கீற்றில் தேட...

உச்ச நீதிமன்றத்திடம் குட்டுக்கு மேல் குட்டு வாங்கும் ஒன்றிய அரசு இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறதா அல்லது அது நீதிமன்றத்தையே மதிக்கவில்லையா என்பது குழப்பமாகத்தான் இருக்கிறது.

பேரறிவாளனின் மனுவை 4 - 5 - 2022 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம்.

இந்த வழக்கின் விசாரணையை ஒன்றியக் குற்றப் புலனாய்வு விசாரித்தது. அதனால் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்று வழக்கம் போல் சொல்லிக் கொண்டு இருந்தார் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்.

அப்போது நீதிபதி அரசியல் சாசனப்படிதான் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும்.

ஒன்றியக் குற்றப் புலனாய்வு விசாரித்து இருக்கலாம். ஆனால் இது கிரிமினல் வழக்கு. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.

இதில் ஒன்றிய அரசு எப்படித் தலையிட முடியும்?

மாநில அரசின் அறிக்கை மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. ஒப்புதல்தான் கொடுக்க முடியும்.

சிறையில் பேரறிவாளன் நன் நடத்தை சரியாக இருந்திருக்கிறது. அவரின் வயது, உடல் நிலையைக் கருதி இறுதி முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.

அதே சமயம் குடியரசுத் தலைவரின் முடிவுக்காகக் காத்திருக்க முடியாது என்றார் நீதிபதி.

இறுதியாக இந்தப் பிரச்சனையில் நாங்கள் கண்மூடிக் கொண்டு இருக்க முடியாது. ஒன்றிய அரசு இது குறித்துப் பேச ஒன்றுமில்லையென்றால் நாங்கள், ஆளுநர் அதிகாரம் உள்பட இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலை வரும் என்று காட்டமாகக் கூறினார்கள்.

ஒன்றிய மோடி அரசுக்குத் தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே பிடிக்காது. ஒதுக்கும், இழுத்தடிக்கும்.

ஆனால் எப்பொழுதும் சர்வாதிகாரமாக அப்படிச் செய்ய முடியாது என்பதை மீண்டும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.