Inthinai_Vizha_1

Inthinai_Vizha_2

Inthinai_Vizha_3

Inthinai_Vizha_4

பாரம்பரிய உணவு விருந்து..

இரவு விருந்து என்றால்.. APPITIZER (சூப்) துவங்கி, DESERT (பழமும்/ பனிக்கூழும்) முடிப்பது என்பதா?..சுவைபடச் சமைக்க வேதிப்பொருளைக் கொட்டிக் கலக்கித் தான் குதூகலிக்க வேண்டுமா என்ன?

‘வரகரிசியும் வழுதுணங்காயும்’ என அவ்வைப்பாட்டி சொன்னது விருந்து தானே? வாய்க்கு ருசியாக பல ஆயிரம் ஆண்டு இருந்த அந்த பாரம்பரிய உணவை மீண்டும் மீட்டெடுத்து, உண்டு மகிழ முடியாதா என்ன?- என்று யோசித்ததில், பூவுலகின் ஐந்திணை விழா-வில், இரவு விருந்து பாரம்பரிய இய்ற்கை விவசாயத்தில் விளைந்த பொருள்களால் சிறு தானிய சிறப்பு விருந்து திட்டம் தயாரானது.

பூவுலகு குழுவினருடன் இணைந்து பாக்கம் ஜெகன் மற்றும் ராஜசேகர் குழுவினர், ரொம்பவே மெனக்கெட்டு, கரிசனத்துடன் கரண்டி பிடித்து, இந்த சிறுதானிய விருந்தை படைக்க உள்ளனர்.

பானகம், நவதானிய கொழுக்கட்டை, தினை இனிப்பு, தேனும் தினைமாவும், வரகரிசிச் சோறும் வழுதுணங்காயும், கம்பு - வல்லாரை தோசை, நிலக்கடலை சட்னி, இயற்கை காய்கறிகளால் சாம்பார், பொரியல், வரகரிசியில் கூட்டாஞ்சோறு, குதிரைவாலியில் தயிர்சாதம், முக்கனி பழத்துண்டுகள்....வேறு என்ன வேண்டும்?...

வாருங்கள்..29 ஞாயிறு மாலை ஐந்திணை விழா விருந்துக்கு..எங்களுடன் உண்டு மகிழ்ந்து, அதனதன் ரெசிபிகளையும், கேட்டறிந்து, இனி உங்கள் இல்லத்து சமையலறையை நலவாழ்விற்காக கூடுதல் கரிசனத்துடன் செதுக்கிடலாம்..

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்.. நபர் ஒருவருக்கு ரூ.100/- கொடுத்து முன்பதிவு மட்டுமே...விரைந்து பதிவீர்!..குறைவான இருக்கைகளே இன்னும் எஞ்சி உள்ளன.....

ஜூலை 29 ---- லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்.

தொடர்புக்கு: 91765 33157

Comments

1 comment

1
கி.பிரபா
தாயின் மடி தரும் இன்பத்தைத் தமிழ் நாட்டு உணவு தரும். அவைகள் தமிழ்நாட்டுப் பண்பாட்டுடன், சுவையுடன் சமைத்து இருந்தால் மட்டுமே. அங்கே இரெசிபி எனும் சொல் தேவையில்லை. ஆங்கிலமோகத்தின் வெளிப்பாடும் உறவும் கொண்ட சொல் அது. புளியைக் கரைத்து வடிகட்டவும். சற்றே சூடு பண்ணவும். கரைசலில் வெல்லப்பாகையும் ஏலக்காய் பொடியையும் கலந்து குடித்தால் பெறும் தித்திப்பிற்கு ஈடு எதுவுமே இல்லை. வரகுஅரிசி மாவில் சுடுநீர் ஊற்றுப் பிசைந்து அதனுடன் ஏலப்பொடியைக் கலந்து தேவைக்கேற்ப வெல்லம் அல்லது கருப்புக்கட்டி சேர்த்து அடைபோல் செய்து உண்டால் இனிப்புலகமே அவரவர் கையில்தான்.கம்புமாவை வறுத்து அதனுடன் மோர் ஊற்றிக் கரைத்து உப்பைக் கலந்து தோழையாக ஊற்றிச் சாப்பிட்டால் உடலுக்கு நலம். வெங்காயத் துவையல் தொட்டுக் கொண்டால் நாவில் நீர் ஊறும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.