மேட்டுக்குடி இசைவடிவத்தைப் பின் தள்ளி, நாட்டுப்புற மக்களின் இசை வடிவத்தை நாடறியச் செய்த இசைமேதை இளையராஜா, கலைஞரால் இசைஞானி என்று பெருமைப்படுத்தப்பட்டவர் என்பதை நாடறியும். இலண்டன் நகரில் சிம்போனி இசையை இசைத்துக்காட்டிய ஒரே ஒடுக்கப்பட்ட திராவிட இசைமேதை அவர்.

மதுரை ஆதினம், காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை இயேசு, நபி என்று புகழ் பாடியபோது, “இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்கள் யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க” என்று இளையராஜா ஜெயேந்திரரைப் பற்றி பேசி காஞ்சி சங்கர மடத்துக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்தியதாக ஒரு வார இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

திருச்சியில் மாணவிகள் மத்தியில் ஜெயேந்திரர் பேசுவதாக இருந்த கூட்டத்தில் ஓர் ஆசிரியை, மாணவிகளைப் பார்த்து யாரெல்லாம் மாதவிலக்கானவர்களோ அவர்கள் அப்போது அங்கே இருப்பது தெய்வக் குத்தமாகும் என்று சொன்னபோது, ஒரு மாணவி, “இவ்வளவு சுத்தம் ஆச்சாரம் பார்க்கிறவர் ஏன் மேடம் ஜெயிலுக்குப் போகனும்” என்று திருப்பிக் கேட்டுள்ளார். உடன் இருந்தவர்கள் சிரித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஜெயேந்திரர், பெண் தொடர்பு, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மடத்தலைவர், தன் 75 ஆம் பிறந்தநாள் விழாவில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த கருப்பு மனிதர் என்ற காரணத்திற்காக, கைபட்டு விடக் கூடாது என்ற “தீட்டுச்” சாத்திர வர்ணாசிரம சிந்தையால், தன் உதவியாளர் கையால் விருது கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

திருச்சி திருவரங்கம் கோயில் முதல் கோயில்களுக்காக இலட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்த போதும், இளையராஜாவைச் சூத்திரனாகப் பார்த்து, அப்படியே நடத்தியிருக்கிறார் ஜெயேந்திரர்.

ஒரு தடவை பெரியார் திடலுக்குச் சென்ற இளையராஜா, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட திராவிடர்களின் உரிமைக்காகப் போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூட மறுத்துவிட்டார். பரவாயில்லை. அப்படியானால் அந்த மரியாதை “அவாள்”களிடம் இருந்தாவது கிடைத்ததா? இல்லை! மாறாக தீட்டுக்குரிய சூத்திரனாகத்தானே காஞ்சி மடத்தலைவர் பார்த்தார்.

2008 ஆம் ஆண்டு, இளையராஜாவிற்கு பத்மஸ்ரீ போன்ற விருதுகளை இன்னும் வழங்காதிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து கவிஞர் அறிவுமதி நம் இதழில் எழுதியிருந்தார். இளையராஜாவின் இசை மேதமையை இப்போதும் நாம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம்.

ஆனால் மதிப்பவர்களை மதிக்காமல், மதிக்காதவர்களை மதிக்கும் இளையராஜாவை அவாள்கள் அவமரியாதை செய்வதை இளைஞானி உணர்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை, நாம் உணர்கிறோம்!

