சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் பேசிய பேச்சில் எத்தனை பொய்கள்! எத்தனை ஆணவம்!!

இந்தச் சந்திப்பு எப்பொழுது நடந்தது என்பது மிகவும் முக்கியமானது. மிகப்பெரிய மழைப் பொழிவால் தென்மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.

nirmala sitharaman 2721. மிகப்பெரிய மழை பாதிப்பு ஏற்படும் என்பதை திசம்பர் 12ஆம் தேதியே ஒன்றிய அரசு எச்சரித்தது என்றார் அமைச்சர். திசம்பர் 16ஆம் தேதி வரை ஆரஞ்சு அலார்ட் என்று தானே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 21 செ.மீ மழை என்றாலே ரெட் அலார்ட் அல்லவா கொடுக்க வேண்டும். 90 செ.மீ வரை மழை பெய்தும் டிசம்பர் 16வரை ஏன் ரெட் அலார்ட் தரவில்லை. நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால், மழை தொடங்கிய பிறகும் கூட செந்தூர் அதிவிரைவு வண்டி இயக்கப்பட்டது ஏன்? திருவைகுண்டத்தில் இரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டு நாட்கள் குடிநீர், உணவின்றி தவிக்கவில்லையா? இரயில்வே துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது? பிறகு ஏன் இரயில்வே துறைக்கு எச்சரிக்கை தரவில்லை?

2. தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்துள்ளது என்கிறார் அமைச்சர்.

அப்படியா? பேரிடர் நிதியானது பேரிடர் ஏற்படும் போது மட்டும் தரப்படும் நிதி அல்லவே. ஒவ்வொரு ஆண்டும் தர வேண்டிய நிதி அது. ஆண்டு தோறும் தமிழ்நாட்டிற்கு உரிய பேரிடர் நிதியானது ரூ 1200 கோடி. அதில் ஒன்றிய அரசின் பங்கு 900கோடி. அந்த நிதியானது இரண்டு தவணையில் வழங்கப்பட்டது. பேரிடர் இல்லை என்றாலும் இந்த நிதி வழங்கப்பட

 வேண்டும். நாம் கேட்பது கூடுதல் நிதி. அதற்கு பதில் என்ன? பேரிடர் பாதிப்புகளை அறிய, ஒன்றிய குழு வரும் வரை ஒரு பகுதி நிதியைத் தமிழக மக்களுக்கு வழங்க உங்களைத் தடுப்பது எது?

3. தமிழ்நாடு அரசு கேட்கின்ற நிதி, நாங்கள் அளித்த வரியின் ஒரு பகுதி தானே தவிர, உங்கள் ‘மரியாதைக்குரிய’ அப்பன் வீட்டுப் பணம் அல்ல என்று அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் நிர்மலா அவர்களே, உதயநிதியின் கருத்தில் தவறு ஏதும் இல்லையே! ஓ! அந்த வார்த்தையில் உங்களுக்குப் பிரச்சனையா? 2013 நவம்பர் 13 அன்று சத்தீஸ்கரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் பணம் என்ன ஆனது? ராகுல் காந்தியின் “மாமா வீட்டுப் பணமா”.என்று மோடி கேட்டாரே, அவரை என்ன சொல்லலாம்?

நீங்கள் மக்களின் சேவகர் என்பதை என்று உணரப் போகிறீர்களோ தெரியவில்லை!

- புரூனோ

Pin It