"அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு" என்கிறார் அய்யன் திருவள்ளுவர். "துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்" என்ற இக்குறளின் பொருளுக்கேற்ப ஆட்சி நடத்துகிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதியை நிறுத்தி வைத்திருக்கும் ஒன்றிய அரசு, அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதிக்கும் தமிழ்நாடு ஆளுநர், தி.மு.க அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கும் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புக்கள், தங்கள் வரையறையைத் தாண்டி அரசை விமர்சிக்கும் பா.ஜ.க பின்புலத்தைக் கொண்ட நீதிபதிகள் என நாற்புறமும் நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும் சூழலில் அஞ்சாமல், கொண்ட கொள்கையில் உறுதியோடு நிற்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். அது மட்டுமின்றி ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு என இந்தியாவின் பன்முகத் தன்மையை சிதைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி ஒற்றையாட்சியை நிறுவ நினைக்கும் ஒன்றிய மோடி அரசை துணிவோடு எதிர்த்து நிற்கும் முதல்வர் அவர்.

விபத்தில் சிக்கியோர் உயிர் காத்திட "நம்மை காக்கும் 48", மூத்த குடிமக்கள் உடல் நலம் காத்திட "மக்களைத் தேடி மருத்துவம்", மூத்த குடிமக்களின் மனநலத்தை மேம்படுத்த "அன்புச் சோலை முதியோர் மனமகிழ் வளமையங்கள்", 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் "தாயுமானவர்",

பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக் கரங்கள்” போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரக்க மனதை வெளிப்படுத்துகிறது.

ஆண்டுதோறும் 10 லட்சம் இளைஞர்களின் திறன்களை வளர்த்து அவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களில் பொருத்தமான வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மற்றும் UPSC, TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கவும் வகை செய்யும் "நான் முதல்வன்", 20 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி, "உலகம் உங்கள் கையில்", பள்ளி மாணவர்கள் கவனமாக படித்திட உதவிடும் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்", அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் "புதுமைப்பெண் திட்டம் & தமிழ்ப் புதல்வன்", மகளிர் நலன் காக்க "விடியல் பயணத் திட்டம்", "மகளிர் உரிமைத் தொகை", என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அறிவார்ந்த திட்டங்கள் எண்ணற்றவை.

TNWESafe (பெண்கள்), அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் (AIBP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS), முதல்வரின் காக்கும் கரங்கள், தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN), 100 கோடி கூட்டு-உருவாக்க நிதி (Co-creation Fund), சிறுமைக் கடன் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் "டிரில்லியன் டாலர்" பொருளாதார இலக்கை நோக்கி மு.க.ஸ்டாலின் அரசு வெற்றிகரமாக பயணித்து வருகிறது. 2024 - 25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு 11.19% பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடைசியாக 2010-11ஆம் நிதியாண்டில் (தலைவர் கலைஞர் அரசு) 13.12% என்ற இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகியிருந்தது

14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அய்யன் திருவள்ளுவர் வகுத்தளித்த அறிவார்ந்த தளத்தில் முன்னோக்கித் தமிழ்நாடு அரசைக் கொண்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் "திராவிட மாடல்" அரசும், நம் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக்கத் தொடரவும் ஓய்வின்றி உழைப்போம்.

ஸ்டாலின் தொடரட்டும் !

தமிழ்நாடு வெல்லட்டும் !!

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.