திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் திருப்பூர் (22-10-2023) பொதுக்குழுவில் பேசும் போது, தலைவர் சுப.வீரபாண்டியன் அவர்கள் “ஆயுதம் இல்லாத, போரில்லாத உலகம் வேண்டும் என்பதே நம் நோக்கம்" என்று பேசியது ஆழ்ந்த பொருளுடையதாகும்.

ஆயுதம் என்பதில் ராணுவத்திடம் இருக்கும் போர்க் கருவிகளும் அடங்கும், வெறி பிடித்தலையும் கலவரக் கும்பலிடம் இருக்கும் கொலைக் கருவிகளும் அடங்கும்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்றுக் கொண்டு இருக்கும் கொடுமையான போரினால் பல்லாயிரக்கணக்கான மக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனக் கொல்லப்பட்டு உள்ளார்கள்.

ஹமாஸ் அமைப்பினர் ஒருவேளை போரை நிறுத்தச் சம்மதித்தாலும், இஸ்ரேல் சம்மதிக்காது என்று இப்போதைய நிலவரம் சொல்கிறது. இது தொடர்ந்தால் இன்னோர் உலகப் போரை பூமி தாங்காது.

ராமர்கோயில், ரதயாத்திரை, மத, இனக்கலவரக்காரர்களிடம் இருக்கும் ஆயுதம், கொலைக் கருவிகள்.

கோத்ரா சம்பவம், மணிப்பூர் கலவரம் போன்றவைகளில் கொலைக் கருவிகளின் ஆட்டத்தைக் சொல்ல முடியவில்லை.

எந்த ஆயுதங்களாலும் மக்களின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை.

உலகம் அமைதியிலும், வளர்ச்சியிலும் இருக்க வேண்டும்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சனைக்குப் போர்க்களங்களில் தீர்வு காண வேண்டாம்.

மதத்கலவரம், இனக்கலவரங்களுக்கு ஆயுதங்கள் தீர்வாகாது.

மனிதம் வாழ வேண்டும், மனிதம் தழைக்க வேண்டும். ஆயுதங்கள் வீழ வேண்டும்.

“கெட்ட போரிடும் உலகத்தை, வேரொடு சாய்ப்போம்” சொல்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It