கொலைகளும், கொள்ளைகளும் நாட்டில் எப்போதாவது நடக்கக் கூடியவைதான். ஆனால், இன்று தமிழ்நாட்டில் நடைபெறுவதைப் போல அன்றாடம் கொலைகளும், கொள்ளைகளும் என்றும் நடந்ததில்லை.

ஆளும் கட்சியின் பாசத்திற்குரிய பாரதிய ஜனதாக் கட்சி, இந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் கூட, வரிசையாகக் கொலை செய்யப்படுகின்றனர். கனவில்கூட ‘அம்மாவுக்கு’ விசுவாசமாக இருக்கக்கூடிய தோழர் தா.பாண்டியனே வருத்தப்பட்டு அறிக்கை கொடுக்கும் அளவிற்குத் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, கெட்டு ஒழிந்து கொண்டிருக்கிறது.

நிர்வாகத் திறன் மிக்கவர் என்று ‘மெச்சப்படும்’ முதலமைச்சரின் கைகளில்தான் காவல்துறை உள்ளது-. சென்ற ஆட்சியில், காவல் துறையின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தும், தான் வந்தால்தான் சரிசெய்ய முடியும் என்றும் பெருமை பேசியவர், இன்றைய முதல்வர். இப்போது அவர் சரிசெய்த அழகைத் தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது!

நெல்லை மாவட்டம், வள்ளியூரில், நீதிமன்றத்தை உடைத்துப் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர். சென்னை, திருவான்மியூரில் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள நகைக் கடையில் திருட்டுப் போகிறது. கோவையில் முன்னாள் காவல்துறைத் தலைமை அதிகாரி லத்திகா சரணிடமிருந்த பையைப் பறித்துக் கொண்டு திருடர்கள் ஓடுகின்றனர். பெண்களிடம் சங்கிலிப் பறிப்பு இல்லாத நாளோ, ஊரோ நாட்டில் கிடையாது.

நேர்மையாகத் தொழில் செய்ய முடியாவிட்டாலும் எளிமையாகக் கொலை செய்ய முடிகிறது, இந்த ஆட்சியில். பல கொலை வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு என்னாயிற்று என்று எவருக்கும் தெரியவில்லை.

பா.ஜ.க.வினரும், இந்து முன்னணியினரும் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற குரல் இன்று ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது. தி.மு.க.விலும் பலர் தொடர்ந்து கொலை செய்யப்பட் டுள்ளனர். அண்மையில் கூட, பெரம்பூர் தி.மு.க. வட்டச் செயலாளர் இடிமுரசு இளங்கோ கொலையுண்டுள்ளார்.

எந்தக் கட்சியினராக இருந்தாலும், இப்படிக் கொலை செய்யப்படுவது கடும் கண்டனத் திற்குரியது. பா.ஜ.க.வோடு நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அக்கட்சியினர் தொடர் கொலைகளுக்கு உள்ளாவது, எவ்விதத்திலும் ஏற்கக் கூடியதன்று.

இப்படிப்பட்ட சட்டம் - ஒழுங்குச் சீர்குலைவை, அனைத்துத் தரப்பினரும் ஓர் அணியில் நின்று எதிர்த்திட வேண்டும்.

அதே வேளையில், பா.ஜ.க. வினரும் ‘கொலை வெறி’யைத் தூண்டும் போக்கி னைக் கைவிட வேண்டும். வேலூர் வெள்ளையன் கொலைக்குப் பிறகு, அவ்வூரில் ஒட்டப்பட்டிருந்த, “ஏ... துலுக்க நாயே, குஜராத் மறந்துபோய் விட்டதா உனக்கு” என்பது போன்ற சுவரொட்டிகளும், கொலைகளுக்கான காரணம் ஆகிவிடும் என்பதை மதவெறியர்கள் மறந்துவிடக் கூடாது.

