பேனா உன் ஆறாவது விரலாய் இருந்தது
கவிதையும் உன் மூளையும் கலந்தே கிடந்தன
ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டினாய்
ஒவ்வொரு நாளும் புதியது சொன்னாய்
கவிதையை மட்டுமா படைத்தாய்
கவிஞர்களையும் நீ படைத்தாய்!
எங்கள் கவிக்கோவே அப்துல் ரகுமானே
எழுதுவதை ஏன் நிறுத்திக் கொண்டாய்?
- சுபவீ