மேலை நாட்டுச் சமூக அமைப்பில் நிறவெறி இருக்கவே செய்கிறது. அதனால் அங்கே கருப்பு - வெள்ளை வேறுபாடுகள் உள்ளன. எனினும் அங்கு கருப்பு வெள்ளை என்னும் இரண்டே பிரிவுகள்தாம் என்பதால், கறுப்பின மக்களை ஒருங்கிணைக்க முடிகிறது.

வர்க்கப் போராட்டத்திலும், ஏழை-பணக்காரர்கள் என்னும் இரண்டு பிரிவுகள்தாம். ஆதலால் ஏழையர் அனைவரையும் ஓரணியில் திரட்டும் முயற்சி உலகெங்கும் நடைபெறுகிறது. 

ஆனால் இங்கே  உள்ள சாதி அமைப்பில் இரண்டு பிரிவுகள் இல்லை, ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதனால் அனைவரையும் ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை.நான்கு வருணங்கள், நான்காயிரம் சாதிகள் என்றிருந்தால் எப்படி ஒன்றுபட முடியும்? இதனைச் சரியாக உணர்ந்த திராவிட இயக்கம், பார்ப்பனர் அல்லாதோர் எல்லோரையும், ‘திராவிடர்’ என்னும் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தது.

இப்போது அந்தக் கட்டினை உடைக்கும் முயற்சிதான், திராவிட எதிர்ப்பு என்னும் பெயரில் தொடங்கியுள்ளது. திராவிடத்தை உடைத்தால்தான், மீண்டும் தமிழர்கள் சாதியினராய்ப் பிரிந்து போவார்கள் என்பதைத் திராவிட எதிர்பாளர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

Pin It