கொல்லப் பட்ட பா.ஜ.க. வினர் அனை வரும் அரசியல் காரணங் களுக்காகக் கொல்லப் படவில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டி யுள்ளது. அது குறித்து, ‘இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள ஓர் அட்ட வணையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், கொலைகள் எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வாகாது. அரசியல் காரணத்திற்காகவோ, தனிப்பட்ட பகை காரணமாகவோ தொடர்ந்து கொலைகள் நிகழ்த்தப்படுவதும், தொடர் கொள்ளை கள் நடைபெறுவதும், இங்கே ஓர் அரசு இருக்கிறதா என்னும் ஐயத்தை எழுப்பி யுள்ளது.

குமுறி அழும் தேசத்தின் குரல், கொடநாட்டு மாளிகையை எப்போது எட்டும்?

Comments

4 comments

4
sridhar c
தேர்தல் குரோதத்துடனும் சாதி வெறியோடும் பாப்பாங்குளம் தலித் மக்கள் வீடுகள் இடிப்பு ’’சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமத்தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சிறுகுடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தங்கராஜ் இப்பகுதி தலித் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை எனக் கருதி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தனக்கு வாக்களிக்காத தலித் மக்களை வஞ்சம் தீர்க்க வேண்டுமென்கிற வன்மத்தோடும், வெறியோடும் 15.8.2013 சுதந்திர தினத்தன்று, தங்கராஜ் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தலித் மக்களின் 24 வீடுகளை இடித் துத் தரைமட்டமாக்கியுள்ளார். இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்திற்கும் பட்டா, மின் இணைப்பு உள்பட அனைத்து அரசு ஆவணங் களும் உள்ளன. மூன்று வீடுகள் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டவை. தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்படும் போது, மானாமதுரை சரக காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத் துரை தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்துள்ளனர். தட்டிக்கேட்டகள்ளிவயல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியனைக் காவல்துறையினர் தாக்கியதோடு, அவர் மீது பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல் குரோதத்துடனும் சாதிவெறி யோடும் கூடிய இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு தலித் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தன்று சாதிய வன்மத்துடன் தலித் மக்களின் வீடுகளை இடித்த தங்கராஜ், பாதுகாப்புவழங்கிய துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் குற்றவாளிகள் மீது வன்கொடுமைதடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித்மக்களுக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும்.
சாணக்கியன்