- இ.இளமாறன்

Comments

23 comments

23
nirmalcb.blogspot.com
காஞ்சி சங்கர மடத்துக்கும் தனக்கும் உள்ள தொடர்பு தன்னை அந்த கூட்டம் அன்கிகரிக்க்கும் என்ற நப்பாசை.
இசையால் ஞானியான இளையராஜா என்று தனது சமுகத்திற்கு முற்போக்கு ஞானி ஆவார்?
ஞாயிறு
முன்பு ஒரு முறை வருத்தத்துடன் பாமரன் எழுதினார் பிறகு அறிவுமதி எழுதினார்..... .. இளையராஜா இப்படி பார்ப்பன ஆதரவுடன் நடந்துகொண்டால் அடுத்த பிறவியிலாவது பார்ப்பானாக பிறந்துவிடலாம் என்ற மூடநம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கிறாரோ என்னவோ?
B.R.Veeramani
பாமரன், அறிவுமதி,இக்கட்டுரை -- விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை, படிப்பதே இல்லை பொல் தெரிகிறது. அக்கூட்டத்தின் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. மூடநம்பிக்கையில் ஆழ்ந்து கிடக்கிடக்கிறார்.
ssk
இளையராஜா இசை மேதை தான்.தமிழரின் சிறப்பான சொத்து. ஆனால் மனிதன் தானே.. எதோ தான் ஒரு அரிய பிறவி போல் நடந்து கொள்வது தேவையற்றது. பிறபொக்கும் என்பதை அவர் அறிய வேண்டும். பணம் வந்தவுடன் பார்ப்பான் காலை நக்க ஓடும் மனிதரில் இவர் தலைமை. இவர் கோவிலுக்கு கொடுப்பது எதற்கு? தான் மட்டும் எதோ ஒன்றை அடைய வேண்டும் என்ற அவா. கடவுள் தத்துவமே உழைக்காமல் நல வாழ்வு வேண்டும் பேராசை தானே. பார்ப்பான் தமிழருக்கு செய்த கொடுமைகளை, இன்றும் செய்து கொண்டிருப்பதை சிறிதேனும் அறிந்தால், அவர் காலை பிடிக்க ஓடுவரா? முதலில் மனித நேயம் பிறகே கடவுள். சங்கராச்சாரியார் தரும் விருதை வாங்கினால், அவரின் லீலைகளை இவர் ஏற்கின்றார் என்பது அர்த்தமாகும். தமிழரின் இடதிற்கு சாக்கு கட்டி கொண்டு போன அவலம் இந்த சங்கரச்சாரி. சங்கரச்சாரி சாதித்தது என்ன இவர் அவரிடம் விருது வாங்க,, பார்ப்பான் தமிழன் சோற்றை தின்று கொண்டே தெளிவாக தமிழ் இனத்தை கேவலபடுத்திக்கொண்டே வருகிறான். அதை ஏற்கும் இவர் போன்றவர்களை என்ன சொல்வது.?
ibu:paris
ORU KAALATHIL INDIA JANAATHI PATHI VARAI KAANJI MADATHUKKU VARAVALAITHU KOOTI KODUTHA PAYALGALTHAAN INTHA SANGARAACHAAIGAL!!ENTHA ORUVANUKKUM SAMSAARAM ILLAATHA VAALKAI MULUMAI ADAIVATHILLAI.ORU GURUKKAL ITTHANAI PEARI VEATTU VIDUM POATHU EVANUGAL ENNA? SEITHU ERUPAANUGAL? VELAI MUDINTHATHUM KONNUDUVANUGA!!
Ramesh
இசைராஜாவிற்கு இவ்வளவு இசை அறிவுடன் கொஞசம் பகுத்தறிவும் இருந்திருக்கக் கூடாதா?
moses prabhu
இளையராஜா, ஜெயேந்திரரை செருப்பால் அடிதிருக்க வேன்டும்.
iqbal
புதுவிசை 2009 ஏப்ரல்-ஜுன் இதழில் வெளியான 'சேரிநாய்களும் சிம்பொனி ராஜாக்களும்' என்ற கட்டுரை இது தொடர்பான மேலும் பல செய்திகளை வலுவாகப் பேசுகின்றது.
jakkaian
Elaiyaraja is a dalit by birth. but now he is a hindu. Dalits are not hindus.
by jakkaian
ponsivaselvam
தன் இசை வாழ்வில்நிலைதிருக்க பார்பனர்களை சார்ந்திருந்த இளையராஜா தன் இசை தொழில் தொய்வுக்கு பிறகாவது தான் சார்ந்த தலித் மக்களுக்காக பாடுபடலாமே?

