குளத்து நீரில் தாமரை இருந்தாலும், தாமரை இலையில் மேல் தண்ணீர் ஒட்டாது. எடப்பாடியுடன் அமித்ஷா இருந்தாலும்,  அதிமுக தொண்டர்களின் வாக்குகள் தாமரைக்குக் கிடைக்காது. இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால்தான் நாமக்கல், குமாரபாளையத்தில் பரப்புரை செய்யும்போது "அங்க பாருங்க கொடி பறக்குது (தவெக கொடியைச் சுட்டிக்காட்டி), பிள்ளையார் சுழி போட்டாச்சு..." என்று விஜய்க்கு வலைவீசுகிறார், எடப்பாடி பழனிச்சாமி.

கரூர் நிகழ்வை ஒட்டி விஜய் கைது செய்யப்பட்டால், அரசியல் பண்பற்ற ரசிகக் கூட்டம் மூலம் ஒரு போராட்டக்கலகம் ஏற்படும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதை வைத்து 'ஆட்சியில்' குளிர்காயலாம் என்றிருந்தவர்களை, இலவு காத்த கிளிகளாக்கி விட்டார் நம்முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தேர்ந்த தன் நிதானமான நடவடிக்கையால்.

டில்லியில் இருந்து அமித்ஷா திரைமறைவிலும், குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடியும் 'சிக்னல்' கொடுக்கிறார்கள், கூட்டணிக்காக.

பத்து நாட்களாக பனையூர் பங்களாயைவிட்டு விஜய் வெளியே தலைகாட்டவில்லை. இரண்டாம் கட்ட புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தலைமறைவு. கரூர் மாவட்டச் செயலாளர்கள் கைது. கையறு நிலையில் விஜய். அவரை வைத்து அரசியலில் விளையாடப் பார்க்கிறது தாமரையும், இலையும். இவைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தெளிவான கொள்கை, நிதானமான அணுகுமுறை, உறுதியான மக்கள்நலப்பணிகள், மக்களை நாளும் சந்தித்து நேர்மையான ஆட்சியைத் தருகின்ற நம்கழக ஆட்சியின் முதல்வரையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள், உதயசூரியனுக்கு ஆதரவாக.

கரடியாகக் கத்தினாலும் தாமரையும், இலையும் வாடிவிடும், தவிர்க்க முடியாது.

அமைதியாக எழும் உதயசூரியனைத் தடுக்கவும் முடியாது!

- கருஞ்சட்டைத் தமிழர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.