மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எல்லோரும் பார்ப்பனர் என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்துவதை தவிர்ப்பதேன? சிறந்த சிந்தனைவாதியான டாக்டர் அருணன் போன்றவர்கள் கூட பிராமணர்கள் என்றே சொல்லி வருகிறார்கள். ஏனிந்த தயக்கம்? அப்படியெனில் அவர்கள் சூத்திர்ரகள் என்று ஒப்புக்கொளவது என்றுதானே அர்த்தம்?

- தங்கள் அன்பன் செல்வம் என்கிற சிவா, சவுதி அரேபியா

விடை:  அவர்களுடைய மனத்தை அந்தச் சொல் காயப்படுத்தும் என்று அவர்கள் கருதக்கூடும்.  ஆனால் அந்தச் சொல் எவரையும் காயப்படுத்தக் கூடியதன்று என்னும் செய்தி பலமுறை சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இங்கு நாம் அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம்.  அவர்கள் குறி பார்ப்பவர்களாக இருந்துள்ளமையால், பார்ப்பனர் என்னும் சொல்லால் அவர்களைக் குறித்துள்ளனர்.

அவ்வளவே!  பொதுவுடமைத் தோழர்கள் பிராமணன் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதுதான் முரண்பாடானது! அந்தச் சொல், பகுத்தறிவாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ‘பிரம்மன்’ என்னும் கருத்துருவோடு தொடர்புடையது.

அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொண்டு, பா.ம.க. அணியில் சேர விஜயகாந்திற்கு மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அழைப்பை தே.மு.தி.க ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதா?

- ஆ.சற்குணன்

விடை: ஆனாலும் விஜயகாந்தை இந்த அளவுக்கு மருத்துவர் கோபப்படுத்துவது நியாயமில்லை என்றுதான் தோன்றுகிறது. விஜயகாந்த் வாக்கு வங்கியில் சரிவு உள்ளது என்பது உண்மையாய் இருக்கலாம். எனினும் பா.ம.க.வை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வாக்குகள் இன்றும் கூடுதலாகவே உள்ளன, தே.மு.தி,க.விடம்! பிறகு எப்படி அவர் அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொள்வார்?

Pin It