சமூக நீதிக் காவலர் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் 23 அக்டோபர் 2021 அன்று பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது 'சமூக நீதி கண்காணிப்புக் குழு.'
இதன் நோக்கம் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு பதவி நியமனங்கள், பதவி உயர்வுகள், மகளிர் உரிமை, பெண்களுக்குச் சமூகப் பங்களிப்பில் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக முழுமையாக நடைமுறைப்படுவதை கண்காணித்து தமிழ்நாடு அரசுக்கு தேவையான பரிந்துரைகள் செய்யும்.
‘தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு' குழு சார்பில் மாநிலத் தலைவர் இல.ரவி, மாநிலப் பொதுச் செயலாளர் செ.ராஜா, மாநிலப் பொருளாளர் A.V.சுரேஷ், மாநிலத் துணைச் செயலாளர் K.சித்தாத் குமார், நாமக்கல் மாவட்டத் தலைவர் T.K.செந்தில்குமார் ஆகியோர் 01-04-2025 அன்று தமிழ்நாடு சமூக நீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களை, அவரின் அலுவலகத்தில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்கள். அப்போது எழில்.இளங்கோவன் உடன் இருந்தார்.
அம்மனுவில் SCA /SC/ST பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பின்னடைவு பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும், தமிழக அரசு அமைக்கும் மாநில, மாவட்ட ஆதி திராவிட நலக்குழு, நல வாரியங்கள், ஆணையங்கள், குழுக்களில் உறுப்பினர்கள் தேர்வில் தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலிகளாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பெரும்பாலும் SC /SCA வகுப்பைச் சார்ந்தவர்களே இவர்களுக்கு காலமுறை ஊதியத்தில் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாகச் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர் அவர்கள் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இது சார்ந்த தகவல்களையும், துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்த விவரங்கள் கேட்டு சம்பந்தப்பட்டத் துறைகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இக்கடித நகல் தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் அவர்களுக்கு அனுப்பி உள்ளது கண்காணிப்பு குழு.
கண்காணிப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் எடுத்த விரைவான நடவடிக்கைக்கு எங்கள் ‘தமிழ்நாடு பெஸ்ட் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு' சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
‘திராவிட மாடல்' ஆட்சியில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப் பட்ட 'சமூக நீதி கண்காணிப்புக் குழு' வின் விரைவான நடவடிக்கை, கழக அரசின் செயல்பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டு என்றால் மிகையில்லை!
- இல.இரவி, தலைவர், தமிழ்நாடு பெஸ்ட் கூட்டமைப்பு