகா’ என்று சொல்லாமல் ‘நாக்கா’ என்று சொல்வதே சரியானதாகும். நாகாலாந்து என்பது இந்தியாவிற்கு வடகிழக்கிலும் பர்மாவிற்கு மேற்கிலும் நாகா இன மக்கள் வாழும் பகுதி என்பதாகும்.

நாகா மக்கள் முழுச்சுதந்திரத்தோடு பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்தனர். எந்த முடியாட்சிக்குக்கீழும் நாகாக்கள் இருந்ததில்லை. ஆனால் முதல் முறையாக பிரிட்டீசார் 1832ல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தார்கள். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன. அதுவே அந்நியர்களுக்கு எதிரான நாகா மக்களின் முதல் போரட்டமாகும்.

பிரிட்டீசார் நாகாலாந்தையும் தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணினார்கள். ஆனால் அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களால் நாகாலாந்தைக் கைப்பற்ற முடிந்தது. 1879ல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கொகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரிட்டீசார் நாகா மக்களைத் தங்கள் ஆயுத பலத்தால் முறியடித்தனர். பின்னர் 1880ல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரிட்டீஷ் ஆட்சிக்குக்கீழ் நாகாலாந்து கொண்டு வரப்பட்டது. பிரிட்டீஷ் ஆட்சியின் நற்பயனாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் ஒரே அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தியது.

nagaland womenமுதல் உலகப் போரின் போது பிரிட்டீசார் ‘Naga Labourer Company’ என்ற ஒன்றைத் தொடங்கி தங்களுக்காகப் போரிட அவர்களைப் பிரான்சிற்கு அனுப்பினார்கள். மேற்கத்திய நாடுகளைப் பார்த்து விழிப்புணர்வு பெற்ற அவர்கள், முதல் உலகப் போர்முடிந்து நாகாலாந்து திரும்பியவுடன் 1918 ல் ‘நாகா கிளப்’ என்ற அமைப்மபத் தொடங்கினார்கள். அதுவே நாகா மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடுவதற்கு வழிவகை செய்தது. 1929ல் சைமன் கமிஷன் நாகாலந்திற்கு வந்த போது ‘நாகா கிளப்’ பிரதிநிதிகள் ஒரு மனு அளித்தார்கள். அம்மனுவில் “பிரிட்டீஷ் அரசாங்கம் எங்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று எண்ணினால், தயவு செய்து எங்களை வேறு யாருடைய கருணையின் கீழும் விட்டுவிட வேண்டாம். நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.” என்று விளக்கியிருந்தார்கள்.

பிப்ரவரி 2, 1946ல் நாகா கிளப், “நாகா நேசனல் கவுன் சில்” (NNC) ஆக மாற்றப்பட்டது. ஏப்ரல் 9, 1946ல் கேபினட்மிஷன் இந்தியாவிற்கு வந்த போது, NNC குழுவினர் டெல்லி சென்று தங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் 1946ல் வடகிழக்குப் பகுதிகளுக்காக ஒரு துணைக்கமிட்டி அமைக்கப்பட்டு அதன் கூட்டம் ஷில்லாங்கில் நடைபெற்றது. வடகிழக்கின் மற்ற பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளை இந்திய ஒன்றியத்தோடு இணைக்க ஒப்புக் கொண்டபோது, NNCயின் தலைவர் அலிபா “நாங்கள் இந்திய ஒன்றியத்தின் கீழ் இருக்க இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடமாட்டோம். இதில் கையொப்பமிட்டு விட்டு, என்னுடைய  மக்களிடம் துரோகியாக நான் திரும்ப முடியாது.” என்று கூறிவிட்டு வெளிநடப்புச் செய்தார்.

ஜூலை 19, 1947ல் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் NNC பிரதிநிதிகள் டெல்லியில் காந்தியாரைச் சந்தித்தனர். நீண்ட கலந்துரையாடலுக்குப்பின் காந்தியார், “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்தைற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார். அதன் படி நாகாலாந்து 14, ஆகஸ்டு 1947 இல் நாகாலாந்து சுதந்திரத்தை அறிவித்தது.

 இது ஐ.நாவின் பொதுச் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஐ.நாவும் இந்தியாவிற்குச் செய்தி அனுப்பியது. எல்லா ஆண்டும் நாகாலாந்து ஆகஸ்டு 14ல் தான் சுதந்திர தினத்தைக்கொண்டாடுகிறது. இதை இந்திய அரசு எதிர்த்தது. NNC தலைவர்களைப் பிரிவினைவாதிகள் என்றும் மிதவாதிகள் என்றும் குற்றம் சாட்டியது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க பொது வாக்ககடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளித்தனர். அது பொருட்படுத்தப்படவில்லை. பின் னர் மே 16, 1951ல் பொது வாக்ககடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக்குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்கள். ஆனாலும் எந்தப்பயனும் இல்லை.

1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தார்கள். காலி வாக்குப் பெட்டிகளையே திருப்பி அனுப்பினர்.

(அடுத்த இதழில் நிறைவடையும்)

Pin It