முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் 1976 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42 ஆம் திருத்தத்தின் படி “செக்யூலர்” “சோஷலிஸ்ட்” ஆகிய முக்கிய இரண்டு வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.

1950களில் அரசமைப்பு முன்னுரையில் இவை இடம் பெறாவிட்டாலும், மதச்சார்பின்மை சமத்துவத்தின் அவசியம் கருதி செக்யூலர், சோஷலிசம் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது. இது ஒரு மாற்றம். மாற்றம் வளர்ச்சியைத் தருகிறது என்றால் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது இந்திய அரசமைப்பு மதச்சார்பற்ற, சமத்துவமானது என்பதை உறுதி செய்வதாக அமைகிறது.

மாறாக ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் சுமந்து கொண்டு காவிகளும், வலதுசாரிகளும் அந்தச் சொற்களை அரசமைப்பு முன்னுரையில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

அதை ஏற்றுக் கொள்வது போல புதிய நாடாளுமன்ற அவையில் நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தின் போது, கொடுக்கப்பட்ட அரசியலமைப்பு முன்னுரைப் பிரதிகளில் செக்யூலர், சோஷலிஸ்ட் என்ற இரண்டு பெயர்களும் நீக்கப்பட்டு இருந்ததாகவும், அது வேண்டும் என்றே நீக்கம் செய்திருக்கலாம் எனறும் காங்கிரஸ் கட்சியின் ஆதிரஞ்சன் தன் அச்சத்தைத் தெரிவித்துள்ளார்.

இது மதச்சார்பின்மைக்கும், சமத்துவத்திற்கும் ஆபத்தான அறிகுறி. மதவாதத்தின் இந்தப் போக்கு கண்டனத்திற்கு உரியது.

சில மாதங்களில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பா.ஜ.கவை விட, இந்தியா கூட்டணியைப் பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்து, பா.ஜ.வைத் தோற்கடிக்க வேண்டும்.

இதுதான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க வினால் ஏற்படப் போகும் ஆபத்துகளைத் தடுக்கும் வழி.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It