பொன்சிவசெல்வம்
Guest
தன் இசை வாழ்வில்நிலைதிருக்க பார்பனர்களை சார்ந்திருந்த இளையராஜா தன் இசை தொழில் தொஇவுக்கு பிறகாவது தான் சார்ந்த தலித் மக்களுக்காக பாடுபடலாமே?
பொன்சிவசெல்வம்
manikandan
ராஜா ராஜா தான் அதை யாராலும் மாத்த முடியாது. எத்தனையொ மக்கலின் மனதில் இடம் பிடித்த ராஜாவீரிகு சுயனலவாதிகளால் கொடுக்கும் விருது தெவைஇல்லை. ஜால்ரா அடிப்பவர்களுக்கு விருது கொடுக்ட்டும்.
durai ilamurugu
ராஜா பத்மபூச்ன் ஆகிவிட்டரே ! ஜெயந்தரருக்கு ஜல்ர அடிக்ததில் கைமேல் பலன்
C Sivasankaran
இலையராஜா ஒரு இம்ச ராஜா.
E.Ramakrishnan
Thanadhu Thirannil innaiyatravar Ilayaraaja, yezhai yeliya mukkalukkaga isaithavar.... adithattu makkalai ulagam ariya seithavar(thanadhu issaiyil) Anal Nadaimuraiyil Thun meedu vessappatta seytrilum sandanam Mannakkum yendru neenaikkirar.....
abi
illaiya raja vin isai gnanam miga periathu.we accept. atharku aanmeega saayam poosuvathu yhevai atrathu.ada ponga sir, avaru symphony gnanatha vida paarpana adayalam perusu nu nenaikiraru. aayiram periyar vandhalum...
Guest
LTTE support alone cannot give progressive symbol to Periyar DK
athirstasaali
arul koornthu SATHI, MATHAM, THEENDAMAI patri pesuvathai nirunthungal. thiramaikku eppothu kodukirarkalo anruthan india uruppadu. nam yarai mathikkavendum, mathikka koodathu enpathu avar avar viruppam. periyar seythathu sari enru PALAN petravargal sollalam. paalazhaippona ida othikkeettal pathikkapatta ennai ponravargal solla mattargal.
sasikumar
this is very bad mr.raja.............................
tamizh muthalvan
ilayarajavai ivvaaru ethirppathanaal ivarkalukku unmaiyaana akkarai odukkappattavarkalidam erpadap povathum illai. athe velaiyil piraamana ethirppilum uruthiyaanavarkalum illai. ingirukkum idainilaich saathiyinarellaam santharppam kidaiththaal paarppanaraaka maaruvathum , odukkappattavarkalinmel kurai solli niyaayavaathi aakuvathum piraamaniyathaivida vanmaiyaana seyal.
s.s.anbumathi
ILAIYA RAAJA ORU ISAI VALLUNAR! NAMATHU PERUMAIKKU URIYAVAR.
AANAAL, SUYAMARIYAATHAI UNARVU SIRITHUM ILLAATHA MUNDAM... JADAM! IDHU NAMATHU IZHIVUKKU URIYATHU!
nagaventhan
ilaiya raja pondra saathi maraithu vazum inthukalai jayenthirar pondra ******* eppadi mathippargal
prasanna
அய்யா, இளையராஜா சூத்திரன் அல்ல. ஒரு பஞ்சமன். அதாவது தலித். இளையராஜாவுக்கு இசைஞானம் உண்டே ஒழிய, வேறு சமூக அறிவு எதுவும் கிடையாது. பெரியாரை மதிக்காத இளையராஜா போன்றவர்களுக்கு ஞானம் இருப்பதே வீண். தன் பிறப்பின் இழிவையும், அசிங்கத்தையும் ஒப்புக்கொள்பவர் இளையராஜா.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.