கொலை, கொள்ளை, அநீதி, அராஜகம், காமசூத்திரம், தீண்டாமை, தீவீரவாதி முத்திரை, உரிமை மறுப்பு போன்ற கொள்ளிவாய் பிசாசுகளை காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக, தோலான் துருத்தியான் கட்சி பூசாரிக்களை வைத்து விரட்டமுடியுமா?. இந்த ஜென்மத்தில் நடக்காது ---- 1400 வருடங்களுக்கு முன்பு மெக்காவில் தாண்டவமாடிய இந்த பிசாசுக்களை அண்ணல் நபி(ஸல்) திருக்குரானை வைத்து விரட்டியடித்தார் --- கலிபா உமரின் ஆட்சி வந்தால்தான் சமநீதி, சமத்துவம், சமதருமம், சகோதரத்துவம் தழைக்கும். அதற்கு ஒரே வழி இஸ்லாம்தான் --- இந்தியா இஸ்லாத்தை ஏற்றால், 55 இஸ்லாமிய நாடுகளின் தலைவனாக மாறும் --- இல்லாவிட்டால் இந்தியர்கள் அடித்துக்கொண்டு சாவார்கள்.
seyed muhammed
சாணக்கியனின் விமர்சனங்கள் கட்டுரைக்கு ஒத்திருக்காது; கட்டுரை ஒரு பாதையில் பயணித்தால் சாணக்....ன் விமர்சனம் வேறொரு பாதையிலிருக்கும். எள்ளல் வகை விமர்சனம் எழுதியிருந்தாலும்,கட்டுரைக்கு பொருந்தா கருத்தான போதிலும் உண்மையை தன்னையும் அறியாமல் எழுதி விட்டார். ஆட்சியானாலும்,தனி ஆளுமையானாலும் இஸ்லாம் ஒன்றே வழி.மக்காவின் சிலை வணக்க சீரழிவுகள்,அது சார் அநீத அயோக்கிய கலாச்சாரங்கள் மனிதனை மிருகமாய்...மிருகத்தினும் கீழாய் வாழ செய்திருந்தது.அந்த இழிந்த நிலையிலிருந்து மனிதனை மீட்டெடுக்க மனிதனைப் படைத்த இறைவனால் அருளப்பட்டது அல் குர் ஆன்;அல் குர் ஆனின் செயல் முறை தான் அண்ணல் நபியுல்லாஹி முஹம்மது(அல்லாஹீ அவர்கள் மீது அருள் பாலிப்பானாக ஆமீன்!).அதன் அடிபிசகாமல் ஆட்சி செய்தவர் தான் உமர்(அல்லாஹீ அவர்கள் மீது அருள்பாலிப்பானாக ஆமீன்). இந்த உயர்ந்த மனித வாழ்வியல் தத்துவம் இந்தியாவை 1000 வருடங்கள் ஆண்டிருக்கின்றது.அதன் தாக்கம் இன்றளவும் இந்தியாவின் அரசியல் தளத்திலும்,ஆன்மீக தளத்திலும்,சமுக தளத்திலும்,பொருளாதாரத்திலும் பிரதிபலிப்பதை ஹிந்துத்துவ வெறியர்களாலும் மறுக்கவோ தடுக்கவோ முடியாத சாட்சி. சிந்து பகுதியை முதலில் வென்று இஸ்லாமிய நீதிமிக்க ஆட்சியை ஆளுமையை தொடங்கிய முஹம்மது இப்னு காசிம்(அல்லாஹி அருள் பாலிப்பானாக!) தொடங்கி 52 ஆண்டுகள் எவ்வித தடையுமின்றி அகண்ட பாரதத்தை ஆண்ட ஒளரங்கசீப்(அல்லாஹி அருள் பாலிப்பானாக!)வரை ஒவ்வொருவரும் பாரதத்தின் பண்பாட்டை,கலாச்சாரத்தை,அறிவை,கலையை,ஆன்மீகத்தை உயர்ந்த இலக்கிற்கு அழைத்து சென்றுள்ளார்கள். ஒரு பெண்ணுக்கு 5 கணவன்கள்,கற்களுக்காக நேர்ச்சை விடப்பட்ட தேவதாசிகள்,மனிதனை பிரிக்கவும்...பிரித்த மனிதனை சுரண்டவும் வதைக்கவும் செய்த ஜாதிய கொடுமைகள்,பிறரை வஞ்சிக்க வானுயர கட்டப்பட்ட கோயில்கள்,கோயிகளின் உள்ளேயும் வெளியேயும் அரங்கேறிய மனித விரோதங்கள்,துறவின் போர்வையில் நிகழ்ந்த காமகளியாட்டங்கள் என நீண்ட அசிங்கங்களை அவமானங்களை அநீதங்களை அயோக்கியதனங்களை அழித்து நாகரிக மக்களாய் பாரதக்காரர்களை மாற்றியது இஸ்லாம்.ஒளரங்கசீப் போன்ற மாமன்னர்களின் ஆட்சி இந்தியாவின் ஒளிமயம்;ஒரு நாட்டின் ஆட்சியாளன் தலைமகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான செயல் முறை விளக்கம்.