கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது ஒட்டுமொத்த தமிழர்க ளாலும் வரவேற்கப்பட் டுள்ளது.

இராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே சுமார் 10 மைல் தொலைவில் உள்ள பாக் ஜலசந்தி பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. நெடுநேரம் கடலில் மீன் பிடிக்கும் இராமநாதபுரம், புதுக் கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடற்கரையோர மாவட்டங்க ளில் வாழும் தமிழக மீனவர்கள் ஓய்வெடுக்கவும், வலைகளை உலர வைக்கவும், பிடிக்கப்பட்ட மீன்களை ரக வாரியாக பிரித்தெடுக்கவும் மக்கள் வசிக்காத கச்சத்தீவை பன்னெடுங் காலமாக பயன்படுத்தி வந்த னர்.

தமிழக மீனவர்கள் உரிமை கொண் டாடும் கச்சத்தீவு என்கிற இந்தியாவின் நிலப்பகுதியை கடந்த 1974ம் ஆண்டு இந்திய - இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தா னபோது - அந்த ஒப்பந்தத்தின் அடிப் படையில் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது இந்திரா காந்தி தலைமையிலான அப்போ தைய காங்கிரஸ் அரசு.

இந்திய அரசின் இந்த நடவடிக் கையை அப்போதே தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் கண்டித்துப் பேசினர். அப்போது பதிலளித்த வெளி யுறவு மந்திரி ஸ்வரண்சிங், “கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்பது குறித்து இந்தியா - இலங்கைக்கு இடையே சர்ச்சை இருந்து வந்தது. இந்த சர்ச்சையை வளர்க்க விரும்பாம லும், இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையி லும் இலங்கைக்கு கச்சத் தீவு விட்டுக் கொடுக்கப்பட்டது...'' என்று பதிலளித் தார்.

அன்றைய இந்திரா அரசு அணுகுண்டு சோதனை நடத்தியது அதை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தது. அப்போது இந்தியா மீதான ஐ.நா.வின் நடவடிக்கையைத் தவிர்க்க - இலங் கையின் ஆதரவைப் பெற்றதற்கு பரிசாக கச்சத் தீவை இந்தியா விட்டுக் கொடுத்தது என்ற கடுமையான குற்றச் சாட்டுகள் முன் வைப்பட்டன. அது தான் உண்மையாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் ஸ்வரண் சிங் சொல்லும் நட்புறவுக்காக கச்சத் தீவு விட்டுக் கொடுக்கப்பட்டது என்ற வாதம் நம்பும் படி இல்லை.

எப்படி இருப்பினும் இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என்று 1960ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி 1974ம் ஆண்டே - அதாவது கச்சத் தீவை மத் திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தபோதே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடுத்திருந்தால் கச்சத் தீவு தமிழகத் தின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

திராவிட நாடு கோரிக்கையை முன் வைத்த திராவிட முன்னேற்றக் கழகம் தான் 1974ல் ஆட்சியில் இருந்தது. திமுக ஆட்சியின் முதல்வராக கருணாநிதி இருந்தார்.

ஆனால் ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டபோது முதல்வராக இருந்த கரு ணாநிதி, இந்த ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றித் தெரி யாது என்பதையே இன்றுவரை பதி லாகச் சொல்லி வருகிறார்.

ஆனால் 2008ல் அதிமுக சார்பில் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. அதிமுக தலைவி ஜெயலலிதா கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே குரலெழுப்பி வருகிறார்.

அதன் அடுத்த கட்டமாகத்தான் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கச்சத் தீவு வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறையும் தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேர வையில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளார் ஜெயலலிதா.

வருவாய்த்துறையை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தன்னால் தொடரப்பட்ட வழக்கிற்கு வலுசேர்ப்பதாக அமையும் என ஜெயலலிதா கருதுகிறார். அதற்கு அவர் தரும் ஆதாரம் வருவாய்த்துறையின் பங்கு இவ்வழக்கில் அவசியம் என்பதை உணர்த்து கிறது.

கச்சத் தீவு இராமநாதபுரம் சேதுபதி ஜமீனுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் தமிழக அரசின் வருவாய்த்துறையிடம் இருக் கிறது. இதற்கு 1970ல் வெளியிடப் பட்ட இராமநாதபுரம் மாவட்ட விபரச் சுவடிகளே சான்று என்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா தரும் ஆதாரங்கள் கச்சத் தீவை தமிழகத்திற்கு பெற்றுத் தரட்டும். தமிழக மீனவர் நலன் காக்கப்படும். அந்தக் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் காலங்காலமாக நிலை நாட்டி வந்த உரிமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கச்சத் தீவு என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை மட்டுமல்ல அது ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து. மத்திய அரசின் சுயநலத்திற் காக அதை விட்டுத் தர முடியாது.

Pin It