என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அதுவும் எங்கே பேச வேண்டும் என்பதை உணர்ந்து பேசுவதுதான் ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகு.

நடந்து முடிந்த சட்ட மன்றத்தில், ஆளுநர் உரையின் போது வெளிநடப்புச் செய்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியாருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அவர் வளர்ந்த அரசியல் கூடாரம் அப்படிப்பட்டது.

வெளிநடப்பு செய்த எடப்பாடியார் செய்தியாளர்களிடம் பேசும் போது கண்ணை மூடிக் கொண்டு, அவரின் ஆட்சியின் போது தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடந்ததோ அவையெல்லாம், இன்றைய தி.மு.கழக ஆட்சியில் நடப்பதாகச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

இந்த ஆட்சியில் போதைப்பொருள் சரளமாக இருப்பதாகக் கூறும் அவர், அவரின் அ.தி.முக ஆட்சியில் குட்கா விஜயபாஸ்கரை மறந்து விட்டார்.

மழை நீர் நிவாரண நிதி வழங்கவில்லையாம் இன்றைய அரசு.

கொரோனா கால நெருக்கடியில் மக்களுக்கு ரூபாய் 4000 கொடுத்தது கழக அரசு.

2021 செப்டம்பர் 15 இல் வீட்டில் இருந்து கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து மக்களை நீரில் மிதக்க வைத்தது அ.தி.மு.க அரசு?

சொல்லி மாளாத அளவுக்கு மழை கொட்டி, வெள்ளம் பெருக்கெடுத்த போது, அந்த வெள்ளத்திலும் முதலமைச்சர் மக்களைத் தேடிச் சென்றுப் பார்த்து நிவாணம் வழங்கியது தி.மு.கழக அரசு.

அம்மா மினி கிளினிக்கை எடுத்து விட்டதாம் இன்றைய அரசு. அந்தக் கிளினிக்கை ஓராண்டு “அக்ரிமென்ட்” என்றுதானே எடப்பாடி அரசு திறந்தது. மறந்து விட்டாரா எடப்பாடியார்?

காவல்துறை ஏவல் துறையாம். பாவம், இன்றும் அவரின் அ.தி.மு.க ஆட்சி நடப்பதாக நினைக்கிறார் போலும்.

உங்களைத்தான் மக்கள் விரட்டி விட்டார்களே. பிறகென்ன? “ நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால்...” என்று தம்பட்டம், அதுவும் செய்தியாளர்களிடம்!

அ.தி.மு.க ஆட்சியின் அவலத்தையும், தி.மு.கழக ஆட்சியின் அருமையையும் மக்கள் அறிவர், ஊரறியும், உலகும் அறியும்.

எதிக்கட்சித் தலைவர் மக்களுக்காகப் பேச வேண்டும், உளறக்கூடாது.

“கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” பெரும் புலவர் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

Pin It