இது தான் சிலை வணங்கிகளாக வாழ்ந்த போதும் முஸ்லிம்கள் ஆட்சிக்கு எதிராக இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் கிளர்ந்தெழாதற்கான அடிப்படை.ஆதலால் முஸ்லிம்கள் ஆட்சியில் மதக்கலவரங்களுக்கான சான்றுகளில்லை. இதை அழித்து மக்களை மாக்களாக்கும் பார்ப்பன சதிராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பக்கபலமாக விளங்கியது மேற்கத்தியர்களின் அதாவது ஐரோப்பியர்களின் ஆட்சி.இந்த ஐரோப்பியர்களின் வருகையே ஒரு சதி.முஸ்லிம்களை தங்களின் நிலப்பிரதேசங்களிலிருந்து விரட்டிய பிறகு உலகின் பிறப்பகுதியிலிருந்தும் துடைத்தெறிய பல கோலங்களில் களமிறங்கினார்கள்,அவற்றில் ஒன்று வியாபாரம்.வியாபாரிகளாய் கரையிறங்கியவர்களை இந்த மாநிலத்தின் ஆட்சியாளர்களாக மாற்றிய முதல் பெருமை வங்கத்து பார்ப்பனர்களை சேரும்.அதை தொடர்ந்து பார்ப்பன பரங்கியர் கூட்டு களவானித்தனம் ஒழிந்து போன பல பார்ப்பன சிந்தனைகளை இங்கு விதைக்கவும் விளைப்பிக்கவும் வழி செய்தது.அதன் தொடர்ச்சி தான் மார்க்ஸ் முல்லர்கள் ஆரிய் - திராவிட வேற்றுமை பொய்யுரை என புனைந்தது.இந்த காலங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் களத்தில் நின்றார்கள்...முஸ்லிம்களின் உள்ளே ஊடுருவி முஸ்லிம்களை வஞ்சித்தார்கள் பார்ப்பனர்கள்.ஏவுகணை தொழில் நுட்பத்தின் தந்தை திப்புவை கொன்றது இந்த சதி தான்.இந்த சதியை சற்றும் எதிர்பாராத முஸ்லிம்கள் சுதாரிக்கும் முன் பரங்கியர்களுக்காக பார்ப்பன - பனியாக்கள் நடத்திய மற்றுமோர் கொடுமை மத மோதல்கள்.இந்த மத மோதல்களின் நீட்சி பிரிவினை. "சுதந்திர"இந்தியாவின் ஆட்சி கலீபா உமரின் ஆட்சி போன்றிருக்க வேண்டும் என்ற காந்தியாரின் கூற்று பார்ப்பன - பனியாக்களின் சதியின் ஒரு பாகம்.இந்தியாவை அதுவும் அகண்ட பாரதத்தின் உண்மை நிலபரப்பையும் விஞ்சிய ஆட்சியை வழங்கிய முஸ்லிம் ஆட்சியாளர்களின் பெயரை மேற்கோள் காட்டினால் அது சாமான்ய மக்களிடம் என்றேனும் ஒரு நாள் கேள்வியாய் உருவெடுக்க வழியாகும் என்பதை மனதில் கொண்டே அரபுலகில் வாழ்ந்த ஆட்சி செய்த கலீபா உமர் ஏதோ மூன்றாம் நபர் போல் கூறப்பட்ட கூற்று.இந்திய இஸ்லாமிய ஆட்சியை கொச்சைப் படுத்தும் வகையில் பொய்யான புனையப்பட்ட வரலாறுகளின் அறிமுகம் இந்த காலங்களில் தான் தொடங்கியது.இன்று அது ஆல மரமாய் வளர்ந்தோங்கியுள்ளது.அந்த மரத்தின் ஒரு நுனி அல்லது காயந்த சருகின் துகள் தான் சாணக்கியனின் எள்ளல்.எள்ளல் உண்மை உரைக்க வழியாகிவிட்டது.எல்லா புகழும் அல்லாஹீவிற்கே!
Chandar
@Seyed, Chanakya: Chemical weapons pottukittu, vedikundu vachchu sethu sethu vilayadalam! Vaazhga Osama(CWBBUH), Vaazhga Kasab(CWBBUH), Vaazhga Munda(CWBBUH), Vazhga Saeed(CWBBUH), Vaazhga bhatkal(CWBBUH), Vaazhga Dawood(CWBBUH). - எல்லா புகழும் அல்லாஹீவிற்கே!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.